Saturday 3 February 2018

சட்ட விரோதமாக உடனடி அபராதம் (Spot Fine ) வசூல்!!

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள் :

தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அஞ்சுகிராமம் முதல்நிலை பேரூராட்சி லெவிஞ்சி புரம் காவல் துறை சோதனை சாவடியில் சட்ட விரோதமாக உடனடி அபராதம் (Spot Fine )வசூல்!

சோதனை சாவடியில் ஒரு தலைமை காவலரும் ஒரு காவல் உதவி ஆய்வாளரும் பணியில் இருப்பதை காண முடிந்தது.

இவர்கள் இருவரும் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து ஆவணங்கள் இல்லாதவர்களிடமும் தலைக்கவசம்  அணியாதவர்களிடம் இருந்தும் ஸ்பாட்பைன் வசூலித்து வருவதினை
30.01.2018. அன்று நாம் நேரில் பார்த்தோம்.

ஸ்பாட் பைன் பெறுவதற்கான ரசீது வழங்குகிறார்களா என விசாரித்தோம்.

ஒரு சிலருக்கு ரசீது வழங்குகிறார்கள்.
காவல் உதவி ஆய்வாளரிடம் ஸ்பாட் பைன் வசூலிக்கும் அதிகாரம் உங்களுக்கு வழங்கப்பட வில்லையே?
பின்னர் எப்படி சட்ட விரோதமாக வசூலிக்கிறீர்கள் என கேட்டோம்.

ஸ்பாட் பைனுக்கான ரசீது கொடுத்து தான் வசூலிக்கிறோம் என்றார்.

ஸ்பாட் பைன் ரசீதில் காவல் ஆய்வாளர் கையொப்பம் இட்டு வழங்குவதாகவும் ஒரு நாளைக்கு 800 வழக்கு பதிவு செய்ய மேலிட உத்தரவு என்றும் தெரிவித்தார்.

ஸ்பாட் பைன் ரசீதினை வாங்கி பார்த்த போது ரசீது புக் முழுவதும் தேதி குறிப்பிடாமல் காவல் ஆய்வாளரின் கையொப்பம் மட்டும் இருந்தது.

இது நமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காவல் ஆய்வாளரின் தொடர்பு எண் கொடுக்க பணியில் இருந்து உதவி ஆய்வாளர் மறுத்து விட்டார்.

கடமை தவறிய இதற்கு பொறுப்பு வகிக்கும் காவல் ஆய்வாளர் மீதும் சட்ட விரோதமாக ஸ்பாட் பைன் வசூலிக்கும் தலைமை காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய  கோருகிறோம்.

ஒரு வேளை சட்ட விரோதமாக செயல் படும் காவல்துறையினரின் செயல் தங்களுக்கும் தெரிந்தே நடை பெற்று வருவதாக இருந்தால் மிகவும் கண்டனத்திற்குரியதாகும் என்பதினை தெரிவித்து கொள்கிறோம்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
04.02.2018

No comments:

Post a Comment