Friday 25 January 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0038

ஊழல் ஒழிப்பு செய்தி : LAACO ;0038/2019 நாள் ;25.01.2019

குற்றம் நடந்தது  என்ன?

உண்மை சம்பவம்.

அதிகார திமிரில் வலம் வரும் மின்சார வாரிய ஊழியர்கள்!

குற்றம் சாட்டப்பட்டவர் யார்?

மின்மாற்றி பழுது பார்க்க ₹ 10000 (பத்தாயிரம்  ரூபாய் ) லஞ்சம் கேட்கும் கம்பி  ஆய்வாளர் (லைன் இன்ஸ்பெக்டர்) மாரன்!

திருப்பூர் மின்பகிர்மான வட்டம் அவிநாசி துணைமின் நிலையம்  அனுப்பர்பாளையம் பிரிவு அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள  திருப்பூர் மாநகராட்சி முதல் வார்டு திலகர் நகர் மேற்கு பகுதி மின்மாற்றியில் கடந்த நான்கு நாட்களாக ஒரு முனை  மின்சாரம் தடை பட்டுள்ளது.

மின்மாற்றியில் மும்முனை இணைப்பில் ஒருமுனை  பழுது ஏற்பட்டுள்ளதால் மும்முனை மின் மோட்டார்கள் இயங்காததால் மக்கள் கடும்  அவதி!

இது சம்மந்தமாக அந்த பகுதி மக்கள் அனுப்பர்பாளையம் பிரிவு அலுவலகத்தில் பல முறை புகார் அளித்துள்ளனர்.

25.01.2019 அன்று மாலை 6.45 மணி அளவில் அந்த பகுதியில் கம்பியாளராக பணி புரிந்து தற்பொழுது கம்பி  ஆய்வாளராக பணி உயர்வு பெற்ற மாரன் என்பவர் சக ஊழியர்களுடன் வந்து மின்மாற்றியை ஆய்வு செய்துள்ளார்.

மின்மாற்றியை கிரேன் கொண்டு வந்து கீழே இறக்கி பிரித்து பழுது பார்க்க வேண்டும் எனவும் ஒரு வேளை பழுது சரி செய்ய இயலவில்லை என்றால் கோவை சரவணம் பட்டி கொண்டு சென்று தான் சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார் .

அதிர்ச்சி தகவல்!

பழுது பார்க்க மொத்தம்  பத்தாயிரம் ரூபாய் செலவாகும்.
அப்பகுதி மக்களிடம் ₹10000 ரூபாயினை வசூல் செய்து கொடுத்தால் நாளை காலை வந்து சரி செய்வதாக மாரன் சொல்லி உள்ளார்.

₹1000 ரூபாய் லஞ்சம்!!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதே மின்மாற்றியில் அலுமினியத்தில் பொருத்தப்பட்டிருந்த கத்தி அடிக்கடி பழுது ஏற்படுவதால் காப்பரில் கத்தி  பொருத்தினால் அடிக்கடி பழுது ஏற்படாது எனக்கூறிய காரணத்தினால்  அப்பகுதி மக்கள் அவர்களது செலவில் காப்பர் கத்தி வாங்கி கொடுத்துள்ளனர் .
அதனை பொருத்த கம்பியாளராக இருந்த மாரன் ரூபாய்  இரண்டாயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இரண்டாயிரம் ரூபாய் கொடுக்க மறுத்ததினால் ஒரு மாத காலமாக பொருத்தாமல் கால தாமதம் செய்துள்ளார்.

அனுப்பர் பாளையம் பிரிவு அலுவலக போர்மேன் அவர்களை அப்பகுதி மக்கள்
நேரில் பார்த்து முறையிட்டுள்ளனர் . அவரும் தற்பொழுது பணியாளர் இல்லை   எனக்கூறி உள்ளார்.

ஆயிரம் ரூபாய் லஞ்சம்  பெற்று கொண்டு கம்பியாளர் மாரன் என்பவர் மின் மாற்றியில் காப்பர் கத்தியை பொருத்தி உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனை பயன் படுத்தி தான் தற்பொழுது ₹10000 ஆயிரம் ரூபாய் லஞ்சத்தினை வெளிப்படையாக கேட்டுள்ளார்.

இந்த கடமை தவறிய மின் ஊழியருக்கு பகிரங்கமாக பொது வெளியில் லஞ்சம் வாங்க தைரியம் கொடுப்பது யார்?

இவர் பெறும் லஞ்சப்பணம் யார் யாருக்கு செல்கிறது?

மின் நுகர்வோர்கள்  மின் இணைப்பில் பழுது ஏற்படும் போதெல்லாம் மின் பழுது சரி செய்ய ரூபாய் ஐம்பது லஞ்சம் கொடுப்பதாக ஏற்கனவே இப்பகுதி மக்கள் நம்மிடம் பல முறை புகார் தெரிவித்துள்ளனர்.

இழப்பீடு!

தமிழ்நாடு மின்சாரப் பகிர்மான செயல்திறச் செந்தரங்களுக்கான ஒழுங்குமுறை விதிகள் -2004 விதி 21 இன் படி மின் பயனீட்டாளர்களுக்கு காலதாமதமாகும் சேவைகள் ஒவ்வொன்றிற்கும் மின்சார வாரியம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

உதாரணமாக ;

மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மின் நுகர்வோர்களுக்கு மின் வழங்கல் தடை ஏற்பட்டால் (பியூஸ் போய் விட்டால் )புகார் பதிவு செய்த மூன்று மணி நேரத்தில் மின் வழங்கல் பழுது  சரி செய்யப்பட வேண்டும்.

காலதாமதமாகும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ₹ 50 ரூபாய் வீதம் அதிகபட்சமாக ₹2000 ரூபாய் வரை மின்சார வாரியம் பயனீட்டாளர்களுக்கு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.

இது சம்பந்தமான முழுமையான தகவல்களை எங்கள் தனி பதிவில் காணலாம்.

ஆனால் மின்சார வாரிய ஊழியர்கள் பயனீட்டாளர்களுக்கு குறித்த நேரத்தில்
சேவைகள் வழங்குவதில்லை.
இழப்பீட்டு தொகைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாத. காரணத்தினால் மின் ஊழியர்கள் கேட்கும் லஞ்சத்தினை கொடுத்து தொலைக்கின்றனர்.

கோரிக்கை!

1.குற்றம் சாட்டப்பட்டுள்ள கம்பி ஆய்வாளர் மாரன் என்பவர் மீது  திருப்பூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அவர்கள் உரிய முறையில் விசாரணை செய்து துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு பணி நீக்கம் செய்யக்கோருகிறோம்.

2.,திலகர் நகர் பகுதி மின்மாற்றியில் உடனடியாக பழுது நீக்கி மின் நுகர்வோர்களுக்கு தடை இன்றி மின்சாரம் வழங்கக்கோருகிறோம்.

முக்கிய செய்தி!!

தமிழகம் முழுவதும் மின்சார வாரிய அலுவலகங்களில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் உங்களது தேவைகள் நிறைவேறவும், இழப்பீட்டு தொகைகள் எவ்வாறு பெறுவது என்பது  குறித்தும் மின்சாரம் சம்பந்தமான உங்களது அனைத்து சந்தேகங்களுக்கும்  தகுந்த சட்ட  ஆலோசனைகளுக்கும் கீழ் காணும் தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு பயனடைய வேண்டுகிறோம்.

C.செல்வராஜ் அவர்கள்
மாநில பொது செயலாளர்
இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு
எண் :20 வியாசர் தெரு
தியாகராய நகர்
சென்னை.
தொடர்பு எண் :90940 24006

மின் நுகர்வோர் விழிப்புணர்வு பணியில் ..........
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர் மாவட்டம்.
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் ......!!

No comments:

Post a Comment