Sunday 13 January 2019

ஊழல் ஒழிப்பு செய்தி:0036 அங்கேரிபாளையம் நண்பர்கள் குழு பொங்கல் விழா விளையாட்டு போட்டி

ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO;0036/2019;நாள் :14.01.2019

திருப்பூர் அங்கேரிபாளையம் நண்பர்கள் குழுவினர் நடத்தும் நான்காம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா போட்டிகள் சிறப்புற வாழ்த்துகிறோம்.

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு வட்டம் மாநகராட்சி
அய்யன் காளிபாளையம் என்றழைக்கப்படும் அங்கேரிபாளையம்.

அங்கேரிபாளையம் பெயரை கேட்டாலே சும்மா அதிருதில்ல.

சரித்திரத்தில் நீங்கா இடம் பிடிக்க காத்திருக்கும் அங்கேரிபாளையம்.

யார் இவர்கள்?

சரித்திரம் படைக்கும் சாமானிய  சாதனை இளைஞர் கூட்டம்.

நெஞ்சம் மகிழும் உண்மை சம்பவங்கள்.

அரசியல் சாயம் பூசாத தன்னலம் கருதாமல் பொதுமக்கள் நலன் கருதும் துடிப்பு மிக்க இளைஞர்கள்.

ஆம். ஆச்சரியம்!

மதுவுக்கு அடிமை ஆகாத மதுவிற்கு எதிரான இளைஞர்கள்.

சட்ட விரோதமாக செயல் பட்டு வரும் சமூக விரோதிகள் அரசியல் வாதிகளை கதிகலங்க வைக்கும் அங்கேரிபாளையம் நண்பர்கள்.

அங்கேரிபாளையம் பகுதியில் நடைபெற்று வரும் சமூக விரோத சட்ட விரோத செயல்கள் ,பொது இடையூறுகள்,  மக்கள் நல பொது பிரச்சனைகளை காவல்துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகளின்  கவனத்திற்கு உடனுக்குடன் கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொண்டு வரும்  அங்கேரிபாளையம் நண்பர்கள் வாட்ஸ் ஆப் குழுவினர்.

லஞ்சம் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் லஞ்சம் கொடுக்காமல் சத்தம் இல்லாமல் சாதனை படைத்து வரும் இளைய சமுதாயத்தினர்.

சமுதாயத்தில் நடை பெற்று வரும் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக களத்தில் இறங்கி போராட தயாராக இருக்கும் வீரம் மிக்க இளைஞர் கூட்டம்.

இவர்களை போன்ற துடிப்பு மிக்க இளைஞர்களே நமக்கு இப்போது தேவை.

ஒவ்வொரு பகுதிகளிலும் இவர்களை போன்ற சமூக நலனில் அக்கறை உள்ள இளைஞர்களை உருவாக்கி விட்டால் சமூக விரோத செயல்கள் குறைந்து நாடு வளம் பெறும்.

சாய ஆலை, சலவை ஆலை கழிவு நீர் மாநகராட்சி பொது கழிவு நீர் கால்வாய் கழிவு நீர் ,கழிவுகளால் மாசடைந்து பொது சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வரும்  நல்லாற்றை மீட்டெடுத்து பொது சுகாதாரத்தை பாதுகாக்கும் முக்கிய  பொறுப்பில் அங்கேரிபாளையம்  நண்பர்களின் பங்கு போற்றதக்கது.

பல ஆண்டுகளாக மாநகராட்சி கழிவு நீர் வாகனங்களை ஆளும் கட்சி நிர்வாகிகள் கைப்பற்றி கழிவு நீரினை கொண்டு வந்து நல்லாற்றில் விட்டு மாசு படுத்தி வந்ததை மிகுந்த போராட்டங்கள் எதிர்ப்புகளை தாண்டி தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அங்கேரிபாளையம் பிரதான சாலையில் பல ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான இடத்தில் குப்பைகள் கொட்டி தீயிட்டு எரித்து பொது சுகாதாரக்கேடு ஏற்படுத்தியவர்கள் மீது புகார் அளித்து  அபராதம் செலுத்த செய்து கழிவுகளை சுத்தம் செய்ய வைத்த  நண்பர்கள் குழுவினர்.

இந்த இளைஞர்கள் தங்களது எந்த ஒரு தேவைகளுக்கும் லஞ்சம் கொடுப்பதில்லை.

சமையல் எரிவாயு உருளைகளுக்கு பில் தொகை மட்டுமே கொடுக்கின்றனர்.டெலிவரி மேனுக்கு லஞ்சம் கொடுப்பதில்லை.

மின் இணைப்பில் பழுது ஏற்பட்டால்  சரி செய்யும் கம்பியாளருக்கு (லைன் மேன்) லஞ்சம்
கொடுப்பதில்லை

அரசு கேபிள் டி.வி மாத சந்தா 70 மட்டுமே கொடுக்கின்றனர்.கேபிள் ஆப்பரேட்டருக்கு லஞ்சம் கொடுப்பதில்லை.

தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கூடுதல் கல்வி கட்டணம் செலுத்துவதில்லை.

அரசுத்துறைகளில் எந்த ஒரு தேவைகளுக்கும் லஞ்சம் கொடுப்பதில்லை.

இவர்களை போல் அங்கேரிபாளையம் பகுதி மக்கள் அனைவரும் லஞ்சம் கொடுக்காமல் சாதித்திட வேண்டும் என்பதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டம் தெரியாமலே சட்டப்படி வாழ நினைக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் இலவச சட்ட விழிப்புணர்வு பயிற்சி  அளிக்க "சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு " தயாராக உள்ளது.

2019 ஜனவரி 15,16. ஆகிய தேதிகளில் நான்காம் ஆண்டு பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடத்தும் அங்கேரிபாளையம் நண்பர்கள் குழுவினர்களுக்கும் ,தொடர்ந்து விளையாட்டு போட்டி மற்றும் பரிசுகளுக்கான நன்கொடைகள் வழங்கி இளைஞர்களை உற்சாகப்படுத்தி வரும் அங்கேரிபாளையம் பகுதி பொது மக்களுக்கும் இதயம் கனிந்த பொங்கல் தினநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு  விழா சிறப்படைய வாழ்த்துகிறோம்.

"அங்கேரிபாளையம் நண்பர்கள் குழு" வாட்ஸ் ஆப் எண்;97910 50513 இணைந்து அப்பகுதி மக்கள் அனைவரும் பயன் அடைய வேண்டுகிறோம்.

"நல்லாறு பாதுகாப்புக்குழு " வாட்ஸ் ஆப் எண் :98655 90723 இணைந்து நல்லாற்றை பாதுகாத்திட வேண்டுகிறோம்.

LAACO நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாதஇதழ்
திருப்பூர் மாவட்டம்
உலாபேசி ;98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் ......!!

1 comment:

  1. In case if you are facing obstructions to receive the information for Jaxx 2fa support then call our Jaxx support number. The unexpected hurdles are bound to arise with the hi-tech products so it should not be taken as most complicated issues. Such scene only refers to the initiatives that must be picked as soon as possible to get in touch with related professionals. Thus dial our Jaxx customer support number immediately. They are available 24*7 to assist you so that you can contact them as per your convenience.

    ReplyDelete