Saturday 23 February 2019

ஊழல் ஒழிப்பு செய்தி:0044 ஆளும் கட்சி விழா!

ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO /0044/2019 ;நாள் :24.02.2019

குற்றம் நடைபெற்று கொண்டிருப்பது  என்ன?

உண்மை சம்பவம்.

காத்து கொண்டிருக்கும் பேராபத்து! 

கடமை தவறிய திருப்பூர் மின்சார வாரிய ஊழியர்கள்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 71 ஆவது பிறந்த தின விழா மற்றும் கபடி போட்டி!

விழா நடை பெறும் இடம் ;

அங்கேரிபாளையம்  சாலை
மாநகராட்சி முதல் மண்டல பிரிவு அலுவலகம் பின்புறம்
க.ச.எண் :389 தனியாருக்கு சொந்தமான இடம்.
திருப்பூர் மாவட்டம்.
நாள் :23 & 24.02.2019

ஆபத்தை உணராத ஆளும் கட்சி  திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள்!

கபடி வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் பாது காப்பில்லை?

அக்கறை இல்லாத காலி இட உரிமையாளர்.

மாநகர காவல் துறையினர் ஆய்வு செய்யாமல் அனுமதி வழங்கினார்களா?
அல்லது

ஆளும் அதிகார திமிரில் அனுமதி பெறாமல் நடத்துகிறார்களா?

பிளக்ஸ் பேனர்கள் பொது இடையூறு ஏற்படுத்தும்  வகையில் திருப்பூர் மாநகரம் முழுவதும் உயர்நீதிமன்ற உத்தரவினை மீறி சட்ட விரோதமாக வைக்க திருப்பூர் மாநகர காவல் துறையினர்  எப்படி அனுமதி அளித்துள்ளனர்?

க.ச.எண் : 389
பட்டா எண் :23
ப.அருள் ஜோதி
என்பவருக்கு சொந்தமான 3.40 ஏக்கர் பரப்பளவு கொண்ட. பள்ளமான இடத்தில் மழை காலங்களில் கழிவு நீருடன்  மழை நீரும் தேங்கி குட்டை போல் காணப்பட்டது. 

தேங்கிய கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்களின் பிறப்பிடமாக இருந்து வந்தது .

குப்பையும் கட்டிட  கழிவுகளும் கொட்டப்பட்டு தீயிட்டு எரித்து பொது சுகாதார கேடு ஏற்படுத்தி வந்த நிலையில் அங்கேரிபாளையம் நண்பர்கள் குழுவினர் குப்பை கொட்டிய வாகனங்களை பல முறை சிறை பிடித்து  புகார் அளித்ததின் பேரில் மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்பட்டு தற்பொழுது அந்த குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது

அதே பகுதியில் பிரதான சாலையில் கழிவு நீர்கால்வாய் தரை பாலம் கட்டும் பணி நடை பெற்று வருவதினால் மேற்காண்
தனியாருக்கு சொந்தமான இடம் வழியாக போக்குவரத்து மாற்றம்
செய்யப்பட்டு வாகனங்கள் சென்று
வருகிறது.

அந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம் வழியாக தாழ்வழுத்த மின்சாரம் மின்கம்பங்கள் வழியாக சென்று கொண்டிருக்கிறது.

அதில் ஒரு மின்கம்பம் சேதமடைந்து உடைந்து விழும் தருவாயில் உள்ளது.

மின்சாரம் செல்லும் மின்கம்பிகள் தொட்டு விடும் உயரத்தில் மிகவும் தாழ்வாக தொங்கி கொண்டிருக்கிறது.

எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின் விபத்து ஏற்படக்கூடும்.

இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி 4 மற்றும் 7 ஆவது  வார்டு ஆளும் அ.இ.அ.தி.மு.க கட்சியினர் சார்பாக மேற்காண் தனியாருக்கு சொந்தமான இடத்தினை சுத்தம் செய்து மேடை மற்றும் கூரை அமைத்து கபடி போட்டி நடத்தி வருகிறார்கள்.

மேடை அருகிலேயே மின்சார கம்பிகள்  தாழ்ந்த நிலையில் செல்வது கபடி வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பாதுகாப்பில்லா நிலை ஏற்பட்டுள்ளது.

யார் பொறுப்பு ?

பல ஆண்டுகளாக அறுந்து விழும் நிலையில் தொங்கி கொண்டிருக்கும் மின்சாரம் செல்லும் கம்பிகள் சரி செய்யப்படாத காரணம் என்ன?

விபத்து நடந்து விட்டால் எதிர்பாரா விதமாக ஏற்பட்டு விட்டது என கூறி வழக்கம் போல் அனுதாபம் தெரிவிக்க முடியுமா?

பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் இடத்தில் தெரிந்தே விழா நடத்துவது எதனால்?

மக்கள் பிரதிநிதியான சட்டமன்ற உறுப்பினர் பொது மக்கள் நலனில் ஏன் அக்கறை கொள்ள வில்லை?

அதே பகுதியில் இருக்கும் செட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஏன் இதனை கண்டு கொள்ள வில்லை?

கோரிக்கை ;
தனியார் இடமாக இருந்தாலும் மின்கம்பங்கள் பிரதான சாலையின் குறுக்கே செல்வதால் பொது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே திருப்பூர் மாவட்ட மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அவர்கள் ஆய்வு செய்து  கவன குறைவாக இருக்கும் இட உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக தொங்கி கொண்டிருக்கும் மின்கம்பிகளை சரி செய்யக்கோருகிறோம். 

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும்.....!

No comments:

Post a Comment