Sunday 3 February 2019

ஊழல் ஒழிப்பு செய்தி ;0042 ஸ்ரீராமகிருஷ்ணா ஸ்வீட்ஸ் & கேக்ஸ் முறைகேடுகள்

ஊழல் ஒழிப்பு செய்தி : LAACO /0042 /2019 ;நாள் :07.02.2019

குற்றம் நடந்தது என்ன?

உண்மை சம்பவம் .

பேக்கரிகளில் உணவு பொருட்கள் வாங்கும் நுகர்வோர்களுக்கு மீண்டும் மீண்டும் LAACO வின்  எச்சரிக்கை!

குற்றவாளி யார்?

FBO - FOOD BUSINESS OPERATER
உரிமையாளர்
ஸ்ரீ ராமகிருஷ்ணா ஸ்வீட்ஸ் & கேக் ஷாப்
புதிய பேருந்து நிலையம் அருகில்
திருப்பூர்.

உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ் ஆப்பில் முத்து குமார் என்பவர் அனுப்பிய புகார் :

அய்யா வணக்கம்.
மிகவும் அவசரம்.

*ராமகிருஷ்ணா ஸ்வீட்ஸ் & கேக் ஷாப்*
26 A ,பி.என்.ரோடு
பி.எஸ்.என்.எல்  அலுவலகம் எதிரில்
புதிய பேருந்து நிலையம்
*திருப்பூர் -641 603*
திருப்பூர் மாவட்டம்.

குற்றச்சாட்டுகள் ;

*பூசனம் பூத்த கெட்டு போன பிரட் பாக்கெட்டுகள் விற்பனை*

50 க்கும் மேற்பட்ட பாக்கெட்டுகளில் 5 பாக்கெட் கெட்டு போய் உள்ளது.

ஒரு பாக்கெட் ₹30 ருபாய்க்கு விற்பனை!

*1.பேக்கிங் தேதி இல்லை*

2. *காலாவதி தேதி இல்லை*

3. *லாட் நம்பர் இல்லை*

4. *விற்பனை விலை இல்லை*

5. *எடை அளவு இல்லை*

6. *பேக்கிங் உரிமம் எண் இல்லை*

7. *Fssai உரிமம் இல்லை*

*8.தயாரிப்பு முகவரி இல்லை*

9 . *பாலித்தீன் கவர்  *பொட்டலம்*

தடை செய்யப்பட்ட .பாலித்தீன் கவர்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் எந்த ஒரு உணவு பொருட்களிலும் எந்த விபரமும் குறிப்பிடாமல் சட்ட விரோதமாக விற்பனை

உடனடியாக மேற்காண் கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யும் அனைத்து உணவு பொருட்களை பறிமுதல் செய்து  பாதுகாக்கக்கோருகிறோம் .
இணைப்பு :காணொளி

J.முத்துகுமார்
திருப்பூர்
01.02.2019

புகார் மீது திருப்பூர் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையினர் உடனடி நடவடிக்கை!

வரவேற்கிறோம் ..

Action taken report of Whatsapp complaint No.537/Feb bakery tpr /1

the Concern Area Food safety officer inspect
Sri Ramakrishna sweets and cakes,
Near New bus stand,
Opp.Bsnl.office,
P.N.Road, Tiruppur Corporation north.

The following details are:-

1) On inspection found  FBO have no valid fssai License.

2)On inspection found 5 packets of bread without label and fungus formation all are seized and destroyed.

Strictly  warned the fbo don't sale the bread packets  without label as per fssai norms.

3)On inspection found 4.5 lits.(3×1.5)expired Cool drinks seized and destroyed.

4)Tea dust are checked & no artificial colours found.

5) Found newspaper used for food packaging.

6).all are seized and destroyed.

7).Unhygenic conditions found inside the bakery& advice to maintain proper hygiene.

8).1Advisory notice issued to rectify the all defects immediately.

9). issued notice u/s 63 for not obtained fssai license and advised to maintain GHP.

DO, Tiruppur.

1.Fssai - Food Safty and Standards Authority Of India
உணவு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதற்கான உரிமம் இல்லை.

2. உணவு பாதுகாப்புத்துறையின் எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் பொட்டலம் செய்து விற்பனைக்கு வைத்திருந்த பூசனம் படிந்த கெட்டு போன ஐந்து பிரட் பாக்கெட்டுகள்  கைப்பற்றி அளித்துள்ளனர்.

3. காலாவதியான 1.5 × 3 = 4.5 லிட்டர் குளிர்பான பாட்டில்களை
கைப்பற்றி அளித்துள்ளனர்.

4.டீத்தூளில் கலப்பாடம் இல்லையாம்.

5. & 6 .செய்தி தாள்களில் உணவு பொருட்களை பயன் படுத்துவதினை கண்டறிந்து கைப்பற்றி அழித்துள்ளனர்.

7. & 8 பேக்கரி உள்புறம்  சுத்தம் இல்லாமல் சுகாதாரக்கேடு இருப்பதினை கண்டறிந்து உடனடியாக  சுத்தமாக .வைக்க அறிவுரை கூறி உள்ளனர்.

9. FOOD SAFTY AND STANDARD ACT 2006. Under Section 63 இன் கீழ் நோட்டீஸ் வழங்கி Fssai உரிமம் பெற்று சுத்தமான சுகாதாரமான  உணவு பொருட்களை மட்டும் தான் விற்பனை செய்ய வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

எவ்வளவு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்ற தகவல் வழங்க வில்லை.

பிரட்டை பொறுத்தவரைக்கும் முதியவர்களுக்கும் நோயாளிகளுக்கும் குழந்தைகளுக்கும் தான் வாங்கி கொடுக்கிறோம்.

எப்படியோ கெட்டு போன உணவு பொருட்களை விற்பனை செய்யாமல் தடுத்த கொஞ்சம் ஆத்ம திருப்தி.

கெட்டு போன உணவு பொருட்களை தெரிந்தே சட்ட விரோதமாக விற்பனை செய்யும் இவண் போன்றவர்களின் பேக்கரிகளுக்கு பொது மக்கள் யாரும் செல்லாமல் இருந்தால் மட்டுமே இவர்கள் திருந்துவார்கள்.

நண்பர்களே!

பேக்கரிகள்  ,ஹோட்டல்கள் மளிகை கடைகள் ,டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்  காய்கறி கடைகள் ,மாமிச கடைகள்  சாலையோர தள்ளு வண்டி கடைகள் போன்ற எந்த ஓரு உணவு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு நீங்கள் சென்றாலும் அவசர படாமல் கவனமுடன் பொருட்களை பரிசோதித்து வாங்குங்கள்.

பணம் கொடுத்து கெட்டு போன உணவு பொருட்களை வாங்கி பயன் படுத்தி பல்வேறு விதமான நோய்களை நாமே இலவசமாக பெறுகிறோம்.

உடல் ஆரோக்கி்யம்! அதுவே நமக்கு முக்கியம்!

பொட்டல விதி சட்டங்கள்
எடையளவு சட்டங்கள்
உணவு பொருட்கள் தரநிர்ணய சட்டங்களுக்கு எதிராக
சட்ட விரோதமாக  எவன் செயல் பட்டாலும் நமக்கு எதுக்கு வம்பு என கண்டும் காணாதது போல் ஒதுங்கி சென்று விடாதீர்கள்.

நீங்கள் ஒதுங்கி செல்வதால் தான்  இவர்களை கட்டு படுத்த முடிய வில்லை

வர்த்தகர்கள் என்ற பெயரில் சட்ட விரோதமாக செயல் பட்டு வரும்
.அந்த கயவர்களின் முகத்திரையை
கிழித்தெரியுங்கள்.

நீங்கள் அவர்களிடம் நேரடியாக சண்டை போட வேண்டாம்.

புகைப்படங்கள் வீடியோ ஆதாரங்களை சேகரித்து
TAMIL NADU FOOD SAFTY DEPARTMENT உணவு பாதுகாப்புத்துறை வாட்ஸ் ஆப் எண் : 94440 42322. புகாரினை அனுப்புங்கள் .

புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட விபரங்களை வாட்ஸ்ஆப் புகார் எண்ணுடன் உங்களுக்கு அனுப்புவார்கள் .

புகார் அளித்த நீங்கள் பயப்பட தேவை இல்லை.

உங்கள் இரகசியம் பாதுகாக்கப்படும்.

என்ன நண்பர்களே!

தயாராகி விட்டீர்கள் தானே?

சட்ட விரோதமாகவும்  சுத்தம் சுகாதாரம் இல்லாமலும்  பணம் ஒன்றே குறிக்கோளாய்  கொண்டும் நுகர்வோர் நலனில் அக்கறை  கொள்ளாமல் செயல் பட்டு வரும் உணவு பொருட்கள் தயாரிக்கும் விற்பனை செய்யும் அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் சுத்தம் செய்வோம்.
நலமுடன் வாழ்வோம்.

என்றென்றும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் .......!!

LAACO நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்.
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் .......

No comments:

Post a Comment