Wednesday 21 March 2018

வழிபாட்டு சுதந்திரம் மத சுதந்திரம் என்றால் என்ன?

📢  #வழிபாட்டுசுதந்திரம் #மற்றும்
#மதசுதந்திரம்  #குறித்து #இந்திய #அரசியலமைப்புசாசனம்
#என்னசொல்கிறது*?
LAACO /21.03.2018

1 வழிபாட்டு சுதந்திரம் என்றால் என்ன?

#இந்தியஅரசியலமைப்பு #சாசனக்கோட்பாடு
25 (1)

★பொது ஒழுங்கு, ஒழுக்க முறைமை மற்றும் உடல் மனநலம் ஆகியவற்றிற்கும் இந்த பகுதியில் கூறப்பட்ட மற்றவற்றிற்கும் உட்பட்டு தம் மனசாட்சியின் படி செயல் படும் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு.

★ஒரு மதத்தை கொண்டாடவும் கடைப் பிடிக்கவும் பரப்பவும் அவர்கள் உரிமை உடையவராவார்.

#கோட்பாடு : 25 (2) அ

★இந்த பிரிவில் உள்ள எதுவும் மதச்செயல் பாட்டில் தொடர்புடைய பொருளாதார, நிதி சார்ந்த அரசியல் ரீதியிலான அல்லது மதம் சார்ந்த இதர செயல்களை ஒழுங்கு படுத்தவோ கட்டுபடுத்தவோ கூடாது.

#கோட்பாடு : 25(2) ஆ

★சமுதாய நலனுக்காகவும் சீர்திருத்தம் அல்லது இந்து மத சார்புள்ள இடங்களை இந்துக்களின் எல்லா வகுப்பினருக்கும் பாகுபாடின்றி திறந்து வைக்க தேவைப்படும் எந்த ஒரு சட்டத்தை செயல் படுத்துவதிலிருந்தும் அல்லது ஒரு புதிய சட்டத்தை அதற்காக உருவாக்கு வதிலிருந்தும் 🏛அரசை தடுத்து விட முடியாது.

2 மத சுதந்திரம் என்றால் என்ன?

#கோட்பாடு :26

★பொது ஒழுங்கு, ஒழுக்க முறைமை, நல்வாழ்வு இவற்றுக்கு கட்டுப்பட்டு ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களும் அல்லது அம்மத பிரிவைச் சார்ந்தவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

#கோட்பாடு 26 (அ)

மதம் சார்ந்த மற்றும் அறப்பண்புடைய காரியங்களுக்கு அமைப்புகளை நிறுவவும், பராமரிக்கவும் உரிமை உண்டு.

#கோட்பாடு 26 (ஆ)

தமது மத விவகாரங்களை தாமே நிர்வகிப்பதற்கும் உரிமை உண்டு.

#கோட்பாடு :26 (இ)

அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தேடிக்கொள்ளவும் உரிமையாக்கி கொள்ளவும் உரிமை உண்டு.

#கோட்பாடு :26 (ஈ)

★அத்தகைய சொத்துக்களை சட்ட ஒப்புதலோடு நிர்வகிக்கவும் உரிமை உடையவராவார்.

★மத சுதந்திரத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை இப்பிரிவு கையாள்கிறது,

★இதன் அடிப்படையில் தான் நாடு முழுவதும் வீதிக்கொரு இந்து கோவில்களும், கிறிஸ்துவ தேவாலயங்களும், மசூதிகளும், கட்டப்பட்டு அவரவர் மத வழக்கப்படி வழிபாட்டு சுதந்திரத்தினையும் மத  சுதந்திரத்தினையும் பெற்றுள்ளனர்!👍

★மதங்கள் வேறானாலும் வழி பாட்டு முறைகள் வேறானாலும் அனைத்து சமுதாயத்தினரும் சாதி, மதம் ,இனம், மொழி பாகுபாடில்லாமல் சகோதர ஒற்றுமையுடன் நமது இந்திய தேசத்தில் வாழ்ந்து வருவதில் பெருமை அடைகிறோம்🙏

★ஆனால் இந்திய அரசியலமைப்பு சாசன கோட்பாடுகளுக்கு எதிராக நமது இந்திய தேசத்தினை பிரித்தாலும் சூழ்ச்சிகளுடன் செயல் பட்டு வரும் ஒரு சில கேடு கெட்ட தேச  விரோதிகளினால் தான் சாதி, மத ,இன , மொழிகளுக்கு எதிரான போராட்டங்களும் கலவரங்களும் ஆங்காங்கே  தூண்டப்பட்டு நடை பெற்று வருகிறது 😡

★சுய நலன்களுக்காக மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியுடன்  செயல் பட்டுவரும் அனைத்து அரசியல் வாதிகளுக்கும்  இதில்  பெரும் பங்கு உண்டு

★இதனால் அப்பாவி மக்கள் பலர் பலியாக்கப் பட்டுள்ளனர் 😂

★அனைத்து சாதி ,மத ,இன மொழி சமுதாயத்தினை சேர்ந்த சகோதர சகோதரிகளே !!🤝

★தேச விரோதிகளையும் சமூக விரோதிகளையும்
சட்ட விரோதிகளையும் அடையாளம் காணுங்கள் ✅

★வன்முறைகளை கண்டு ஒதுங்குங்கள்

★நமது தாய்த்திரு நாடு இந்தியா.🇮🇳💪

★நம் தாய் நாட்டை மீட்டெடுக்க சாதி, மாத, இன, மொழி பாகுபாடில்லாமல் 😂 கண்ணீரூம் செந்நீரூம் சிந்தி உயிர் துறந்த தியாகிகளையும் ,தேச தலைவர்களையும் போற்றுவோம். 👏

★இந்திய அரசியலமைப்பு சாசனம் நாம் ஒவ்வொருவருக்கும்  வழங்கி உள்ள உரிமைகளின் படியும் கடமைகளின் படியும் சகோதர ஒற்றுமையுடன் வாழ்வாங்கு வாழ்ந்து உலக அரங்கில் நம் இந்திய தேசத்தினை தலை நிமிர செய்வோம் ஒன்று படுவோம் வாருங்கள்  என இந்திய அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு 51 A(ஒ) இன் கீழ்  உங்கள் பொற்பாதம் வணங்கி வேண்டுகிறோம்🙏
💥💥💥💥💥💥💥💥💥💥💥
✍ தேசத்தின் வளர்ச்சி பணியில் ........!!
வாழ்த்துக்களுடன்
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி :98655 90723

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
உலாபேசி :98655 43303

No comments:

Post a Comment