Tuesday 5 April 2022

மாநகராட்சி குறை கேட்பு கூட்டம் .கழிவுநீர் கால்வாய்.ராம் குமார் மனு.

வாய்மையே வெல்லும்

மனுதாரர் :
செ.ராம்குமார் 
சமூக ஆர்வலர்
த/ பெ.செல்லையா
159/12A, தியாகி குமரன் புதுக்காலனி
4 வேலம்பாளையம்
திருப்பூர்- 641 652
செல்:98655 90723

பெறுநர்கள்:

01.உயர் திரு‌.மாவட்ட ஆட்சியர் அவர்கள்

02.உயர் திரு. மாநகராட்சி ஆணையர் அவர்கள்
திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாநகராட்சி குறை கேட்பு முகாம்

நேரம்: காலை 10.00 மணி
நாள்:30.12.2021

இடம்,: கரிய காளியம்மன் திருமண மண்டபம்
4 வேலம்பாளையம்
திருப்பூர் ‌.

பொருள் : திருப்பூர் 4 வேலம்பாளையம் பிரதான கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றி மணீஸ் தியேட்டரில் இருந்து அனுப்பர்பாளையம் புதூர் வரையிலும் கழிவுநீர் கால்வாய் கட்டக்கோரி அவசர அவசிய பொது நல மனு,

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம், திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட 4 வேலம்பாளையத்தில் இருந்து அவிநாசி சாலை அனுப்பர் பாளையம் புதூர் வரை செல்லும் பிரதான கழிவுநீர் கால்வாயில்
திருப்பூர் மாநகராட்சி 1, 5, 14, 15. பழைய  வார்டு வேலம்பாளையம் பகுதிகளில் பொது மக்கள் பயன் படுத்தும் கழிவு நீர், மற்றும் மழை நீர் இந்த பிரதான கால்வாய் மூலம் தான் செல்கிறது.

4 வேலம் பாளையம் முதல் சிறு பூலுவப்பட்டி பிரிவு ரிங் ரோடு வரை 15 வது  வார்டுக்கும், சிறு பூலுவப்பட்டி பிரிவில் இருந்து மணீஸ் தியேட்டர் வரை 1 வது வார்டுக்கும், மணீஸ் தியேட்டரில் இருந்து கோவை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வரை 5 வது வார்டுக்கும் சேர்ந்த பகுதிகளில் இந்த பிரதான கழிவு நீர் கால்வாய் செல்கிறது.

இந்த கழிவு நீர் கால்வாய் திருப்பூர் வடக்கு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானதாகும்.

திருப்பூர் மாநகராட்சி மூன்று வார்டு பகுதிகளை கடந்து செல்லும் பிரதான கழிவுநீர் கால்வாய் கட்ட சரியான திட்ட மதிப்பீடு செய்யப்பட வில்லை.

இந்நிலையில் இயக்குதல் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்புதல் நிதி 2014-2015. மதிப்பீட்டு தொகை ரூபாய் 86.25 இலட்சம் சிறுபூலுவப்பட்டி ரிங்  ரோடு பிரிவில் இருந்து மணீஸ் தியேட்டர் வரை உள்ள 
முதல் வார்டுக்கு மட்டும் 437 மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் கால்வாய் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

ஒப்பந்ததாரர் ஹரி கன்ஸ்ட்ரக்சன் 20.07.2015 அன்று பணியை துவக்கி 19.10.2015 அன்று பணியை முடித்துள்ளார்.

கழிவு நீர் கால்வாய் தரமற்ற முறையில் கட்டப்பட்டது.

இதில் பெருமளவு ஊழலும் முறைகேடுகள் நடைபெற்றதாக  28.10.2015 அன்று சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஏற்கனவே புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த புகார் மனுக்கள் மீது இன்று வரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரிய வில்லை.

437 மீட்டர் நீளத்திற்கு 5 .5 அடி அகலம் 5.5 அடி உயரத்திற்கு கழிவு நீர்க்கால்வாய் கட்டி மேல் புறம் முழுவதும் மூடி விட்டார்கள்.

மழை காலங்களில் சாலையில் செல்லும் மழைநீர் கழிவுநீர் கால்வாய்க்குள் செல்லும்  வகையில் வடிகால் வசதி செய்யப்படாத காரணத்தினால்  சாலையிலேயே கழிவுநீர்  பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் தார்சாலை சேதமாகி வருகிறது.

தரமற்ற முறையில் கட்டிய கழிவு நீர் கால்வாய் ஆங்காங்கே உடைந்து விட்டது.

மணீஸ் தியேட்டரில் இருந்து கோவை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வரையிலும் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட வில்லை!

நெடுஞ்சாலை துறையில் எந்த அனுமதியும் பெறாமல் அந்த பகுதிகளில் வர்த்தகர்கள்,தொழிற்
சாலையினர் சிறிய அளவிலான சிமெண்ட் குழாய்களை பதித்து மண்ணால் மூடியும்  தரை பாலங்கள் அமைத்தும் உள்ளனர்.

மழை காலங்களில்  மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் செல்கிறது.

சரியான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு கழிவு நீர் கால்வாய் முறையாக அமைக்கப்படாததே இதற்கு முக்கிய காரணம்.

போக்குவரத்துக்கு  இடையூறு ஏற்படுத்தி வருவதுடன் ‌ பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சுகாதார கேட்டினையும், பொது தொல்லையையும் தெரிந்தே மாநகராட்சி முதல் மண்டல  நிர்வாகம் ஏற்படுத்தி கொண்டு இருப்பது மிகுந்த வேதனை   அளிக்கிறது.

சுத்தத்தை நோக்கி ஒரு படி மேலே!  என விளம்பர படுத்தும் திருப்பூர் மாநகராட்சியை தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சி என தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.

₹86.25 இலட்சம் செலவு செய்து தரமற்ற முறையில் கட்டப்பட்ட பிரதான கழிவு நீர் கால்வாய் பயனற்றதாக போய் விட்டது.

கோரிக்கை : 01 
 திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல உதவி ஆணையர் அவர்களிடம்‌ 30.11.2017 அன்று கொடுக்கப்பட்ட மனு மீது இன்றைய தினம் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

கோரிக்கை :02 
மழை காலங்களில் கழிவு நீருடன் மழை நீரும் கலந்து பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடும் போது 
பாதசாரிகளும் வாகன ஒட்டிகளும் பொது மக்களும் படும் துயரத்தை நேரடியாக வந்து கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

கோரிக்கை :03
பிரதான கால்வாயில் தனியாரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறிய குழாய் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுகிறோம்

கோரிக்கை :04
437 மீட்டர்  கழிவு நீர் கால்வாயின் மேல் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் உடைந்த  கழிவு நீர் கால்வாய் மேற் பகுதியை உடனடியாக பழுது நீக்க வேண்டுகிறோம் .

கோரிக்கை :05
437 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயில் சாலையில் தேங்கும் மழை நீர் செல்ல ஆங்காங்கே வடிகால் வசதி செய்ய வேண்டுகிறோம்.

கோரிக்கை ;06
மணீஸ் தியேட்டரில் இருந்து அனுப்பர் பாளையம் புதூர் வரையிலும் கழிவுநீர்  கால்வாய் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

கோரிக்கை:07. பிரதான சாலையில் இரு புறமும் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட வில்லை. ஒரு புறம் மட்டுமே பிரதான கழிவுநீர் கால்வாய் உள்ளது. 

எதிர் புறம் கழிவுநீர் கால்வாய் கட்ட படாத காரணத்தால் அப்பகுதி குடியிருப்புகள் தொழிற்சாலைகள் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் சட்ட விரோதமாக விடப்பட்டு வருகிறது.

இதனால் சாலையை கடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் தினம் தினம் பொது சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.

சட்ட விரோதமாக பொது சாலையில் கழிவுநீர் விட்டு பொது சுகாதார கேட்டினை தெரிந்தே ஏற்படுத்துபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

 கோரிக்கை:08.
சாலையின் எதிர் புறம் அனுப்பர்பாளையம் புதூரில் இருந்து சிறு பூலுவபட்டி ரிங் ரோடு பிரிவு வரையிலும்  திட்ட மதிப்பீடு/அளவீடு செய்து கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

கோரிக்கை:09.
வேலம்பாளையம் பிரதான சாலை ஒலிம்பிக் பேக்கரி எதிரில் அப்பன் என்கிற சுப்பிரமணி என்பவர் ஆழ் துளாய் கிணறு மூலம் சட்ட விரோதமாக நிலத்தடி நீரினை லாரிகள் மூலம் விற்பனை செய்து வருகிறார்.

தண்ணீர் பிடித்து செல்ல வரும் லாரிகள் பிரதான சாலையில் போக்குவரத்து க்கும் பொது மக்களுக்கும் இடையூறாக நிறுத்த படுவதால் மிகுந்த போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படும் சூழலும் உள்ளது.

எனவே தினம் தினம் பொது போக்குவரத்துக்கு  இடையூறினை தெரிந்தே திட்டமிட்டு ஏற்படுத்தி வரும் அவர்  மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

கோரிக்கை:10.
அதே பகுதியில் மூர்த்தி என்பவர் இரு சக்கர வாகனங்களை பிரதான சாலையில் வைத்து சட்ட விரோதமாக வாட்டர் சர்வீஸ் செய்து பொது சுகாதார கேட்டினை தெரிந்தே ஏற்படுத்தி வருகிறார்.
அவர் மீதும் உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேற்படி புகார் சம்பந்தமாக 28.8.2019 அன்று நடைபெற்ற முன்னாள் தமிழக முதல்வர் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் கொடுக்கப்பட்ட மனு மீதும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதினையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

கோரிக்கை வைக்காமலே மக்கள் பணி செய்வது தான் மாநகராட்சியின் கடமை!

நாமு‌ம் நமது கடமையாகவும் உரிமையாகவும் கருதி குறை கேட்பு முகாமில் தங்களின் சிறப்பு கவனத்திற்கு மேற்படி பொதுநல மனுவினை‌ கொண்டு வந்துள்ளோம்.

திருப்பூர் மாநகராட்சி தற்போது ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தப்பட்டு‌ பணிகள் படை  பெற்று வருவதால் 
மேற்படி இப்பகுதி மக்களின் கோரிக்கை களை உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

நகல்: தக்க மேல் நடவடிக்கைக்காக சமர்ப்பிக்க படுகிறது.

மாண்புமிகு முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி அவர்கள்
முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம்
திருப்பூர் மாவட்டம்.

நாள் :30.12.2021
இடம் : திருப்பூர் 

ஒப்பம்


(செ.ராம்குமார்)

No comments:

Post a Comment