Wednesday 6 April 2022

முற்றிலும் சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்கள் கட்டி தார்ச்சாலை அமைக்க கோரி திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல அலுவலக உதவி ஆணையருக்கு மனு!

நியாயம் தான் சட்டம் !                   
                  தனிக்கவனம்
        மிகவும் அவசரம்/ அவசியம்

நாஞ்சில் கோ.கிருஷ்ணன் 
நிறுவனர் 
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு 
363,காந்தி ரோடு 
பெரியார் காலனி 
திருப்பூர் - 641 652 
உலா பேசி:98655 90723
மின்னஞ்சல்: nanjillaacot@gmail.com

பெறுநர்: 
திரு.சுப்பிரமணியம் அவர்கள்
உதவி ஆணையர்
திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல அலுவலகம் 
அனுப்பர்பாளையம் 
திருப்பூர்- 641 652

வழி:
இந்திய அஞ்சல் துறையின் ஒப்புகையுடன் இணைந்த பதிவஞ்சல் மின்னஞ்சல்/ வாட்ஸ் ஆப்

கடிதம் எண்: LAACO/Nanjil / CORP/ZONE 1/TPR/ PWF/EL /0010 2022/ நாள்:19.03.2022

அய்யா,

பொருள் : முற்றிலும் சேதமடைந்த கழிவுநீர் / மழை நீர் கால்வாய்களை சீரமைத்து கட்டி தார்ச்சாலை அமைக்கக்கோரி அவசர அவசிய பொது நல மனு,

தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி பதினொன்றாவது வார்டு (பழைய வார்டு ஒன்று) தியாகி குமரன் புதுக்காலனி விநாயகர் கோயில் வீதியில் பாதாள சாக்கடை குழாய்  மற்றும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடை பெற்று முடிந்து தற்போது தார்ச்சாலை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.

மேற்படி 23 அடி அகலம் கொண்ட சாலையில் இரு புறமும் தரமில்லாமல் கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாய்கள் முற்றிலும் மிகுந்த சேதமுற்று உடைந்த நிலையில் உள்ளது.

சேதமடைந்த கழிவுநீர் / மழைநீர் கால்வாய்களை கட்டாமல் தார்சாலை அமைப்பதால் எந்த ஒரு பலனும் இல்லை.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் கால்வாய் கட்டும் போது  தார்சாலை சேதமாகி அரசுக்கு மீண்டும் நிதி இழப்புகள் ஏற்படும்.

எனவே தாங்கள் இந்த பகுதியை முழுமையாக ஆய்வு செய்து திட்ட மதிப்பீடு தயார் செய்து அவசர கால நிதி ஒதுக்கி இரு புறமும் புதிய கழிவுநீர் / மழை நீர் கால்வாய்களை கட்டிய பின்னர் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.

மாநகராட்சி நிதி வீணடிப்பு!

திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி ஆக அறிவிக்கப்பட்ட பின்னர் அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை குழாய் அமைத்தல்  மற்றும் புதிய குடிநீர் குழாய்  பதித்து குடிநீர் இணைப்பு அனைத்து வீடுகளுக்கும்  வழங்க பட்டு வரும் நிலையில் அந்த பணிகளை மேற் கொள்ளாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருப்பூர் மாநகராட்சி பதினொன்றாவது வார்டு  திலகர் நகர் மேற்கு பகுதியில் நான்கு வீதிகளில் அவசர கதியில் அவசர அவசரமாக இரவோடு இரவாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

இதன் மூலம் கடமை தவறிய அதிகாரிகள் மாநகராட்சிக்கு நிதி இழப்பினை தெரிந்தே ஏற்படுத்தியதின் காரணமாக மாநகராட்சி பணம்  வீணடிக்கப்பட்டுள்ளது.

தற்போது பாதாள சாக்கடை குழாய் அமைத்தல் மற்றும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளுக்காக மேற்படி பல இலட்சம் ரூபாய் செலவில் போடப்பட்ட  தார்ச்சாலைகள் முழுவதும் தோண்டப்பட்டு சாலைகள் அனைத்தும் முற்றிலும் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் மீண்டும் தார்ச்சாலை அமைக்கும் சூழ்நிலை உள்ளதால் மீண்டும் மீண்டும் அரசுக்கு இதனால் மிகுந்த நிதி இழப்புகள் ஏற்படுவதை காண முடிகிறது.

மேற்படி நிதி இழப்பினை அதற்கு பொறுப்பு வகிக்கும் கடமை தவறிய மாநகராட்சி அதிகாரிகள் மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய கோருகிறோம்.

மேலும் அவிநாசி சாலை அனுப்பர் பாளையம் புதூரில் இருந்து 
4 வேலம்பாளையம் வரை பிரதான சாலையில் செல்லும் பிரதான கழிவுநீர் கால்வாய் கட்ட சரியான திட்ட மதிப்பீடு செய்து கட்டப்பட வில்லை.

சக்தி தேவி பள்ளி முதல் சிறுபூலுவப்ட்டி ரிங் ரோடு பிரிவு வரை  437 மீட்டர் நீளம் வரை மட்டுமே கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

₹86 இலட்சம் செலவு செய்தும் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் கழிவுநீர் கால்வாய் சேதமுற்று காணப்படுகிறது.

பிரதான கழிவுநீர் கால்வாய் சரியான திட்ட மதிப்பீடு செய்யப்படாமல்  முழுமையாக கட்டி முடிக்கப்படாத காரணத்தால் மழை காலங்களில் கழிவுநீர் மழை நீருடன் கலந்து பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால்  இப்பகுதியை கடந்து செல்லும் பொது மக்களுக்கு பொது சுகாதார கேடுகளும் பொது போக்குவரத்து இடையூறுகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இது குறித்து முன்னாள் இன்னாள் முதல்வர்களுக்கு பல புகார்கள் அளித்தும் கடமை தவறிய ஆட்சியாளர்கள்/ அரசூழியர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நமது கோரிக்கை:
தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி ஒன்று முதல் 15 வார்டு அனைத்து பகுதிகளையும் தாங்கள் முழுமையாக ஆய்வு செய்து நேர்மையான/ திறமையான பொறியாளர்கள் மூலம் சரியான திட்ட மதிப்பீடு தயார் செய்து நிதி ஒதுக்கி பாதாள சாக்கடை குழாய் பதித்தல் மற்றும் புதிய குடிநீர் குழாய் பதித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்த பின்னர் சாலைகளின் இரு புறமும் மழை காலங்களில் மழை நீர் செல்ல கால்வாய்கள் கட்டி பழைய தார்ச்சாலை களை முற்றிலும் பெயர்த்து எடுத்து தரமான புதிய தார்ச்சாலைகள் அமைத்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு நிதி இழப்புகள் ஏற்படாத வண்ணம் தங்களின் கடமைகளை சிறப்புடன் ஆற்றி திருப்பூர் மிடுக்கான நகரத்தினை/ ஸ்மார்ட் சிட்டி உருவாக்க கோருகிறோம்.

நகரின் பல்வேறு பகுதிகளில் பழைய தார்ச்சாலைகளை பெயர்த்து எடுக்காமல் புதிய தார்ச்சாலைகள் போடப்பட்டு வருவதினையும் காண முடிகிறது. இது போன்ற முறைகேடுகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.

மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளின்  போது சாலைகளில் தோண்டப்படும் குழிகளை ஒப்பந்ததாரர்கள் சரியாக மூடப்படுவது இல்லை. இதனால் பாத சாரிகளும் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளும்  மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி விபத்துகள்  ஏற்படும் சூழல் உள்ளது.  இதனை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

நாள்:19.03.2022
இடம்: திருப்பூர்

                                                  ஒப்பம்



நகல்: 01.ஆணையர் அவர்கள்
            திருப்பூர் மாநகராட்சி அலுவலகம்

          02.பொது நலன் கருதி;
             சமூக வலை தளங்கள்

No comments:

Post a Comment