Sunday 25 February 2018

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை.

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!

ஸ்பாட்பைன் ரசீது வழங்காமல் சட்ட விரோதமாக உடனடி அபராதம் வசூலிக்கும் திருப்பூர் மாநகர காவல் துறையினர்!

உதவி ஆய்வாளர்களின் அத்து மீறல்கள்!

அறிவிப்பு நோட்டீஸை மட்டும் வழங்கி
காசு பார்க்கும்  காவலூழியர்கள்!

தொடர்ந்து நடை பெற்று வரும் முறைகேடுகள்!

அதிகார திமிரா?

மக்கள் எதிர் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற துணிச்சலா?

அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

இதோ ஒருவர் கேள்வி கேட்டு விட்டார்!
காணொலியை பாருங்கள

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!

மோட்டார் வாகனச்சட்டப்படி பொது சாலையில் வாகனங்களை இயக்கும் போது வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும்.

தவறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் மற்றும் குற்ற வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் காவல் துறையினருக்கு உண்டு.

போக்குவரத்தினை கண்காணிக்க போக்குவரத்து காவல் துறை தனியாக செயல் பட்டு வருகிறது.

சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டியது வாகன ஓட்டிகளின் கடமை!

ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிப்பது இல்லை!

இது மிகுந்த வருத்தமளிக்கிறது.

இதனை காவலூழியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.

1. அசல் ஓட்டுநர் உரிமம்  நீதிமன்ற உத்தரவு படி  கையில் வைத்திருக்க வேண்டும் .

2. வாகன பதிவு சான்று நகல்.

3.வாகன காப்பீடு சான்று நகல்.

4.புகைச்சான்று

5.தலைக்கவசம் .

6.மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது.

7.கைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது.

8.இருச்சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.

9.பின் இருக்கையில் இருப்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்.

10.சிக்னல்களில் நிறுத்த கோட்டினை தாண்டி வாகனங்களை நிறுத்த கூடாது.

11.அதி வேகமாக வாகனம் ஓட்டக்கூடாது.

12.நகர எல்லைக்குள் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் தான் வாகனங்களை ஓட்ட வேண்டும்.

13.போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது.

14.வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லாத இடங்களில் நிறுத்தக்கூடாது.

15.ஒரு வழி பாதையில் எதிர் திசையில் வாகனம் ஓட்டக்கூடாது.

16.குறுகிய வளைவில் முந்தி செல்லக்கூடாது.

17.சிக்னல்களில் நிறுத்தி பச்சை விளக்கு எரிந்த பின் செல்ல வேண்டும்.

மேலும் இது போன்ற சாலை விதிகள் அனைத்தையும் தவறாமல் கடை பிடிக்க வேண்டும்.

இதனை முற்றிலும் வாகன ஓட்டிகள் கடைபிடித்தால் எந்த ஒரு காவலூழியர்களுக்கும் லஞ்சம் கொடுக்க தேவை இல்லை!

செய்தி ;

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலை அரசு மருத்துவமனை அருகில் செயல் பட்டு வரும் காவல் துறையினர் சோதனை சாவடியில் ஸ்பாட் பைன் ரசீது இல்லாமல் அறிவிப்பு நோட்டீஸ் மட்டும் வழங்கி  சட்ட விரோதமாக அபராதம் வசூலிப்பவர் திருப்பூர் மாநகர காவல் துறை திருப்பூர் தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயேந்திரன்!

பழனிக்குமார் என்பவர் கடமை தவறிய காவலூழியரை கேள்வி கேட்ட காணொலி!

ஸ்பாட்பைன் ரசீது இல்லாமல் அபராதம் வசூலிக்கும் அதிகாரம் அவருக்கு இருப்பதாக பீலா விடுகிறார்.

காவல் ஆய்வாளர் கையொப்பம் இட்டு வழங்கிய ரசீதினை எடுத்து வர மறந்து விட்டாராம்!

மறு நாள் வந்து வாங்கி கொள்ளும் படி சொல்கிறார்!

நூறு ரூபாயினை வைத்து பில்டிங்கா கட்ட போகிறார்.?

அவரது சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அவரது அல்லக்கை காவலூழியர் ஒருவர் கேள்வி கேட்கிறார்.

இது குறித்து மாநகர காவல் ஆணையர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
ஏற்கனவே இந்த கடமை தவறிய காவலூழியர் மீது ஒரு புகார் நிலுவையில் இருப்பதாகவும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தகவல் அளித்துள்ளார்கள்!

அறிவிப்பு நோட்டீஸ் மட்டும் வழங்கி அபராதம் பெற்றால் அதுவும் லஞ்சமே!

கொடுக்க வேண்டாம் லஞ்சம்!
மாறுங்கள் மாற்றுங்கள்!

உரிய ஆவணங்களுடன் சாலை விதிகளை கடை பிடியுங்கள்!

சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பணியில் ......

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி :98655 90723
26.02.2018.

No comments:

Post a Comment