Monday 5 February 2018

பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!!

★பெற்றோர்களுக்கு  எச்சரிக்கை!!
***********************************
கல்வி நிறுவனங்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினரின் தடையின்மை சான்று எவ்வாறு  பெறுகின்றனர்.?

அரசு ஆணை எண் :122 மற்றும் 123 பள்ளிக்கல்வி(2)துறை நாள் :14.09.2004
தமிழ்நாடு தீயணைப்புத்துறை  நடைமுறை நூல் ஆணை எண்:248
தமிழ்நாடு தீயணைப்பு(ம)மீட்புப்
பணித்துறை இயக்குநர் குறிப்பாணை ந.க.எ.ண் :17483/இ1/2004;நாள் :29.09.2004

தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் எவ்வாறு இருக்க வேண்டும்
என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினர் அரசாணைகளில்  வகுத்துள்ள விதிமுறைகளின் படி பள்ளிக்கூட கட்டிடங்கள் நிறுவப்பட வேண்டும்.

அதனை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையின் நிலைய அலுவலர் /ஆய்வு அலுவலர் நேரில் சென்று முழுமையாக ஆய்வு மேற்கொண்டு அனைத்து அம்சங்களும் முறையாக இருக்கும் பட்சத்தில்  பள்ளி கட்டிடங்கள் நிறுவவோ, அல்லது பள்ளிக்கூடத்திற்கு அங்கீகாரம் வழங்கிடவோ  அந்த கட்டிடங்களில்  மாணவர்கள் கல்வி பயிலவோ ஏதொரு தடையும் இல்லை என "தடையின்மை சான்று " வழங்க வேண்டும்.

                       CHECK LIST
                       *************
1. கல்வி நிறுவனத்தின் பெயர் மற்றும் உரிமையாளர் பெயர் :

2. இட அமைவு மற்றும் விலாசம் :

3. தலைமை ஆசிரியர் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் :

4.அதிக பட்ச கட்டிட உயரம்.:

5.மொத்த தளங்களின் எண்ணிக்கை:

★கட்டிடம் :
***********
6. கட்டிடம் எந்த வகையில் கட்டப்பட்டது
Type= | = ||= ||| .//ச.வி..ம.ஊ.ஒ.அ. //

7.தற்காலிக கூறை வேய்ந்துள்ளதா?
ஆம் /இல்லை
இல்லை

8.மாணாக்கர்களின் மொத்த எண்ணிக்கை மொத்த தளபரப்பு சதுர மீட்டரில் நான்கு எண்ணிக்கைக்கு மிகுந்துள்ளதா?  ஆம் /இல்லை
இல்லை

9.வெளியேறும் வழியின் பரப்பின் தூரம் 22.5 மீட்டருக்கு மிகுந்துள்ளதா? ஆம் /இல்லை
இல்லை

10.ஒவ்வொரு தளத்திலும் குறைந்த பட்சம் இரண்டு வெளியேறும் வழிகள் உள்ளனவா?ஆம்/இல்லை .
ஆம்

11.வெளியேறும் வழிகள் கூடுமான வரையில் தள்ளிஅமைக்கப்
பட்டுள்ளதா? ஆம் /இல்லை
ஆம்

★கதவுகள் :
*************
12.45 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்பறையில் 2 கதவுகள் உள்ளனவா? ஆம் /இல்லை
ஆம்

13.வெளியேறும் வழிகள் உபயோகப்படுத்த கூடிய அளவில் சுத்தமாக இடையூறின்றி வைக்கப்பட்டுள்ளதா? ஆம் /இல்லை
ஆம்

★தாழ்வாரங்கள் :
*******************
14.தாழ்வாரங்கள் மற்றும் வெளியேறும் வழிகளின் உயரம் 2.5 மீட்டருக்கு மேல் உள்ளதா? ஆம்/இல்லை
ஆம்

15.அனைத்து படிகட்டுகள்/லிப்ட், தாழ்வாரங்கள் வெளியேறும் வழிகள் காற்றோட்டமாகவும் வெளிச்சமாகவும் உள்ளதா? ஆம் /இல்லை
ஆம்

★வெளியேறும் வழிகள் :
***************************
16.வகுப்பறைகளின் வெளியேறும் வழிகள் அகலம் 1 மீட்டருக்கு குறையாமலும் மற்ற அரங்குகளின் வெளியேறும் வழிகள் 2 மீட்டருக்கு குறையாமலும் உள்ளதா? ஆம்/இல்லை
ஆம்

17.வெளியேறும் வழிகளின் உயரம் 2 மீட்டருக்கு குறையாமல் உள்ளனவா?ஆம்/இல்லை
ஆம்

18.அனைத்து கதவுகளும் வெளிப்புறமாக திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா? ஆம் /இல்லை
ஆம்

19.தள்ளு கதவுகள்/இழுவை கதவுகள் அமைக்கப்பட்டுள்ளதா? ஆம்/இல்லை
இல்லை

20.மாடிப்படிகள் இறங்குமிடத்திற்கு மிக அருகாமையில் வெளியேறும் கதவு வழிகள் அமைக்கப்பட்டுள்ளதா?
ஆம்/இல்லை
இல்லை

★மாடிப்படிகள்:
*****************
21.500 சதுர மீட்டர் தள பரப்பு மற்றும் தரை தளத்துடன் 2 மாடி அதற்கு மேல் உள்ள பள்ளிகளில் குறைந்தது இரண்டு மாடிப்படிகள் அமைக்கப்பட்டுள்ளனவா? ஆம்/இல்லை
ஆம்

22.குறைந்த பட்சம் ஒரு மாடியாவது மாடியின் மேல் தளத்திலிருந்து தொடர்ச்சியாகவும் திறந்த வெளிக்கு வெளியேற்றும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளனவா? ஆம்/இல்லை
ஆம்

23.அனைத்து மாடிப்படிகளுக்குமான பிரயாண தூரம் ஒவ்வொரு தளத்திலும் 22.5 மீட்டருக்கு மிகாமல் உள்ளதா? ஆம்/இல்லை
ஆம்

24.உள் மாடிப்படிகள் ஏதேனும்  எளிதில் தீ பற்றும் பொருட்களால் கட்டப்பட்டுள்ளதா? ஆம்/இல்லை
இல்லை

25.ஏதேனும் கேஸ் பைப் மாடிப்படியினை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளனவா?
ஆம்/இல்லை.
இல்லை

26.கீழ்கண்ட அளவு  கோல்களின் வரையறைகளுக்கு உட்பட்டு மாடிப்படிகள் அமைக்கப்பட்டுள்ளனவா?

அ)மாடிப்படிகளின் அகலம் 1.5 மீட்டர் : ஆம்/இல்லை
ஆம்

ஆ) கால் வைக்கும் மாடிப்படியின் அகலம் 30 செ.மீ:  ஆம்/இல்லை
ஆம்

இ) மாடிப்படியின் உயரம் 15 செ.மீ
ஆம்/இல்லை
ஆம்

ஈ) மாடிப்படிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றுக்கும் அதிக பட்சம் 15 எண்ணிக்கை : ஆம்/இல்லை
ஆம்

உ) பாதுகாப்பு சுவரமைப்பின்
உயரம்1மீட்டர் : ஆம் /இல்லை
ஆம்

ஊ) பாதுகாப்பு அமைப்பில் இடை வெளிகள்  20 செமீ  : ஆம்/இல்லை
ஆம்

27.ஆய்வகங்கள் உரிய பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளனவா?
ஆம்/இல்லை
ஆம்

28.அபாயகரமான /நச்சு தன்மையுள்ள வேதி பொருட்கள் உரிய பாதுகாப்புடன் தனியே சேமிக்கப்பட்டுள்ளதா?
ஆம்/இல்லை
ஆம்

29.மின்சார டிரான்ஸ்பார்மர்  HT/LT Control Panels தனியாக உரிய பாதுகாப்புடன்அமைக்கப்பட்டு
உள்ளனவா? ஆம் /இல்லை
ஆம்

30.மாடிப்படிகள் மற்றும் வெளியேறும் வழிகளில் உள்ள விளக்குகள் தனி மின் சுற்றுடன் இணைக்கப்பட்டுள்ளதா? ஆம்/இல்லை
ஆம்

31. MCB/ELCB அமைக்கப்பட்டுள்ளதா?
ஆம்/இல்லை
ஆம்

32.ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களில் உள்ள கட்டிடங்களுக்கு உரிய எர்த்திங் வசதி செய்யப்பட்டுள்ளதா?
ஆம்/இல்லை
ஆம்

33.உரிய பாதுகாப்பு முறையுடன் கட்டிடத்தின் இடிதாங்கி நிறுவப்பட்டுள்ளதா? ஆம் /இல்லை
ஆம்

34.பிரதான வாயில்களின் அகலம் 4.5 மீட்டர் மற்றும் உயரம் 5 மீட்டருக்கு குறையாமல் உள்ளதா? ஆம்/இல்லை
ஆம்

35.கட்டிடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தீயணைப்பு ஊர்திகள் எளிதில் சென்று வர சாலை வசதி உள்ளதா? ஆம் /இல்லை
ஆம்

36.ஆசிரியர் மற்றும் மாணாக்கர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா? ஆம்/இல்லை
ஆம்

37.இந்த கல்வி ஆண்டில் பள்ளியில் தீத்தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டுள்ளதா? ஆம்/இல்லை
ஆம்

38.பள்ளியில் தீயணைப்பான்கள் விதிமுறைப்படி நிறுவப்பட்டுள்ளனவா?
(IS :2190:1992 மற்றும் தேசிய கட்டிட வசதி தொகுப்பு 2005, பகுதி 4 தீ மற்றும் உயிர் பாதுகாப்பு) //Laaco //
ஆம்/இல்லை

94 மழலை குழந்தைகள் தீயில் கருகி மடிந்த கும்ப கோணம் தனியார் பள்ளியில்  இந்த விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்பட வில்லை!

கும்ப கோணம் பள்ளி தீவிபத்து குறித்து
விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் சம்பத் தலைமையிலான விசாரணை ஆணையம்
2661 தனியார் பள்ளிகளை மட்டும் ஆய்வு செய்து அதிர்ச்சியூட்டும் ஆய்வு அறிக்கையினை தாக்கல் செய்துள்ளனர்.

அதில் கட்டிடம் உரிமம் பெறாமல் 1670 பள்ளிகளும், கட்டிட உறுதித்தன்மை இல்லாமல் 1557 பள்ளிகளும், சரியான மின் இணைப்பு செய்யப்படாமல் 1281 பள்ளிகளும், தீத்தடுப்பு உபகரணங்கள் இல்லாமல் 2386 பள்ளிகளும் முறைகேடாகவும் ,சட்ட விரோதமாகவும் இயங்கி வருவதினை உறுதி படுத்தி உள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் யார்?

ஒரு கணம் சிந்தியுங்கள் பெற்றோர்களே!

கல்வியாளர்கள் என்ற பெயரில் கல்வியை வியாபாரமாக்கி  கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளி நிர்வாகிகள்!

இவர்களுக்கென சில கோட்பாடுகளை வகுத்து  வைத்துக் கொண்டு மாணவர்களையும் பெற்றோர்களையும் கைப்பாவையாக்கி  கோலோச்சும் சூத்திரதாரிகள்!

இவர்கள் கொடுக்கும் லஞ்சத்தினை பெற்று கொண்டும்,

அரசு வழங்கும் ஊதியங்களையும் சலுகைகளையும் பெற்று கொண்டும்,

மாணவ மாணவிகளின் நலனில் அக்கறை இல்லாத கடமை தவறிய கல்வித்துறை மற்றும் இதற்கு பொறுப்பு வகிக்கும்  அரசூழியர்களும்
இவர்களை வழி நடத்தும் கேடு கெட்ட ஆட்சியாளர்களும் தான் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம்.

லஞ்சம் எனும் மலம் தின்னும் கயவர்கள்
இருக்கும் வரை கல்வி கொள்ளையர்களை தடுக்க இயலாது.

L.K.G வகுப்பு அட்மிஷனுக்காக தனியார் பள்ளிகளின் முன் இரவு பகலாக போட்டி போட்டு  காத்து கிடக்கும் பெற்றோர்கள் மாற வேண்டும்.

இந்த நிலை மாற வேண்டும்!  மாறித்தான் ஆக வேண்டும்!

மாறுங்கள்! மாற்றுங்கள்!

இது பெற்றோர்களாலும் இளைஞர்களாலும் தான் சாத்தியம்.

தனியார் பள்ளிகள் எவ்வாறு செயல் பட வேண்டும் எனவும் மாணாக்கர்களின் நலன் கருதி பல அரசாணைகளையும் உத்தரவுகளையும் ஆட்சியாளர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆனால் அதனை நடைமுறை படுத்த நேர்மையான ஊழியர்களை தான் காணோம்.

ஒரு சில நேர்மையான அரசூழியர்களும் ஆட்சியாளர்களினால் பழி வாங்கப்படுகின்றனர். தங்களது பதவிகளை தற்காத்து கொள்ள போராடுகிறார்கள்.

இந்திய அரசியலமைப்பு சாசனம் வழங்கி உள்ள உரிமைகளின் படி நாம் ஒவ்வொருவரும் சிறப்புடன் செயல் பட்டால் மட்டுமே அனைத்தும் சாத்தியமாகும்.

புலம்பி தவிப்பதினை விட்டு விட்டு எதிர்கால நம் சந்ததியினரான மாணவ செல்வங்களின் நலன் கருதி களத்தில் இறங்கி கை கோர்த்து போராட முன் வாருங்கள் பெற்றோர்களே!

கல்வி கொள்ளையர்களை அடையாளம் காணுங்கள்!

சட்ட விரோதமாக செயல் படும் கல்வி கூடங்களை ஆய்வு செய்யுங்கள்!

உங்கள் குழந்தைகள் கல்வி பயிலும் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதன் முழுமையான விபரங்களை எங்களுக்கு அனுப்புங்கள்.

கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் 1992
இன் படி கல்வி நிலையங்கள் நன்கொடை வசூலிப்பது தடை செய்யப்பட்டுள்ளது .

மற்றும்
தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதினை முறை படுத்துதல் சட்டம் -2009. இன் படி அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும்.

மற்றும்
இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் -2009 இன் படி 
தனியார் பள்ளிகள் LKG. வகுப்பில்  கல்வி  பயில 25% இலவச கல்வி அளிக்க வேண்டும். LKG. வகுப்பில் சேரும் குழந்தைகள் 8 ஆம் வகுப்பு வரையிலும் கல்விக்கட்டணம் செலுத்த தேவை இல்லை!

தனியார் பள்ளி நிர்வாகத்தினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள்
அரசு நிர்ணயம் செய்த கட்டணங்களை  செலுத்த விரும்பும் பெற்றோர்கள் இலவசக்கல்வி பெற விரும்பும் பெற்றோர்கள் மற்றும் கூடுதல் தகவல் பெற விரும்பும் பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மட்டும் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

"தனியார் பள்ளி கல்வி ' என்ற வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைய விரும்பும் நண்பர்கள்  98655 90723 என்ற எண்ணிற்கு உங்கள் விபரங்களை அனுப்பவும்.

கல்வி விழிப்புணர்வு பணியில் ..........
தலைமை அலுவலகம்
பதிவு எண் : 10/2015, 44/2015
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
LEGAL AWARENESS AND ANTI- CORRUPTION ORGANIZATION
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
மின்னஞ்சல் :nanjillaacot@gmail.com

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
உலாபேசி:98655 90723
தொடர்பு நேரம் : (தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை)

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
உலாபேசி:98655 43303
தொடர்பு நேரம் :( தினமும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை )

No comments:

Post a Comment