Tuesday 13 March 2018

ஊழல் ஒழிப்பு செய்தி:0026 பேக்கரி முறை கேடுகள்! புகார்!!

ஊழல் ஒழிப்பு வெற்றி செய்தி; 026/14.03.2018

குற்றம் நடந்தது என்ன?

உண்மை நிகழ்வுகள்.!

நமது புகாரின் தொடர்  நடவடிக்கைகள்!!

பேக்கரிகளில் தேநீர் மற்றும்  உணவருந்த செல்லும் பொது மக்களுக்கு ஓர்  முக்கிய எச்சரிக்கை! கவனம்!!

சட்ட விரோதமாக செயல் படும் பேக்கரி!

குற்றவாளி யார்?

முத்துராஜ் ,வயது :47
உரிமையாளர்
விஜய லட்சுமி ஐயங்கார் கேக் ஷாப்
நால் ரோடு
பிச்சம்பாளையம் புதூர்
பி.என் ரோடு , திருப்பூர்
திருப்பூர் மாவட்டம்.

புகார் செய்யப்பட்ட காரணம் என்ன?

1.குளிர் பானங்கள் அதிகபட்ச விற்பனை விலையை ( MRP )விட கூடுதல் விலைக்கு விற்பனை!

2. ஈக்கள் மொய்க்கும் பொது சுகாதாரக்கேடு விளைவிக்கும் உணவு பொருட்கள் விற்பனை!

3.காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை!

4.தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை!

5.கடையின் முன்பு துர்நாற்றம் வீசும் கழிவு நீர் கால்வாய் கழிவுகள் .அதிலிருந்து உற்பத்தியாகும் ஈக்கள் பாதுகாப்பில்லாமல் வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களில் ஐக்கியம்.

நானும் நண்பர் ஒருவரும் மேற்காண் எதிரியின் பேக்கரிக்கு 8 மார்ச் 2018 அன்று  சென்றிருந்தோம்.

அங்கே கண்ட காட்சி அதிர்ச்சியும் அருவருப்புமாக இருந்தது.

கடை முழுவதும் உணவு பொருட்களில் ஈக்கள் மொய்த்து கொண்டிருந்தது.

எனவே எதுவும் சாப்பிடாமல் குளிர்பானம் மினி  ஸ்பிரைட் இரண்டு மட்டும்  வாங்கினோம்.

₹ 30 ரூபாய் கட்டணத்தினை உரிமையாளர் வாங்கினார்.

பாட்டிலில் அதிக பட்ச விற்பனை விலை ₹14 என குறிப்பிடப் பட்டிருந்தது.

இரண்டு பாட்டிலுக்கு ₹ 28 ரூபாய் தானே எப்படி கூடுதலாக  ₹ 2 ரூபாய் வாங்குகிறீர்கள் என்றோம் .

கூலிங் கட்டணம் ஒரு ரூபாய் சேர்த்து தான் அனைவரிடமும் வாங்குகிறோம் என்றார் .

MRP யை விட கூடுதல் கட்டணம் வாங்குவது சட்ட விரோதம் என்றோம்.

சட்டம் எல்லாம் எங்கிட்ட பேசக்கூடாது என்றார்.

சுகாதாரமில்லாமல் இப்படி கடை முழுவதும் ஈக்கள் மொய்க்கிறதே என்றோம்.

ஏன் உங்கள் வீட்டில் ஈ இல்லையா?

மாநகராட்சி கழிவு நீர் கால்வாயை உன்னால் சுத்தம் செய்ய முடியுமா?

வந்தயா குடிச்சியா போயிட்டே இரு என சக ஊழியர்கள் கோபத்துடன் பேசினார்கள்.

உணவு பாதுகாப்புத்துறையில் புகார் செய்வோம் என்றோம்.

ஆனால் அரசூழியர்களை காதில் கேட்க முடியாத மிகவும் கேவலமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார்கள் .

பேக்கரி நடத்துகிற ஒருவன் வாடிக்கையாளரிடம்  சார்வாதிகாரியைப்போல் செயல்பட்ட விதம் நமக்கு மீண்டும் அதிர்ச்சியை அளித்தது.

அவருடைய பேச்சினை வீடியோ செய்தோம். ( அந்த வீடியோவினை வெளியிட்டால் நேர்மையான அரசூழியர்களுக்கு வருத்தம் அளிக்கக்கூடும் என்ற காரணத்தினால் அதனை வெளியிட விரும்ப வில்லை)

இரண்டு ரூபாயினை வாங்காமல் போக மாட்டோம் என்ற போது மிகவும் ஆவேசத்துடன்  திருப்பி கொடுத்து விட்டார்.

பொது சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வரும் எதிரி மீது உணவு பாதுகாப்புத்துறை வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அன்றைய தினம் மாலை 4.54 மணிக்கு புகார் செய்தோம்.

உடனடியாக திருப்பூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எதிரியின் கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

1. தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் : 150 பாக்கெட்டுகள்

2. காலாவதியான ஸ்னாக்ஸ் :11  பாக்கெட்டுகள்

3.பிரட் :2 பாக்கெட்

4. பாதுகாக்கப்படாத ஜிலேபி:  30

5. தடை செய்யப்பட்ட பாலிதின் கவர் :500 கிராம்

6. நியூஸ் பேப்பர் : 2 கிலோ

ஆகியவற்றினை கைப்பற்றி அழித்ததுடன் எச்சரிக்கை நோட்டீசும் கொடுத்துள்ளனர்.

மாநகராட்சி சுகாதாரத்துறையினரை கொண்டு பேக்கரியின் முன்புறம் உள்ள கழிவு நீர் கால்வாய் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தி உள்ளனர்.

ஆய்வு செய்த விபரங்கள் அனைத்தும்  போட்டோ எடுத்தும் கைப்பற்றி அழித்து குப்பை தொட்டியில் போடப்பட்ட பொருட்களின் பட்டியலினையும்  09.மார்ச் 2018 அன்று  இரவு 8.26 மணிக்கு நமக்கு  வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பி உள்ளார்கள்.

நமது புகாரின் தொடர் நடவடிக்கையாக
திருப்பூர் தொழிலாளர் துறை உதவி ஆய்வர் (சரகம் ||  ) 12.03.2018 அன்று நேரில் சென்று ஆய்வு மேற் கொண்ட போது அன்றைய தினம் ஸ்பிரைட்  குளிர்பானம் வாங்கிய வாடிக்கையாளர் செல்வம் என்பவரிடம் விற்பனை  விலையை விட  கூடுதலாக ஒரு ரூபாய்
வாங்கியதினை நேரில் உறுதி செய்துள்ளனர் .

தொழிலாளர் ஆய்வாளர் அவர்கள்  பொட்டல விதி மற்றும் எடையளவு சட்டத்தின் கீழ் குற்றத்தினை ஒப்புக்கொண்டு காம்பவுண்டிங் அதிகாரி விதிக்கும் அபராத தொகையினை ஏழு தினங்களுக்குள் காம்பவுண்டிங் அதிகாரி முன் நேரில் ஆஜராகி  விளக்க கடிதத்துடன் செலுத்த தவறினால் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும்  என  பேக்கரி உரிமையாளருக்கு காம்பவுண்டிங் விளக்க அறிவிக்கை நோட்டீஸ் ந.க.எண் ; 115 /2018 நாள் :12.03.2018. அன்று வழங்கி உள்ளார்கள்.

நமது புகாரின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு  பொது சுகாதாரக்கேட்டினை தடுத்து நிறுத்திய அலுவலர்களையும் ,பொட்டல விதி மற்றும் எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்ட தொழிலாளர் துறை உதவி ஆய்வாளருக்கும்  இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் சார்பில் வாழ்த்தி வரவேற்கிறோம்.  இது போல் அதிரடி நடவடிக்கைகள் தொடர வேண்டும் என எதிர் பார்க்கிறோம்.

கோரிக்கை ;

இது போல் பொது சுதாரக்கேடு ஏற்படுத்தி  திருப்பூரில்
சட்ட விரோதமாக இயங்கி வரும் பேக்கரிகள் ,உணவகங்கள் ஏராளமாக உள்ளது .

அனைத்தையும் உணவு பாதுகாப்பு அலுவலர்களும் , தொழிலாளர் ஆய்வாளர்களும், மாநகர சுகாதாரத்துறையினரும் கூட்டாக இணைந்து அதிரடி சோதனை செய்வதுடன் பொது சுகாதாரக்கேடு ஏற்படுத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி வேண்டுகிறோம்.

இந்த செய்தியின் மூலம் பொது மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

பேக்கரிகள்  மற்றும் உணவகங்கள்,பல்பொருள் அங்காடிகள், புற்றீசல் போல் வீதிக்கு வீதி செயல் பட்டு வரும் ₹ 20   ரூபாய் பொட்டலங்கள் விற்பனை செய்து வரும்  ஸ்வீட் ஸ்டால்கள் ,கடைகளில் இது போன்ற சுகாதாரக்கேடுகள் ஏதேனும்  காணப்பட்டாலோ அல்லது நீங்கள் பாதிப்புக்கு உள்ளானாலோ  பொது மக்கள்  உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை வாட்ஸ் ஆப் எண் :  94440 42322. எண்ணிற்கு புகார் தெரிவித்து நிவாரணம் பெறலாம்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மாவட்ட தலைவராக பொறுப்பு வகிப்பதினால் அவர்களிடமும் உங்கள் புகாரினை தெரிவிக்கலாம்.

நுகர்வோர் நலம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில் பொது நலன் கருதி வெளியிடுவோர் :

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
மாநில இணை செயலாளர்
இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
தொடர்புக்கு :
உலாபேசி : 98655 90723
மின்னஞ்சல் : nanjillaacot@gmail.com

No comments:

Post a Comment