Sunday 4 February 2018

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பயனற்றதா?

பொது மக்கள் வரி பணத்தில் செயல் பட்டு வரும் தமிழக அரசு மக்கள் நலன்களுக்காக செய்யும்  செலவின விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்!!

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில்   ₹ 43 கோடி ரூபாய்  செலவில் கட்டப்பட்டு வருவதாக சொல்லப்படும் புதிய  மேம்பாலம் கட்டுமான பணிகளுக்காக 30.11.2017 வரை நெடுஞ்சாலை துறையினரால்  செலவு செய்யப்பட்டுள்ள செலவின விபரங்கள்!

ஒரு சிறிய மேம்பாலம் கட்ட வேண்டுமானால் கூட  அரசுக்கு ஏற்படும் தேவையற்ற இழப்பீடுகள் ஏராளம்! ஏராளம்!

1.மேம்பாலம் கட்டி வரும் ஒப்பந்ததாரருக்கு வழங்கிய மொத்த.  தொகை பட்டியல் :
₹ 12,60,27,749.00

2.மின் கம்பங்கள் மாற்றி அமைத்தது மற்றும் பொருத்துதல் வகையில் செலவினம் : ₹ 80,61,180.00

3.பைப் லைன்கள் மாற்றி அமைத்தல் வகையில் செலவினம் :1,65,16,054 .00

4.விளம்பர கட்டணம் செலவினம்  :₹15,97,110.00

5.பரிசோதனை கட்டணம் செலவினம்  :₹8,024.00

6.நில ஆர்ஜிதம் செய்த வகையில் நில உரிமையாளர்களுக்கு வழங்கிய  செலவினம் : ₹ 6,55,48,887.00

7.தரக்கட்டுப்பாட்டு கருவிகள் கொள்முதல் செய்த வகையில் செலவினம் :1,05,000.00

ஆக மொத்த செலவினம் :
 ₹ 21,78,64,004.00
(இருபத்து ஒன்று கோடியே எழுபத்தெட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரத்து நான்கு ரூபாய்)

தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல் :
நன்றி:வி.பி.ரவிச்சந்திரன்

இந்த மேம்பாலம் கட்டுவதினால் போக்குவரத்து நெரிசல் குறையாது என்றும்  இதற்கு செலவிடும் பணம் வீண் எனவும் இது பயனற்ற திட்டம் எனவும் திருப்பூர் மாவட்ட முன்னால் வருவாய் அலுவலர் கஜலெட்சுமி அவர்கள் தெரிவித்த பின்னரும் சரியான திட்ட மதிப்பீடு செய்யப்படாமல்,அவசர கதியில் பொது  மக்களுக்கு பயன் தராத இந்த  மேம்பாலத்தினை கட்டி வருகிறார்கள் எனவும்  பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி :98655 90723

No comments:

Post a Comment