Thursday 17 January 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0037

ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO;0037/2019; நாள்; 18.01.2019

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

உண்மை சம்பவங்கள்

பாக்கெட் பால் எச்சரிக்கை!!

மெகா மோசடியில் பாக்கெட் பால் நிறுவனங்கள்.

செயல் இழந்து கிடக்கும் தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினர்!

குற்றம் நடந்தது என்ன?

பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பால் பாக்கெட்டுகளில்
MRP: எம்.ஆர்.பி
B NO:  பேட்ஜ் எண்,
USE BY: யூஸ் பை
மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேக்கிங் செய்த தேதி இல்லை.

அப்படியானால் இந்த பாக்கெட்டுகள் எந்த தேதியில் பேக்கிங் செய்யப்பட்டது என பேக்கிங் செய்தவர்களை தவிர யாருக்கும் தெரியாது.

17.01.2019 அன்று திருப்பூர்  4.வேலம்பாளையத்தில் செயல் படும் ஒரு மளிகை கடையில் ஆரோக்யா  பாக்கெட் பால் வாங்கிய போது
MRP : ₹10
B N0 : VAQPU
USE BY 16.JAN. என இருப்பதினை அறிந்து நாம் அதிர்ச்சி  அடைந்தோம்.

பால் காலாவதி ஆகி ஒரு நாள் ஆகி விட்டது.

ஆரோக்கியா பாலில் ஆரோக்கியம் இல்லை!

கெட்டுப்போன இந்த பாலை வாங்கி தாய்மார்கள் குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளின் நிலை என்ன?

அப்படியே ஹட்சன் தயிர் பாக்கெட் ஒன்று வாங்கி பார்த்த போது 13.01.19 / 27.01.19 என குறிப்பிட்டிருந்தது.

அப்படியானால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தயிர் பாக்கெட்டுகளுக்கு மட்டும் 15 தினங்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பால் பாக்கெட்டுகளில் மட்டும் ஏன் பேக்கிங் தேதியும் காலாவதி தேதியும் குறிப்பிட வில்லை.

உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிந்தே இதனை அனுமதித்துள்ளனரா?

ஏன் இவர்களுக்கு நுகர்வோர்கள் மீது அக்கறை இல்லை.

குற்றச்சாட்டு!

திருப்பூர் முத்து இட்லி தோசை மாவு பொட்டலங்களில்  எந்த விபரங்களும் இல்லை என நாம் புகார் கொடுத்த போது திருப்பூர் உணவு பாதுகாப்புத்துறையினர்  பேக்கிங் தேதி போட வேண்டாம் யூஸ்டு டேட் மட்டும் போட அனுமதி அளித்துள்ளனர்.

அவர்களும் USED DATE என கண்ணுக்கு தெரியாத அளவில் ஒரு சில பாக்கெட்டுகளில் குறிப்பிட்டுள்ளனர் .

பேக்கிங் தேதி போட்டு விட்டால் மக்கள் விழிப்படைந்து விடுவார்கள்.

பொட்டல விதி சட்டத்திற்கு எதிராக சட்ட விரோதமாக செயல் படும் வியாபாரிகள் நஷ்டமடைந்து விடக்கூடாது என்பதாலேயே யூஸ்டு டேட் மட்டும் போட்டு நுகர்வோர்களை ஏமாற்றும் படி கூறியுள்ளார்களா?

உணவு பாதுகாப்புத்துறை வாட்ஸ்ஆப் எண்ணிற்கு பாதிக்கப்பட்ட நுகர்வோர்கள் புகார் அனுப்பினால் புகாரின் மீது துரித நடவடிக்கை எடுத்து  நடவடிக்கை எடுக்கப்பட்ட விபரங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து கைப்பற்றப்பட்ட விபரங்களையும்  புகைப்படத்துடன் புகார் அளித்தவர்களுக்கு தெரிவித்து வந்தனர்.

ஆனால் தற்பொழுது புகார் தாரர்களுக்கு எந்த விபரமும் தெரிவிப்ப தில்லை.

என்ன காரணம்?
அப்படியானால் உணவு பாதுகாப்புத்துறையினர் சட்ட விரோதமாக செயல் படும் வர்த்தகர்களுக்கு ஆதரவாக செயல் படுகிறார்களா?

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என விற்பனை செய்யப்படும்  பொட்டலங்களில் எந்த விபரமும் இல்லை!

நெல்லை அல்வா மஸ்கோத் அல்வா என பொட்டலங்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் பொட்டலங்களில் எந்த விபரமும் இல்லை.

கடலை மிட்டாய் பாக்கெட்டுகளிலும் எந்த விபரமும் இல்லை!

பேக்கரிகளில் பொட்டலங்களில் அடைத்து  விற்பனை செய்யப்படும் ரொட்டி பன்களிலும் எந்த விபரமும் இல்லை!

ஸ்வீட்ஸ் ஸ்டால்கள் மளிகை கடைகளில் 200 கிராம்  ₹20 ரூபாய் என விற்பனை செய்யப்படும் ஸ்வீட் கார வகைகள் பாக்கெட்டுகளில் எந்த விபரமும் இல்லை!

ஒரு கிலோ இரண்டு கிலோ ஐந்து கிலோ என ஸ்வீட் கார வகைகளை மொத்தமாக தயாரித்து பாக்கெட்டுகளிவ் அடைத்து கடைகளுக்கு விற்பனை செய்யும்  பாக்கெட்டுகளில் எந்த விபரமும் இல்லை!

வாரசந்தைகளில் பொட்டலங்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் எந்த ஒரு  உணவு பொருட்களிலும் எந்த விபரமும் இல்லை!

DRY FRUITS உலர் பழங்கள் என பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பாக்கெட்டுகளில் எந்த விபரமும் இல்லை.

சமைத்து உண்ணும் உணவு பொருளான மொட்டு காளான் பட்டை காளான் என பொட்டலங்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் பாக்கெட்டுகளில் எந்த விபரமும் இல்லை!

தற்பொழுது  சுத்தமான வாகை  மரச்செக்கு எண்ணெய் என பாட்டில்களில் அடைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் எண்ணெய்  பாட்டில்களில் எந்த விபரமும் இல்லை!

நெய்யில் கலப்படம்!
சமையல் எண்ணெய்யில் கலப்படம்!
வெல்லத்தில் கலப்படம்!
டீத்தூளில் கலப்படம்!
அனைத்து மளிகை உணவு பொருட்களிலும் கலப்படம்!

தெரிந்தே திட்டமிட்டு பொது மக்களுக்கு பொது சுகாதாரக்கேடு ஏற்படு.தும் வர்த்தகர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?

இது எல்லாம் உணவு பாதுகாப்பு துறையினர்களுக்கு தெரியாதா என்ன?

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையினரா?

மாநகர நகர் நல அலுவலர்களா?

தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்களா?

தொழிற்சாலைகள் ஆய்வாளர்களா?

மாநகராட்சி சுகாதாரத்துறையினரா?

மாவட்ட சுகாதாரபணிகள் இயக்குநர்களா?

மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு செயலாளர்களாகிய மாவட்ட லழங்கல் அலுவலர்களா?

நுகர்வோர் பாதுகாப்பு தலைவராகிய மாவட்ட ஆட்சியர்களா ?

இவர்கள் கடமை உணர்வுடன் செயல் பட்டால் ஒரே நாளில் சட்ட விரோதமாக செயல்படுவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களை பாதுகாக்க முடியும்.

இவர்கள் எந்த உணவை பாதுகாத்தார்கள்?
ஆனால்
இவர்கள் மக்கள் நலனில் அக்கறை கொள்வதாக பாசாங்கு செய்வார்களே ஒழிய எதுவும் செய்ய மாட்டார்கள்.

அப்படியே நேர்மையான அரசூழியர்கள் முற்பட்டாலும் ஆட்சியாளர்கள் இவர்களை விட்டு வைக்க மாட்டார்கள்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை நடை முறை படுத்துவது யார்?

அப்படியானால்
இதனை தடுப்பது யார்?

நுகர்வோர்கள்
வாடிக்கையாளர்கள்
வாக்காளர்கள்
பொது மக்கள் 
என பல்வேறு பேர்களில் அவ்வபோது அழைக்கப்படும் அனைத்து அதிகாரங்களும் பெற்ற நாம் தான்.

பாட்டில்கள் ,டின்கள் பொட்டலங்களில் அடைக்கப்பட்ட எந்த ஒரு உணவு பொருட்கள் வாங்கினாலும் கவனமுடன் பரிசோதித்து வாங்குங்கள்.

எடையளவு மற்றும் பொட்டல விதி சட்டங்களுக்கு எதிராக சட்ட விரோதமாக தயாரித்து பொட்டலம் செய்து விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை நுகர்வோர்களாகிய நாம் விலை கொடுத்து வாங்காமல் தவிர்த்து விட்டால் அதுவே போதும்.
இந்த கயவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.

நம்மை நாமே பாதுகாக்காவிட்டால் வேறு யார் வந்து நம்மை பாதுகாப்பார்கள்?

எனதருமை நண்பர்களே!
இளைஞர்களே!
சகோதர சகோதரிகளே
தாய்மார்களே!
பெரியோர்களே!
மாணவ செல்வங்களே!
விழித்து கொள்ளுங்கள்!
இத்தனை காலம் ஏமாந்தது போதும்
இனி மேலும் ஏமாந்து விடாதீர்கள்!
இது வெறும் எச்சரிக்கை மட்டும் அல்ல!
விழிப்புணர்வு பதிவு.

வேண்டுகோள்.

சட்ட விரோதமாக செயல்படுபவர்களை அடையாளம் காட்ட நாம் தயார்
நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறையினர் தயாரா?

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் .......!!

No comments:

Post a Comment