Saturday 3 February 2018

கட்டாய நன்கொடை தடுப்பு சட்டம் -1992

" கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் -1992 "
என்றால் என்ன?

          "  சட்ட எண் :57 /1992 "

தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டாய நன்கொடையாக  வசூலிப்பதை தடை செய்வதற்காக. 20.08.1992. ஆம் ஆண்டு  "கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் "கொண்டு வரப்பட்டது.

#தடை!

★இசசட்டப்பிரிவு -2 (b) ன் படி
பல்கலை கழகங்கள், சட்டம், மருத்துவம் , பொறியியல் கல்லூரிகள்,  பட்டயபடிப்பு கல்வி நிறுவனங்கள் , தனியார் பள்ளிகள், தனியார் அமைப்பை சார்ந்த கல்வி நிலையங்களில் சட்டப்பிரிவு 3 (a)  மற்றும் (b)  ன் கீழ் கட்டாய நன்கொடை (Capitation Fee)  வசூலிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

#ரசீது!

★இச்சட்டப்பிரிவு -4 (3)  ன் படி ஒவ்வொரு கல்வி நிலையமும் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணம் மற்றும் வைப்பீட்டு தொகைக்கு  அதிகார முறை பற்றுச்சீட்டு (ரசீது)  கண்டிப்பாக வழங்க வேண்டும்.

#சிறை!

★இச்சட்டப்பிரிவு 7 (1)  கீழ் கட்டாய நன் கொடை வசூலித்தது  தெரிய வந்து அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டால் அவருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டணையும், ஐயாயிரம் ருபாய் அபராதமும்  விதித்து தண்டிக்கப் படுவார்கள்.

#கட்டணத்தை திருப்பி வழங்குதல்!

★இச்சட்டப்பிரிவு 7 (2)  b ன் படி அதிகமாக வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை  மாணவர்களுக்கு திருப்பி  கொடுக்க வேண்டும்.

#சோதனை!

★கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டப் பிரிவு  -   9 (1)  ன் படி புகாருக்குள்ளாகும் கல்வி நிலையங்களை முன்னறிவிப்பின்றி சோதளை இடவும், ஆவணங்களையும், பதிவேடுகளையும் கைப்பற்றும் அதிகாரம் மாவட்ட. கல்வி அலுவலர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது.

#புகார்!

★நன்கொடை கேட்கும் கல்வி நிறுவனங்களின் மீது இந்த சட்டப்பிரிவை பயன் படுத்தி புகார் அளியுங்கள்.

#வைப்புநிதி!

★வைப்பு நிதியாக பெறப்படும் கட்டணங்களை மாணவர்களுக்கு  திருப்பி வழங்க வேண்டும்.

#வேண்டுகோள்!

நண்பர்களே!  பெற்றோர்களே! 
கட்டாய நன் கொடை கேட்பவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புங்கள்.

அரசியலமைப்புச்சாசனம் - 19 ( 1)  அ. வின் கீழ் பொது நலன் கருதி வெளியிடுவோர் :

"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "
LEGAL AWARENESS. AND ANTI -CORRUPTION. ORGANIZATION
363,  காந்தி ரோடு,
பெரியார் காலனி,
திருப்பூர் -641 652

தொடர்புக்கு :

நாஞ்சில் கோ. கிருஷ்ணன்
நிறுவனர்,
செல் : 98655 90723

அரியலூர் ரா. சங்கர்
மாநில தலைவர்
செல் :98655 43303

No comments:

Post a Comment