Sunday 3 February 2019

ஊழல் ஒழிப்பு செய்தி:0041 குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் வழக்குகள் முடித்து வைக்கப்படுவதேன்?

📢 *ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO 0041/2019; நாள்:04 02 .2019*

*குற்றம் நடந்தது என்ன*? 

*தமிழக காவல் துறையில் நடந்து கொண்டிருப்பது  என்ன*?

உண்மை சம்பவம்.

*கீழமை நீதிமன்றங்கள்  கடமை தவறி விட்டதா*?

*குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் வழக்குகள் எப்படி முடித்து வைக்கப்படுகிறது*?

*வழக்கு விசாரணை*!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் போது நீதிபதி  எம்.வி.முரளிதரன்  அவர்கள்
2009 முதல் 2014 வரை  ஐந்து ஆண்டுகளில் கீழமை நீதீமன்றங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் முடித்து வைக்கப்பட்டுள்ள வழக்குகள் எத்தனை என்பதினை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் கேட்டிருந்தார் .

உயர்நீதிமன்ற பதிவாளர் கீழமை நீதிமன்றங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி தகவல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

*அதில் 2,14,901 (இரண்டு இலட்சத்து பதினான்காயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று ) வழக்குகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் கீழமை    நீதிமன்றங்களில் முடித்து வைக்கப் பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்*.

அதிர்ந்து போன நீதிபதி அவர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

*காவல் துறையும் குற்றம் சாட்டபட்டவர்களும்*
*கைகோர்த்து வழக்கை முடித்து வைக்க காரணம் என்ன*?

*மாவட்ட குற்றவியல் நடுவர்களும் கடமையை சரிவர செய்ய வில்லை. மெத்தன போக்குடன் நடந்துள்ளனர் உயர்நீதிமன்றம் கண்டனம்*!

*காவல் துறையினர் குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் இத்தனை வழக்குகள் எப்படி முடிக்கப்பட்டன*?

*அப்படியானால் 2000 ஆம் ஆண்டில் இருந்து கணக்கிட்டால் சுமார் பத்து லட்சம் வழக்குகள் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யாமல் முடித்து வைக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக நீதிபதி பகிரங்க குற்றச்சாட்டு*!

*காவல் துறை டி.ஜி.பி யையும்  தமிழக அரசின் உள்துறை செயலாளரையும் தானே முன் வந்து  எதிர்மனுதாரர்களாக சேர்த்து 2019 ஜனவரி 25 ஆம் தேதிக்குள் முழுமையான விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவு*!!

இதற்கு அவர்கள் என்ன பதில் அளிக்க போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.

*காவல் துறையினரின் கடமைகள் என்னென்ன*?

*பாதிக்கப் பட்டவர்களின் புகாரினை பெற்று எவ்வாறு வழக்கு பதிவு செய்து புலன்  விசாரணை மேற்கொண்டு  குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய  வேண்டும்*?

*CrPc -149*

குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 149 இன் கீழ் காவல் அலுவலர் ஒவ்வொருவரும் கைது செய்வதற்குரிய குற்றம் ஒன்று நடைபெறும் முன்னர் அதனை தனது திறமை முழுவதினையும் இயன்ற வரையில் பயன் படுத்தி குறுக்கிட்டு  தடுக்கவோ  நிறுத்தவோ செய்ய வேண்டும்.

*CrPc-36*

குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 36 இன் கீழ் காவல் துறை கீழ்நிலை அதிகாரிகளின் வரம்பிற்குள்ளும்  குற்றம் நடைபெறாமல் தடுக்கும் முழு பொறுப்பு காவல்துறை மேல்நிலை அதிகாரிகளுக்கும் உண்டு.

*CrPc-37*

ஒரு குற்றவாளி தப்பித்து செல்வதை தடுத்திடவும் அமைதி குலைவை ஏற்படுவதினை தடுப்பதற்கும் இருப்புப்பாதை ,
கால்வாய் ,தந்தி அல்லது பொது சொத்து எதற்கேனும் எந்தவிதமான  சேதம் ஏற்படுவதினை தடுப்பதற்கும் குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 37 (அ) (ஆ) (இ) இன் கீழ் பொது மக்கள் குற்றம் நடைபெற்றது சம்மந்தமாக காவல் துறையினருக்கும் நடுவர்களுக்கும் உதவுதல் வேண்டும்.

*CrPc-39*

தண்டிப்பதற்குரிய குற்றம் எதுவும் நடந்தது அல்லது நடந்து கொண்டிருக்கிறது  அல்லது நடக்க இருப்பது பற்றி பொது மக்களுக்கு தெரிய வந்தால் உடனடியாக குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 39 இன் கீழ் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

*CrPc-2(ஈ)*

கைது செய்வதற்குரிய குற்றமொன்று செய்யப்பட்டிருப்பது பற்றிய எந்த ஒரு தகவலும் காவல் நிலைய பொறுப்பு அலுவலருக்கு குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 2(ஈ) இன் கீழ்  வாய்மொழியாக கொடுக்கும் போது அது அந்தந்த  அலுவலரோ அல்லது அவரின் உத்தரவின் படி எழுதப்பட்டு தகவல் கொடுத்தவருக்கு படித்து காட்ட வேண்டும்.

எழுத்து மூலமாக கொடுக்கப்படும் புகார் அல்லது தகவலாக இருந்தால்
புகார் கொடுத்தவர் அதில் கையொப்பம் இட வேண்டும் .

*CrPc -154(1)*

புகார் கொடுத்தவரின் புகாரின் தன்மைக்கு ஏற்ப. இந்தியத்தண்டனை சட்ட பிரிவுகளை குறிப்பிட்டு  குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 154(1) இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவரை  கைது செய்து  நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

*CrPc-154(2)*

முதல் தகவல் அறிக்கை நகல் ஒன்றினை குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 154(2) இன் கீழ் புகார் கொடுத்தவருக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

*CrPc-154(3)*

காவல் நிலையத்தில் புகாரினை பெற மறுக்கும்  போது குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 154 (3)இன் கீழ் மாநகர காவல் ஆணையர் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பதிவு அஞ்சலில் அனுப்பலாம். அவ்வாறு பெறப்படும் புகாரினை அந்தந்த காவல் அதிகாரியோ அல்லது அவரால் நியமிக்கப்படும் விசாரணை அலுவலரால் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

*CrPc-160(1)*

வழக்கு சம்மந்தமாக சாட்சிகளை  விசாரணை செய்ய வேண்டும் என்றால் குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 160 (1) இன் கீழ் அழைப்பாணை அனுப்பி காவல்  நிலையம்  வரவழைத்து  விசாரணை செய்ய வேண்டும்..

*CrPc-160(2)*

சாட்சி விசாரணைக்கு ஆஜராகும் நபர்களுக்கு ஏற்படும் நியாயமான செலவுகளை குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 160(2) இன் கீழ் வழங்க வேண்டும்.

*CrPc-161(1)*

வழக்கு சம்மந்தமாக விசாரணை அலுவலர்  சம்பவ இடம் சென்று சாட்சிகளை குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 161(1) இன் கீழ் வாய் மொழியாக விசாரிக்க வேண்டும்.

*CrPc-161(3)*

குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 161(3) இன் கீழ் சாட்சிகளின் வாக்கு மூலங்களை எழுத்து மூலமாக பதிவு செய்ய வேண்டும்.

*CrPc-162*

குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 162 இன் கீழ் காவல் நிலையங்களில் அளிக்கும் வாக்கு மூலங்களில் வாக்குமூலம் அளிப்பவர்கள்  கையொப்பம் இட தேவை இல்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கு விசாரணை முடிந்து குற்றம் நடைபெற்றதற்கான ஆதாரங்களையும் சாட்சி விசாரணை அறிக்கை  உள்ளிட்ட ஆவணங்களை இறுதியாக குற்ற பத்திரிக்கை தயார் செய்து காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

நீதிமன்றத்தில் வாதி பிரதிவாதி இரண்டு தரப்பினரையும் அழைப்பாணை அனுப்பி நேரில்  அழைத்து குற்றங்களுக்கு தகுந்தாற் போல்  பல கட்டங்களாக விசாரணை நடை பெற்று  முடிவில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு  குற்றவாளி என தீர்ப்பு வழங்கி  இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் அபராதமோ  சிறை தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்பட வேண்டும்.

*CrPc-155(1)*

புகார் அல்லது தகவல் கைது செய்வதற்கல்லாத  குற்றமாக இருந்தால் குற்றவிசாரணை முறைச்சட்டப்பிரிவு 155(1)  இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து புகார் அல்லது தகவல் கொடுத்தவரை நடுவரிடம்  அனுப்ப வேண்டும்.

*CrPc-155(2)*

குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 155 (2) இன் கீழ் காவல் துறையினர் கைது செய்வதற்கல்லாத வழக்கை விசாரணை செய்யக்கூடாது.அல்லது நடுவரின் கட்டளை இல்லாமல் அத்தகைய வழக்கை புலனாய்வு  செய்யக்கூடாது.

ஆனால்  பெரும்பாலும் புகார் கொடுப்பவர்களின் தகுதியினை பார்த்து தான் காவல் துறையினர் வழக்குகளை விசாரணை செய்கின்றனர்.

எதிரி சாமானியர் என காவல் துறையினர் கருதினால் அவர்களை உடனடியாக வரவழைத்து  இரண்டு பேர் மீதும் பிணையில் வராதபடி வழக்கு போட்டு உள்ளே தள்ளி விடுவோம் என மிரட்டி பணிய வைத்து புகாரினை முடித்து வைத்து சமரசம்  செய்து  அனுப்பி விடுகின்றனர். 

எதிரி செல்வாக்கு மிக்க அரசியல் வாதியாகவோ தொழில் அதிபர்களாக இருந்தால் காவல் துறையினர் அவர்களை தேடி செல்கின்றனர். அவர்களின் செல்வாக்கு மற்றும் பண பலத்தால் அவர்கள் மீது  வழக்கு பதிவு செய்யாமல் கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டு புகார் கொடுத்தவரை மிரட்டி பணிய வைத்து புகாரினை முடித்து வைக்கின்றனர்.

*CSR*

புகார் கொடுத்தவர் ரசீது கேட்டால் புகார் கொடுத்தவருக்கு CSR என்றழைக்கப்படும் புகார் மனு ஏற்பு ரசீது ஒன்று வழங்குவார்கள்.

இந்த ரசீது வழங்குவதே சட்ட விரோத செயல்.

இவ்வாறு வழங்கப்படும் புகார்மனு  ஏற்பு ரசீதுகளில் அன்றே /ஒரு வாரத்தில் /ஒரு மாதத்தில் என  ஏதாவது குறிப்பிட்டுள்ள நாட்களில் வழக்கு முடிக்க படுவதாக  தெரிவித்து அந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டு வருகின்றனர்.
இதில் 90 சதவீதம் புகார்தாரர்களுக்கு நீதி கிடைப்பதில்லை.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கோரி நீதிமன்றத்தில் குவியும் மேல் முறையீட்டு மனுக்களை பார்த்தாலே காவல் துறையினரின் கபட நாடகம் புரியும்

நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டும் ஒரு சில புகார் மனு ஏற்பு ரசீதின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது.

அதில் ஒரு சில முதல் தகவல் அறிக்கைகள் மட்டும் புலன் விசாரணை செய்து  குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

அனைத்து புகார் மனு ஏற்பு ரசீதுகளும் நிலுவையில் வைக்கப்பட்டு  நடவடிக்கை எடுக்கப்படாமலே முடித்து வைக்கப்படுகின்றன.

ஒரு சில புகார்களில் காவல் துறையினர்  அரசு வழக்கறிஞர்களின் சட்ட ஒப்புதல் பெற புகார் மனுவினை அவர்களுக்கு  அனுப்புகின்றனர்.
அவர் வழக்கு பதிவு செய்யலாம் ,வழக்கு பதிவு செய்யக்கூடாது  அல்லது நிறுத்தி வைக்கலாம். என தெரிவித்தால் அதன் படி நடந்து கொள்கின்றனர் .
இதனால் புகார்தாரர்களுக்கு நீதி திட்ட மிட்டு மறுக்கப்படுகிறது.

கைது செய்வதற்கல்லாத  குற்றங்களுக்கான புகார் மனுக்கள் குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 155 (1) இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பெரும்பாலான காவல் துறையினர் நடுவர்களுக்கு அனுப்புவதில்லை.

காவல் நிலையத்திலேயே இரு தரப்பினரிடமும் சமரச உடன்பாடு ஏற்படுத்தி எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி விடுகின்றனர்.

ஒரு சில புகார்களில் காவல் நிலையத்தில் வைத்து புகார்தாரர் அல்லது எதிரியை அடிப்பது மிரட்டுவது  ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்வது உள்ளிட்ட செயல்களை ஒரு சில காவலூழியர்கள் சட்ட விரோதமாக செய்து வருகின்றனர்.

இது போன்ற செயல்கள் மனித உரிமை சட்டத்திற்கு எதிரான செயலாகும்.

சிவில் வழக்குகள், பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமான புகார்களை காவலூழியர்கள் விசாரணை செய்யக்கூடாது எனத்தெரிந்தே சட்ட விரோதமாக விசாரணை செய்கின்றனர்.

அப்படியானால் நீதிமன்றம் தேவை இல்லையே?

பாதிக்கப் பட்ட நிரபராதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டது.

கூலிக்கு மாரடிக்கும் இடைத்தரகர்களான வழக்கறிஞர்கள் என்ற பொய்யர்களால் நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

*ICA-227*

இந்திய அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு 227 இன் கீழ் கீழமை நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் கடமை உயர் நீதிமன்றத்திற்கு உண்டு.

அவர்கள் முறையாக கண்காணித்திருந்தால் இது போன்ற செயல்களை தடுத்திருக்க முடியும்.

அப்படியானால் உயர்நீதிமன்றமும் கடமை தவறி விட்டதா?

குற்ற விசாரணை முறைச்சட்டப்பிரிவு 154 (1) இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த வழக்குகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் மாவட்ட நீதிமன்றங்கள் மூலம் ஐந்து ஆண்டுகளில் 2,14,901 வழக்குகள் காவல் துறையும் குற்றம் சாட்டப்பட்டவர்களும்  சேர்ந்து முடித்து வைக்கப்பட்டுள்ள செய்தி நமக்கு  மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

இதற்கு மாவட்ட குற்றவியல் நடுவர்களும்  உடந்தையாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

காவல் துறையினரே சட்டத்தை மீறி இருப்பது வேலியே பயிரை மேய்ந்த  கதையாக உள்ளது.

போக்கு வரத்து காவல் அல்லாத சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர்கள் ,சிறப்பு உதவி ஆய்வாளரகள்  வாகன சோதனை என்ற பெயரில் அறிவிப்பு  நோட்டீஸ் மட்டும் வழங்கி ஸ்பாட்பைன் ரசீது வழங்காமல் அபராதங்களை சட்ட விரோதமாக  வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் போலியான அறிவிப்பு நோட்டீசுகளும் அடங்கும்.

காவல் ஆய்வாளரால் கையொப்பம் இட்ட ஸ்பாட்பைன் ரசீதுகளில் காவல் உதவி ஆய்வாளர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர்கள்  சட்ட விரோதமாக அபராதம் வசூலிக்கின்றனர்.

விதி மீறும் வாகனங்களை கைப்பற்றி காவல்நிலையம் கொண்டு சென்று வழக்கு பதிவு செய்யாமல் இருச்சக்கர வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தி பேரம் பேசி வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அனைத்து பெட்டி கடைகள் ,மளிகை கடைகள் ,பேக்கரிகளில் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறதே? 

காவல் துறையினரால் இதனை தடுத்து நிறுத்த முடிய வில்லையே ஏன்?

டாஸ்மாக் அரசு மதுபான பார்களில் 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு திருட்டு தனமாக விற்பனை செய்யப்பட்டு வரும்   மது விற்பனையை தடுத்து நிறுத்த முடிய வில்லையே ஏன்?

கொலை கொள்ளை கற்பழிப்பு திருட்டு வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுடன் கீழ்நிலை  காவலூழியர்  முதல் உயர் அதிகாரிகள் வரை கைகோர்த்து செயல் படும் நிகழ்வுகள் தொடர்ந்து செய்தி தாள்களில் வருவது காவல் துறையினர்  மீது பொது மக்களுக்கு நம்பக தன்மையை இழந்து வருகிறது.

லஞ்சம் வாங்கும் கடமை தவறிய காவலூழியர்களை பணி நீக்கம் செய்து நேர்மையான காவலூழியர்களை நியமிக்க வேண்டும்.

*கடமை கண்ணியம் கட்டுப்பாடு என நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் முக்கிய பொறுப்பு வகிக்கும் காவல் துறையில் கடமை தவறும் பெரும்பாலான காவலூழியர்களால் இது போன்ற செயல்கள் நடை பெறுவதின் மூலம் ஒட்டு மொத்த காவல்துறையும் கண்ணியம் இழந்து நிற்பது மிகுந்த வேதனை அளிக்கிறது*

நேர்மையான காவல் துறை அதிகாரிகளால் தான் தமிழக காவல்துறையை  மீட்டெடுக்க முடியும்.

குறிப்பு ; நாம் மேலே குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் காவலூழியர்களினாலும் வழக்கறிஞர் களினாலும் பாதிக்கப்பட்டவர்கள்  கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே செய்தி வெளியிடுகிறோம்.
💥💥💥💥💥💥💥💥💥💥💥
✍ LAACO *நாஞ்சில் கோ.கிருஷ்ணன்*
செய்தியாளர்
*ஊழல் ஒழிப்பு செய்தி*
*மாத இதழ்*
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் .........!

No comments:

Post a Comment