Saturday 16 February 2019

மயூரா பேக்கரி மீது உணவு பாதுகாப்பு துறையில் புகார்

மனுதாரர் ;
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
159/12,A சரவண பவனம்
தியாகி குமரன் புதுக்காலனி
4 வேலம்பாளையம்
திருப்பூர் -641 652
உலாபேசி :98655 90723

எதிர்மனுதாரர் :
உரிமையாளர்
மயூரா கேக் கார்னர்
எம்.ஆர்.காம்ப்ளக்ஸ்
கருமத்தம் பட்டி நால் ரோடு
கருமத்தம் பட்டி
கோவை மாவட்டம்
தொலைபேசி :0421 2336468

பெறுநர் :
வாட்ஸ்ஆப் புகார்
ஆணையர் அவர்கள்
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை
சென்னை.

அய்யா,

பொருள் ; உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்திற்கு எதிராக செயல் படுவதுடன் அதிகபட்ச விற்பனை விலையை விட குளிர்பானத்திற்கு கூடுதலாக இரண்டு ரூபாய் வசூலித்த எதிர்மனுதாரர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி  குற்றவிசாரணை முறை சட்டப்பிரிவு 2(ஈ) இன் கீழ் பொதுநல புகார் மனு ,

மேற்காண் முகவரியில் வசித்து வரும் மனுதாரராகிய நான் இந்திய அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு 51A (அ ) இன் கீழ் எனது கடமைகளை சிறப்புடன் ஆற்றி வரும் ஒரு இந்திய குடிமகன் ஆவேன்.

10.02.2019 அன்றைய தினம் நண்பர்களுடன் மேற்காண் எதிர் மனுதாரருடைய மயூரா கேக் கார்னர் நிறுவனத்திற்கு சென்றிருந்தோம்.

சாப்பிட்ட பொருட்களுக்கு பில் கேட்டு பெற்று கொண்டோம்.

பில் எண் குறிப்பிட வில்லை .
அதில் டீ 1 ₹ 10.00
பிஸ்கட் 1 ₹ 20.00
ஸ்பிரைட் 1 ₹ 16. 00
என ஆக மொத்தம் ₹46.00 ரூபாய் பெற்றனர்.

ஸ்பிரைட் MRP எவ்வளவு என கேட்டேன்.
விற்பனையாளர் தெரியாது எனக்கூறினார்.

MRP எவ்வளவு என தெரியாமல் எப்படி விற்பனை செய்கிறீர்கள் என்றேன்.
கூலிங் கூலிங் இல்லாமல் என கேட்டீர்களா என்றார்.

நான் கூல்டிரிங்ஸ் தான் கேட்டேன் என்றேன்.
அது உங்க தவறு என்கிறார்.

MRP ₹15 ரூபாய் என. மற்றொரு விற்பனையாளர்  ஒருவர் தெரிவித்தார்.

அப்படியானால் ₹1.00 ரூபாய் எப்படி அதிகம் வாங்குகிறீர்கள் என்றேன்.

கூலிங் சும்மா வராது
கரண்ட் பில் மாதம் ₹ 90 ஆயிரம் கட்டுகிறோம் .

அதனால் தான் கூடுதலாக வாங்குவதாக தெரிவித்தார்.

கோயம்புத்தூர் போய் கேட்டு பாருங்கள் எல்லோரும் கூடுதலாக தான் வாங்குகிறார்கள் என்றார் மற்றொரு விற்பனையாளர் .

கூடுதலாக பெறப்பட்ட பணம் திருப்பி கொடுக்க முடியாது என திட்ட வட்டமாக மறுத்து விட்டனர்.

அங்கு ஐந்துக்கும் மேற்பட்ட  விற்பனையாளர்கள்
அப்போது பணியில் இருந்தனர்.
அனைவரும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

உரிமையாளர் யார் என தெரிய வில்லை.

வேடிக்கை பார்த்த வாடிக்கையாளர் ஒருவர் ஒரு ரூபாய் தானே விட்டு விடுங்கள் என்றார்.
ஒரு ரூபாய் நீங்கள் தருகிறீர்களா என்றேன்.
நான் தருகிறேன் என்கிறார்.

மற்றொரு வாடிக்கையாளர்  டாஸ்மாக் சாராயக்கடையில் கோட்டர் பாட்டிலுக்கு  ₹10 ரூபாய் கூடுதலாக வாங்குகிறான் அவனிடம் போய் கேட்க வேண்டியது தானே என்கிறார்.

மற்றொரு வாடிக்கையாளர் நீங்கள் கேட்பது  100% சரி தான் என்ன செய்வது விடுங்கள் என்கிறார்.

சட்ட விரோதமாக கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து எந்த வாடிக்கையாளரும் கேள்வி கேட்பதில்லை.

மினி ஸ்பிரைட் பாட்டில் MRP ₹14.00 ரூபாய் தான்.
ஆனால் விற்பனையாளர் ₹15 ரூபாய் என பொய் சொல்லியதுடன் சட்ட விரோதமாக ₹2.00 ரூபாய் கூடுதலாக ₹16 ரூபாய் வசூலித்துள்ளார்.

குற்றசாட்டுகள் :

1.குளிர்பான பாட்டிலிற்கு அதிக பட்ச விற்பனை விலையை விட கூடுதலாக ₹2.00. ரூபாய் சட்ட விரோதமாக வசூலித்துள்ளார்கள்.

2.மயூரா கேக் கார்னர் என அச்சிடப்பட்டு விற்பனை செய்யும் பிரட் பாக்கெட்டுகளில் MRP குறிப்பிட படவில்லை.
லாட் எண் இல்லை..
சீல் வைக்கப்படாமல் ரப்பர் பைண்டு கொண்டு  கட்டப்பட்டுள்ளது.

3.பொட்டலங்களில் விற்பனை செய்யப்படும் எந்த ஒரு  உணவு பொருட்களில் Fssai விதிமுறைகள் ழுழுமையாக கடை பிடிக்க வில்லை.

4.வாடிக்கையாளர்களுக்கு உணவு பொருட்கள் தடை செய்யப்பட்ட செய்திதாள்களில் வழங்கப்படுகிறது.

5 .காலாவதியான பல வகையான உணவு பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோரிக்கை:

1.வாடிக்கையாளர் நலனில் அக்கறை இல்லாமல் உணவு பொருட்கள் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டங்கள் ,பொட்டல விதி சட்டங்கள், எடையளவு சட்டங்கள் போன்ற எந்த சட்ட விதிகளையும் விதிமுறைகளயும் கடை பிடிக்காமல் உணவு  பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்யும் நிறுவனம் முழுவதும் சோதனை செய்து தரமற்ற காலாவதியான உணவு பொருட்களை  பறிமுதல் செய்து உரிமையாளர் மீது சட்ட நட வடிக்கை மேற்கொண்டு  நுகர்வோர்களை பாதுகாக்கக்கோருகிறோம்.

2.கூடுதலாக வசூலிக்கப்பட்ட ₹ 2.00 ரூபாயினை திரும்ப பெற்று வழங்க கோருகிறோம்.

3.தரமற்ற உணவு பொருட்களின் விற்பனை   மற்றும் முறைகேடுகளை கண்டு பிடிக்க மேற்காண் நிறுவன கண்காணிப்பு கேமராக்களை பரிசோதிக்க வேண்டுகிறேன்.

4.சட்ட விரோதமாக கூடுதல் கட்டணம் வசூலித்ததுடன்  விற்பனையாளர்கள் அனைவரும் சேர்ந்து நுகர்வோராகிய என்னிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் மனவருத்தத்தையும் கொடுத்துள்ளது.
நீதி வேண்டி மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் முறையிட்டு நிவாரணம் பெற உள்ளேன்.

இணைப்பு : எதிர் மனுதாரர் வழங்கிய பில்  மற்றும் நிறுவன ஊழியர்கள் பேசிய காணொலி

நாள் :17.02.2019
இடம் : திருப்பூர்.

No comments:

Post a Comment