Thursday 5 April 2018

காவிரி நீர் ஒரு சிறப்பு பார்வை!

காவிரி நீர் ஒரு சிறப்பு பார்வை ;

காவிரி நீர்!  காவிரி நீர்!
கானல் நீராகி போன காவிரி நீர்!

போராட்டம்! போராட்டம்!
இது தமிழர்களுக்கு எதிரான போராட்டம்!

சாலை மறியல்!
தமிழக பேருந்துகள் மீது தாக்குதல்!
ஓட்டுநர்கள் காயத்துடன் உயிரை காப்பாற்றி கொள்ள  ஓட்டம்!
பயணிகள் அலறியபடி ஓட்டம்!
இரயில் மறியல்! 
இரயில் பயணிகள் அவதி!
போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறு!
சுங்க சாவடி அடித்து உடைப்பு!
வலு கட்டாயமாக கடை அடைப்பு போராட்டம்!
கிரிக்கெட் ரசிகர்கள் மீது தாக்குதல்!
காவல் துறையினர் மீது தாக்குதல்!
காவல் துறை பாதுகாப்பினை மீறி கிரிக்கெட் மைதானத்திற்குள் அத்து மீறி நுழைந்து போராட்டம்!
தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் அத்து மீறி நுழைந்து போராட்டம்!

எதற்காக இந்த அளவிற்கு கடுமையான போராட்டம்!

நீதிமன்ற உத்தரவு படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தாம்.

போராட்ட காரர்கள் விவசாயிகள் நலன் கருதி தான்  போராடுகிறார்களாம்.!

சபாஷ்! சபாஷ்!

யாரை ஏமாற்ற இந்த கபட நாடகம்?

தமிழக அரசியல் வாதிகளால் தாக்கப்படும் அப்பாவி தமிழக மக்கள்!

அந்தோ பரிதாபம்!
காவிரி தாயே கருணை செய்வாய்!
காவிரி நீர்!
நீதிமன்ற உத்தரவு!
காவிரி மேலாண்மை வாரியம்!
தொடர் கதையாகும் போராட்டங்கள்!

தமிழக மக்களுக்கு எதிரான போராட்டங்கள் தேவையா?

காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்காத காரணத்தினால் தமிழகத்தின் சுமார் 11 டெல்டா மாவட்டங்களில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் நலிவடைந்து பல ஆண்டு காலம் ஆகிவிட்டது.

காவிரி நீர் தமிழகத்திற்கு பெற்றிட சுமார் 150 ஆண்டு கால போராட்டம்!

தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரினை பெற வேண்டியது தமிழக அரசின் உரிமை !

அதனை வழங்க வேண்டியது கர்நாடகா அரசின் கடமை! 

கர்நாடகா வாழ் மக்களின் குடிநீர் தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறை உள்ள போது நாங்கள் எப்படி தமிழகத்திற்கு காவிரி  நீரினை விவசாயத்திற்கு  வழங்க முடியும் என்பது கர்நாடகா அரசின் வாதம்!

இது அவர்களின் உரிமையாகக்கூட இருக்கலாம்!

பல போராட்டங்களின் விளைவாக
தமிழக அரசு சார்பில் கர்நாடகா அரசுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தமிழக மக்களுக்கு குறிப்பிட்ட அளவு டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்பது  நீதி மன்றம் உத்தரவு!

ஆனால் கர்நாடகா அரசு நீதிமன்ற உத்தரவினை மதிக்காமல் தண்ணீர் வழங்க திட்டமிட்டு மறுத்து வருகிறார்கள்!

சரி இதற்கான தீர்வு தான் என்ன?

மத்திய அரசு மற்றும் இரு மாநில அரசுகள் இணைந்து காவிரி மேலாண்மை வாரியம் ஒன்று அமைத்து அதன் மூலம் இரு மாநில அரசுகளுக்கும் சுமூக தீர்வு ஏற்பட வேண்டும்!

அதனை மத்திய அரசு ஆறு வார காலங்களில் நடை முறை படுத்த வேண்டும்! என்பது நீதிமன்ற உத்தரவு.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் எனக்கூறியது  மத்திய அரசு!

நீதிமன்றம் குறிப்பிட்ட நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வில்லை எனக்கூறி தமிழக அரசு மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.

நான்கு மாநில தலைமை செயலாளர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் மே 03 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து முடிவு செய்வதாகவும் மத்திய அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

காவிரி நீர் விவகாரத்தினால் பல போராட்டங்கள், உயிர் இழப்புகள், அரசுக்கும் பொது மக்களுக்கும் இழப்பீடுகள் பொது தொல்லைகள் என பல்வேறு பிரச்சனைகளை தமிழக மக்கள் பல ஆண்டுகளாக ஏற்கனவே அனுபவித்து வந்துள்ளனர்.

கர்நாடகா வாழ் தமிழர்கள் இன்று வரையிலும் காவிரி நீர் விவகாரத்தினால் ஒரு வித மரண பயத்தில் தான் வாழ்ந்து வருவதாக அங்கிருந்து தகவல் வந்து கொண்டிருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது தமிழகத்திற்கு தண்ணீர் விட மாட்டோம் என கர்நாடகாவினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது இரு மாநிலத்திற்கும் உள்ள முக்கியமான பொது பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இதனை சட்ட ரீதியாக தான் கையாண்டு இரு மாநில மக்களுக்கும் நல்லதொரு முடிவினை ஏற்படுத்த ஆட்சியாளர்கள் முயல வேண்டும்.

மத்திய அரசினை பொறுத்த வரை இரு மாநில மக்களும் பாதிக்கப்பட கூடாது.
அவர்கள் எடுக்கும் முடிவினால் தங்களது வாக்கு வங்கி சரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாய் உள்ளனர்.

சரி இதனால் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தமிழக விவசாய பெருங்குடி மக்கள் தான்.

தமிழக ஆட்சியாளர்களுக்கும் அனைத்து அரசியல் வாதிகளுக்கும் இதில்  முக்கிய பொறுப்பு உண்டு.

சட்ட வல்லுந‌ர்களுடன் கலந்து ஆலோசனை செய்து அனைத்து அரசியல் வாதிகளும் ஆட்சியாளர்களும் ஒன்றினைந்து காவிரி நீரினை எவ்வாறு பெறுவது என்பதிற்கான வழி முறைகளை ஆராய்ந்தும் ,காவிரி மேலாண்மை வாரியத்தினை நீதி மன்றத்தின் மூலம் அமைத்து உரிய நிவாரணம் பெற்று தருவதும் தான்  இதற்கான தார்மீக வழியாக இருக்கும்.

நமது எதிர்ப்பினை காட்டுவதற்கு பல வழிமுறைகளை கையாண்டு  அறவழி போராட்டங்கள் மூலம் தமிழக மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் போராடி இருக்க வேண்டும்.

ஆனால் தமிழகத்தினை பொறுத்த வரை ஜாதி ,மத ,இன, மொழி ,கட்சிகள் என மக்களை பிரித்து  அரசியல் செய்யும் அரசியல் கட்சியினர் தான் உள்ளனர்.

இவர்கள் தேர்தல் தோறும் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக கட்சி மானம் கொள்கைகளை இழந்து சுயநலத்திற்காக முரண்பட்ட  கூட்டணிகளை  அமைத்து தமிழக மக்களை முட்டாளாக்கி அடிமை படுத்தி வைத்துள்ளனர்.

இவர்கள் மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லி மக்களுக்கு எதிராக தான் நடந்து கொள்கின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசினை கண்டித்து தமிழக விவசாயிகளுக்காக  போராடுகிறோம் என்று சொல்லி தமிழக மக்களுக்கு எதிராக போராடி தமிழக மக்களை தாக்குவதுடன் மிகுந்த  பொருளாதார இழப்பீட்டினையும் திட்டமிட்டு ஏற்படுத்தி வருகிறார்கள்.

கடை அடைப்பு போராட்டம் என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபட்டு தமிழக மக்களின் கடைகளை வலு கட்டாயமாக அடைக்க சொல்லியும் அடைக்காத கடைகளை   உடைத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை சிதைக்கின்றனர்.

அரசு பேருந்துகளான பொது சொத்துக்களை அடித்து உடைத்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தி அதில் பயணம் செய்யும் அப்பாவி மக்களை தாக்குகின்றனர்.

அரசு பேருந்து ஓட்டுநர்களின்  கோரிக்கைகளுக்காக போராடுகிறோம் என சொல்லி அரசு பேருந்துகளை அடித்து உடைத்து துவம்சம் செய்தவர்கள் இன்று அந்த பேருந்து ஒட்டுநர் நடத்துநர்களை தாக்குவது எந்த விதத்தில் நியாயம்.

தமிழக மக்கள் பயணிக்கும் பேருந்துகளை செல்ல விடாமல் பேருந்து மறியல் செய்து  போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் பொது இடையூறு ஏற்படுத்து கின்றனர்

இரயிலில் பயணிக்கும் தமிழக மக்களுக்கு எதிராக இரயில் மறியல் செய்கின்றனர்.

பொது சாலைகளில் இயங்கும் சுங்க சாவடிகளை கைப்பற்றி தாக்குதல் நடத்துகின்றனர்.

தமிழக மக்களை இரவு பகல் பாராமல் காவல் காக்கும் காவல் துறையினர் மீது தாக்குதல்  நடத்தி காவலர்களின் மண்டையை உடைக்கின்றனர்.

செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

தினக்கூலி பணி செய்து ஒரு வேளை உணவு உண்ணும் நிலையில் இன்றும் தமிழகத்தில் எத்தனையோ பேர் உள்ளனர். இவர்களது வாழ்வாதாரத்தினையும் கெடுக்கின்றனர்.

ஒரு நாள் கடைகள் அடைப்பினால் காலாவதியான உணவு பொருட்களை
உண்ணும் நிலைக்கு தமிழக மக்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

கடை நடத்துகிறவர்கள் ,ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ,பேருந்தில் பயணிப்பவர்கள், இரயிலில் பயணிப்பவர்கள் ,சுங்க சாவடியில் பணி புரிபவர்கள்,கிரிக்கெட் ரசிகர்கள்,  செய்தியாளர்கள் ,காவல் துறையினர்  இவர்கள் அனைவரும் தமிழக மக்களே!

சட்டம் ஒழுங்கினை பாதுகாப்பது காவல் துறையினரின் தலையாய கடமை!

அத்து மீறி சட்ட விரோதமாக போராடுபவர்களை தடுத்து நிறுத்தும்
காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்துவது வெட்க கேடான செயல்!

காவல் துறையினர் பாதுகாப்பு இல்லை எனில் எந்த ஒரு அரசியல் வாதியும்  சுதந்திரமாய் செயல் பட முடியாது.

ஒரே ஓரு நாள் மட்டும் காவல் துறையினர் அனைவரும் அவர்களது பணியினை புறக்கணித்து விட்டால் என்னவாகும்?

ஒரு நாள் போராடினால் கைது செய்து சாப்பாடு போட்டு மாலையில் வெளியில் விட்டு விடுவார்கள் என்ற தைரியத்தில் ஆட்டம் போடுகின்றனர்.

இவர்கள் மீது குற்ற வழக்குககள் பதிவு செய்து சிறையில் அடைத்து விட்டால் எவனும் மக்களுக்கு எதிரான போராட்டங்கள் செய்ய மாட்டார்கள்.

இப்படி தி.மு.க உள்ளிட்ட அனைத்து எதிர் கட்சிகளும் ஒருங்கிணைந்து தமிழக மக்களுக்கு எதிரான வன்முறை வெறி ஆட்டங்களை கட்டவிழ்த்து விட்டு  தமிழக மக்களுக்கு காவிரி நீர் பெற்று தருவதற்காக தான் போராடுகிறோம் என  ஒட்டு மொத்த தமிழக மக்களையும் தாக்கி வடி கட்டிய முட்டாளாக்கி வருகின்றனர்.

இதனால் மத்திய அரசுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இல்லை.

முழுக்க முழுக்க தமிழகத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களுக்கும் தான் பாதிப்பு!

இந்த கூமுட்டை அரசியல் வியாதிகளை தமிழக மக்கள்  தூக்கி  தோளில் சுமப்பதினால் தான் சொந்த நாட்டிலேயே தினமும் அச்சத்துடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

தமிழக ஆட்சி அதிகாரத்திலும் மத்திய ஆட்சி அதிகாரத்திலும் உள்ள ஆளும் அ.தி.மு.க .வினர் தங்களுடைய ஆட்சியை தக்க வைப்பதிலேயே குறியாய் உள்ளனர்.

39 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வெற்றி பெற செய்தால் தமிழக உரிமைகளை கேட்டு பெற முடியும் என சூளுரைத்து மக்களின் வாக்குகளை  பெற்று உறுப்பினர் ஆனவர்கள் இன்று
பாராளுமன்றத்தில் கூச்சல் போடுகிறார்களாம்!கொக்கரிக்கிறார்களாம்.!

ஏன் தமிழக மக்களுக்காக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜிளாமா செய்ய வேண்டியது தானே?

தமிழக மக்களின் மீது அக்கறை இல்லாத கேடு கெட்ட இந்த சுய நல அரசியல் வியாதிகளை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காசு வாங்கி ஓட்டு போட்டதினால் அவனுங்க அடிக்கும் அடியினையும் கொள்ளையினையும் பொறுத்து தான் ஆக வேண்டிய சூழ்நிலையில் தமிழக மக்கள்.

கர்நாடகாவில் போராடும் அரசியல் கட்சியினர்  அங்கு வாழும் தமிழக மக்களையும் தமிழக பேருந்துகள் மீதும் தான் தாக்குதல் நடத்துகின்றனர்.
அவர்கள் கன்னடர்கள் மீதோ  அரசு சொத்துகள் மீதோ
தாக்குதல் நடத்துவதில்லை!

தமிழகத்தில் உள்ள நாதாரிகளுக்கு ஏன் இது கூட தெரிய வில்லை!

தமிழக மக்களுக்கு எதிரி தமிழக அரசியல் வியாதிகளே!

இவனுங்க ஆளாளுக்கு ஒவ்வொரு நாளும் போராட்டங்களை அறிவிப்பார்கள் .

இதனால் அரசுக்கும்  தமிழக மக்களுக்கும் மிகுந்த இழப்பீடு!

பள்ளி தேர்வுகள் நடை பெற்று கொண்டிருக்கும்  இந்த தருணத்தில் தமிழக மாணவ மாணவிகள் நலனிற்கு எதிரான போராட்டங்கள் தேவையா?

தற்பொழுது தமிழகத்தில் நடை பெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளை எதிர்க்கின்றனர்.

ரசிகர்களை தாக்குகின்றனர்.
விளையாட்டு மைதான வாயிலில் பூட்டு போட போவதாகவும், மைதானத்தில் பாம்புகளை விடப்போவதாகவும் பீலா விடுகின்றனர்.

மைதானத்திற்குள் அத்து மீறி நுழைந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள் சுமார் 40 ஆயிரம் பேரும் எதிர் தாக்குதல் நடத்தினால் என்னவாகும்?

கிரிக்கெட் மைதானம் முன் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மைதானத்தினுள் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் விளையாட்டு போட்டியை கண்டு களிக்கும் தமிழக மக்களுக்கும் பாது காப்பு அளிப்பது யார்? 

இவர்களின் போராட்டத்தினால் ஒட்டு மொத்த மக்களும் தினம் தினம் அவதி பட்டு கொண்டு மிகுந்த துயரத்தில் உள்ளனர்.

எங்கு நோக்கினும் போக்குவரத்து நெரிசல்.

விவசாயிகளின் நலன் என கூறி இவர்கள் தமிழர்களின் நலனில் அக்கறை கொள்வதில்லை!

தமிழகத்தில் நடை பெற்று வரும் அனைத்து போராட்டங்களும் தமிழக மக்களுக்கு எதிரான போராட்டம் என்பது தான் நிதர்சனமான உண்மை!

அரசியல் கட்சிகளை வைத்து ஊழல் செய்து கனிம வளங்களை கொள்ளை அடித்து  ,நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து  கோடி கோடியாக கொள்ளை அடித்து மாட மாளிகைகள் பலதரப்பட்ட தொழில்கள் என சுக போகமாக வாழும்
தமிழக அரசியல்  வியாதிகளால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

தமிழக மக்களே!

தமிழ் எங்கள் உயிர்!  தனி தமிழ்நாடு!  தொப்புள் கொடி உறவுகளுக்காக போராடுகிறோம் என பாசாங்கு செய்து போலி வேசம் போட்டு தமிழகத்தினை பிரித்தாள நினைக்கும்  கயவர்களை அடையாளம் காணுங்கள்!

இவர்கள் கையில் தனி தமிழ்நாடு என்று ஒன்று கிடைத்து விட்டால் என்னவாகும்.?

இலங்கை வாழ் தமிழர்களை பாதுகாக்க தவறியவர்கள்!

பல லட்சம் இலங்கை வாழ் தமிழர்களை கொன்று குவித்த ஈவு இரக்கமற்ற சர்வதேச கொலை குற்றவாளி இலங்கை அதிபரை சந்தித்து கைகுலுக்கி கட்டி தழுவி  விருந்துண்டு
அவன் கொடுத்த பரிசு பொருட்களை பல்லிலித்து பெற்று கொண்டு வந்த தமிழக அரசியல் வியாதிகளை
இன்னும் மக்கள் மறக்க வில்லை!

தற்பொழுது கர்நாடகா அரசு பேருந்தையும் உடைத்துள்ளனர்.

இதன் மூலம் கர்நாடகா வாழ் தமிழர்களுக்கும்  ஆபத்து ஏற்படுத்தும் சூழ்நிலைகளை திட்டமிட்டு அரங்கேற்றி வருகிறார்கள்!

வாக்கு அளித்த மக்களுக்கு எதிராக செயல் பட்டு வரும் இந்த கூட்டு களவாணி அரசியல் வியாதிகளை  புறக்கணித்து நேர்மையான ஆட்சியாளர்களை தேர்வு செய்யுங்கள்!

அப்போது தான் தமிழக மக்கள் அனைத்து விதத்திலும் நிம்மதியாய் வாழ முடியும்.

அறிவார்ந்த தமிழக மக்கள் இனி மேலாவது போலி அரசியல் வியாதிகளிடம் இருந்து விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

பொது மக்களுக்கு இடையூறாக. சட்ட விரோதமாக போராடும் போராட்ட காரர்களை காவல் துறையினர் இரும்பு கரம் கொண்டு  ஒடுக்க வேண்டும்.

நதிகள் அனைத்தினையும் ஒன்றிணைத்து தேசிய மயமாக்கி அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான நீரினை பகிர்ந்து வழங்கினால்
மட்டுமே இது போன்ற போராட்டங்கள் முடிவுக்கு வரும்!

மன வருத்தத்துடன் ......................!!

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்  மாவட்டம்.
உலாபேசி : 98655 90723
நாள் :12 .04.2018

No comments:

Post a Comment