Wednesday 6 April 2022

RTI 6(1) PIO CEO TPR சஞ்சீவ் குமார்

நியாயம் தான் சட்டம்
வாய்மையே வெல்லும்
RTI  ACT -2005 U/s 6(1)

தனிக்கவனம் /மிகவுமஅவசியம்/அவசரம்

மனுதாரர்: 
M.சஞ்சீவ் குமார்
த/ பெ R. மணி
49 வி.ஆர்.பி.நகர்
எம்.எஸ்.நகர் வடக்கு
திருப்பூர்,-641 603

பெறுநர்:
பொது தகவல் அலுவலர் அவர்கள்
தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005
முதன்மை கல்வி அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
திருப்பூர்-641 607 

வழி:
இந்திய அஞ்சல் துறையின் ஒப்புகையுடன் இணைந்த பதிவஞ்சல்

கடிதம் எண்: M.S.K. /RTI / U/s 6(1) / 001//PIO/CEO/ TPR/ /2022 
நாள்:       03.2022

பொருள்: தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005 சட்டப்பிரிவு 6(1) இன் கீழ் RTE / இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம்-2009  குறித்த சில தகவல்களை வழங்க கோருவது சம்பந்தமாக,

கீழ் காணும் தகவல்களை பத்தி வாரியாக வழங்கவும்.

01.இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம்-2009 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மத்திய அரசு ஒவ்வொரு கல்வி ஆண்டுகளிலும் என்னென்ன விதமான கல்வி கட்டண சலுகைகள் வழங்கி வருகிறது என்ற தகவல் வழங்கவும்.

02.இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம்-2009 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் குழந்தைகளுக்கு தமிழக அரசு ஒவ்வொரு கல்வி ஆண்டுகளிலும் என்னென்ன விதமான கல்வி கட்டண சலுகைகள் வழங்கி வருகிறது என்ற தகவல் வழங்கவும்.

03. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம்-2009 25 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் குழந்தைகளுக்கு அந்தந்த தனியார் பள்ளிகள் மூலம் என்னென்ன விதமான கல்வி கட்டண சலுகைகள் வழங்கப்படுகிறது என்ற தகவல் வழங்கவும்.

03.(அ) தனியார் பள்ளிகளில் LKG நுழைவு நிலை வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் எவ்வளவு ரூபாய் செலுத்த வேண்டும் என்ற தகவல் வழங்கவும்.

03.(ஆ) இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் குழந்தைகளிடமிருந்து தனியார் பள்ளிகள் என்னென்ன விதமான கல்வி  கட்டணங்கள் வசூலித்து கொள்ள அனுமதி வழங்க பட்டுள்ளது என்ற தகவல் வழங்கவும்.

04.(அ) தமிழ்நாடு RTE விதிகள்-2011 பிரிவு 5 இல் நோட் புக்ஸ் சீருடை இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதி தற்போது அமலில் உள்ளதா என்ற தகவல் வழங்கவும்.

04. ( ஆ) மேற்படி இந்த விதி தற்போது அமலில் இல்லை எனில் அதற்கான அரசு உத்தரவு / குறிப்பாணை/ சுற்றிக்கை ஏதேனும் இருந்தால் அதன் ஒளி நகல் வழங்கவும்.

04.(இ) மேற்படி விதி 5 இல் சொல்லப்பட்ட நோட் புக்ஸ் சீருடை உள்ளிட்டவை இலவசமாக அரசால் வழங்க படுகிறதா? அல்லது அந்தந்த தனியார் பள்ளிகள் தான் வழங்க வேண்டுமா என்ற தகவல் வழங்கவும்.

05. சிறுபான்மை பள்ளிகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து விதி விலக்கு அளிக்க காரணம் என்ன என்பதை சட்டப்பிரிவு  4(1) d இன் படி அதற்கான காரணங்களை தெரிவிக்கவும்.

06. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை அரசே செலுத்தி வரும் நிலையில் சிறுபான்மை பள்ளிகளுக்கு மட்டும் அதன் மூலம் எவ்வாறு இழப்பீடு ஏற்படுகிறது என்ற தகவல் வழங்கவும்.

07(அ) கட்டாய கல்வி உரிமை சட்டம்- 2009  25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில்  சேரும் ஏழை எளிய குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ்  ஸ்போக்கன் இங்கிலீஷ் ஹேன்ட் ரைட்டிங், கணிணி , யோகா , வாழ்க வளமுடன், மனவள கலை , பாண்டு, கராத்தே ,டேபிள் டென்னிஸ், டான்ஸ் ,கரிக்குலம் / எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் என்ற பெயரிலான  மேற்படி  இதர படிப்புகள் அனைத்தும்  இலவசமாக கற்று தரப்படுகிறதா என்ற தகவல் வழங்கவும்.

07.(ஆ) மேற்படி இதர படிப்புகளுக்கான  கட்டணங்களை பெற்றோர்கள் தான் செலுத்த வேண்டும் என்றால் ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும் மேற்படி  இதர கட்டணங்கள் அனைத்தும் அரசால்  நிர்ணயம் செய்யப்படுகிறதா?  அல்லது அந்தந்த தனியார் பள்ளிகள் தான் நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி வழங்க பட்டுள்ளதா  என்ற தகவல் வழங்கவும்.

07.(இ) மேற்படி கரிக்குலம் என்ற பெயரிலான இதர படிப்புகள் அனைத்தும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் -2009 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் குழந்தைகளுக்கு கட்டாயமா என்ற தகவல் வழங்கவும்.

மேலே நான் கோரிய தகவல்கள் அனைத்தும் சட்டப்பிரிவு 4 (1) இன் கீழ் பொது தகவல்கள் தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப்பிரிவு 6(1) இன் கீழ் நான் கோரிய தகவல்களை சட்டப்பிரிவு 7 (1) இன் கீழ் முப்பது தினங்களுக்குள் வழங்க கோருகிறேன்.

மேற்காண் தகவல்களை பெற விண்ணப்ப கட்டணமாக ரூபாய் பத்துக்கான நீதிமன்ற வில்லை ஒட்டியுள்ளேன்.

நான் கோரிய தகவல்களில் ஏதேனும் தகவல்கள் தங்கள் அலுவலகத்தில் இல்லை எனில் அதற்கான சட்டப்பிரிவு
6 (3)இன் கீழ் நடவடிக்கை மேற் கொண்டு அனைத்து தகவல்களையும் வழங்க கோருகிறேன்.

தங்களால் குறிப்பிட்ட தினங்களுக்குள் தகவல் வழங்காமல் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலோ அல்லது முழுமையுறாத குறை பாடான தகவல்கள் வழங்கப்பட்டாலோ நீதி வேண்டி சட்டப்பிரிவு 19(1) இன் கீழ் முதல் மேல்முறையீடு செய்யப்படும் என்பதினை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

நாள்:     03.2022 
இடம் : திருப்பூர்                        ஒப்பம்

No comments:

Post a Comment