Thursday 3 January 2019

காவல் சார்பு ஆய்வாளர் ஜெகன் அவர்களுக்கு!

*📢 கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் தெற்கு தாமரைக்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெகன் அவர்களுக்கு* !!

மனுதாரர் :
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி :98655 90723

பெறுநர் :
ஜெகன் அவர்கள்
சார்பு ஆய்வாளர்
காவல் நிலையம்
தெற்கு தாமரைக்குளம்
கன்னியாகுமரி மாவட்டம்.

கடிதம் எண் :LAACO /IEA/101/0014/ TPR /2019
நாள் ;03.01.2019

அய்யா,

பொருள் :வடக்கு தாமரை குளத்தை
சேர்ந்த குமார் என்பவர் கொடுத்த புகார் மனுவிற்கு புகார்மனு  ஏற்பு சான்று வழங்காமலும் எதிரி மீது நடவடிக்கை எடுக்காமலும்  புகார் கொடுத்தவரை வீட்டை காலி செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியது  குறித்து இந்திய சாட்சியச்சட்டப்பிரிவு 101 இன் கீழ் ஏழு தினங்களுக்குள் தன்னிலை விளக்கம் அளிக்கக்கோரி மனு,

02.01.2019 அன்று வடக்கு தாமரைக்குளத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் குமார் என்பவர் வீட்டில் இல்லாத போது ராசப்பன் என்பவரின் மனைவி பார்வதி என்பவர் தூண்டுதலின் பேரில் முருகேசன் என்பவர் அத்து மீறி வீட்டின் பூட்டினை உடைத்து உள்ளே புகுந்து பொருட்களை சேதப்படுத்தி உள்ளதாக தங்கள் காவல் நிலையம் நேரில் வந்து புகார் மனு கொடுத்துள்ளார்.

புகாரை பெற்று கொண்ட காவலூழியர் ஒருவர் இரவு 7.00 மணிக்கு வரசொல்லி திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்த காரணத்தினால்  எதிரி முருகேசன் என்பவர் மீண்டும் குமார் வீட்டிற்கு வந்து பொது இடத்தில் ஆபாச வார்த்தை பேசி தாக்க முயற்சித்துள்ளார்.

இந்த தகவல் நமக்கு கிடைக்கப் பெறவே  காவல் நிலையம் தொலைபேசியில்  தொடர்பு  கொண்டு புகார் தாரர் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கும் படி தகவல் தெரிவித்தேன்.

காவலூழியர் ஒருவர் நேரில் சென்று விசாரணை செய்து விட்டு 7.00 மணிக்கு இரு தரப்பினரையும் காவல் நிலையம் வரச்சொல்லி இருக்கிறார்.

குமார் என்பவர் காவல் நிலையம் வந்த போது பார்வதி என்பவர் குமாரின் அம்மாவிற்கு கொடுக்க வேண்டிய. 55 000 ரூபாய்  பணத்தில் ₹10000 ரூபாயினை மட்டும் தாங்கள் வாங்கி கொடுத்து விட்டு உடனடியாக நாளை காலை வீட்டை காலி செய்து கொடுக்க வேண்டும் என கூறி எதிரி மீது நடவடிக்கை எடுக்காமல் எதிரிக்கு ஆதரவாக வெள்ளை காகிதத்தில் கட்டாயப்படுத்தி தாங்கள் எழுதி வாங்கி உள்ளதாகவும் புகார் மனு ஏற்பு சீட்டு வழங்க வில்லை என்றும் உடனடியாக  அவசர சட்ட உதவி தேவை எனவும் பாதிக்கப்பட்ட புகார்தாரரிடம் இருந்து  புகார் வரப்பெற்றுள்ளது.

நிரபராதிகள் பாதிக்கப்படக்கூடாது.

குற்ற வாளிகள் தப்பித்து விடக்கூடாது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

இதுவே சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் முக்கிய நோக்கம்.

எனவே அது சம்மந்தமாக தங்களிடம் உண்மை நிலையை அறிய கீழ் காணும் சில கேள்விகளுக்கான தன்னிலை விளக்கத்தினை இந்திய சாட்சியச்சட்டப்பிரிவு 101 இன் கீழ் ஏழு தினங்களுக்குள் விளக்கம்  அளிக்கக் கோருகிறேன்

1.புகாரினை பெற்ற உடன் புகார் கொடுத்தவருக்கு உடனடியாக புகார்மனு ஏற்புச்சீட்டு வழங்காமலும் கைது செய்யும் குற்றமாக இருக்கும் பட்சத்தில் குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 154 (1) இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமலும் கைது செய்யக்கூடாத குற்றமாக இருக்கும் பட்சத்தில் குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 155. இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பாமலும் தன்னிச்சையாக விசாரணை செய்ய தங்களுக்கு ஏதேனும் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பின் அதற்கான  காரணத்தை தெரிவிக்கவும்.

2..எதிர்மனுதாரர் மீது உரிய விசாரணை செய்து அத்து மீறி வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை சேதப்படுத்தியதுடன் பொது இடத்தில் ஆபாச வார்த்தை பேசியதுடன் தாக்க முயற்சித்த கந்து வட்டி தொழில் செய்து வரும் முருகேசன் என்பவர் மீது இந்தியத்தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன் என்ற காரணத்தை தெரிவிக்கவும்.

3.புகாரின் உண்மை தன்மையை முழுமையாக விசாரணை செய்யாமல் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உரிய விசாரணை செய்யாமல் புகார்தாரரிடம் ஒரு நாளைக்குள் வீட்டை காலி செய்து கொடுக்க வேண்டும் என மிரட்டி எழுதி வாங்கி கொண்டது ஏன் என்ற காரணத்தினை தெரிவிக்கவும்.

4.காவல் நிலையத்தில் எழுதச்சொல்லி மிரட்டி வாங்கப்படும் கடிதம் உள்ளிட்ட எதுவும்  செல்லதக்கதல்ல என்பது தங்களுக்கு தெரியாமல் போனது ஏன்?

5.பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும்  சொத்து சம்மந்தப்பட்ட சிவில் வழக்குகளில் காவல் துறையினர் தலையிடக்கூடாது என தங்களுக்கு தெரியாமல் போனது ஏன்?

6.குமார் என்பவர் குடியிருந்து வரும் வீட்டின் ஒரு பகுதி எதிரி ராசப்பனின் அண்ணன் மனைவியும் குமாரின் தந்தையின் தங்கையுமான  முத்துலெட்சுமிக்கு  சொந்தமானது என தங்களுக்கு தெரியுமா?

7.ஏழு வாரிசுகளுக்கு  சொந்தமான வீட்டை  ஐந்து வாரிசுகள்  என எதிரி  ராசப்பன் என்பவர் போலி பத்திரம் தயாரித்து மோசடி செய்து சொத்து வில்லங்கத்தில் இருப்பது தங்களுக்கு தெரியுமா?

8.பிரச்சனைக்குரிய இடத்திற்கு பாகசாசன விடுதலை பத்திரம் மட்டுமே உள்ளது.முறைப்படி சர்வேயர் மூலம் அளவீடு செய்து சொத்து சரி சமமாக ஏழு பாகங்களாக இன்று வரையிலும் பிரிக்கப்பட வில்லை என்பது தங்களுக்கு தெரியுமா?

9 பொதுவில் 7 இல் 2. பங்கு .சென்னையில் வசித்து வரும் முத்து லெட்சுமி என்பவருக்கு  சொந்தமான  இடத்தில் தான் குமார் என்பவர் வசித்து வருகிறார் என்பது தங்களுக்கு தெரியுமா?

10. வடக்கு தாமரைகுளத்தில் கந்து வட்டி தொழில் செய்து வந்த சேட் மோகன் என்பவரின் மகன் முருகேசன் என்பவர் வில்லங்கமான சொத்து என தெரிந்திருந்தும் சொத்தை விலைக்கு வாங்கும் நோக்கத்தில் தான் குமார் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை சேதம் செய்து அவரை வீட்டில் இருந்து வெளியேற்ற முயற்சித்துள்ளார்  என்பது தங்களுக்கு தெரியுமா?

11.புகார் கொடுத்த குமார் என்பவர் எதிரி ராசப்பன் என்பவரின் தங்கை மகன் என்பதும்  எதிரி ராசப்பனின் மனைவி பார்வதி என்பவரின் அண்ணன் மகள் தான் குமாரின் மனைவி என்பதும் தங்களுக்கு தெரியுமா?

12. மற்றொரு எதிரி முருகேசன் என்பவர் எதிரி ராசப்பன் என்பவரின் வீட்டின் மேல் மாடியில் ஒத்திக்கு இருப்பதும் அவர்களுக்கும் முருகேசனுக்கும் என்ன உறவு என்பது  தங்களுக்கு தெரியுமா?

13.மொத்தத்தில் எதுவுமே  தெரியாமல் புகாரின் மீது உரிய விசாரணை செய்யாமல் புகார் கொடுத்த எதிரி மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட  புகார் கொடுத்தவரையே வீட்டை காலி செய்து கொடுக்க வேண்டும் என மிரட்டி  எதிரிக்கு ஆதரவாக செயல் படுவது காவல் துறை சார்பு ஆய்வாளராகிய தங்களுக்கு  ஏற்புடையது தானா?

14.எதிரி மீது நடவடிக்கை எடுக்காமல் எதிரியிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட புகார்தாரரை மிரட்டி வீட்டை காலி செய்ய சொல்லி இருப்பதாக தங்கள் மீது ஐயப்பாடு எழுகிறது

கோரிக்கை ;

புகார் தாரர் கொடுத்த புகார் மீது உரிய விசாரணை செய்து எதிரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை நகல் ஒன்று குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 154 (2) இன் கீழ் இலவசமாக வழங்கவும் புகார் கொடுத்தவருக்கு எதிரிகளிடம் இருந்து உரிய உயிர்  பாதுகாப்பு அளிக்கக்கோருகிறோம்.

சட்டப்படி பாகசாசனம் செய்யாமல் தன்னிச்சையாக எதிரி ராசப்பன் என்பவர் எதிரி முருகேசன் என்பவருக்கு விற்பனை செய்ய இருப்பதுடன் புகார்தாரரை காலி செய்ய வைத்து  பொதுவான வீட்டை இடிக்க.எதிரி முருகேசன் என்பவர்  முயற்சிப்பதினை உடனடியாக தடுத்து நிறுத்த கோருகிறோம். .

நகல் தக்க மேல் நடவடிக்கைக்காக :

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டம்

நாள் :03.01.2019
இடம் :திருப்பூர்

மனுதாரர்
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்

No comments:

Post a Comment