Wednesday 2 May 2018

சட்ட விரோதமாக செயல் பட்டு வரும் திருப்பூர் AMR கேபிள் நெட் ஒர்க் கேபிள் ஆப்பரேட்டர் மோகன் ராஜ்!

திருப்பூர் மாவட்ட கேபிள் தாசில்தார் பொ.ஜெய்சிங் அவர்களின் கவனத்திற்கு!

திருப்பூர் மாவட்டம் முழுவதும் கேபிள் ஆப்பரேட்டர்கள் மாத சந்தா ₹ 100 ₹130 என கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள்.

அரசு செட்டாபாக்ஸ் வழங்காமல் தனியார் செட்டா பாக்ஸ் இணைப்பு கொடுத்து வருகின்றனர்.

அரசு செட்டாபாக்ஸ் இணைப்புக்கும் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் AMR கேபிள் நெட்ஒர்க் அரசு கேபிள் டி.வி ஆப்பரேட்டர் மோகன் ராஜ் என்பவர் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக பல புகார்கள் வரப்பெற்றுள்ளது.

அந்த வகையில் ராம் குமார் என்ற சந்தாதாரரிடம் இருந்து மாத சந்தா ₹100 வசூலித்து வந்துள்ளார்.
அரசு செட்டாபாக்ஸ் இணைப்பு வழங்கவும் மறுத்துள்ளார்.

தனியார் செட்டாபாக்ஸ் வாங்க மறுத்த காரணத்தினாலும் தங்களுக்கு புகார் அளித்த காரணத்தினாலும் இரண்டு  மாத சந்தா தொகையினை பெற்றுக்கொள்ளாமல் அவரது கேபிள் இணைப்பிணை துண்டித்துள்ளார்.

எனவே மீண்டும் இணைப்பு வழங்கவும் புகார் கடிதத்துடன் இரண்டு மாத சந்தா தொகை ₹140 க்கான வங்கி வரையோலையை அரசு கேபிள் டிவி நிறுவத்தின் பெயரில் எடுத்து தங்களுக்கு அனுப்பி உள்ளார்.

இந்நிலையில் தங்களின் உத்தரவு படி மீண்டும் துண்டிக்கப்பட்ட இணைப்பிணை கொடுத்துள்ளார்.

ஆனால் தாங்கள் அரசு கணக்கில் எடுக்கப்பட்ட வங்கி வரையோலையை கேபிள் ஆப்பரேட்டருக்கு திருப்பி அனுப்பி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அரசு கணக்கில் செலுத்தப்பட்ட வங்கி வரையோலை  பணத்தினை கேபிள் ஆப்பரேட்டர் பெயரில் எப்படி வரவு வைக்க முடியும்?

அராஜகத்தின் உச்ச நிலையில் இருக்கும் மேற்காண் கேபிள் ஆப்பரேட்டர் புகார்தாரரின் கடையின் கேபிள் இணைப்பிணையும் துண்டித்துள்ளார்.

இன்று மீண்டும் அவரது வீட்டு இணைப்பிணையும் துண்டித்துள்ளார்.

புகார்தாரர்  உரிய நிவாரணம் வேண்டி தங்களிடம் தானே முறையிடுவார்.

மேற்காண் கேபிள் ஆப்பரேட்டர் மோகன் ராஜ் பல ஆயிரக்கணக்கான கேபிள் இணைப்புகளை அரசுக்கு தெரிவிக்காமல் சட்ட விரோதமாக கொடுத்துள்ளார்.

இதனால் அரசுக்கு மிகுந்த வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருகிறார்.

எனவே தாங்கள் AMR கேபிள் நெட் ஒர்க் மூலமாக கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கேபிள் இணைப்புகளையும் நேரில் ஆய்வு செய்து முறைகேடாக கொடுக்கப்பட்டுள்ள அனைத்து இணைப்புகளையும் கண்டறிந்து அரசுக்கு ஏற்பட்டு வரும் இழப்பீட்டினை தடுத்து நிறுத்த கோருகிறோம்.

இன்று தாங்கள் புகார்தாரரையும், கேபிள் ஆப்பரேட்டரையும் 3.00 மணிக்கு விசாரணைக்கு வர சொல்லி உள்ளீர்கள் .

அரசு கேபிள் இணைப்பு பெற்றுள்ள சந்தாதாரரை அலைகழிக்க காரணம் என்ன?

₹100 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலித்து சட்ட விரோதமாக செயல் படும் கேபிள் ஆப்பரேட்டர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது எதனால்?

புகார்தாரருக்கு உரிய நிவாரணம் பெற்று தருவதுடன் சட்ட விரோதமாக செயல் பட்டு  வரும் கேபிள் ஆப்பரேட்டரின் உரிமத்தினை ரத்து செய்து அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஆவண செய்யக்கோருகிறோம்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி : 98655 90723
03.05.2018

No comments:

Post a Comment