Saturday 25 August 2018

ஸ்ரீ குரு ஸ்டோர் ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை!

திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல அலுவலக உதவி ஆணையர் வாசுகுமார் அவர்களின் கவனத்திற்கு!

மாநகராட்சி கழிவுநீர் கால்வாய் மீது  சட்ட விரோதமாக கட்டப்பட்டு போக்குவரத்திற்கு பொது இடையூறு ஏற்படுத்தி வரும்  ஆக்கிரமிப்பினை அகற்ற கோரிக்கை!

அய்யா வணக்கம்.

தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அனுமதி பெற்று கட்டப்பட்டு வரும் பெரும் பாலான கட்டிடங்கள்  மாநகராட்சி விதிமுறைகளுக்கு எதிராக ஒரு இன்ச் காலி இடம் கூட விடாமல்  கட்டப்பட்டு வருகிறது.

இதனை கண்காணிக்க வேண்டிய பொறியாளர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு மாநகராட்சி விதிகளுக்கு எதிராக செயல் பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் மாநகராட்சி 7 ஆவது வார்டு  ஸ்ரீநகர் மாஸ் கார்னர் பேக்கரி எதிரில் மூன்று குறுகிய சாலை சந்திப்பில் தரை தளம் மற்றும் இரண்டு மேல் தளங்களுடன்  மாநகராட்சி விதிகளுக்கு எதிரான வகையில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் ஸ்ரீ குரு ஸ்டோர்ஸ் என்ற மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடை செயல் பட்டு வருகிறது .

மாநகராட்சி கழிவு நீர் கால்வாயின் மீது கட்டிடத்தினை விரிவு படுத்தி கட்டி முழுமையாக  ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள்.

வாடிக்கையாளர்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி  செல்வதால்  மூன்று சாலைகள் சந்திக்கும் குறுகிய திருப்பத்தில் போக்குவரத்திற்கு மிகுந்த பொது இடையூறினை தெரிந்தே திட்ட மிட்டு ஏற்படுத்தி வருகிறார்கள்.

சட்ட விரோதமாக கட்டப்பட்ட இந்த கட்டிடம் மாநகராட்சி அனுமதி பெற்று கட்டப்பட்டதாக தெரிய வில்லை .

இந்த கட்டிடத்திற்கு வரி விதிப்பு செய்த கடமை தவறிய மாநகராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.

எனவே தாங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக கழிவு நீர் கால்வாயின் மீது இரு புறமும் கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு முழுவதினையும்  அகற்ற உடனடியாக  நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
உலாபேசி :98655 90723

No comments:

Post a Comment