Thursday 2 August 2018

ஊழல் ஒழிப்பு செய்தி; 0028 போக்குவரத்து குற்றங்கள்.

ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO/0028/
08 08.2018

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

உண்மை சம்பவங்கள்!

திருப்பூர்  மாநகர காவல் ஆணையர் மற்றும்  திருப்பூர் மாவட்ட. காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு ஓர் அவசர அவசிய  வேண்டுகோள்!

முடக்கி வைக்கப்பட்டுள்ள "போஸ்ட் டிராபிக் வயலேசன் "
POST TRAFFIC VIOLATION என்ற வாட்ஸ் ஆப் குரூப்பினை மீண்டும் செயல் படுத்த கோருகிறோம்.

திருப்பூர் மாநகரில் பெருகி வரும் போக்குவரத்து குற்றங்களையும், போக்குவரத்து விதிமீறல்களையும் தடுப்பதற்காக போக்குவரத்து காவலூழியர்கள், அனைத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்களை கொண்ட "போஸ்ட் டிராபிக் வயலேசன்" என்ற வாட்ஸ் ஆப் குரூப்பினை  முன்னாள் மாநகர காவல் ஆணையர் அவர்களின் முயற்சியால் செயல் படுத்தப்பட்டது.

போக்குவரத்து குற்றங்கள் போக்குவரத்து விதிமீறல்கள் ,விபத்துகள்  குறித்து பொது மக்கள் அந்தந்த  வாகனங்களின் பதிவு எண் ,புகைப்படம், வீடியோ உள்ளிட்ட  ஆதாரங்களை புகாராக இந்த குரூப்பிற்கு அனுப்பி வந்தார்கள்.

புகாருக்குள்ளான அந்தந்த  வாகனங்களின் பதிவு எண்களை கொண்டு  வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் கண்டு பிடித்து அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ததுடன் நோட்டீஸ் அனுப்பி அபராதம் வசூலித்து
வந்தனர் .

இந்த குரூப்பின் செயல் பாடுகள் எவ்வாறு உள்ளது  என்பது குறித்து போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஒருவரிடம் கேட்ட போது
₹ 2,50,000 ரூபாய்க்கு மேல் அபராதம் விதித்துள்ளதாகவும் போக்குவரத்து குற்றங்கள் ஓரளவு இதன் மூலம் குறைந்து வந்துள்ளதாகவும் ஆனால் வாட்ஸ் ஆப் குரூப்பினை கண்காணிக்க காவலூழியர் இல்லாததினால் வாட்ஸ் ஆப் குரூப் தற்பொழுது முடக்கி  வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

இது நமக்கு மிகுந்த பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பல லட்சக்கணக்கான பின்னலாடை தொழிலாளர்களையும் ,பல்லாயிரக்கணக்கான வாகனங்களையும் போக்குவரத்திற்கு இடையூறான குறுகிய சாலைகளையும் கொண்டது தான் திருப்பூர் மாவட்டம்.

இங்கு போக்குவரத்து குற்றங்களும் விதிமீறல்களும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

இதனை கட்டுப்படுத்துவது போக்குவரத்து காவல்துறையினரின் தலையாய கடமையாகும்.

போக்குவரத்து விழிப்புணர்வு வாரவிழா கொண்டாடும் இத்தருணத்தில்  முடக்கி வைக்கப்பட்டுள்ள "போஸ்ட் டிராபிக் வயலேசன்" என்ற வாட்ஸ் ஆப் குரூப்பினை விரைந்து  செயல் படுத்த வேண்டுகிறோம்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடை பெற்று வந்து கொண்டிருக்கும் கீழ் காணும் போக்குவரத்து குற்றங்களையும் போக்குவரத்து விதிமீறல்களையும் போக்குவரத்து இடையூறுகளையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

01. இருச்சக்கர வாகன விற்பனையாளர்கள் அனைவரும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் புதிய வாகனங்களை விற்பனை செய்த அன்றே காப்பீடு செய்யாமலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யாமலும் பொது சாலையில் இயக்க அனுமதிக்கின்றனர்.

02.இது மோட்டார் வாகன சட்டப்படி குற்றம் என தெரிந்த பின்னரும் பொதுச்சாலைகளில் இயக்கப்பட்டு   காலதாமதமாக வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள்  பதிவு செய்து வழங்கி வருகிறார்கள் .

03.வாகனங்களை பதிவு செய்யப்படாமல் பொது சாலையில் இயக்கினால் விற்பனையாளரின்
T C R என்றழைக்கப்படும்  வணிக சான்றினை (Trade Certificate )ரத்து செய்ய வேண்டும். ஆனால் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அவ்வாறு செய்வதில்லை!

04. TVS ஜுபிடர் ரெட் என்ற புதிய இருச்சக்கர வாகனத்தினை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து விற்பனை செய்யாமல் வாடிக்கையாளருக்கு பொது சாலையில் இயக்க அனுமதி அளித்த   திருப்பூர் TVS பாரத் ஆட்டோஸ் நிறுவனத்தின் வணிக சான்றினை ரத்து செய்தும் அதற்கு துணை போன திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுரு நாதன் அவர்களை பணி  இடமாற்றம் செய்யவும் பெரு முயற்சி எடுத்து வெற்றி பெற்றுள்ளோம்.

காண்க: ஆனால் சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக அந்த வாகனம் பதிவு செய்யப்படாமல் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

05. திருப்பூரில் செயல் பட்டு வரும் KRR RABA HONDA நிறுவனம் வாகன பதிவு செய்யாமல் விற்பனை செய்து பொதுச்சாலையில் இயக்க அனுமதி அளித்த இருச்சக்கர வாகனம்  குறித்து ஆதார பூர்வமாக புகார்தாரர் ஒருவர் புகார் அளித்த பின்பும் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ரஜினிகாந்த் அவர்கள் நடவடிக்கை எடுத்து வணிக சான்றினை ரத்து செய்ய முன் வரவில்லையாம் .

06. இது சம்பந்தமாக புகார்தாரர் திருப்பூர் வடக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன் அவர்களிடம்  புகார் தெரிவித்த போது ஆய்வாளர் ஆவர்கள் நேரில் சென்று  இருச்சக்கர வாகனத்தினை பதிவு செய்து தான் பொதுச்சாலையில் இயக்க  வேண்டும் என எச்சரிக்கை செய்து விட்டு அபராதம் எதுவும் விதிக்காமல் சென்று விட்டதாக தகவல்.

வெறும் எச்சரிக்கை செய்தால் மட்டும் போதுமானதா?

வாகனங்களை பதிவு செய்யாமலும் காப்பீடு செய்யாமலும்  விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீதும் பொது சாலைகளில் வாகனங்களை இயக்குபவர்கள் மீதும் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?

காண்க: சட்ட விரோதமாக செயல் பட்டு வரும் KRR RABA KONDA உரிமையாளரின் மோசடி குறித்து புகார் செய்யப்பட்டு அனுப்பர் பாளையம் காவல் நிலையத்தில் புகார் நிலுவையில் உள்ளது.
இதில் கடமை தவறிய ஒன்பது காவலூழியர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

07. மாவட்டம் முழுவதும் செயல் பட்டு வரும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்து வழங்கப்பட்ட அனைத்து வாகன பதிவு சான்றுகளையும் ,காப்பீட்டு சான்றுகளையும் ஆய்வு செய்து விற்பனை செய்த தேதியில் இருந்து  காலதாமதமாக பதிவு செய்த குற்றத்திற்காக அந்தந்த வாகன விற்பனையாளர்களின் வணிக சான்றினை ரத்து செய்தும் கடமை தவறிய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆவண  செய்யக்கோருகிறோம்.

08.ஓட்டுநர் உரிமம் பெற வயது தகுதி இல்லாத தனியார் பள்ளி மாணவ மாணவிகள் இருச்சக்கர வாகனங்களில் பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர்.

09. பள்ளி மாணவி ஒருவர் இருச்சக்கர வாகன விபத்தில் சிக்கி உயிர் பலி ஆனதை தொடர்ந்து முன்னாள் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாணவர்கள் இருச்சக்கர வாகனத்தில் பள்ளிகளுக்கு வர தடை விதித்தனர்.

10. இதனை ஒருசில பள்ளிகள் மட்டும் கடை பிடித்து வருகிறது.

பள்ளி வளாகத்திற்குள் வாகனங்களை அனுமதிக்காத போதும் மாணவர்கள் பள்ளியின் சுற்று பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

காண்க: சிறுபூலுவப்பட்டி ரிங்ரோடு அமர்ஜோதி கார்டன் ஜெய்சாரதா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி

எனவே மாணவர்களின் நலனில் அக்கறை எடுத்து காலை 8.00 மணி முதல் 9.30 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் அனைத்து தனியார் பள்ளிகளையும் கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க கோருகிறோம்.

11. அரசு அலுவலகங்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள் , தொழிற்சாலைகளில் பணி புரியும் பெரும்பாலானோர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கி வருவதாக தெரிய வருகிறது.

12. காப்பீடு செய்யப்படாமல் பல வாகனங்கள் பொதுச்சாலையில் இயக்கப்பட்டு வருகிறது.

13. காலாவதியான பழைய வாகனங்கள் புகை பரிசோதனை செய்யாமல் அதிக அளவில் காற்றினை மாசு ஏற்படுத்தி வருவதினை காண முடிகிறது.

14. செல் போன் பேசிக்கொண்டு போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் இயக்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது.

15. காவலூழியர்கள் இல்லாத போக்குவரத்து சிக்னல்களை  மதிக்காமல்  வாகனங்களை இயக்குகின்றனர்.

16. போக்குவரத்து சிக்னல்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தினமும் ஆய்வு செய்து விதி மீறும் வாகன ஓட்டிகள் மீது அபராதம் விதிக்க வேண்டுகிறோம்

காண்க: அவிநாசிசாலை காந்திநகர் சிக்னல்

17. வாகன பதிவு சான்றுகள் இல்லாமலும் பெர்மிட்  காலாவதியான பல வாகனங்கள் பொது சாலைகளில் இயக்கப்பட்டு வருவதாக தகவல்.

18.தலைக்கவசம் சீட்பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்குபவர்களையும் அன்றாடம் காண முடிகிறது.

20. ஷேர் ஆட்டோக்கள் ,பேருந்துகள் மினி பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையினை விட கூடுதல் பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

21. சரக்கு வாகனங்களில் தொழிலாளர்களையும் பயணிகளையும் ஏற்றி செல்கின்றனர்.

22. சரக்கு வாகனங்களில் விபத்து ஏற்படுத்தும் வகையில் கூடுதல் பாரம் ஏற்றி செல்கின்றனர்.

23. பயணிகள் சொகுசு பேருந்துகள் மற்றும்  வாகனங்களில் அளவுக்கு அதிகமான  சரக்குகள் ஏற்றி செல்கின்றனர்.

24. ஆட்டோக்கள் வேன்கள் பள்ளி சிற்றுந்துகள்  பள்ளி பேருந்துகளில் அதிகமான மாணவர்களை ஏற்றி செல்கின்றனர்.

25. அனைத்து இருச்சக்கர வாகன நிறுத்துமிடங்களில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து அதன் உரிமையாளர் விபரங்களை கண்டு பிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுகிறோம்.

26. மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களினால் பல விபத்துகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.

27. அரசு மதுபான கடைகளில் செயல் படும் பல பார்களில் வாகன பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தி உள்ளனர்.
இங்கு மது அருந்தி விட்டு செல்பவர்கள் பொது சாலைகளில் தானே வாகனங்களை இயக்குகின்றனர்.
இதற்கு பொறுப்பு வகிப்பது யார்?

28. அரசு மதுபானக்கடைகளுக்கு வரும் குடிமகன்கள் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

29. வணிக வளாகங்கள் ,பல்பொருள் அங்காடிகள், வங்கிகள் பேக்கரிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பார்க்கிங் வசதிகள் செய்யப்படாத காரணத்தினால் வாகனங்களை சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக  நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல்கள் அன்றாடம் ஏற்பட்டு வருகிறது .

காண்க : திருப்பூர் அவிநாசிசாலை பெரியார் காலனி பேருந்து நிறுத்தத்தில் சட்ட விரோதமாக போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும்  மிகுந்த  இடையூறாக செயல் பட்டு வரும் கணேஷ் டிப்பார்ட் மெண்ட் ஸ்டோர்

30. சட்ட விரோதமாக கட்டப்பட்டு் நிரந்தரமாக செயல் பட்டு வரும் பின்னலாடை சேர்ந்த பல தொழிற்சாலைகளில்  வாகனங்கள் நிறுத்தும் வசதிகள்  செய்யாத காரணத்தினால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் வாகனங்கள் அனைத்தும் பொது சாலைகளில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்திற்கு நிரந்தர இடையூறுகளும் பொது தொல்லைகளும் தினமும் ஏற்பட்டு வருகிறது.

31.பின்னலாடை தொழிற்சாலைகளுக்கு சரக்கு இறக்கி ஏற்றி செல்லும் கண்டெய்ணர் வாகனங்கள் உட்பட அனைத்து  வாகனங்களும் பொது சாலைகளை ஆக்கிரமித்து போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள்.

32. போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு உடனடி அபராதம் விதிக்க கோருகிறோம்.

33.நிலத்தடி நீரினை ஆழ்துளாய் கிணறுகள் மூலம் உறிஞ்சி சட்ட விரோதமாக விற்பனை செய்து வருபவர்களினால் தண்ணீர் பிடித்து செல்லும் லாரிகள் பல சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றார்கள் .

காண்க : 4 வேலம்பாளையம் பிரதான சாலை அப்பன் என்கிற சுப்பிரமணி
வேலம் பாளையம் காவல் நிலையத்தில் புகார் நிலுவையில் உள்ளது.

34. வாகன நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தாமல் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்த ,ஊராட்சிகள் ,நகராட்சிகள் மாநகராட்சி ,உள்ளூர் திட்டக்குழுமத்தை சேர்ந்த  கடமை தவறிய அதிகாரிகள் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்ப வேண்டும்.

35. கட்டிட வேலைகள் செய்பவர்கள் கட்டுமான பொருட்களை சாலைகளில் கொட்டி போக்குவரத்திற்கு பொது இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள்.

36.கட்டிட கழிவுகள் சாலைகளில் கொட்டப்பட்டு பல ஆண்டுகளாக சுத்தம் செய்யாமல் போக்குவரத்திற்கு இடையூறு செய்து வருகின்றனர்.

37. வர்த்தக நிறுவனங்கள் ,வணிக வளாகங்கள்  தொழிற்சாலைகளுக்கு முன்பாக சாலைகளில் ஆக்கிரமித்து போடப்பட்ட கட்டுமானங்கள் விளம்பர பலகைகள் அனைத்தையும் நெடுஞ்சாலைத்துறையினர், மாநகராட்சி ,வருவாய் துறையினருடன் இணைந்து அப்புற படுத்த வேண்டும்.

38.மாநகராட்சி குப்பை தொட்டிகளை சாலைகளில் இருந்து அகற்றி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வைக்க வேண்டும்.

39.போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் கண்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களை காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரையிலும் மாநகர எல்லைக்குள் அனுமதிக்க கூடாது.

40. அனுமதி இல்லாமல் போக்குவரத்திற்கு  இடையூறாக வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியினர், வர்த்தகர்களின் விளம்பர பலகைகள் அனைத்தையும் அப்புற படுத்த வேண்டும். அனுமதி இல்லாமல் விளம்பர பலகைகள் வைப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

41.காவலூழியர்கள் வாகன பரிசோதனை செய்வதினை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத இடங்களில் மேற்கொள்ள வேண்டும்.

42. போக்குவரத்து சிக்னல்கள் அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தங்களை அப்புற படுத்த வேண்டும்.

காண்க: அவிநாசி சாலை ஸ்ரீநிவாசா தியேட்டர்.

43.பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தாமல் சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி விடும் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

44.போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாடகை கார்கள், ஆட்டோக்கள், வேன்கள்  வாகன நிறுத்துமிடங்களை அப்புற படுத்த வேண்டும்.

காண்க: பெரியார்காலனி பேருந்து நிறுத்தம் அருகில்

45. விபத்து ஏற்படுத்தும் வகையில் பழுது ஏற்பட்டுள்ள சாலைகள் அனைத்தையும் செப்பனிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

46.பயணிகள் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிப்பதினை கண்காணிக்க வேண்டும்.

47.பெரும்பாலான மினிடோர் உள்ளிட்ட வாடகை வாகனம் ஓட்டுநர்கள் பேட்ஜ் இல்லாமல் வாகனங்களை இயக்கி வருவதாக தகவல்.

48.பள்ளி பேருந்துகளில் நடத்துநர் உரிமம் உள்ளவர்களை தான் நடத்துநர்களாக பணி அமர்த்த வேண்டும் என்ற அரசாணையை அமல் படுத்த வேண்டுகிறோம்

மேற்காணும் இந்த குற்றங்கள் விதிமீறல்கள் அனைத்தும் தங்களுக்கு தெரியாமல் நடைபெற்று வருவதாக கருதி விட முடியாது .

போக்குவரத்து குற்றங்கள் முற்றிலும் குறைய வேண்டுமானால்  குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாகுபாடு பார்க்காமல் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்தே ஆக வேண்டும்.

போக்குவரத்து காவலூழியர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதினால் போக்குவரத்து குற்றங்களை பொதுமக்கள் தெரிவிக்க "போஸ்ட் டிராபிக் வயலேசன் "என்ற வாட்ஸ் ஆப் குரூப்பினை மீண்டும் செயல் படுத்தி அந்த எண்ணிணை பொது மக்கள் அறியும் வண்ணம் தெரிய படுத்த வேண்டுகிறோம்.

சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பணியில் ................!!
அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு 19(1) அ இன் கீழ் பொது நலன் கருதி வெளியிடுவோர் ...........!!

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர். 641 652
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும் ......

No comments:

Post a Comment