Saturday 30 March 2019

ஊழல் ஒழிப்பு செய்தி:0050 லஞ்சம் வாங்கும் காவலூழியர் !

ஊழல் ஒழிப்பு செய்தி :,LAACO /0050/2019 ;நாள் ; 04.04.2019

குற்றம் நடந்தது என்ன?

உண்மை சம்பவம்!

காவல் ஊழியர்களா?
வழிப்பறிக் கொள்ளையர்களா?

திருப்பூர் மாநகர காவல் ஊழியர்களின் அத்து மீறல்கள்!

நூதன முறையில் சட்ட விரோதமாக லஞ்சம் வாங்கும் திருப்பூர் மாநகர காவலூழியர்கள்!

20.03.2019 அன்று இரவு சுமார்  7.20 மணி அளவில் திருப்பூர் அவிநாசி சாலை அனுப்பர்பாளையம் புதூர் கோவை டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் அருகே கண்ட காட்சி !.

நான்கு இளைஞர்கள் பரபரப்பாக நின்று கொண்டிருந்தனர்.

அருகில் ஒரு காவலூழியரும் நின்று ஏதோ பேசி கொண்டிருந்தனர்.

கொஞ்ச தூரத்தில் இருச்சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த காவலூழியர் ஒருவரிடம் ஒரு இளைஞன் கெஞ்சி கொண்டிருப்பதினை காண முடிந்தது.

சரி என்ன தான் நடக்கிறது பார்ப்போம் என ஓரமாக நின்று கவனித்தோம்.

அருகில் இருந்த சிட்டிமேன் பியூட்டி சலூன் என்ற கடைக்குள் காவலூழியர் ஒரு இளைஞரை  அழைத்து சென்று விட்டு வெளியில் வந்தார். .

அப்போது ஒரு இளைஞன் சக நண்பனிடம் என்னடா பண்றது மச்சி ₹ 1000 ரூபாய் கேட்கிறான்டா !

₹:300 தான் கையில் இருக்கிறது என பேசியது நமது காதில் விழுந்தது.

அந்த காவலூழியர் லஞ்சம்  தான் கேட்கிறார் என உறுதியானது.

லஞ்சம் வாங்கும் போது  கையும் களவுமாக பிடித்து விடலாம் எனக்காத்திருந்தோம்.

அந்த காவலூழியன் பலே கில்லாடி!

பொது இடத்தில் லஞ்சம் வாங்கினால் மாட்டிக்கொள்வோம் என தெரிந்து
திடீரென அந்த இளைஞரை அழைத்து கொண்டு மீண்டும் சிட்டிமேன் பியூட்டி சலூனுக்குள் நுழைந்தார்.

நுழைந்த வேகத்தில் அப்படியே லஞ்ச பணத்தினை பெற்றுக்கொண்டு வெளியில் வந்தார்.

இருச்சக்கர வாகனத்தில் காத்திருந்த மற்றொரு காவலூழியருடன் பறந்து சென்று விட்டார்.

காவல் ஊழியர்கள் ஓட்டி வந்த
இருச்சக்கர வாகன பதிவு எண்.TN 39 BF 7033 ஹோண்டா சைன் வாகனம் என நினைக்கிறோம்.

திருப்பூர் மாநகர 4 வேலம்பாளையம் காவல் நிலைய காவல் ஊழியராக இருக்கக்கூடும் என நினைக்கிறோம்

சலூன் கடைக்குள் இருந்து வெளியில் வந்த அந்த இளைஞன் வேகமாக சாலையை கடக்க முயற்சி செய்தான்.

அந்த இளைஞரை பின் தொடர்ந்து  சென்று தம்பி என்ன பிரச்சனை என்றேன்.

எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்றேன் .

₹300 Three Hundred. என்றார்.

எதற்கு ? என்றேன் இன்சூரன்ஸ் இல்லை அதனால் தான் என்றார்.

ரசீது கொடுத்தாரா என்றேன்?
இல்லை என்றார்.

லஞ்சமா என்றேன்?

ஆம் என சொல்லி விட்டு பதட்டத்துடன் வேகமாக  சென்று விட்டார்.

காவல் ஊழியர்கள் அதிகார வரம்பை மீறி தங்களுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை மடக்கிப்பிடித்து ஆவணங்களை ஆய்வு செய்வதாக கூறி சரியான ஆவணங்கள் இல்லாத வாகன ஓட்டிகளிடம் இருந்து தேவையான அளவு லஞ்ச பணத்தை பெற்றுக்கொள்கின்றனர்.

இரவு நேரங்களில் திருப்பூர் மாநகர பகுதிகளில் வலம்  வரும் காவல் ஊழியர்கள் போலீஸ் நண்பர்களை  துணைக்கு வைத்துக் கொண்டு வாகன ஓட்டிகளை நிறுத்தி  குடிச்சிருக்கியா வாயை ஊது என ஊத சொல்கின்றனர்.

அவ்வாறு வாகன ஓட்டிகள் யாரேனும் மது அருந்தி இருந்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது கிடையாது.

மாறாக அந்த வாகன ஓட்டியின் இருசக்கர வாகனத்தினை பறித்து அருகில் இருக்கும் ஏதாவது ஒரு இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விடுகின்றனர் .

அபராதமாக ₹ 2,500 முதல் ₹ 3,000 வரை என தங்களுக்கு தேவைப்படும்  பணத்தை அவர்கள் லஞ்சமாக பெற்று விடுகின்றனர்.

காவல்துறையினரின் சோதனைச்சாவடிகளில் வாகன ஓட்டிகளை ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் ஸ்பாட்பைன்  எனக்கூறி ரசீது வழங்காமல் லஞ்சம் பெற்று வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது .

ஒரு சில காவல் உதவி ஆய்வாளர்கள் வாகன சோதனை என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடம் அறிவிப்பு நோட்டீஸ் மட்டும்  கொடுத்து ஸ்பாட் பைன் என கூறி அபராதம் வசூலித்து வருகின்றனர்.

ஒரு சில காவல் உதவி ஆய்வாளர்கள் வாகன சோதனையின் போது காவல் ஆய்வாளர் கையொப்பமிட்ட ஸ்பாட் பைன் ரசீதின் மூலம் சட்ட விரோதமாக அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக பல்வேறு புகார்கள் நமக்கு வந்த வண்ணம் உள்ளது

உளவுத் துறையினருக்கு காவல்துறையினரின் இந்த லஞ்ச வேட்டை குறித்து தெரியாமல் போனது ஏன் ?

திருப்பூர் மாநகர காவல் உதவி ஆணையர் ,துணை ஆணையர் ,ஆணையர் அவர்களுக்கு இது குறித்து உண்மையிலேயே தெரியாதா என்ன?

கோரிக்கை;
லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு வரும் திருப்பூர் மாநகர காவல் ஊழியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

இணைப்பு :காணொளி

நாஞ்சில் கோ கிருஷ்ணன் செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ் திருப்பூர் 
உலா பேசி 98 65 5 90 723
உண்மை சம்பவங்கள் தொடரும்......

திருப்பூர் மாநகர காவல் பொது தகவல் அலுவலருக்கு சட்டப் பிரிவு 7 (1) இன் கீழ் 48 மணி நேரத்தில் தகவல் கோரும் மனு

மனுதாரர் :
N. செந்தில் குமார்
த/பெ நடராஜன்
18/421 MKP லே-அவுட்
சேயூர் ரோடு, சூளை
அவிநாசி -641 654
திருப்பூர் மாவட்டம்.

பெறுநர் :
பொது தகவல் அலுவலர் அவர்கள்
தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005
மாநகர காவல் ஆணையர் அலுவலகம்
அம்மன் கல்யாண மண்டபம் அருகில்
சிறுபூலுவப்பட்டி ரோடு
திருப்பூர் -641 602

அய்யா,

பொருள் : திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு அனுப்பப்பட்ட பார்வையில் காணும் புகார் மனு எனது உயிர்  வாழ்வாதாரம் ,சுதந்திரம் சம்மந்தப்பட்ட தகவல்  ஆகையினால் தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 சட்டப்பிரிவு 7(1) இன் கீழ் 48 மணி நேரத்திற்குள் சில தகவல்கள்  வழங்க கோருவது சம்பந்தமாக,

தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்பு சட்டம் -2003 க்கு எதிராக என்னிடம் கூடுதல் வட்டி வசூலித்ததுடன் மேலும் கூடுதல் வட்டி கேட்டு எனது இருச்சக்கர வாகனத்தினை பறித்து சென்றது குறித்து எதிர் மனுதாரர் :01 என்பவர் மீது திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரினை பெற்று விசாரணை செய்யாத காரணத்தினால் பார்வையில் காணும் புகார் கடிதத்தினை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு அனுப்பி இருந்தேன்.

இந்நிலையில் நான் குற்றம் சாட்டப்பட்ட இந்து முன்னனியை சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவர் மீது கொடுக்கப்பட்ட புகாரினை திரும்ப பெற வேண்டும்.  சங்கர் கணேஷ் மீது கையை நீட்டினாலே கையை வெட்டுவேன் . போலீசை பற்றி பயப்பட மாட்டேன். .உன்னை தூக்குவதற்கு ரொம்ப நேரம் ஆகாது .கொலை செய்து விடுவதாக மற்றொரு இந்து முன்னனியை சேர்ந்த நித்யானந்தம் என்பவர் தொடர்ந்து போன் செய்து மிரட்டி வருகிறார்.

பார்வையில்  காணும் புகாரின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் விபரங்கள்  எனது உயிர், வாழ்வாதாரம் ,சுதந்திரம் சம்பந்தப்பட்ட தகவல் உரிமை ஆகிய காரணத்தினால் இம்மனு கிடைக்கப்பெற்ற 48 மணி
நேரத்திற்குள் கீழ் காணும் சில தகவல்கள் வழங்க கோருகிறேன்.

நான் கோரிய தகவல் பெறும் முன்னர் கந்து வட்டி
கும்பலால் நான் படுகொலை செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

பார்வை : மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 154 (3) இன் கீழ் 12.03.2019 அன்று பதிவு அஞ்சலில் அனுப்பிய புகார் மனு நகல்.

1. பார்வையில் காணும் புகார் மனு தங்கள் அலுவலகத்தில் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள பதிவேட்டின் அந்த பக்கத்தின் ஒளி நகல் ஒன்று வழங்கவும்.

2.இன்றைய தினம் வரையில் பார்வையில் காணும் எனது புகார் மனு சம்மந்தமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவேடுகளின் அனைத்து பக்கங்களின் ஒளி நகல்கள்  வழங்கவும்.

3.மாநகர காவல் ஆணையர் அவர்களின் கவனத்திற்கு எனது புகார் மனு கொண்டு செல்லப்பட்டுள்ளதா?
அவ்வாறு கொண்டு செல்லப்பட்டிருப்பின் ஆணையர் அவர்கள் எனது புகார்  சம்மந்தமாக ஏதேனும் உத்தரவு பிறப்பித்திருந்தால் அந்த உத்தரவின் ஒளி  நகல் ஒன்று வழங்கவும்.

4.பார்வையில் காணும் எனது புகார் மனு தற்பொழுது எந்த அதிகாரியிடம் உள்ளது.
அவரின் பெயர் பதவியின் பெயர் அலுவலக முகவரி தெரிவிக்கவும்.

5.பார்வையில் காணும் எனது புகார் சம்பந்தமாக விசாரணை அலுவலர் யாரேனும் நியமிக்கப்பட்டிருப்பின் அவரின் பெயர் பதவியின் பெயர் தொடர்பு எண் வழங்கவும்.

5 (அ) அவ்வாறு நியமிக்கப்பட்ட விசாரணை அலுவலர் விசாரணை செய்த இடம் யார் யாரை விசாரணை செய்தார். சாட்சிகளிடம் பெற்ற வாக்கு மூலங்களின் ஒளி நகல்கள் வழங்கவும்.

6.பார்வையில் காணும் புகார் மனு சம்மந்தமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பின் அதன் ஒளி நகல் ஒன்று வழங்கவும்.

7.பார்வையில் காணும் எனது புகார் மனு நிலுவையில் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது நிராகரிக்கப்பட்டிருந்தாலோ அதற்கான காரணங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டப்பிரிவு 4(1) d .இன் கீழ் தெரிவிக்கவும்.

8.பார்வையில் காணும் எனது புகார் மனு மீது இன்றைய தினம் வரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வில்லையெனில்  எப்போது நடவடிக்கை மேற்கொண்டு எதிர் மனுதாரரிடம் இருந்து எனது இருச்சக்கர வாகனத்தினை மீட்டு கொடுக்கப்படும் என்ற தகவல் வழங்கவும்.

9.பார்வையில் காணும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள எதிர் மனுதாரர்கள் தெற்கு காவல் நிலையத்தில் வைத்து புகார் கொடுக்க சென்ற பாதிக்கப்பட்ட என்னை மிரட்டிய கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதா என்ற தகவல் வழங்கவும்.

மேற்காணும் தகவல்களை பெற ரூபாய் பத்துக்கான நீதிமன்ற வில்லை ஒட்டியுள்ளேன்.

நான் கோரிய தகவல்களில் ஏதேனும் தகவல்கள் தங்கள் அலுவலகத்தில் இல்லை எனில் அதற்கான சட்டப்பிரிவு 6(3) இன் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து தகவல்களையும் சட்டப்பிரிவு 7(1) இன் கீழ் 48 மணி நேரத்திற்குள்  வழங்கக்கோருகிறேன்.

இணைப்பு பக்கங்கள் :08

நாள் : 30.03.2019
இடம் : சேயூர்

மனுதாரர்

N.செந்தில் குமார்

Friday 29 March 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0049 மது போதையில் அரசு பேருந்து ஓட்டுநர்!

ஊழல் ஒழிப்பு செய்தி ;LAACO /0049/2019 :நாள் ;29.03.2019

குற்றம் நடந்தது என்ன?

உண்மை சம்பவம்.

அரசு போக்குவரத்து கழக திருப்பூர் கிளை மேலாளர்
திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்
கோவை போக்குவரத்து இணை ஆணையர்
திருப்பூர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர்
ஆகியவர்களின் உடனடி கவனத்திற்கு.

அரசு பேருந்தில் செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை!

மது போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!

பயணிகள் இறங்கி கொண்டிருக்கும் போது பேருந்தை இயக்கியதுடன் பெண் பயணியிடம் இறங்கி போடி என ஒருமையில் பேசி இருக்கிறார்.

கண்டு கொள்ளாத காவலூழியர்கள்!

சம்பவம் நடந்த இடம்
அவிநாசி புதிய பேருந்து நிலையம்
நாள் ;29.03.2019
நேரம் : இரவு சுமார் 10.30 மணி

திருப்பூர் விஜயாபுரத்தில் இருந்து அவிநாசி வந்த  அரசு பேருந்து.
வழி தட எண் : 4
பேருந்து பதிவு எண் :TN38 N 2514

திருப்பூரில் இருந்து கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி கணவன் மனைவி இருமகள்கள் இரு  குழந்தைகள் குடும்பத்துடன்  அவிநாசி வந்துள்ளனர்.

அவிநாசி பேருந்து நிலையத்தில் பேருந்து நின்ற போது கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி கணவனை கை பிடித்து அவர் மனைவி இறங்கி கொண்டிருக்கும் போதே பேருந்தை இயக்கியதால் கொஞ்ச தூரம் இருவரும் இழுத்து செல்லப்பட்டுள்ளனர் .

பேருந்தில் இருந்த அவரின் மகள் கூச்சல் போடவே பேருந்தை நிறுத்தி உள்ளார் .

ஏங்க இறங்குவதற்குள் வண்டிய எடுக்குறீங்க என அந்த பெண் கேட்ட போது இறங்கி போடி என திட்டி உள்ளார் பேருந்து ஒட்டுநர்.

அப்போது தான் அவர் மது போதையில் இருந்ததை மற்ற பயணிகள் கவனித்துள்ளனர்.

போடின்னா சொன்ன  பல்லை உடைத்து விடுவேன் என பாதிக்கப்பட்ட பெண் பயணி மது போதையில் இருந்த ஓட்டுநரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொஞ்சம் ஏமாந்திருந்தால் அவரது தந்தை பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி ஆகி இருப்பார் நல்ல வேளையாக எதுவும் ஆகவில்லை என அந்த பெண் ஆவேசத்துடன் தெரிவிக்கிறார்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டுள்ளது .

சம்பவத்தை நேரில் பார்த்த ஆனந்த் என்ற நண்பர் நம்மிடம் இது குறித்து தெரிவித்தார்.
வீடியோ எடுத்து அனுப்பும் படி தெரிவித்தோம்.

சம்பவம் நடந்ததை அறிந்த அப்பகுதி காவலூழியர்கள் வந்து பயணிகளின் கூட்டத்தினை கலைந்து போக செய்து  பேருந்தை அனுப்பி வைத்துள்ளனர்..

மது போதையில் ஓட்டுநர் இருக்கிறார் என தெரிந்தும் காவலூழியர்கள் பேருந்தை இயக்க எவ்வாறு அனுமதி அளித்தனர்.

மது போதையில் பேருந்தை இயக்கி விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு.?

காவலூழியர்கள் ஏன் கடமை தவறி விட்டனர்.

அரசு பேருந்து ஓட்டுநரே பணி நேரத்தில் மது அருந்தி பேருந்தை இயக்கி இருப்பது நமக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை செய்து மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை பணி நீக்கம் செய்ய கோருகிறோம்.

பேருந்து ஓட்டுநர் மது போதையில் இருப்பதினை தெரிந்தும் பேருந்தை இயக்க அனுமதி அளித்த சம்பந்தப்பட்ட காவலூழியர்களையும் பணி நீக்கம் செய்யக்கோருகிறோம்.

இணைப்பு : காணொளி

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் ....

Tuesday 26 March 2019

புகார் கொடுத்தவரை கந்து வட்டிக் கும்பலிடம் இருந்து பாதுகாக்க வேண்டுகோள் !

முக்கிய அறிவிப்பு!

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் ஓர் அவசர அவசிய வேண்டுகோள்.!

திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால்
கந்து வட்டி கும்பலால் பாதிக்கப்பட்ட செந்தில் குமார் என்பவருக்கு தொடர்ந்து பல்வேறு அடையாளம் தெரியாத நபர்கள்  மூலம் கொலை மிரட்டல். விடுத்து வருவதாக தகவல்!

புகார் கொடுத்தவரை இந்து முன்னனியை சேர்ந்த கந்து வட்டி கும்பல் படுகொலை செய்யப்படும் முன்னர் திருப்பூர் மாநகர காவல் துறையும் திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723

Thursday 21 March 2019

ஏன் வாக்களிக்க வேண்டும் ?

1 ஏன் வாக்களிக்க வேண்டும் ?

2 எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?
அல்லது

3 யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

எனது முதல் வாக்கை பதிவு செய்ய இருக்கிறேன்.
தயவு கூர்ந்து தங்களின் பதிலை எதிர்பார்க்கும் செந்தில் குமார்..

செந்தில் குமார் அவர்களுக்கு

தங்களின் கேள்விகளுக்கான எனது பதில்.

1.ஏன் வாக்களிக்க வேண்டும்?

வாக்களிப்பது நமது உரிமை !
நல்ல நேர்மையான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பது நமது கடமை !
மக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியே!

மாநிலம் தோறும் அந்தந்த மாநிலத்தில் சிறந்த முறையில் ஆட்சி செய்ய மாநில முதல்வர்களையும்
ஒட்டுமொத்த மாநிலங்களை உள்ளடக்கிய நம் இந்திய தேசத்தில் பிரதமராக ஒருவரை தேர்ந்தெடுப்பதும் ஒவ்வொரு இந்திய குடிமகனின் தலையாய கடமையாக உள்ளது.

எனவே தான் மத்திய மாநில தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டு மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது அந்த உரிமையின் அடிப்படையில் நேர்மையான ஒரு ஆட்சியாளரை தேர்ந்தெடுப்பது நமது கடமை !

2. எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?

இந்த கேள்வி மிகவும் சிக்கலான கேள்வி தான் .
ஏன் என்றால் தாங்கள் முதலில் தமிழகத்தில் எந்தெந்த அரசியல் கட்சிகள் உள்ளன. ?
அதன் தலைவர்கள் யார் ?
அந்த கட்சியின் கொள்கைகளும் கோட்பாடுகளும் என்ன ?

இவர்களை தேர்ந்தெடுத்தால் நேர்மையான ஆட்சி வழங்குவார்களா ?

ஏற்கனவே சுதந்திரம் அடைந்த பின்னர் இது நாள் வரை நமது நாட்டை ஆண்டவர்கள் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் என்னென்ன நன்மைகள் செய்து விட்டனர் .
லஞ்சம் ஊழல் ஒழிக்க ப்பட்டுள்ளதா ?
என்பதை முதலில் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம் .

அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள கட்சிகளின் ஒரு சில விவரங்களை மட்டும் சுருக்கமாக தெரியப்படுத்துகிறோம்

அரசியல் கட்சி நடத்தும் அரசியல் வியாதிகள் தேர்தல் தோறும் கட்சி கொள்கைகளை குழி தோண்டி புதைத்து விடுகின்றனர்.

பணம் பதவி புகழ் செல்வாக்கு சுயநலனுக்காக தேர்தல் நேர சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்து .கொள்கின்றனர்  .

இதனால் சூடு சொரணை வெட்கம் மானம் அனைத்தையும் இழக்கின்றனர்.

தங்களது கூட்டணிக்கு எதிர் அணியில் இருப்பவர்களை தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர்.!

ஒருவருக்கு ஒருவர் சேற்றை வாரி இறைக்கின்றனர் .நா கூசாமல் பொய் பேசுகின்றனர்

அடுத்தடுத்த  தேர்தல்களில்  எதிர் அணியினருடன் கைகோர்த்து  மற்றவர்களை விமர்சிக்கின்றனர்.

இந்த கேவலமான நடை முறை ஒவ்வொரு சட்டமன்ற நாடாளுமன்ற உள்ளாட்சி  தேர்தல்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருவதினை பார்த்து கொண்டிருக்கிறோம்.

காங்கிரஸ்,
பி.ஜே.பி.
தி.மு.க.
அ.இ.அ.தி.மு.க
பா.ம.க
ம..தி.மு.க
தே.மு.தி.க
சி.பி.ஐ
சி .பி.எம்
வி.சி.க
நா.த.க
த.மா.கா
கொ.ம.க
ம.நே.ம.க
இ.யூ.மு.லீ
பு.த.க
ஐ.ஜே.கே
ஐ.கு.அ.க
த.வா.க
உள்ளிட்ட இன்னும் பல அனைத்து சிறு சிறு கட்சிகளும் அடங்கும்.

இந்த கட்சிகளின் தலைவர்களின் தேர்தல் நேர பேச்சுக்கள் விமர்சனங்கள்  சமூக வலைதளங்களில் கட்சி விசுவாசிகளால் போட்டி போட்டு பகிரப்பட்டு வருகிறது.

இதன் மூலம் அனைத்து அரசியல் கட்சிகளின் முகத்திரை கிழித்து 
பொது தளத்தில் நார்நாராக தொங்க விடப்பட்டுள்ளது .

பா.ம.க

தலைவர் மருத்துவர் ராமதாஸ் சொன்னார் நானோ எனது குடும்பத்தினரோ பதவிக்காக தேர்தலில் நின்றால் நடு தெருவில் நின்று செருப்பால் அடியுங்கள் என்றார்.
ஆனால் அப்படி யாரும் செய்தாக தெரிய வில்லை

இரு திராவிட கட்சிகளின் தயவில் தேர்தலிலும் நின்றார்.
வன்னிய சமுதாயத்தின் வாக்ங்

திராவிட கட்சிகளிடம் இனி எந்த காலத்திலும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை கூட்டணியும்  இல்லை என்றார்.
ரயில் ச்
ஆனால் ஒட்டி கொண்டார் .பதவி ஆசை அவரை விடவில்லை! மீண்டும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி.!

அரசு டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போட்டார்‌ தற்போது அரசு டாஸ்மாக் கடைகளை நடத்தும் அ.இ.அ.தி.மு.க உடன் கூட்டணி அமைத்துள்ளார்.

பி.ஜே.பி என்னும் வட நாட்டு  மதவாத பண்டார பரதேசிகளை எல்லாம் பட்டி தொட்டி எங்கும் தூக்கி சென்று வளர்த்து விட்டார் ஜெயலலிதா என குற்றம் சாட்டினார் கருணாநிதி.!

அதே மதவாத. பி.ஜே.பி யுடன் காங்கிரஸை எதிர்த்து கைகோர்த்தார் கருணாநிதி!

இந்திரா காந்தியின் மண்டை உடைக்கப்பட்டது.

அன்னை இந்திராவே வருக நிலையான ஆட்சி தருக என மடி பிச்சை ஏந்தினார் கருணாநிதி!

இலங்கைவாழ் தமிழர்கள் ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்டனர்.

ராஜிவ் காந்தி படு கொலை!
ஜெயின் கமிசன் குற்றவாளி என்றது.

சர்க்காரியா கமிசன் விஞ்ஞான ஊழல் பேர் வழி என கூறியது.

கோவை குண்டு வெடிப்பு!

தினகரன் செய்தித்தாள் அலுவலகம் தீயிட்டு எரிப்பு!

கட்சியின் நிர்வாகிகள் பலர் படுகொலை!

திருவாரூரில் இருந்து திருட்டு ரயிலேறி சென்னை வந்ததாக சொல்லப்பட்ட அவரது குடும்பம் தற்போது பல லட்சோப லட்சம் கோடிகளுக்கு அதிபதியாகி உள்ளனர்.

இவர்களிடம் இல்லாத தொழில்களே இல்லை!

குடும்ப அரசியல்
இப்படியே பல நிகழ்வுகள்.

இப்போது மீண்டும் காங்கிரசுடன் தி.மு.க.கூட்டணி.

ம.தி.மு.க.
தி.மு.க.வில் இருந்து ம.தி.மு.க உருவானது.

இதன் தலைவர் வைகோ இவரை பற்றி சொல்லவே வேண்டாம்.
பச்சோந்தியை விட. அடிக்கடி நிறம் மாறுவார் எல்லா கட்சியிலும் ஐக்கியமாகி விட்டார் .
பெரிய தில்லாலங்கடி பேர்வழி. வாய்க்கு வந்ததை அப்படியே பேசுவார்! மெகா நடிகன்.

திமுகவையும் அதன் கட்சி தலைவர்களையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் இவர் கேவலப்படுத்தி பேசியதுபோல் வேறு யாரும் பேசியிருக்க முடியாது. ஆனால் அனைத்தையும் மறந்து தற்போது மீண்டும் திமுகவுடன் சந்தர்ப்ப வாத கூட்டணி அமைத்துள்ளார்.

சி.பி.ஐ.வலது கம்யூனிஸ்ட்
சி.பி.எம் இடது கம்யூனிஸ்ட்

இவர்கள் சித்தாந்த வாதிகள்..இவர்களின் கொள்கை அவர்களுக்கே தெரியாது.

சீங்கிலாப்  சிந்தாபாத்  உயரட்டங்கன உயரட்டே  வானில் செங்கொடி உயரட்டே ! இது கேரளாவில் ......மட்டும்.

கேரளத்தில் இவர்கள் காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பார்கள். காங்கிரஸ் கட்சி  மத்தியில் ஆட்சி யை பிடித்து விடக்கூடாதாம்.

ஆனால் இவர்கள் தமிழகத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க  வேண்டுமாம்.

த்தா...என்னங்கடா உங்க கொள்கை!

இவர்களுக்கு தெரிந்ததெல்லாம்
எதற்கெடுத்தாலும் கொடி பிடிப்பார்கள். ஆர்ப்பாட்டம் போராட்டம்!
இதைத் தவிர இவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது.

கட்சி நிதி என உண்டியல் வசூல் செய்வார்கள்.

தொழிலாளி வர்க்கத்திற்காக போராடுகிறோம் என்று சொல்லி முதலாளிகளிடம் கை நீட்டுவார்கள்.

ஆனால் எந்த தொழிலாளர் களையும் பாதுகாக்க மாட்டார்கள் .

சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் அனைத்திற்கும் இவர்கள் தான்  மூல காரணம் .

தொழிற் சங்கங்கள் அனைத்தும் கண் துடைப்பே !

தேவைக்கு தகுந்த கூட்டணி
அமைத்து கொள்வார்கள்.

விடுதலை சிறுத்தை கட்சி!

இதன் தலைவர் தொல். திருமாவளவன் இவர் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தலித்துக்களை பாதுகாப்பேன் என சொல்லி சந்தர்ப்ப வாத கூட்டணி சேர்வார்.

ஆனால் எந்த ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினரும் சமூகத்தில் உயர வில்லை.
இவர் மட்டுமே உயர்ந்து நிற்கிறார்.

இவரது பேச்சுக்கள் ஜாதி வெறியையும் வன்முறையையும்  தூண்டும் விதமாகவே உள்ளது.

தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை பிரித்து ஆண்டு அரசியல் செய்வதில் வல்லவராக இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி !

தமிழகத்தில் இவர்கள் கட்சிக்குள் பல கோஷ்டிகள் .
வேட்டியை கிழித்து கொண்டு அலைகின்றனர்.
ஒற்றுமை இல்லை !
பல தலைவர்கள் உண்டு. தொண்டர்கள் இல்லை. வாக்கு வங்கியும் இல்லை.

எனவே ஒரு சில சீட்டுகளுக்காக மானம் சூடு சொரணை இழந்து இரண்டு திராவிட கட்சிகளின் தோளில் ஏறி மாறி மாறி சவாரி செய்கின்றனர்.

நாட்டில் பெரும்பான்மையான ஊழல்களை இவர்கள் ஆட்சியில் தான் செய்துள்ளனர்.

பி.ஜே.பி.

மதவாத கட்சி என  முத்திரை குத்தப்பட்டவர்கள்.

இவர்களுக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி இல்லை.

இந்துக்கள் வாக்கு கூட இவர்களுக்கு விழுவது இல்லை .

அப்படியானால் இந்து மத சார்புடைய கட்சியாக இருந்தால் பெரும்பான்மையான இந்துக்களின் வாக்குகள் அனைத்தும் இவர்களுக்கு விழுந்து இருக்க வேண்டுமல்லவா ?

அப்படியானால் இவர்கள் எப்படி மத சார்புடைய கட்சியாக இருக்க முடியும்.

சிறுபான்மையர் வாக்குகள் இவர்களுக்கு இல்லை.

விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில தலைவர்களே தமிழகத்தில் உண்டு. அவர்களும் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்கி தவிக்கின்றனர்.

வாக்கு வங்கி இல்லாத காரணத்தால்
திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கின்றனர்.

பாபர் மசூதி இடிப்பும் ராமர் கோவில் கட்ட நினைப்பதும்  பி.ஜே.பி யினரின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமா ?

அப்படியானால்  மக்கள் பீ.ஜே.பி ஆட்சியை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்.

பிரதமர் மோடி!
இவரின் திட்டங்கள் அனைத்தும் தொலை நோக்கு பார்வையில் சிறந்ததாக தெரிந்தாலும் அதனால் ஒரு சில பாதிப்புகள் ஏற்படும் சூழல்.
இதனால் பல திட்டங்களை மக்கள்
எதிர்க்கின்றனர்.
சமூக வலைதளங்களில் சிறுபான்மையினராலும் தி.க.வினராலும் அதிகம் கேவல படுத்தப்படும் பிரதமரும் இவரே.

ஊழல் கட்சியான அ.இ.அ.தி.மு.க உடன் தற்பொழுது கூட்டணி!

அ.இ.அ.தி.மு.க

எம்.ஜி.ஆருக்கு  பிறகு ஜெயலலிதா !

ஜெயலலிதா திடீர் மரணம்  !மரணத்தில் சந்தேகம்;!
மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரணை செய்து வருகிறது.

ஊழல் வழக்கில் 100 கோடி அபராதம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது .

ஆனால் சிறைக்குச் செல்லாமலே ஜெயலலிதா மரணித்து விட்டார்.

அவருக்கு பக்க துணையாக இருந்த சசிகலா தற்போது சிறையில் அடைக்க பட்டுள்ளார்.

ஊழல் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஆட்சி கலைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

மக்கள் விரும்பாத ஒரு திடீர் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதல்வராக பதவியில் இருக்கிறார்.

பன்னீர் செல்வம் துணை முதல்வர் 

ஊழல் செய்து தண்டனை பெற்ற கட்சி தமிழகத்தை ஆள்வது வேதனை .

அ.ம.மு.க

ஊழல் செய்து தண்டனை பெற்று தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சசிகலா ஆதரவுடன் தமிழகத்தை ஆள நினைக்கிறார்
டி.டி.வி‌ தினகரன்!

ஏற்கனவே ஆர்.கே. நகரில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார்.

அதே முயற்சியில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டி இடுகிறார்.

தே.மு.தி.க

அ.இ.அ.தி.மு.க வை எதிர்த்து விஜயகாந்த் கட்சி தொடங்கினார்.

இவரும் மற்ற கட்சிகளை போல் தனது மனைவியையும் மைத்துனனையும் கட்சியில் இணைத்து தமிழக முதல்வராகி விட வேண்டும் என கனவு கண்டார்.
ஆனால் இவரின் கனவு பலிக்கவில்லை . கட்சி கொள்கை கோட்பாடுகளை மறந்து மீண்டும் ஊழல் கட்சியான அமெரிக்காஅ.இ. அ.தி.மு.க உடன் கூட்டணி அமைத்துள்ளார்.

நா.த.க.

இதன் தலைவர் சீ......மான்.!!
இவரது பேச்சாற்றலால் இளைஞர்களை கவர்ந்தார்
நாம் தமிழர் என  தமிழர்களுக்காக கட் சி என்றார்.

தமிழர்கள் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்றார்.
தமிழர்களைத் தவிர மற்றவர்களை பகிரங்கமாகக் சாடி வருகிறார்

ஆனால் கர்நாடகாவை சேர்ந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தெருத்தெருவாக பிரச்சாரம் செய்தார்.

இவரது கொள்கை குழிதோண்டி புதைக்கப்பட்டது.
இவரும் சந்தர்ப்பவாத அரசியல் வாதியே!

தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டி இடுகிறார்.

தமிழகத்தில் இவரை முதல்வராக்கினால் என்ன நடக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை .இவரது அடாவடி பேச்சுகளில் தெரியும்.

இ.யூ.மு.லீ.க
ம.நே.ம.க
எஸ்.டி..பி .ஐ
த.த.ஜ
போன்ற
சிறுபான்மை என்று சொல்லப்படுகிற இஸ்லாமிய கட்சிகள்
இவர்களுக்கு ஒரே எதிரி மதசார்புடைய பி.ஜே.பி என்பதாகும்.

பி.ஜே.பி யை எதிர்க்க எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்து தங்களுடைய அவ்வ போதைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

ஆனால்
இந்த கேவலமான கட்சி தவைவர்கள் தான் தமிழகத்தை ஆள நினைக்கின்றனர்.

இவர்கள் தங்களையும்  தங்கள் கட்சியையும்  வளர்த்து கொண்டு மாட மாளிகைகளுடன் சொகுசாய் வாழ்கின்றனர்.

இந்த கேவலமான வெக்கங்கெட்ட கூமுட்டை அரசியல் தலைவர்களை  கட்சி தொண்டர்கள் தலையில் வைத்து ஆடுகின்றனர்.

தங்கள் கட்சி தலைவன் என்ன சொல்கிறானோ அதுவே வேத வாக்காய் நினைக்கின்றனர்.

தலைவனுக்காக தங்கள் உயிரை கொடுக்கவும் தயாராக தொண்டர்கள் இருக்கின்றனர்.

இவர்கள் சாதி மத வாரியாக மக்களை பிரித்து அடிமை படுத்தி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளனர்.

ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கட்சி!

இந்து முஸ்லீம் கிறித்துவர் என மதங்களை பிரித்து அதற்கும் ஒரு கட்சி!

கடவுள் இருக்கிறார் என்பதற்கும் ஒரு கட்சி!

கடவுள் இல்லை என்பதற்கும் ஒரு கட்சி!

மத சார்பு கூட்டணி!
மதசார்பற்ற கூட்டணி!

மத சார்பற்ற கூட்டணியில் இருப்பவர்கள் எல்லாம் தங்கள் மதங்களை கொண்டாடாதவர்களா என்ன?

என்னங்கடா மக்களை கூமுட்டை ஆக்குறீங்க!

உங்களுக்கென்று சில சதவீத வாக்கு வங்கி இருப்பது என்பதினால் தலை கால் புரியாமல் ஆடுறீங்க?

எந்த கட்சியையும் சாராத மக்கள் வாக்களிக்க வராமல் உள்ளனர்.

இது உங்களின் பலம்.

தற்போது அரசியல் கட்சிகளில் எவனும் யோக்கியன் இல்லை!
ஒவ்வொருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல!

இது நாள் வரை மத்தியிலுய் மாநிலத்திலும் ஆண்ட ஆண்டு கொண்டிருக்கிற அவர்களுக்கு ஆதரவளித்து வரும் இந்த ஒட்டு மொத்த அரசியல் வாதிகளால் நாட்டில்
பஞ்சம்
பசி
பட்டினி
வறுமை
கொலை
கொள்ளை
பாலியல் வன்கொடுமைகள்
மது
லஞ்சம்
ஊழல்
ஒழிக்கப்பட வில்லையே ஏன்?

லஞ்சம் கொடுக்காமல் உங்கள் தேவைகள் ஏதேனும் நிறைவேறுகிறதா?

இவர்கள் எதையும் ஒழிக்க மாட்டார்கள்.

இவர்களின் தேர்தல் வாக்குறுதியினை நம்பாதீர்கள்!

இனி மேலும் இவர்களை நம்பி  வீண் போய் விடாதீர்கள் .

விரல் நுனியில் இருக்கும் வாக்கு என்னும் மாபெரும் சக்தியை சில நூறு  ரூபாய்க்கு விற்று விடாதீர்கள்.

வாக்களித்து விட்டு அழுது புலம்பாதீர்கள்!

ஒரு நல்ல ஆட்சியாளரை தேர்ந்தெடுப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை!

சிந்தியுங்கள்!
செயல் படுங்கள்!

எனதருமை இளம் வாக்காளர்களே நமது இந்திய தேசத்தின் வளர்ச்சி உங்கள் கைகளில் தான் இருக்கிறது.
மறந்து விடாதீர்கள்!

விரல் நுனியில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்!