Thursday 24 January 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :39 (மாநகராட்சி கடை ஏலம்)

ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO/0039/2019 ;நாள் :27 .01.201

திருப்பூர் மாநகராட்சி கடைகள் பொது கழிப்பிடங்கள் ஏலம் விட்டதில்  முறைகேடுகள் நடை பெற்றுள்ளதா?

குற்றம் நடந்தது என்ன?

உண்மை சம்பவம்.

பத்திரிக்கை செய்தி!

திருப்பூர் மாநகராட்சி 2019 -2022 ஆண்டின் ஆண்டு  குத்தகை உரிம இனங்கள் மற்றும் ஒப்பந்த புள்ளிகள் விளம்பர  அறிக்கை!

24.01.2019 தினத்தந்தி நாளிதழில்  திருப்பூர் மாநகராட்சி சார்பில் பொது ஏலம் மற்றும் ஒப்பந்த புள்ளிகள்  அறிவிப்பினை கண்டோம்.

அதே போல் மற்றொரு நாளிதழில் பொதுகழிப்பிடம் வாரசந்தை ,பேருந்து நிலைய சுங்க கட்டணம் உள்ளிட்ட 18 இனங்களுக்கான ஏலம் மற்றும் ஒப்பந்த புள்ளிகள்  விளம்பர அறிக்கையினையும் கண்டோம்.

இந்த அறிவிப்பு நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் சந்தேகத்தினையும் ஏற்படுத்தி உள்ளது .

2019 -2022.  மூன்று ஆண்டுகளுக்கான திருப்பூர் மாநகராட்சி நான்கு மண்டல அலுவலகங்களுக்குட்பட்ட 147 கடைகளுக்கான மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்த புள்ளிகள் 25.01.2019 அன்று காலை 10.30 மணியிலிருந்து 11.00. வரை அல்லது   மாற்றி வைக்கப்படும் தேதியில் ஆணையர் அல்லது அவரது அங்கீகாரம் பெற்ற முகவரால்   பெற்றுக் கொள்ள படும் .

அன்றைய தினம் 11.30 மணி அளவில் பகிரங்க ஏலம் விடப்படும்.

ஏலம் முடிவுற்ற பின்னர் வைப்பு தொகை செலுத்திய ஒப்பந்ததாரர்கள்  முன்னிலையில் ஒப்பந்த புள்ளிகள் திறக்கப்பட்டு ஏலத்தொகை அல்லது ஒப்பந்த புள்ளி கேள்வி தொகையில் எது அதிகமோ அந்த தொகை மாமன்றத்தின் மூலம்  முடிவு செய்யப்படும்.

ஏலம் எடுத்தவர்கள் அன்றைய தினமே முழு தொகையினையும் செலுத்திட வேண்டும்.

வைப்பு தொகை செலுத்துபவர்கள் ஏலம் மற்றும் ஒப்பந்த புள்ளிகளுக்கு தனித்தனியாக  24.01.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் மாநகராட்சி கருவூலத்தில் செலுத்த வேண்டும்.

வங்கி வரைவுகள் என்றால் ஏல தேதிக்கு ஒருநாள் முன்னதாக அதாவது 24.01.2019 அன்றைய தேதியில் செலுத்தி விட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடை ஏலம் எடுக்க இயலாமல் போனது குறித்து  பாதிக்கப்பட்டவர் நமக்கு அளித்த புகார் :

கடந்த இரண்டு ஆண்டு காலமாக மாநகராட்சி கடையினை குத்தகைக்கு எடுக்க வேண்டும் என அவர்  முயற்சி செய்து வருவதாகவும்  இந்நிலையில் 24.01.2019 அன்றைய நாளிதழில் மாநகராட்சி சார்பாக விளம்பரம் செய்யப்பட்டிருப்பதினை அன்றைய தினம்  மாலை 4.30 மணியளவில் பார்க்க நேரிட்டதாகவும் 5.00 மணிக்குள் வைப்பு தொகை மாநகராட்சி கருவூலத்திலோ வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும் என குறிப்பிட்டிருப்பதினை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.

முப்பது நிமிட நேரத்திற்குள் தாசில்தாரிடம் சென்று சொத்து மதிப்பு சான்று பெற இயலாது எனவும்  சொத்து மதிப்பு சான்றிதழ் இல்லை என்றால் வைப்பு தொகை  கூடுதலாக ₹25 000 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அவரிடம் ₹25000 ரூபாய் மட்டுமே தற்பொழுது  இருப்பதாகவும் கூடுதல் தொகை ₹25000   செலுத்துவதற்கு தன்னிடம் பணம் இல்லை எனவும் இந்த ஆண்டும் ஏலம் எடுக்க இயலாமல் போய் விட்டதாகவும்  கவலையுடன் தெரிவித்தார்.

இதற்கு யார் பொறுப்பு?

ஒரு நாள் கூட முழுமையாக கால அவகாசம் வழங்காமல் அவசர அவசரமாக பொது ஏலம் விட காரணம் என்ன?

செய்தி தாளில் விளம்பர அறிக்கை கொடுத்த அன்றைய தினமே  மாலை 5.00 மணிக்குள் வைப்பு தொகை செலுத்த வேண்டும் என நெருக்கடி கொடுக்க காரணம் என்ன?

இதனை பொது ஏலம் என எப்படி கருதுவது?

ஏற்கனவே காலியாக இருந்த கடைகளுக்கு ஏலமா? அல்லது குத்தகை காலம் முடிவடைந்த கடைகளுக்கு ஏலமா?

செய்தித்தாளை படித்தவுடன் ஒரு சில மணி நேரத்திற்குள் ஏலம் எடுக்க விரும்புபவர்கள்  எத்தனை பேர்கள் பணத்தினை புரட்டி வைப்பு தொகையை நேரிலோ  வங்கி வரைவுகளாக எடுத்து  மாநகராட்சி மைய அலுவலகத்தில் செலுத்த முடியும்?

ஏற்கனவே பல ஆண்டுகளாக கடைகளை நடத்தி வருபவர்களுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்கப்படுகிறதா?

அரசுத்துறை ஊழியர்கள் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களின் பினாமிகள்  பயன் அடைய வேண்டும் என்பதற்காக கால அவகாசம் வழங்காமல் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் கடைகள் கழிப்பிடங்கள் ஏலம் விடப்படுகிறதா என பல்வேறு ஐயப்பாடுகள் எழுகிறது.

ஏற்கனவே பல ஆண்டுகளாக தொடர்ந்து  கடைகளை குறைந்த வாடகைக்கு குத்தகைக்கு எடுத்தவர்கள் கடைகளை கூடுதல் தொகைக்கு உள் வாடகைக்கு விட்டு கொள்ளை லாபம் சம்பாதித்து வருவது மாநகராட்சி ஆணையருக்கு தெரியுமா?

மக்கள் சாசனம் மற்றும் அரசாணைகளில் குறிப்பிட்டுள்ள தினங்களுக்குள் மக்கள் நல சேவைகளை வழங்க மறுக்கும் மாநகராட்சி நிர்வாகம் கடைகள் ஏல விவகாரத்தில்  மட்டும் அவசரம் காட்டுவது எதற்காக?

ஏழை எளிய மக்கள் பயன் அடைய முடியாமல் போவது ஏன்?

மாநகராட்சி அனுமதி பெறாமலும் மாநகராட்சி விதிகளை பின்பற்றாமலும் சட்ட விரோதமாகவும் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும்  பொது இடையூறாகவும் கடைகள் வணிக வளாக  கட்டிடங்கள் கட்டி கூடுதல் வாடகைக்கு விடுபவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல்  வேடிக்கை பார்ப்பது எதனால்?

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவகுமார் அவர்களிடம் அவசர கோரிக்கை!

1.மாநகராட்சி கடைகள் ,கழிப்பிடங்கள் உள்ளிட்ட இனங்களுக்கு ஏல தேதியில் இருந்து ஒரு வாரம் அல்லது குறைந்த பட்சம் மூன்று தினங்களுக்கு முன்னதாக நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட கோருகிறோம் .

2.கால அவகாசம் வழங்காமல் அவசர அவசரமாக 25.01.2019 தேதியில் ஏலம் விட பட்ட  இனங்கள் அனைத்தையும் உடனடியாக  ரத்து செய்து கால அவகாசம் வழங்கி மீண்டும் மறு ஏலம் விடக்கோருகிறோம்.

LAACO நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாதஇதழ்
திருப்பூர் மாவட்டம்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் .......

No comments:

Post a Comment