Friday 8 March 2019

சட்ட விரோதமாக செயல்படும் திருப்பூர் கேபிள்டிவி ஆபரேட்டர் மோகன்

மனுதாரர்  :
செ.ராம் குமார்
த/பெ. செல்லைய்யா,
99 பி, திலகர் நகர்,
அனுப்பர்பாளையம்,
திருப்பூர்- 641652

எதிர்மனுதாரர் :
A.மோகன சுந்தரம்
A.M. கேபிள் நெட்வொர்க்,
LCO NO : 15233
105 ,குமரன் வீதி,
அனுப்பர்பாளையம்,
திருப்பூர்-641652

பெறுநர் :

மேலாண்மை இயக்குநர்
அவர்கள்,
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேசன்,
துகர்டவர்ஸ், 34 (123) 6-வது    தளம்,
மார்சல் ரோடு, எழும்பூர்,
சென்னை – 600008.

அய்யா,

பொருள் :

     எதிர் மனுதாரருக்கு செலுத்த வேண்டிய கேபிள் டி.வி. இணைப்பு (அனலாக்) மாத சந்தாவினை அரசு கேபிள் டி.வி. கணக்கில் வங்கி வரைவோலையாக செலுத்துவது மற்றும் அரசு செட்டாப் பாக்ஸ் இணைப்பு வழங்கவும்,அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பீட்டினை தடுக்க கோரி மனு,

பார்வை :
01 D.D .No : 706810 
DATE    : 20.12.2018
BANK : S.B.I    
BRANCH : VELAMPALAYAM  திருப்பூர்

02. 13.09.2018 அன்று தங்களுக்கு அனுப்பிய புகார் மனு நகல்,

03. திருப்பூர் மாவட்ட துணை மேலாளர் அனுப்பிய கடித ந.க. எண் : 47/2018 . TACTV TUP . நாள் : 21.12.2018

   மேற்காண் முகவரியில் வசித்து வருகிறேன். எதிர்மனுதாரரிடம் இருந்து அரசு கேபிள் டி.வி. இணைப்பு பெற்றுள்ளேன்.

   எதிர்மனுதாரர் மாத சந்தாவாக அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணமாக 70.00 ரூபாயினை வாங்காமல் 100 ரூபாயினை சட்ட விரோதமாக வசூலித்து வந்த காரணத்தினால் அவர் மீது புகார் அளித்தேன்.

இதனால் எதிர்மனுதாரர் எனது கேபிள் இணைப்பிணை துண்டித்து விட்டார்.

   26.03.2018 அன்று இரண்டு மாத சந்தாவான 140.00 க்கான வங்கி வரைவோலையை திருப்பூர் மாவட்ட துணை மேலாளர
அவர்களுக்கு அனுப்பினேன்.
ஆனால் , அரசு கணக்கில் செலுத்தாமல் வங்கி வரைவோலை காலாவதி ஆகி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

  எனவே, இது குறித்து பார்வை : 02 இல் காணும் புகார் கடித்தினை தங்களுக்கு அனுப்பினேன்.

   பார்வை : 03. இல் காணும் திருப்பூர் மாவட்ட துணை மேலாளர் அவர்கள் செட்டாப் பாக்ஸ் மூன்று தினங்களுக்குள் வழங்க வேண்டும் . இல்லையெனில் கேபிள் உரிமத்தினை இரத்து செய்து வேறு ஒரு புதிய ஆபரேட்டரை நியமனம் செய்யப்படும் என எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

   ஆனால், எதிர்மனுதாரர் மாவட்ட துணை மேலாளரின் உத்தரவினை நிராகரித்து விட்டார். இன்றைய தினம் வரையிலும் எனக்கு அரசு இலவச செட்டாப் பாக்ஸ் இணைப்பு வழங்கவில்லை.

   எதிர்மனுதாரர் LCO NO :15233 அரசுக்கு 30.08.2018 வரை 2,24,107.00 ரூபாய் நிலுவை தொகை வைத்துள்ளார்.

இவர். 1010 சந்தாதாரர்களுக்கு இணைப்பு வழங்கி உள்ளதாக பொய்யான தகவல் வழங்கி உள்ளார்.

20 அரசு செட்டப் பாக்ஸ் மட்டுமே இணைப்பு கொடுத்துள்ளார்.

தனியார் செட்டாப் பாக்ஸ் இணைப்பினைத்தான் சந்தா தாரர்களுக்கு வழங்கி வருகிறார்.

   மேலும் , திலகர் நகர் , அனுப்பர்பாளையம், ஆத்துபாளையம் , புதுக்காலனி, தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் எதிர்மனுதாரரின் மனைவி, மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் LCO உரிமம் பெற்றுள்ளார்.

1.M .புவனேஸ்வரி LCO NO : 15359  1025 சந்தாதாரர்கள் இணைப்பு வழங்கி உள்ளார் .
20 அரசு செட்டாப் பாக்ஸ் மட்டும் சந்தா தாரர்களுக்கு இணைப்பு வழங்கி உள்ளார் .
இவர் அரசுக்கு 2,27,900 ரூபாய் நிலுவை தொகை வைத்துள்ளார்.

2. N. தயாளன் LCO NO : 15469  765 சந்தாதாரர்களுக்கு இணைப்பு வழங்கி உள்ளார்
இவர் அரசு செட்டாப் பாக்ஸ் எந்த ஒரு சந்தாதாரர்களுக்கும் இணைப்பு வழங்கவில்லை. அரசுக்கு 1,71,700 ரூபாய் நிலுவை தொகை வைத்துள்ளார்.

3.D.ஜெயந்தி LCO NO : 15531, 765 சந்தாதாரர்களுக்கு கேபிள் இணைப்பு வழங்கி உள்ளார் .
அரசு செட்டப் பாக்ஸ் எந்த ஒரு சந்தாதாரர்களுக்கும் வழங்கவில்லை.
இவர் அரசுக்கு 1,87,000 ரூபாய் நிலுவை தொகை வைத்துள்ளார்.

1.LCO NO   
2.சந்தாதாரர் எண்ணிக்கை
3.;நிலுவைதொகை 
                   

15233      1010      =2,24,107

15359      1025      = 2,27,900

15469       765       = 1,71,700
15531       765       = 1,87.000
                  °°°°°°°  
                  3565    =8,10,707.00
               
எதிர்மனுதாரர் : மேற்காண் LCO உரிமம் அனைத்தினையும் இவரே நிர்வகிக்கிறார்.

சுமார், 20.000 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களுக்கு கேபிள் இணைப்பு வழங்கி உள்ளார்.
ஆனால், 3565 சந்தாதாரர்கள் என அரசுக்கு பொய்யான தகவல் வழங்கி உள்ளார்.
சந்தா தாரர்கள் மாத சந்தா செலுத்தவில்லை என்றால் உடனடியாக கேபிள் இணைப்பினை துண்டித்து விடுவார்.
    
சந்தாதாரர்கள் எவர் ஒருவரும் மாத சந்தா செலுத்தாமல் இருப்பதில்லை.
ஆனால் 4 LCO உரிமத்திற்கும் சேர்த்து 30.08.2018 வரை அரசுக்கு 8,10,707 .00 ரூபாய் நிலுவை தொகை வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

  எனவே மேற்காண் எதிர்மனுதாரருக்கு நான் செலுத்த வேண்டிய நான்கு மாத சந்தா 70 x 4 = 280.00 ரூபாய்க்கான  பார்வை : 01 ல் காணும் வரைவோலையை அரசு கணக்கில் செலுத்தி உள்ளேன்.எதிர்மனுதாரர் நிலுவை தொகையில் எனது சந்தா தொகையை வரவு வைக்குமாறு வேண்டுகிறேன்.

   அரசு செட்டாப் பாக்ஸ் வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  எதிர்மனுதாரர் பல பெயர்களில் LCO உரிமம் பெற்று சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறார். அரசுக்கு தெரியாமல் பல ஆயிரக்கணக்கான சந்தா தாரர்களுக்கு இணைப்பு வழங்கி பல இலட்சங்களை மோசடியாக வசூலித்து வருகிறார்.

    எனவே, தனி அலுவலர்களை நியமித்து எதிமனுதாரரின் LCO மற்றும் சந்தா தாரர்களின் விபரங்களை ஆய்வு செய்யக் கோருகிறேன்.

   அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை முழுவதினையும் எதிர்மனுதாரரிடம் இருந்து உடனடியாக வசூலிக்கும் படி வேண்டுகிறேன்.

இணைப்பு பக்கங்கள்  : 07
நாள்    : 09.03.2019                            
மனுதாரர்

இடம்   : திருப்பூர்                           (செ.ராம் குமார் )

No comments:

Post a Comment