Tuesday 27 March 2018

திருப்பூர் முத்து இட்லி தோசைமாவு எச்சரிக்கை!

பாக்கெட்டுகளில்  அடைத்து விற்பனை செய்யப்படும்  முத்து இட்லி தோசை மாவு வாங்கி பயன் படுத்தும் நுகர்வோர்களுக்கு எச்சரிக்கை! 

LAACO : வெற்றி செய்தி :004/27.03.2018
FSO புகார் எண் : 3034 /26.03.2018

திருப்பூர் முத்து இட்லி தோசை மாவு  தயாரித்து விற்பனை செய்வதில் முறைகேடுகள்!

புகார் தாரர் :
ஆ.பழனிக்குமார்
அங்கேரிபாளையம்
திருப்பூர்.

உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களின் உடனடி கவனத்திற்கு,

சுகாதாரமற்ற முத்து இட்லி தோசை மாவு விற்பனை !!

பாக்கெட்டுகளில் அடைத்து திருப்பூரில் பெரும்பாலான மளிகை கடைகளில் விற்பனை!

வாகனங்களில்  கொண்டு வந்து அனைத்து மளிகை கடைகளுக்கும்  விநியோகம் செய்கின்றனர்.

குற்றவாளி :

NEW MUTHU FOOD PRODUCTS
5/802 A ,Pichampalayam Pudur
TIRUPUR

Fssai Lic No : 124150270000221

குற்றச்சாட்டு  : 01
பாக்கெட்டுகள் மூடி முத்திரை செய்யப்படாமல் உரிய பாதுகாப்பில்லாமல் ரப்பர் பைண்டு கொண்டு கட்டப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு :02
பேக்கிங் செய்த தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிட படவில்லை.

குற்றச்சாட்டு :03
தரமற்ற அரிசி உளுந்து கொண்டு தயாரிக்கப்படுவதாக தகவல்.

குற்றச்சாட்டு :04.
தோசை மாவு கெட்டு போகாமல் இருக்க இரசாயனம் கலக்கப்படுவதாக தகவல்.

குற்றச்சாட்டு :05
கடைகளில் தினசரி மீதமாகும் பாக்கெட்டுகள் குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

கோரிக்கை :

பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசிக்கும் திருப்பூரில் பல ஆயிரக்கணக்கான. மளிகை கடைகள் மூலை முடுக்குகளில் எல்லாம் காணப்படுகிறது ..

இந்த கடைகள் முழுவதிலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்வது என்பது இயலாத காரியம்.

எனவே இந்த தோசைமாவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஆய்வு செய்து அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள fssai. உரிமத்தினை  ரத்து செய்து முறைகேடுகள் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டால்  மாவு தொழிற்சாலையை  சீல் வைக்க கோருகிறேன்.

அனைத்து மளிகை கடைகளையும் சோதனை இட்டால்  முத்து, செந்தில்,
உதயம் என பல்வேறு பெயர்களில் பாக்கெட்டுகளில் அடைத்து  இட்லி தோசை மாவுகள் விற்பனை செய்து வருவதினை காண முடியும்.

குறிப்பு :  தினமும் மதியம் 2.00 மணியில் இருந்து  பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட. மாவுகள் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

புகைப்படம் எடுக்கப்பட்டது குரு மளிகை & ஜெனரல் ஸ்டோர்  திருப்பூர் மாநகராட்சி ஏழாவது வார்டு ஸ்ரீ நகர் மாஸ் கார்னர் பேக்கரி அருகில் செயல் பட்டு வருகிறது.

புகாரின் மீது திருப்பூர் உணவு பாதுகாப்பு துறையினர் விரைந்து நடவடிக்கை!

இரண்டு விதமான பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட இட்லி தோசை மாவு பாக்கெட்டுகள் 50 கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாம்.

ஒரு பாக்கெட் ஆய்வுக்காக எடுத்து கொண்டார்களாம்.

எந்த ஒரு பாக்கெட்டிலும் பேக்கிங் தேதி  காலாவதி தேதி,  லாட் எண்  உள்ளிட்ட எந்த விபரமும் குறிப்பிட பட வில்லையாம்.

பழைய முகவரியில் வாங்கிய fssai உரிமம் காலாவதி ஆகி விட்டதாம்.

புதிய முகவரியில் fssai உரிமம் இப்போது விண்ணப்பித்துள்ளார்களாம் .

தயாரிப்பு தேதி உள்ளிட்ட விபரங்களை
பாக்கெட்டுகளில் குறிப்பிட சொல்லி அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கினார்களாம்.

உடனடியாக இட்லி தோசை மாவு தயாரிப்பினை நிறுத்த சொல்லி விட்டார்களாம்.

அருமை!  அருமை! 

நுகார்வோர் நலனில் அக்கறைக் கொண்டு இதை செய்ததற்கு பெருமை பட வேண்டியது தான்.

ஆனால் ஓரு டவுட்டு!

அவர்கள் அனுப்பிய போட்டோக்களில் 50 மாவு பாக்கெட்டுகள் தான் கைப்பற்றி அழிக்கப்பட்டுள்ளது என்பது தான் நம்பும் படியாக இல்லை!

Respected madam,

Good morning, based on whatsapp complaint NO:3034/27/26,the concern FSO inspected that ( batter)New muthu kavi,5/802A, pitchampalayam pudhu, Tirupur corporation (N).

At the time of inspection there are two types of packing of batter was found without packing date,lot no,best before and etc.

The FBO advised to stop productions immediately.

1 surveillance sample taken.

50 batter packets were seized & destroyed. inspection notice issued.

Fssai LC has been obtained for prior address and expired

.Now,he applied new LC for new address.

Strictly warned to follow labelling manners.Thank you mam.DO Tirupur.

நுகர்வோர் விழிப்புணர்வு பணியில் ..
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி : 98655 90723

2 comments: