Monday 18 March 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0048

ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO /0048/2019;நாள் :21.03.2019

குற்றம் நடந்தது என்ன?
உண்மை சம்பவம்.

இந்து முன்னனி Vs கந்து வட்டி!
காவல்துறை   Vs கட்ட பஞ்சாயத்து!

கல்லூரி நண்பர் எதிரியான கொடுமை!

திருப்பூரில் கந்து வட்டி தொழில் கொடி கட்டி பறக்கிறதா?
ஆம்.

பணத்தை வைத்து தினவட்டி ,மணி வட்டி, மீட்டர் வட்டி, வார வட்டி, மாத வட்டி  ,கந்து வட்டி என பல்வேறு  பெயரில்  கூடுதல் பணம் சம்பாதிக்கும் கூட்டம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

கரூர் மாவட்டத்தில் கந்து வட்டி தொழில் கொடி கட்டி பறந்தது.
பாதிக்கப்பட்டவர்களின் தற்கொலை மற்றும் புகாரினை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின்
நடவடிக்கையின் காரணமாக கரூர் பகுதி கந்து வட்டி கும்பல் திருப்பூர் நோக்கி  படை எடுத்து வந்து கொண்டிருக்கின்றனர்.

பல ஆயிரம் கோடி வர்த்தகம் ஈட்டும்  திருப்பூரில் தங்களின் அவசர தேவைகளுக்கு பணம் உடனடியாக தேவைப்படுவதினால் கூடுதல் வட்டிக்கு பணம் பெற்று  தொழில் செய்யும் சூழல் நிலவி வருகிறது .

தள்ளு வண்டி கடைகள் பெட்டி கடைகள் முதல்  பின்னலாடை தொழிற்சார்ந்த தொழிற்சாலையினர் ,வர்த்தகர்கள்மற்றும் ஏழை எளிய பாமர மக்கள் கடன் பெற்று தொழில் செய்து வருகின்றனர்.

இதனை பயன் படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கும் கந்து வட்டி கும்பல்.

கந்து வட்டி கும்பலினால் பாதிக்கப்பட்டவர்கள் பயத்தின் காரணமாக புகார் அளிக்க முன் வருவதில்லை.

இதனை கண்காணித்து தடுக்க தவறிய காவல் துறையினர்.

அப்படி பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் புகார் அளித்தால் அந்த புகாரின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை.

தயிழ்நாடு வட்டிக்கு பணம் கொடுப்போர் சட்டம் -1957 சட்டப்பிரிவு 7 இல் 
18% பதினெட்டு சதவீதத்திற்கு மேல் அதிகமாக மாத வட்டி வசூலிப்பது குற்றம் என இச்சட்டம் சொல்கிறது.

ஆனால் இந்த சட்டத்தினை வட்டிக்கு பணம் கொடுப்போர் மதிக்காமல் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டி துன்புறுத்தி பொருட்களை பறி முதல் செய்து அராஜக செயலில் ஈடுபட்டு வந்தனர்.

எனவே பாதிக்கப்பட்ட பலர் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

எனவே தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச்சட்டம் -2003 கொண்டு வரப்பட்டது.

இச்சட்டப்பிரிவு 38 /2003 இன் உட்பிரிவு 4 இன் படி கூடுதல் வட்டி வசூலிப்பது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டு
கடுங்காவல் தண்டனையும் முப்பது ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் .

கூடுதல் வட்டி கேட்டு இடையூறு செய்வது அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல்
செய்வதும் சட்டப்படி குற்றமாகும்.

கந்து வட்டி வசூலிப்பவர்கள் குறித்து நமக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து  புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

கந்து வட்டி கும்பலுடன் கை கோர்க்கும் திருப்பூர் மாநகர தெற்கு காவலூழியர்கள்!

₹25000 ரூபாய் கடனுக்கு  ₹ 8000 ரூபாய் வட்டியுடன் அசலும் சேர்த்து ₹ 33000 ரூபாய் செலுத்திய பின்னரும் கூடுதல் வட்டியாக ₹28000 கேட்டு மிரட்டி இருச்சக்கர வாகனத்தினை அடாவடியாக பறித்து சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞன் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது முறையாக பாதிக்கப்பட்டவரின் புகாரினை பெற்று எதிரி மீது  வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வில்லை.

மாறாக எதிரியை காவல் நிலையம் வரவழைத்துள்ளனர்.
எதிரியுடன் வந்த அப்பகுதி இந்து முன்னனியை சேர்ந்த நிர்வாகிகளுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் வைத்து புகார் கொடுத்தவரை மிரட்டி உள்ளனர்.

எதிரி கேட்கும் அநியாய வட்டி  வாரம் ₹1500 ரூபாய் வீதம் மாதம் ஒன்றிற்கு ₹6000 . ஆறு மாத வட்டி ₹36000 ரூபாயில் ₹33000  கொடுத்தது போக மீதி வட்டி  ₹3000 ரூபாயும் அசல் ₹25000 ஆக மொத்தம் ₹28000 ரூபாய் கந்து வட்டி பணத்தை கொடுத்து வாகனத்தினை பெற்று கொள்ளும் படி காவலூழியர் அர்ச்சுனள் மற்றும் கார்த்திக் என்பவர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் பணம் தன்னிடம் இல்லை என்ற போது தலைமை காவலர் ஒருவர் பணம் கொடுக்க முடிய வில்லை என்றால் செத்து போ என ஒருமையில் திட்டி உள்ளார்.

காவல் சார்பு ஆய்வாளர் ஜெயசந்திரன் என்பவர்  விசாரணை செய்து அர்ச்சுனன் என்ற காவலூழியரை அழைத்து இருச்சக்கர வாகனத்தினை மீட்டு கொடுக்கும் படி கூறியுள்ளார்.
ஆனால் அவரின் உத்தரவினை காவலூழியர் அர்ச்சுனன் நிறைவேற்ற வில்லை.

பத்து தினங்களாக காவல் நிலையம் அலைந்த போதும்  நீதி கிடைக்க வில்லை செத்து போயிடலாம் போல இருக்கிறது என கண்ணீர் மல்க நம்மிடம் சட்ட உதவி நாடியுள்ளார்.

இது நமக்கு மிகுந்த அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.

இதன் மூலம் சட்ட விரோத கந்து வட்டி கும்பலுக்கும் திருப்பூர் தெற்கு காவல் நிலைய காவலூழியர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது

இந்நிலையில் சார்பு ஆய்வாளர் ஜெயசந்திரன் நமது வாட்ஸ் ஆப் செய்தியினை பார்த்து  என்னிடம் 
தொடர்பு கொண்டு மனுதாரர் யார்? எதிர்மனுதாரர் யார்?  என்பது குறித்து விசாரித்தார்.
கல்லூரி மாணவர்கள் தவறு செய்தால் கல்லூரி முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும்.அது போல்
காவல் நிலைய பொறுப்பு அலுவலரிடம் ஏன் தெரிவிக்க வில்லை எனக் கேட்டார்.
புகார் குறித்து தங்களுக்கும் தெரியும் எனக்கூறினேன்.
புகார் மனு எங்கு இருக்கிறது என விசாரணை செய்வதாக தெரிவித்தார்.
சார்பு ஆய்வாளரும் பொய் பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது.

புகாரினை பெறாத போது புகார் மனு எங்கிருக்கும்?

மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும்  புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்குமா?

கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

கடமை தவறிய காவலூழியர்கள் தண்டிக்கப்படுவார்களா?

அல்லது நீதிமன்றம் சென்று தான் நீதி கிடைக்குமா?

காத்திருக்கிறோம்.

புகார்தாரருக்கு எதிரியால் எந்த விதமான அசம்பாவிதம் நடந்தாலும் திருப்பூர் மாநகர காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர் அனுப்பிய புகார் மனு இணைக்கப்பட்டுள்ளது.

பதிவு அஞ்சல் ஒப்புகையுடன்

மனுதாரர்  :
N. செந்தில் குமார்,   வயது :23
த/பெ .நடராஜன்
18/421,M.K.P . லே-அவுட்,
சேயூர் ரோடு, சூளை
அவினாசி – 641 654,
திருப்பூர் மாவட்டம்.
செல் : 77080 84736

எதிர் மனுதாரர்கள் :

01 .விக்னேஷ்வரன், வயது : 23
த/பெ.பாண்டி
1-A , முத்தையன் லே-அவுட்
4 வது வீதி,
வெள்ளியங்காடு ,
திருப்பூர்-641604,
செல் : 99767 65562
   
02 .சங்கர் கணேஷ்
இந்து முன்னனி நிர்வாகி மற்றும் இருவர்,
திருப்பூர்.
செல் : 99521 67698

03. அர்ச்சுனன்,
காவலூழியர்
திருப்பூர் தெற்கு காவல் நிலையம்

04. கார்த்திக்
காவலூழியர்
திருப்பூர் தெற்கு காவல் நிலையம்

05. பெயர் தெரியவில்லை / அடையாளம் தெரியும்.
காவலூழியர்
திருப்பூர் தெற்கு காவல் நிலையம்

06. ஜெய சந்திரன்
உதவி ஆய்வாளர்
திருப்பூர் தெற்கு காவல் நிலையம்

பெறுநர் :

காவல் ஆணையர் அவர்கள்
மாநகர காவல் ஆணையர் அலுவலகம்,
திருப்பூர் மாநகரம்.

அய்யா,
பொருள் :

தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்பு சட்டம்
– 2003 க்கு எதிராக கூடுதல் வட்டி வசூலித்ததுடன் எனது இருசக்கர வாகனத்தினை சட்ட விரோதமாக பறித்து சென்ற எதிர்மனுதாரர் : 01 என்பவரும் மேலும், கூடுதல் வட்டி கேட்டு மிரட்டும் எதிர்மனுதாரர் : 02 என்பவர்கள் மீதும் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரினை பெற்றுக் கொள்ளாமல் எதிமனுதாரர் : 01 மற்றும் 02 என்பவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் எதிமனுதாரர்கள் : 03 ,04, 05 மற்றும் 06  என்பவர்கள் மீது குற்ற விசாரணை முறைச்சட்டப் பிரிவு 154(3) இன் கீழ் புகார் மனு.

நான் மேற்காண் முகவரியில் வசித்து வருகிறேன்.
எதிமனுதாரர் : 01 என்பவர் R.V.S.  கலைக்கல்லூரியில் 2013 – 2016 கல்வி ஆண்டில் கல்வி பயின்ற கல்லூரி நண்பர் ஆவார் .

எனது தந்தையின் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ செலவுகளுக்கு பணம் தேவைபட்டதால் எதிமனுதாரர் : 01 என்பவரிடம் 25.07.2018 அன்று ரூபாய் 25,000.(இருபத்தைந்தாயிரம்) கடனாக பெற்றேன்.

ஒரு வாரத்தில் திருப்பி கொடுப்பதாக சொன்னேன்.ஆனால் , என்னால் பணத்தினை திருப்பி கொடுக்க முடியவில்லை.

எனவே முதல் தவணையாக ரூபாய் 5000 , இரண்டாம் தவனையாக ரூபாய் 3000 , மூன்றாம் தவணையாக ரூபாய் 5000 , நான்காம் தவணையாக ரூபாய் 5000 , ஐந்தாம் தவணையாக ரூபாய் 5000 , ஆறாம் தவணையாக ரூபாய் 10,000 . ஆக மொத்தம் ஆறு தவணைகளாக ரூபாய் 33,000 திருப்பி கொடுத்து விட்டேன்.

5000 ரூபாய் வங்கி கணக்கு மூலமாகவும் , ஐந்து தவணைகள் நேரடியாகவும் கொடுத்துள்ளேன்.பணம் கடன் கொடுக்கும் போது வட்டி எவ்வளவு என்பது குறித்து எதிமனுதாரர் : 01 என்பவர் எதுவும் கூறவில்லை.

எனினும் அசல் 25,000 த்துடன் ஆறு மாத கால வட்டியாக ரூபாய் 8,000 கொடுத்து விட்டேன்.

இந்நிலையில் 25,000 ரூபாய்க்கு வாரம் 1500 ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கான வட்டி மட்டும் 36,000 ரூபாய் ஆகி உள்ளது. 33,000 ரூபாய்தான் கொடுத்திருக்கிறாய், வட்டி 3000 ரூபாய் மற்றும் அசல் 25,000 ரூபாய் கொடுக்கும்படி எதிர்மனுதாரர் : 01 என்பவர் கூறினார்.

எனக்கு இது மிகுந்த அதிர்ச்சி அளித்தது. வாரம் 1500 ரூபாய்க்கு வட்டி கொடுப்பதாக நான் ஒப்புக்கொள்ளவில்லை. 25,000 ரூபாய் அசல் மற்றும் வட்டியாக ரூபாய் 8000 கொடுத்துவிட்டேன். இனிமேல் என்னால் கூடுதல் வட்டி கொடுக்க முடியாது என கூறினேன்.

இந்நிலையில் 20.01.2019 அன்று திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான உஷா தியேட்டர் அருகில் நான் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது எதிர்மனுதாரர் : 01 என்பவர் முத்துப்பாண்டி என்பவருடன் வந்து எனது இருசக்கர வாகனத்தினை பறித்து எடுத்து சென்றுவிட்டனர். முழு பணத்தினையும் கொடுத்தால் தான் இருச்சக்கர வாகனத்தினை கொடுக்க முடியும் என கூறிவிட்டார்.

TN 39 BV 7722 ஹோண்டா HORNET என்ற ஒரு இலட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தினை பறித்து சென்றது அதிர்ச்சி அடைந்தேன்.

அதன் பிறகு மூன்று முறை வாகனத்தினை திருப்பி கொடுப்பதாக கூறி உஷா தியேட்டர் அருகே எதிர்மனுதாரர் :01 என்பவர் வரச் சொன்னார். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் செல்லும் போது என்னிடம் வாகனத்தை கொடுக்க மறுத்துவிட்டார்.

வாகனத்தினை பறித்து சென்றது குறித்து எனது குடும்பத்தினரிடம் தெரிவிக்க வில்லை.வீட்டில் இருப்பவர்கள் கேட்ட போது ஒர்க்ஷாப்பில் இருப்பதாக பொய் சொல்லும் நிலை ஏற்பட்டது.

எனது வாகனத்தினை பறித்து சென்ற குற்றம் நடந்த இடம் திருப்பூர் மாநகர காவல் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்ற காரணத்தினால் தெற்கு காவல் நிலையம் சென்று இது குறித்து 19.02.2019 புகார் அளித்தேன்.

தெற்கு காவல் நிலையத்தில் அப்போது பணியில் இருந்த எதிர்மனுதாரர் :03, கார்த்திக், எதிர்மனுதாரர் :04 அர்ச்சுனன், எதிர்மனுதாரர் : 05 , பெயர் தெரியாத காவலூழியர் மூவரும் எனது புகார் குறித்து கேட்டறிந்தனர்.

எதிர்மனுதாரர் : 01 என்பவரை காவல் நிலையம் வரும்படி
அழைத்தனர் .

எதிர்மனுதாரர் : 01 என்பவருடன் எதிர்மனுதாரர் : 02 என்பவர்களும் வந்திருந்தனர்.
எதிர்மனுதாரர் : 01 என்பவர் நான் பணம் எதுவும் திருப்பி கொடுக்க வில்லை என கூறினார்.
ஆடியோ ஆதாரம் உள்ளது என நான் தெரிவித்த போது பணம் வாங்கியதை ஒப்புகொண்டார்.

எதிர்மனுதாரர் :02 என்பவர்கள்  இந்து முன்னனியை சேர்ந்த அப்பகுதி பிரமுகர்கள்  என சொன்னார்கள்.

எதிர்மனுதாரர் : 02 என்பவர்கள்  காவல் நிலையத்தில் வைத்து என்னை மிரட்டினார்கள் .
வாரம் 1500 ரூபாய் வட்டி கொடுத்து தான் ஆக வேண்டும் எனக் கூறினார்கள்.
அதற்கு எதிர்மனுதாரர்கள் :03, 04, 05 என்பவர்கள் ஆமாம் வட்டி கொடுத்து தான் ஆக வேண்டும் அப்போது தான் இருச்சக்கர வாகனம் திருப்பி கொடுப்பார்கள் என்றார்கள் .

என்னால் கூடுதல் வட்டி கொடுக்க பணம் இல்லை என்றேன்.

அதற்கு எதிர்மனுதாரர் : 05 என்பவர் பணம் கொடுக்க முடியாது என்றால் செத்து போ என ஒருமையில் பேசினார் . அவர் தலைமை காவலராக இருக்க கூடும் என நினைக்கிறேன்.

எதிர்மனுதாரர் : 06 என்பவரும் எனது புகார் குறித்து விசாரனை செய்தார்கள்.

கூடுதல் வட்டி வசூலிப்பது தவறு என்றும் இருச்சக்கர வாகனத்தினை வாங்கி என்னிடம் கொடுக்குமாறு எதிர்மனுதாரர் : 04 , அர்ச்சுனன் என்பவரிடம் கூறினார்.

ஆனால் , எதிர்மனுதாரர் : 04  அர்ச்சுனன் என்பவர் எனது வாகனத்தினை திரும்ப பெற்று தரவில்லை.

மற்றொரு காவல் உதவி ஆய்வாளரும் எனது புகாரினை விசாரனை செய்து எதிர்மனுதாரர் : 01 என்பவரிடம் செல்போனில் பேசினார்.

பெர்னாண்டஸ் என்ற காவலூழியரும் எனது புகார் குறித்து கேட்டு குறிப்பு எடுத்துக் கொண்டார்.சுமார் பத்து தினங்களாக  தெற்கு காவல் நிலையம் அலைந்தேன்.
எனது புகாரின் மீது இன்றைய தினம் வரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.

எனது புகாரினை பெற்று மனு ரசீது வழங்கவோ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவோ இல்லை.

ஆளாளுக்கு வாய் மொழியாக தான் விசாரணை செய்தார்கள்.
எதிர்மனுதாரர் :02 என்பவர்கள் காவல் நிலையத்தில் வைத்தே கூடுதல் வட்டி கொடுக்க வேண்டும் என்றதை எதிர்மனுதாரர் :03, 04, 05, வேடிக்கை பார்த்தனர்.கந்து வட்டிக்கு ஆதரவாக காவலூழியர்கள் செயல் பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஐம்பது தினங்களாக இரு சக்கர வாகனம் இல்லாமல் எனது வாழ்வாதாரமும் , சுதந்திரமும் திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளது.

கந்து வட்டி கும்பலிடம் இருந்து எனது இரு சக்கர வாகனத்தை மீட்டு கொடுங்கள் என காவல் நிலையத்தில் நீதி கேட்டு சென்ற எனக்கு கடமை தவறிய காவல் ஊழியர்களால் நீதி மறுக்கப்பட்டுள்ளது.

எனது புகாரினை பெற்று உரிய மனு ரசீது வழங்கி விசாரணை செய்திருக்க வேண்டும்.

புகார் அளித்த எதிர்மனுதாரர் : 01 என்பவருடன் சம்பந்தமே இல்லாத இந்து முன்னனியை சேர்ந்த மூவர் காவல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டது ஏன் ?

25,000 கடனுக்கு 36,000 ரூபாய் வட்டி கொடுக்க வேண்டும் என காவல் ஊழியர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதின் மூலம் கந்து வட்டி கும்பலுக்கும் காவல் ஊழியர்களூக்கும் தொடர்பு இருக்கும் என இதன் மூலம் தெரிய வருகிறது.  

தெற்கு காவல் நிலையத்தில் எனக்கு நீதி மறுக்கப்பட்ட காரணத்தினால் நீதி வேண்டி மாநகர காவல் ஆணையராகிய தங்களுக்கு குற்ற விசாரணை முறைச்சட்டப் பிரிவு 154(3) இன் கீழ் மேல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பதிவு அஞ்சல் ஒப்புகையுடன்  இந்த புகார் மனு அனுப்பப்படுகிறது.

எனது புகார் மனு மீது தாங்கள் நேர்மையான காவல் அதிகாரியின் மூலம் விசாரணை செய்து எதிமனுதாரர்கள் :01, மற்றும் எதிர்மனுதாரர் : 02, என்பவர்கள் மீது தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 38/2003 இன் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் ,

என்னிடம் பறித்து சென்ற எனது இரு சக்கர வாகனத்தினை மீட்டு தரக்கோரியும் , கூடுதல் வட்டி வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என தெரிந்தும் எதிர்மனுதாரர்கள் : 01, மற்றும் 02 என்பவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத கடமை தவறிய எதிர்மனுதாரர்கள் : 03,04,05 மற்றும் 06 என்பவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன்.
     
எதிர்மனுதாரர்கள் மீது நான் கூறியுள்ள சங்கதிகளை நிரூபிக்கும் சுமை இந்திய சாட்சிய சட்டம் 101 மற்றும் 105 இன் கீழ் எனக்கு இருக்கிறது என்பதினை நான் அறிவேன்.

எனது புகாரினை நிரூபிக்க முடியாமல் எதிரிகள் விடுதலை செய்யப்பட்டால் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு -211 இன் கீழ் நீதி மன்றம் வழங்கும் தண்டனையை மனதார ஏற்றுக்கொள்வேன் என இந்திய சாட்சியச்சட்டப் பிரிவு 70 இன் கீழ் பிரம்மாணமாக இன்றைய தேதியில் கையொப்பம் செய்துள்ளேன்.

குறிப்பு  : தெற்கு காவல் நிலையத்தில் எனது புகார் சம்பந்தமாக விசாரணை எவ்வாறு நடைபெற்றது என்பதினை காவல் நிலைய கண்காணிப்பு கேமரா பதிவின் மூலம் அறிய கோருகிறேன்.

நாள்  : 12.03.2019                                 
இடம் : சேயூர்                           

மனுதாரர்
ந.செந்தில் குமார்

நகல் : மாவட்ட ஆட்சித்தலைவர் , திருப்பூர்.

LAACO நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாதஇதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் .......!!

1 comment:

  1. To log in to the Blockchain account is quite easy but sometimes users face it difficult to deal with such errors and get trouble in login. If you don’t have necessary steps and looking for solutions to deal with it, you can always call on Blockchain helpline number which is always functional and users can talk to the team anytime for availing fruitful results. Speak to the team anytime for availing quality and result-driven results in no time. You can always get in touch with the team of skilled professionals to discuss your queries with them.

    ReplyDelete