Sunday 27 January 2019

ஊழல் ஒழிப்பு செய்தி ;0042 ஜாக்டோ ஜியோ போராட்டம்


ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO :0042/2019 ;நாள் : 05.02.2019

குற்றம் நடைபெற்றது என்ன?

ஆசிரியர்கள் அரசூழியர்கள் இணைந்து  போராட்டம் !

உண்மை சம்பவங்கள்!

தமிழக அரசு அறிவிப்பு!!

எச்சரிக்கை!!

ஜாக்டோ ஜியோ வினர் கோரிக்கை முழுவதினையும்  செயல் படுத்த இயலாது!

தமிழக அரசிடம் அதற்கான நிதி ஆதாரம்  இல்லை!

தமிழக அரசின் மொத்த வருவாயில் 71% நிதியினை அரசூழியர்களுக்கு ஊதியமாக வழங்குகிறோம்.

மீதம் உள்ள 29 % நிதியுடன் கடன் பெற்று தான் ஒட்டு மொத்த மக்கள் நல திட்டங்களை செயல் படுத்தி வருகிறோம்.

போராட்டத்தினை கைவிட்டு விட்டு  உடனடியாக பணிக்கு திரும்ப அரசின் சார்பாக வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசின் கோரிக்கையினை நிராகரித்து தொடர்ந்து போராடி வந்தார்கள் .

சட்ட விரோதமாக செயல் பட்ட சுமார் 1200  க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி இடை நீக்கம்.

இந்நிலையில் இறுதியாக அரசு ஒரு நாள் கெடு விதித்தது .பணிக்கு வராத ஆசிரியர்கள் பணி நீக்கம் என எச்சரிக்கை!

மாதம் ₹ 10000 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்!

பல லட்சக்கணக்கான விண்ணப்பங்கள்
குவிந்தன.

பீதியில் ஜாக்டோ ஜியோ!

ஒன்பது நாள் போராட்டம் நிறைவேறாமல் தற்காலிகமாக போராட்டம் முடிவுக்கு வந்ததாக ஜாக்டோ ஜியோ திடீர் அறிவிப்பு.

போராட்டத்தினை தற்காலிகமாக கைவிட்டு  பணிக்கு செல்வதாகவும் அறிவிப்பு!

இவர்கள் மீது காவல் துறையில் உள்ள வழக்குகளை எல்லாம் வாபஸ் பெற வேண்டுமாம்!

பணி புரிந்த அதே  இடத்தில் மீண்டும் அனைவருக்கும் பணி வழங்க வேண்டுமாம்!

அடங்கொய்யால ........!!

ஒன்பது நாள் போராட்டம்!

எத்தனை எத்தனை பாதிப்புகள்!

300 இடங்களில் ஒரே நாளில் சாலை மறியல்!

போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் பொது இடையூறு!

பொது தேர்வு நெருங்க இருக்கும் நிலையில்
பல அரசு பள்ளிகளுக்கு பூட்டு!

நாடு முழுவதும் பள்ளி வாசலில் காத்து
கிடந்த மாணவர்கள்!

ஒன்பது தினங்கள் மாணவர்களுக்கு
பாதுகாப்பில்லை!

மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிப்பு!

தினசரி போராட்டம்!
காவல் துறையினருக்கு சொல்லொணா துயரம்!

இவர்களை கைது செய்து திருமண மண்டபங்களில்  அடைக்க காவல் துறை வாகனங்கள்  மற்றும் அரசு பேருந்துகள்!

குடிநீர் சாப்பாடு செலவுகள்!
வாகன. டீசல் செலவுகள்

அரசு பணிகள் நடை பெற வில்லை!
மக்கள் பணிகள் நடைபெற வில்லை!
மாணவர்களுக்கு கல்வி இல்லை!
பொது இடையூறு!

யார் இந்த ஜாக்டோ ஜியோ!

இது என்னமோ வாயில் நுழையாத புரியாத மொழியாக இருக்கிறதே ?

இல்லை!

JACTO-GEO
ஜாயிண்ட் ஆக்சன் கமிட்டி ஆப் டீச்சர்ஸ் ஆர்கனிசேசன்  Vs கவர்ண்மென்ட்  எம்ப்ளாயீஸ் ஆர்கனிசேசன்

அரசு ஊழியர் சங்கம் அரசு ஆசிரியர்களையும் இணைத்து ஜாக்டோ ஜியோ என சங்கம் அமைத்துள்ளனர் . 

ஒட்டு மொத்த  அரசூழியர்களின் கோரிக்கையினை நிறைவேற்றக்கோரி  அரசை எதிர்த்து பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு  அரசுக்கு நெருக்கடி கொடுத்து எப்படியாவது தங்கள் கோரிக்கைகள் நிறைவேறி காட்ட வேண்டும் என போராடி வருகிறார்கள்.

அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு படி தங்களது கோரிக்கைகளுக்காக அறவழியில்  போராட உரிமை உண்டு!

ஆனால் பொது மக்களுக்கு பொது இடையூறு ஏற்படுத்தியும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியும் சட்ட விரோதமாக போராட அரசூழியர்களுக்கு உரிமை இல்லை.

இரண்டு சதவீதம் அரசூழியர்களுக்கு அரசின் மொத்த வருவாயில் 71 %  சதவீதம் ஊதியம் மற்றும் சலுகைகளாம்.

அரசால் வழங்க இயலாத சலுகைகளை கட்டாயம் வழங்க  கேட்டு அரசுக்கும் பொது மக்களுக்கும் பொது இடையூறு செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  ஜாக்டோ ஜியோ சுய நல அமைப்பினர் பொது மக்கள் நலனில் அக்கறை கொள்ள மாட்டார்கள்.

மக்கள் விரோதமாகவும் சட்ட விரோதமாகவும் செயல் படும் இவர்கள் அரசு பணிக்கும் மக்கள் பணிக்கும் கொஞ்சமும்  தகுதியற்றவர்களே!

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அரசியல் கட்சிகளின் சிபாரிசு படியும் லஞ்சம் கொடுத்தும் குறுக்கு வழியில் அரசு பணிக்கு வந்தவர்களே!

இவர்களில் பலர் லஞ்சம் பெற்றும் ஊழல் செய்தும் சொத்துக்கள் பல குவித்து மாட மாளிகைகளுடன் வாழ்கின்றனர்.

நாட்டில் அமலில் உள்ள சட்டங்களையும் அரசு அலுவலக நடைமுறை விதிகளையும் அரசூழியர்கள் நடத்தை விதிகளையும் அரசாணைகளையும் மதிக்காமல் அரசுக்கு எதிராக செயல் படும் இவர்கள் தேச துரோகிகளே!

அரசியல் கட்சிகளின் முகமூடியுடன் போராடும் இவர்களை மக்கள் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளின் நலனில் கொஞ்சமும் அக்கறை கொள்ளாதவர்கள்.

மாதா
பிதா
குரு
தெய்வம்
என குருவுக்கு மூன்றாம் இடம்.

இந்த குரு ஸ்தானத்தில் இருந்து மாணவர்களுக்கு நல்வழி காட்டும்  ஆசிரியர்கள் சாலைகளில் இறங்கி மறியல் செய்து போராடி வருகிறார்கள்.

இவர்கள் எப்படி சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்?

அரசு பள்ளிகளின் கல்வி தரத்தினை பார்த்தாலே புரியும் இவர்களின் கல்வி சேவையை.

இவர்களது குழந்தைகள் பிரபல தனியார் கல்வி நிறுவனங்களில் விடுதி வசதிகளுடன்  பாதுகாப்பான முறையில் நல்ல தரமான கல்வி பயின்று வருகிறார்கள்.

அனைத்து அரசுத்துறைதளிலும் லஞ்சம் கொடுத்தால் தான் மக்கள் கோரிக்கை நிறை வேற்றப்படுகிறது.

கிராம நிர்வாக அலுவலக  கிராம உதவியாளர் முதல் தலைமை செயலக உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் பெறுகின்றனர்.

எந்த கட்சி ஆட்சி செய்தாலும் இவர்கள் அவர்களுக்கு சாதகமாக தங்களை மாற்றி கொள்கின்றனர்.

ஒவ்வொரு வாரமும் மாவட்ட ஆட்சியர் குறைதீர்ப்பு கூட்டங்களில் வரும் பொது மக்கள் கோரிக்கை மனுக்களை பார்த்தாலே தெரியும் இவர்கள் மக்கள் விரோதமானவர்கள் என்று.

நீதிமன்றங்களில்  நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை பார்த்தாலே தெரியும் இவர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது என்று.

வாழ்நாள் முழுவதும் அரசின் ஊதியங்களையும் ஓய்வூதியங்களையும் சலுகைகளையும் பெற்று கொண்டு மக்கள் விரோதமாக செயல் படும் இவர்கள் மக்கள் விரோதிகளே!

கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்!
வருவாய் துறையினர் போராட்டம்!
சத்துணவு ஊழியர்கள் போராட்டம்!
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்டம்!
வங்கி ஊழியர்கள் போராட்டம்!
தொலை தொடர்பு துறையினர் போராட்டம்!
அஞ்சலக ஊழியர்கள் போராட்டம்!
செவிலியர்கள் போராட்டம்!
அரசு மருத்துவர்கள் போராட்டம்
ஆசிரியர்கள் போராட்டம்

இப்படி அரசின் ஒவ்வொரு துறைகளை சார்ந்த ஊழியர்களும்  தங்களது கடுமையான போராட்டங்கள் மூலம் தங்களது கோரிக்கையினை ஒவ்வொருவரும் போராடி பெற்று விட்டால் இனி நாடு முழுவதும் போராட்டங்களுக்கு பஞ்சமிருக்காது.

அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் தான் இவர்களின் பின்னால் இருந்து போராட்டங்களை தூண்டி விடுகின்றனர் .

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அரசூழியர்களின் கோரிக்கையினை நிறைவேற்றுவதாக ஸ்டாலின் பேச்சு!

எங்கிருந்து அள்ளி வழங்குவார்

இது போன்ற கேடு கெட்ட அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும்
அடையாளம் காணுங்கள்

ஒட்டு மொத்த மக்களும்  தங்களது கோரிக்கைகளுக்காக போராட்ட களத்தில் இறங்கி விட்டால் என்ன ஆவது?

அரசின் உத்தரவினை மதிக்காத அரசு ஊழியர்கள் இனி நமக்கு தேவை இல்லை!

தூக்கி எறியுங்கள்.

தற்காலிக வேலை நிறுத்தம் என்பது  ஏமாற்று வேலை!

ஒன்பது அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி போராடி விட்டு ஊதிய உயர்வு கேட்டு போராடவில்லையாம்!

பிடித்தம் செய்த ஓய்வூதிய பணம் எங்கே எனக்கேட்டு தான் போராடினார்களாம்.

எங்கே இருக்கும் என தெரியாமலா போராடினார்கள்?

அரசை சிறந்த வழியில் நடத்தி செல்ல படித்து பட்டங்கள் பெற்ற பல லட்சக்கணக்கான இளைஞர்கள்  திறமையானவர்கள பொறியாளர்கள்   ் ஆசிரியர்கள் நம் தமிழகத்தில் காத்து கிடக்கின்றனர்.

ஆட்சியாளர்களே!

சிறந்த மக்கள் நல ஆட்சி வழங்குவீர்கள் என நம்பி தான் மக்கள் உங்கள் கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

நீங்கள் மக்கள்நல பணி செய்ய நேர்மையான திறமையான  ஊழியர்களை உடனடியாக  தேர்ந்தெடுங்கள்.

இதுவே நீங்கள் தமிழக மக்களுக்கு செய்யும் நன்றி கடன்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர் மாவட்டம்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் ......!

Friday 25 January 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0038

ஊழல் ஒழிப்பு செய்தி : LAACO ;0038/2019 நாள் ;25.01.2019

குற்றம் நடந்தது  என்ன?

உண்மை சம்பவம்.

அதிகார திமிரில் வலம் வரும் மின்சார வாரிய ஊழியர்கள்!

குற்றம் சாட்டப்பட்டவர் யார்?

மின்மாற்றி பழுது பார்க்க ₹ 10000 (பத்தாயிரம்  ரூபாய் ) லஞ்சம் கேட்கும் கம்பி  ஆய்வாளர் (லைன் இன்ஸ்பெக்டர்) மாரன்!

திருப்பூர் மின்பகிர்மான வட்டம் அவிநாசி துணைமின் நிலையம்  அனுப்பர்பாளையம் பிரிவு அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள  திருப்பூர் மாநகராட்சி முதல் வார்டு திலகர் நகர் மேற்கு பகுதி மின்மாற்றியில் கடந்த நான்கு நாட்களாக ஒரு முனை  மின்சாரம் தடை பட்டுள்ளது.

மின்மாற்றியில் மும்முனை இணைப்பில் ஒருமுனை  பழுது ஏற்பட்டுள்ளதால் மும்முனை மின் மோட்டார்கள் இயங்காததால் மக்கள் கடும்  அவதி!

இது சம்மந்தமாக அந்த பகுதி மக்கள் அனுப்பர்பாளையம் பிரிவு அலுவலகத்தில் பல முறை புகார் அளித்துள்ளனர்.

25.01.2019 அன்று மாலை 6.45 மணி அளவில் அந்த பகுதியில் கம்பியாளராக பணி புரிந்து தற்பொழுது கம்பி  ஆய்வாளராக பணி உயர்வு பெற்ற மாரன் என்பவர் சக ஊழியர்களுடன் வந்து மின்மாற்றியை ஆய்வு செய்துள்ளார்.

மின்மாற்றியை கிரேன் கொண்டு வந்து கீழே இறக்கி பிரித்து பழுது பார்க்க வேண்டும் எனவும் ஒரு வேளை பழுது சரி செய்ய இயலவில்லை என்றால் கோவை சரவணம் பட்டி கொண்டு சென்று தான் சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார் .

அதிர்ச்சி தகவல்!

பழுது பார்க்க மொத்தம்  பத்தாயிரம் ரூபாய் செலவாகும்.
அப்பகுதி மக்களிடம் ₹10000 ரூபாயினை வசூல் செய்து கொடுத்தால் நாளை காலை வந்து சரி செய்வதாக மாரன் சொல்லி உள்ளார்.

₹1000 ரூபாய் லஞ்சம்!!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதே மின்மாற்றியில் அலுமினியத்தில் பொருத்தப்பட்டிருந்த கத்தி அடிக்கடி பழுது ஏற்படுவதால் காப்பரில் கத்தி  பொருத்தினால் அடிக்கடி பழுது ஏற்படாது எனக்கூறிய காரணத்தினால்  அப்பகுதி மக்கள் அவர்களது செலவில் காப்பர் கத்தி வாங்கி கொடுத்துள்ளனர் .
அதனை பொருத்த கம்பியாளராக இருந்த மாரன் ரூபாய்  இரண்டாயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இரண்டாயிரம் ரூபாய் கொடுக்க மறுத்ததினால் ஒரு மாத காலமாக பொருத்தாமல் கால தாமதம் செய்துள்ளார்.

அனுப்பர் பாளையம் பிரிவு அலுவலக போர்மேன் அவர்களை அப்பகுதி மக்கள்
நேரில் பார்த்து முறையிட்டுள்ளனர் . அவரும் தற்பொழுது பணியாளர் இல்லை   எனக்கூறி உள்ளார்.

ஆயிரம் ரூபாய் லஞ்சம்  பெற்று கொண்டு கம்பியாளர் மாரன் என்பவர் மின் மாற்றியில் காப்பர் கத்தியை பொருத்தி உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனை பயன் படுத்தி தான் தற்பொழுது ₹10000 ஆயிரம் ரூபாய் லஞ்சத்தினை வெளிப்படையாக கேட்டுள்ளார்.

இந்த கடமை தவறிய மின் ஊழியருக்கு பகிரங்கமாக பொது வெளியில் லஞ்சம் வாங்க தைரியம் கொடுப்பது யார்?

இவர் பெறும் லஞ்சப்பணம் யார் யாருக்கு செல்கிறது?

மின் நுகர்வோர்கள்  மின் இணைப்பில் பழுது ஏற்படும் போதெல்லாம் மின் பழுது சரி செய்ய ரூபாய் ஐம்பது லஞ்சம் கொடுப்பதாக ஏற்கனவே இப்பகுதி மக்கள் நம்மிடம் பல முறை புகார் தெரிவித்துள்ளனர்.

இழப்பீடு!

தமிழ்நாடு மின்சாரப் பகிர்மான செயல்திறச் செந்தரங்களுக்கான ஒழுங்குமுறை விதிகள் -2004 விதி 21 இன் படி மின் பயனீட்டாளர்களுக்கு காலதாமதமாகும் சேவைகள் ஒவ்வொன்றிற்கும் மின்சார வாரியம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.

உதாரணமாக ;

மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மின் நுகர்வோர்களுக்கு மின் வழங்கல் தடை ஏற்பட்டால் (பியூஸ் போய் விட்டால் )புகார் பதிவு செய்த மூன்று மணி நேரத்தில் மின் வழங்கல் பழுது  சரி செய்யப்பட வேண்டும்.

காலதாமதமாகும் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ₹ 50 ரூபாய் வீதம் அதிகபட்சமாக ₹2000 ரூபாய் வரை மின்சார வாரியம் பயனீட்டாளர்களுக்கு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.

இது சம்பந்தமான முழுமையான தகவல்களை எங்கள் தனி பதிவில் காணலாம்.

ஆனால் மின்சார வாரிய ஊழியர்கள் பயனீட்டாளர்களுக்கு குறித்த நேரத்தில்
சேவைகள் வழங்குவதில்லை.
இழப்பீட்டு தொகைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாத. காரணத்தினால் மின் ஊழியர்கள் கேட்கும் லஞ்சத்தினை கொடுத்து தொலைக்கின்றனர்.

கோரிக்கை!

1.குற்றம் சாட்டப்பட்டுள்ள கம்பி ஆய்வாளர் மாரன் என்பவர் மீது  திருப்பூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அவர்கள் உரிய முறையில் விசாரணை செய்து துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு பணி நீக்கம் செய்யக்கோருகிறோம்.

2.,திலகர் நகர் பகுதி மின்மாற்றியில் உடனடியாக பழுது நீக்கி மின் நுகர்வோர்களுக்கு தடை இன்றி மின்சாரம் வழங்கக்கோருகிறோம்.

முக்கிய செய்தி!!

தமிழகம் முழுவதும் மின்சார வாரிய அலுவலகங்களில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் உங்களது தேவைகள் நிறைவேறவும், இழப்பீட்டு தொகைகள் எவ்வாறு பெறுவது என்பது  குறித்தும் மின்சாரம் சம்பந்தமான உங்களது அனைத்து சந்தேகங்களுக்கும்  தகுந்த சட்ட  ஆலோசனைகளுக்கும் கீழ் காணும் தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு பயனடைய வேண்டுகிறோம்.

C.செல்வராஜ் அவர்கள்
மாநில பொது செயலாளர்
இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு
எண் :20 வியாசர் தெரு
தியாகராய நகர்
சென்னை.
தொடர்பு எண் :90940 24006

மின் நுகர்வோர் விழிப்புணர்வு பணியில் ..........
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர் மாவட்டம்.
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் ......!!

Thursday 24 January 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :39 (மாநகராட்சி கடை ஏலம்)

ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO/0039/2019 ;நாள் :27 .01.201

திருப்பூர் மாநகராட்சி கடைகள் பொது கழிப்பிடங்கள் ஏலம் விட்டதில்  முறைகேடுகள் நடை பெற்றுள்ளதா?

குற்றம் நடந்தது என்ன?

உண்மை சம்பவம்.

பத்திரிக்கை செய்தி!

திருப்பூர் மாநகராட்சி 2019 -2022 ஆண்டின் ஆண்டு  குத்தகை உரிம இனங்கள் மற்றும் ஒப்பந்த புள்ளிகள் விளம்பர  அறிக்கை!

24.01.2019 தினத்தந்தி நாளிதழில்  திருப்பூர் மாநகராட்சி சார்பில் பொது ஏலம் மற்றும் ஒப்பந்த புள்ளிகள்  அறிவிப்பினை கண்டோம்.

அதே போல் மற்றொரு நாளிதழில் பொதுகழிப்பிடம் வாரசந்தை ,பேருந்து நிலைய சுங்க கட்டணம் உள்ளிட்ட 18 இனங்களுக்கான ஏலம் மற்றும் ஒப்பந்த புள்ளிகள்  விளம்பர அறிக்கையினையும் கண்டோம்.

இந்த அறிவிப்பு நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் சந்தேகத்தினையும் ஏற்படுத்தி உள்ளது .

2019 -2022.  மூன்று ஆண்டுகளுக்கான திருப்பூர் மாநகராட்சி நான்கு மண்டல அலுவலகங்களுக்குட்பட்ட 147 கடைகளுக்கான மூடி முத்திரையிடப்பட்ட ஒப்பந்த புள்ளிகள் 25.01.2019 அன்று காலை 10.30 மணியிலிருந்து 11.00. வரை அல்லது   மாற்றி வைக்கப்படும் தேதியில் ஆணையர் அல்லது அவரது அங்கீகாரம் பெற்ற முகவரால்   பெற்றுக் கொள்ள படும் .

அன்றைய தினம் 11.30 மணி அளவில் பகிரங்க ஏலம் விடப்படும்.

ஏலம் முடிவுற்ற பின்னர் வைப்பு தொகை செலுத்திய ஒப்பந்ததாரர்கள்  முன்னிலையில் ஒப்பந்த புள்ளிகள் திறக்கப்பட்டு ஏலத்தொகை அல்லது ஒப்பந்த புள்ளி கேள்வி தொகையில் எது அதிகமோ அந்த தொகை மாமன்றத்தின் மூலம்  முடிவு செய்யப்படும்.

ஏலம் எடுத்தவர்கள் அன்றைய தினமே முழு தொகையினையும் செலுத்திட வேண்டும்.

வைப்பு தொகை செலுத்துபவர்கள் ஏலம் மற்றும் ஒப்பந்த புள்ளிகளுக்கு தனித்தனியாக  24.01.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் மாநகராட்சி கருவூலத்தில் செலுத்த வேண்டும்.

வங்கி வரைவுகள் என்றால் ஏல தேதிக்கு ஒருநாள் முன்னதாக அதாவது 24.01.2019 அன்றைய தேதியில் செலுத்தி விட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடை ஏலம் எடுக்க இயலாமல் போனது குறித்து  பாதிக்கப்பட்டவர் நமக்கு அளித்த புகார் :

கடந்த இரண்டு ஆண்டு காலமாக மாநகராட்சி கடையினை குத்தகைக்கு எடுக்க வேண்டும் என அவர்  முயற்சி செய்து வருவதாகவும்  இந்நிலையில் 24.01.2019 அன்றைய நாளிதழில் மாநகராட்சி சார்பாக விளம்பரம் செய்யப்பட்டிருப்பதினை அன்றைய தினம்  மாலை 4.30 மணியளவில் பார்க்க நேரிட்டதாகவும் 5.00 மணிக்குள் வைப்பு தொகை மாநகராட்சி கருவூலத்திலோ வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும் என குறிப்பிட்டிருப்பதினை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.

முப்பது நிமிட நேரத்திற்குள் தாசில்தாரிடம் சென்று சொத்து மதிப்பு சான்று பெற இயலாது எனவும்  சொத்து மதிப்பு சான்றிதழ் இல்லை என்றால் வைப்பு தொகை  கூடுதலாக ₹25 000 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அவரிடம் ₹25000 ரூபாய் மட்டுமே தற்பொழுது  இருப்பதாகவும் கூடுதல் தொகை ₹25000   செலுத்துவதற்கு தன்னிடம் பணம் இல்லை எனவும் இந்த ஆண்டும் ஏலம் எடுக்க இயலாமல் போய் விட்டதாகவும்  கவலையுடன் தெரிவித்தார்.

இதற்கு யார் பொறுப்பு?

ஒரு நாள் கூட முழுமையாக கால அவகாசம் வழங்காமல் அவசர அவசரமாக பொது ஏலம் விட காரணம் என்ன?

செய்தி தாளில் விளம்பர அறிக்கை கொடுத்த அன்றைய தினமே  மாலை 5.00 மணிக்குள் வைப்பு தொகை செலுத்த வேண்டும் என நெருக்கடி கொடுக்க காரணம் என்ன?

இதனை பொது ஏலம் என எப்படி கருதுவது?

ஏற்கனவே காலியாக இருந்த கடைகளுக்கு ஏலமா? அல்லது குத்தகை காலம் முடிவடைந்த கடைகளுக்கு ஏலமா?

செய்தித்தாளை படித்தவுடன் ஒரு சில மணி நேரத்திற்குள் ஏலம் எடுக்க விரும்புபவர்கள்  எத்தனை பேர்கள் பணத்தினை புரட்டி வைப்பு தொகையை நேரிலோ  வங்கி வரைவுகளாக எடுத்து  மாநகராட்சி மைய அலுவலகத்தில் செலுத்த முடியும்?

ஏற்கனவே பல ஆண்டுகளாக கடைகளை நடத்தி வருபவர்களுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்கப்படுகிறதா?

அரசுத்துறை ஊழியர்கள் அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களின் பினாமிகள்  பயன் அடைய வேண்டும் என்பதற்காக கால அவகாசம் வழங்காமல் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் கடைகள் கழிப்பிடங்கள் ஏலம் விடப்படுகிறதா என பல்வேறு ஐயப்பாடுகள் எழுகிறது.

ஏற்கனவே பல ஆண்டுகளாக தொடர்ந்து  கடைகளை குறைந்த வாடகைக்கு குத்தகைக்கு எடுத்தவர்கள் கடைகளை கூடுதல் தொகைக்கு உள் வாடகைக்கு விட்டு கொள்ளை லாபம் சம்பாதித்து வருவது மாநகராட்சி ஆணையருக்கு தெரியுமா?

மக்கள் சாசனம் மற்றும் அரசாணைகளில் குறிப்பிட்டுள்ள தினங்களுக்குள் மக்கள் நல சேவைகளை வழங்க மறுக்கும் மாநகராட்சி நிர்வாகம் கடைகள் ஏல விவகாரத்தில்  மட்டும் அவசரம் காட்டுவது எதற்காக?

ஏழை எளிய மக்கள் பயன் அடைய முடியாமல் போவது ஏன்?

மாநகராட்சி அனுமதி பெறாமலும் மாநகராட்சி விதிகளை பின்பற்றாமலும் சட்ட விரோதமாகவும் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும்  பொது இடையூறாகவும் கடைகள் வணிக வளாக  கட்டிடங்கள் கட்டி கூடுதல் வாடகைக்கு விடுபவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல்  வேடிக்கை பார்ப்பது எதனால்?

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவகுமார் அவர்களிடம் அவசர கோரிக்கை!

1.மாநகராட்சி கடைகள் ,கழிப்பிடங்கள் உள்ளிட்ட இனங்களுக்கு ஏல தேதியில் இருந்து ஒரு வாரம் அல்லது குறைந்த பட்சம் மூன்று தினங்களுக்கு முன்னதாக நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட கோருகிறோம் .

2.கால அவகாசம் வழங்காமல் அவசர அவசரமாக 25.01.2019 தேதியில் ஏலம் விட பட்ட  இனங்கள் அனைத்தையும் உடனடியாக  ரத்து செய்து கால அவகாசம் வழங்கி மீண்டும் மறு ஏலம் விடக்கோருகிறோம்.

LAACO நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாதஇதழ்
திருப்பூர் மாவட்டம்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் .......

Thursday 17 January 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0037

Iஊழல் ஒழிப்பு செய்தி :LAACO;0037/2019; நாள்; 18.01.2019

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

உண்மை சம்பவங்கள்

பாக்கெட் பால் எச்சரிக்கை!!

மெகா மோசடியில் பாக்கெட் பால் நிறுவனங்கள்.

செயல் இழந்து கிடக்கும் தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினர்!

குற்றம் நடந்தது என்ன?

பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பால் பாக்கெட்டுகளில்
MRP: எம்.ஆர்.பி
B NO:  பேட்ஜ் எண்,
USE BY: யூஸ் பை
மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேக்கிங் செய்த தேதி இல்லை.

அப்படியானால் இந்த பாக்கெட்டுகள் எந்த தேதியில் பேக்கிங் செய்யப்பட்டது என பேக்கிங் செய்தவர்களை தவிர யாருக்கும் தெரியாது.

17.01.2019 அன்று திருப்பூர்  4.வேலம்பாளையத்தில் வட மாநிலத்தவர் நடத்தும்  ஒரு மளிகை கடையில் ஆரோக்யா  பாக்கெட் பால் வாங்கிய போது
MRP : ₹10
B N0 : VAQPU
USE BY 16.JAN.
என இருப்பதினை அறிந்து நாம் அதிர்ச்சி  அடைந்தோம்.

பால் காலாவதி ஆகி ஒரு நாள் ஆகி விட்டது.

கடைகாரரிடம் கேட்டால் இன்று தான் எங்களுக்கு விற்பனைக்கு வந்தது எனக்கூறுகிறார்.

அப்படியானால் காலாவதி ஆகிய பால் என தெரிந்தே விற்பனை செய்கிறார்களா?

ஆரோக்கியா பாக்கெட் பாலில் ஆரோக்கியம் இல்லை!

கெட்டுப்போன இந்த பாலை வாங்கி தாய்மார்கள் குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளின் உடல் நிலை என்னவாகும்?

அப்படியே ஹட்சன் தயிர் பாக்கெட் ஒன்று வாங்கி பார்த்த போது 13.01.19 / 27.01.19 என குறிப்பிட்டிருந்தது.

அப்படியானால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட தயிர் பாக்கெட்டுகளுக்கு மட்டும் 15 தினங்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பால் பாக்கெட்டுகளில் மட்டும் ஏன் பேக்கிங் தேதியும் காலாவதி தேதியும் குறிப்பிட வில்லை.

உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிந்தே இதனை அனுமதித்துள்ளனரா?

ஏன் இவர்களுக்கு நுகர்வோர்கள் மீது அக்கறை இல்லை.

குற்றச்சாட்டு!

திருப்பூர் முத்து இட்லி தோசை மாவு பொட்டலங்களில்  எந்த விபரங்களும் இல்லை என நாம் பல முறை புகார் கொடுத்த பிறகு  திருப்பூர் உணவு பாதுகாப்புத்துறையினர்  பேக்கிங் தேதி போட வேண்டாம் யூஸ்டு பை டேட் (USED BY DATE) மட்டும் போட அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அவர்களும் USED BY DATE என ஒரு தேதியினை  கண்ணுக்கு தெரியாத அளவில் ஒரு சில பாக்கெட்டுகளில் மட்டும் குறிப்பிட்டுள்ளனர் .

பேக்கிங் தேதி போட்டு விட்டால் மக்கள் விழிப்படைந்து விடுவார்கள்.

பொட்டல விதி சட்டத்திற்கு எதிராக சட்ட விரோதமாக செயல் படும் வியாபாரிகள் நஷ்டமடைந்து விடக்கூடாது என்பதாலேயே யூஸ்டு பை டேட் மட்டும் போட்டு நுகர்வோர்களை ஏமாற்றும் படி கூறியுள்ளார்களா?

உணவு பாதுகாப்புத்துறை வாட்ஸ்ஆப் எண்ணிற்கு பாதிக்கப்பட்ட நுகர்வோர்கள் புகார் அனுப்பினால் புகாரின் மீது துரித நடவடிக்கை எடுத்து  நடவடிக்கை எடுக்கப்பட்ட விபரங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து கைப்பற்றப்பட்ட விபரங்களையும்  புகைப்படத்துடன் புகார் அளித்தவர்களுக்கு தெரிவித்து வந்தனர்.

ஆனால் தற்பொழுது புகார் தாரர்களுக்கு எந்த விபரமும் தெரிவிப்ப தில்லை.

என்ன காரணம்?
அப்படியானால் உணவு பாதுகாப்புத்துறையினர் சட்ட விரோதமாக செயல் படும் வர்த்தகர்களுக்கு ஆதரவாக செயல் படுகிறார்களா?

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என விற்பனை செய்யப்படும்  பொட்டலங்களில் எந்த விபரமும் இல்லை!

நெல்லை அல்வா மஸ்கோத் அல்வா என பொட்டலங்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் பொட்டலங்களில் எந்த விபரமும் இல்லை.

கடலை மிட்டாய் பாக்கெட்டுகளிலும் எந்த விபரமும் இல்லை!

பேக்கரிகளில் பொட்டலங்களில் அடைத்து  விற்பனை செய்யப்படும் ரொட்டி பன்களிலும் எந்த விபரமும் இல்லை!

ஸ்வீட்ஸ் ஸ்டால்கள் மளிகை கடைகளில் 200 கிராம்  ₹20 ரூபாய் என விற்பனை செய்யப்படும் ஸ்வீட் கார வகைகள் பாக்கெட்டுகளில் எந்த விபரமும் இல்லை!

ஒரு கிலோ இரண்டு கிலோ ஐந்து கிலோ என ஸ்வீட் கார வகைகளை மொத்தமாக தயாரித்து பாக்கெட்டுகளில் அடைத்து பேக்கரிகளுக்கும்  கடைகளுக்கும்  விற்பனை செய்யும்  பாக்கெட்டுகளில் எந்த விபரமும் இல்லை!

வாரசந்தைகளில் பொட்டலங்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் எந்த ஒரு  உணவு பொருட்களிலும் எந்த விபரமும் இல்லை!

DRY FRUITS உலர் பழங்கள் என பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பாக்கெட்டுகளில் எந்த விபரமும் இல்லை.

சமைத்து உண்ணும் உணவு பொருளான மொட்டு காளான் பட்டை காளான் என பொட்டலங்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் பாக்கெட்டுகளில் எந்த விபரமும் இல்லை!

முத்து, ஆரோக்யா, பொன்னி, உதயம், செந்தில் என பல்வேறு பெயர்களில் இட்லி தோசை மாவு பொட்டலங்கள் எந்த விபரங்களும் இல்லாமல் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்களில் பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களில் எந்த விபரங்களும் இல்லை.

டோல்கேட்டுகளில் செயல் படும் தேசிய நெடுஞ்லை துறை கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து  விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களில் எந்த விபரமும் இல்லை.

தற்பொழுது  சுத்தமான வாகை  மரச்செக்கு எண்ணெய் என பாட்டில்களில் அடைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் எண்ணெய்  பாட்டில்களில் எந்த விபரமும் இல்லை!

நெய்யில் கலப்படம்!
சமையல் எண்ணெய்யில் கலப்படம்!
வெல்லத்தில் கலப்படம்!
டீத்தூளில் கலப்படம்!
அனைத்து மளிகை உணவு பொருட்களிலும் கலப்படம்!

தெரிந்தே திட்டமிட்டு பொது மக்களுக்கு பொது சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் தயாரிப்பாளர்கள் வர்த்தகர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?

இது எல்லாம் உணவு பாதுகாப்பு துறையினர்களுக்கு எதுவுமே  தெரியாதா என்ன?

யார் பொறுப்பு?

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையினரா?

மாநகர நகர் நல அலுவலர்களா?

தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்களா?

தொழிற்சாலைகள் ஆய்வாளர்களா?

மாநகராட்சி சுகாதாரத்துறையினரா?

மாவட்ட சுகாதாரபணிகள் இயக்குநர்களா?

மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு செயலாளர்களாகிய மாவட்ட லழங்கல் அலுவலர்களா?

நுகர்வோர் பாதுகாப்பு தலைவராகிய மாவட்ட ஆட்சியர்களா ?

இவர்கள் கடமை உணர்வுடன் செயல் பட்டால் ஒரே நாளில் சட்ட விரோதமாக செயல்படுவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களை பாதுகாக்க முடியும்.

இவர்கள் எந்த உணவை பாதுகாத்தார்கள்?
ஆனால்
இவர்கள் மக்கள் நலனில் அக்கறை கொள்வதாக பாசாங்கு செய்வார்களே ஒழிய எதுவும் செய்ய மாட்டார்கள்.

அப்படியே நேர்மையான ஒரு சில அரசூழியர்கள் நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும் ஆட்சியாளர்கள் இவர்களை விட்டு வைக்க மாட்டார்கள்.

எடையளவு மற்றும் பொட்டல விதி சட்டங்கள் யாருக்காக?

நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை நடை முறை படுத்துவது யார்?

அப்படியானால்
இதனை தடுப்பது யார்?

நுகர்வோர்கள்
வாடிக்கையாளர்கள்
வாக்காளர்கள்
பயணிகள்
பொது மக்கள் 
என பல்வேறு பெயர்களில் அவ்வபோது அழைக்கப்படும் அனைத்து அதிகாரங்களும் பெற்ற நாம் தான்.

பாட்டில்கள் ,டின்கள் பொட்டலங்களில் அடைக்கப்பட்ட எந்த ஒரு உணவு பொருட்கள் வாங்கினாலும் அவசரப்படாமல் கவனமுடன் பரிசோதித்து வாங்குங்கள்.

நமது உடல் நலனில் அக்கறை கொள்வோம்.
நம்மை நாமே பாதுகாப்போம்.

எடையளவு மற்றும் பொட்டல விதி சட்டங்களுக்கு எதிராக சட்ட விரோதமாக தயாரித்து பொட்டலம் செய்து விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை நுகர்வோர்களாகிய நாம் விலை கொடுத்து வாங்காமல் தவிர்த்து விட்டால் அதுவே போதும்.
இந்த கயவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.

நம்மை நாமே பாதுகாக்காவிட்டால் வேறு யார் வந்து நம்மை பாதுகாப்பார்கள்?

எனதருமை நண்பர்களே!
இளைஞர்களே!
சகோதர சகோதரிகளே
தாய்மார்களே!
பெரியோர்களே!
மாணவ செல்வங்களே!
விழித்து கொள்ளுங்கள்!
இத்தனை காலம் ஏமாந்தது போதும்
இனி மேலும் ஏமாந்து விடாதீர்கள்!
இது வெறும் எச்சரிக்கை மட்டும் அல்ல!
விழிப்புணர்வு பதிவு.

வேண்டுகோள்.

தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக செயல்படுபவர்களை அடையாளம் காட்ட நாம் தயார்
நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறையினர் தயாரா?

நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில்.

LAACO நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் .......!!