Monday 12 March 2018

திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர் வாசு குமார் அவர்களின் கவனத்திற்கு!

திருப்பூர் மாநகராட்சி மதல் மண்டல உதவி ஆணையர் வாசுகுமார் அவர்களின் கவனத்திற்கு !

தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட மாநகராட்சி  முதல் வார்டு புதுக்காலனி சக்தி எலக்ட்ரிக்கல் எதிரில் குறுகிய சாலை திருப்பத்தில் பிரதான குடிநீர் குழாய் சாலையின் மேல் மட்டத்திலேயே வெளியில் தெரியும் வகையில் பதிக்கப்பட்டுள்ளது. 

குழாய் பதிக்கும் போதே நாம் எச்சரிக்கை செய்தோம்.

ஆனால் கடமை தவறிய ஊழியர்கள் கண்டு கொள்ள வில்லை.

பூமிக்கடியில் பாறை இருப்பதினால் மேல் மட்டத்தில் பதித்து மண் மற்றும்  கல்லை கொண்டு மூடி சென்று விட்டனர்.

ஜி.ஐ குழாயுடன் பி.வி.சி குழாய் இணைப்பு செய்துள்ளனர்.

கனரக வாகனங்கள் இந்த. குறுகிய சாலையில் செல்லும் போதெல்லாம் இந்த பிரதான குடிநீர் குழாய் பல முறை உடைந்து குடி நீர் வீணாகி வருகிறது.

மழைகாலத்தில் கழிவு நீரும் உடைந்த குடிநீர் குழாயில் கலந்த நிகழ்வும் நடை பெற்றது.

இதனை தங்களிடம் நேரில் தெரிவித்தும் இது நாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

குடிநீர் குழாய்கள் பூமிக்கடியில் ஒரு மீட்டர் ஆழத்தில் பதிக்க வேண்டும் என விதிமுறைகள் இருந்தும் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது.

குழாய்  ஆய்வாளர் என்பவர் எதனை  ஆய்வு செய்கிறார்?

இவருக்கு வழங்கும் ஊதியம் எதற்காக?

ஏன் பூமிக்கடியில் இருக்கும் பாறையை உடைத்து குழாய் பதிக்க மாநகராட்சியில் எந்த உபகரணங்களும்  வசதிகளும் இல்லையா?

பொதுமக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மட்டும்  பல ஆயிரம் லஞ்சம் வாங்குவதற்கு தான் டேப் இன்ஸ்பெக்டர் என்ற பணியிடத்தினை மாநகராட்சி உருவாக்கி இருப்பதினையும் அறிய முடிகிறது.

உரிமம் கொடுக்கப்பட்டுள்ள பிளம்பர்களும் குழாய் ஆய்வாளர்களும் சேர்ந்து தான் குடிநீர் இணைப்புக்கு அதிக பட்சமாக ₹ 10000 வரையிலும் லஞ்சம் பெறுவதாக எங்களிடம் பல புகார்கள் ஆதாரத்துடன் பாதிக்கப்பட்ட பொது மக்கள் கொடுத்துள்ளனர்.

பிளம்பரிடம் கேட்டால் மாநகராட்சி  அனைத்து அதிகாரிகளும் சேர்ந்து லஞ்சப் பணத்தினை  பிரித்து எடுத்து  கொள்வோம் என ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

லஞ்சம் வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசூழியர்கள் இதில் ஏன் கவனம் செலுத்த வில்லை? 

ஆமாம்.

விதி முறை மீறி பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் அடிக்கடி உடையும் போதெல்லாம்  அதனை சரி செய்வதாக சொல்லி  மாநகராட்சி பணத்தினை வீணடிப்பது ஏன்? 

இதிலும் பராமரிப்பு பணிகள் என ஊழல் செய்யவா?

வீட்டு வரி செலுத்த இயலாத நிலையில் உள்ள ஏழை எளிய மக்களின் குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டித்து சட்ட கடமை
ஆற்றும் தாங்கள் மாநகராட்சிக்கு தேவையற்ற இழப்பீடுகளை தெரிந்தே செய்யும் இதற்கு பொறுப்பு வகிக்கும் கடமை தவறிய மாநகராட்சி ஊழியர்களின் ஊதியங்களை ரத்து செய்து அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?

இந்நிலையில் நேற்றும் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறியது.
மீண்டும் உடைந்த குழாயினை ஊழியர்கள்  சரி செய்து மண்ணால் மூடி சென்றுள்ளனர்.

இதற்கு நிரந்தர தீர்வு காண தங்கள் கவனத்திற்கு மீண்டும்  கொண்டு வந்துள்ளேன்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி : 98655 90723

No comments:

Post a Comment