Wednesday 9 January 2019

காவல் ஆணையர் கவனத்திற்கு!

விபத்து அவசர செய்தி!

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மனோகரன் அவர்களின் உடனடி கவனத்திற்கு!

விபத்து ஏற்படுத்தும் தற்காலிக போக்குவரத்து சிக்னல்!

மரண பயத்தில் தடுமாறும் வாகன ஓட்டிகள்!

உயிர் பலி ஏற்படுத்தும் முன் பழைய  சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை.

தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி அவிநாசிசாலை அனுப்பர்பாளையம் புதூர் 4 வேலம்பாளையம் போக்குவரத்து சிக்னல்   அருகில் நெடுஞ்சாலைத்துறையினரால் கழிவுநீர்க்கால்வாய் தரை பாலம் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணிக்காக போக்குவரத்து  மாற்றி அமைக்கப்பட்டது.

பணிகள் முடிந்து பல நாட்கள் ஆகியும் போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

மாற்றி அமைக்கப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ள சிக்னல் போக்குவரத்திற்கும் வாகன ஓட்டிகளுக்கும்  மிகுந்த இடையூறு ஏற்பட்டு வருகிறது.

4.வேலம்பாளையம் பிரதான சாலையில் இருந்து வரும் வாகனங்கள் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் செல்ல. வேண்டுமானால்  அவிநாசி சாலையில் இடது புறம் திரும்பி உடனடியாக வலது புறம் சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது.

திருப்பூரில் இருந்து அவிநாசி சாலை நோக்கி வரும் வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத காரணத்தினால் வேகமாக வருகின்றன .
அதே சமயம்
4 வேலம்பாளையம் சாலையில் இருந்து அவிநாசி சாலை செல்லும் வாகனங்களும்  ஒரே இடத்தில் சந்திக்கின்றன.

அதே வேளையில் 4.வேலம்பாளையத்தில் இருந்து திருப்பூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் செல்லும் வாகன ஓட்டிகள்  வலது புறம் சாலையை கடந்து திரும்புவதற்குள் இரு சாலைகளில் இருந்து வரும் வாகனங்களுக்கு இடையில் சிக்கி தவிக்கின்றனர்.

மரண பயத்தில் தட்டு தடுமாறி சாலையை கடக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

பல விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளது.

போக்குவரத்து காவலர் சாலையின் எதிர்புறம் நிற்பதால் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பில்லை.

பேருந்துகள் வலது புறமாக சாலையை கடந்து செல்வதற்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது.

எனவே பழைய போக்குவரத்து சிக்னலை மீண்டும்  பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வந்து வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோருகிறோம்.

மாநகராட்சி கிடப்பில் போடப்பட்டுள்ள 4 வேலம்பாளையம் பிரதான சாலை சந்திப்பில் உள்ள கழிவு நீர்க்கால்வாய் பணியினை விரைந்து முடிக்கக்கோருகிறோம்.

குறிப்பு : போக்கு வரத்து காவல் ஆய்வாளர் ஒருவரை  சீருடை இல்லாமல் சாலை ஓரமாக நின்று ஒரு ஐந்து நிமிடம் கண்காணித்து வாகன ஓட்டிகள் படும் சிரமத்தினை ஆய்வு செய்த பின்னர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில் .......
LAACO நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாதஇதழ்
திருப்பூர்.
உலாபேசி :98655 90723





No comments:

Post a Comment