Wednesday 2 May 2018

சட்ட விரோதமாக செயல் பட்டு வரும் திருப்பூர் சுபம் மருத்துவமனை!

📢 *ஊழல் ஒழிப்பு செய்தி* : 025 /03.12.2017
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞
*குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன*?

*நெஞ்சை உறைய வைக்கும் உண்மை சம்பவங்கள்*!!

*குற்றவாளி யார்*?

*எச்சரிக்கை*!!

*திருப்பூர் சுபம் மருத்துவமனைக்கு செல்கிறீர்களா*?

*இரத்த வகையை மாற்றி கொடுக்கும் மருத்துவர்*!

*பிணத்தை பார்க்காமலே இறப்பு சான்று வழங்கும் மருத்துவர்*!!

*பணம் ஒன்றே இவரது குறிக்கோள்*!

கவனம்!
😡😡😡😡😡😡😡😡😡😡😡
*திருப்பூர் பெரியார் காலனியில்  சட்ட விரோதமாக செயல் படும் சுபம் மருத்துவமனை*!

இதன் நிர்வாக இயக்குநர் மருத்துவர் S.சந்திரசேகர் M D
முன்னர் இ.எஸ்.ஐ மருத்துவராக பணி ஆற்றியவராம்!

தற்பொழுது திருப்பூர் மாநகர காவல் துறையினருக்கு (A.R Dpt  ) வைத்தியம் பார்ப்பதாக தெரிகிறது.

இவர் திருப்பூர்  பெரியார் காலனியில் *சுபம் மருத்துவமனை* என்ற பெயரில் 15 படுக்கை வசதிகள், எக்ஸ் ரே, இரத்த பரிசோதனை கூடங்களுடன் சொந்த கட்டிடத்தில் உள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு  வைத்தியம் பார்த்து வருகிறார்.

*உள் நோயாளிகளுக்கு மருத்துவ மனையில்  எந்த ஒரு அடிப்படை வசதிகளும் கிடையாது*!!

முதல் தளத்தில் 15 படுக்கை அறைகள்!
மேலே செல்ல சிறிய அளவிலான படி கட்டுகள்!

லிப்ட். மற்றும் சக்கர நாற்காலி,  ஸ்டெச்சரில் நோயாளிகளை கொண்டு செல்ல லேம்ப் வசதி இல்லை! 

*தீ விபத்து போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் நோயாளிகள்  உயிருக்கு ஆபத்து ஏற்படும்*!!

மருத்துவ மனையை சுற்றிலும் காலி இடம் கிடையாது!

நோயாளிகள் பார்வையாளர்கள் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி இல்லை! மருத்துவமனை முன் நிறுத்தும் வாகனங்களுக்கு நிர்வாகம் பொறுப்பில்லையாம்!

குறுகிய சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதினால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது!

மருத்துவருடைய வாகனத்தினை நிறுத்துவதற்கு எதிரில் சிறிய அளவிலான இடம்!

*மூன்று சாலைகள் சந்திக்கும் கார்னர் சைட்டில் 15 அடி குறுகலான சாலையில் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டுள்ளது*!

அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து திரும்பி செல்ல வசதிகள் இல்லை! 

மருத்துவ கழிவுகளும் பாதுகாப்பாக வைக்கப்படுவதில்லை!

கிளினிக் நடத்த வேண்டிய இடத்தில் மருத்துமனை கட்டி உள்ளார்!

*லஞ்சம் வாங்கும் கடமை தவறிய அதிகாரிகள் தான் இந்த மருத்துவமனைக்கு போலி சான்றிதழ்கள் கொடுத்து  அனுமதி அளித்துள்ளனர்*!

*மருத்துவரிடம் வரும் நோயாளிகளுக்கு பார்வை கட்டணம் ₹ 300 ரூபாய்*!

உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுபவர்கள் செலுத்தும் கட்டணங்களுக்கு உரிய பற்று சீட்டு வழங்குவதில்லை!

இப்பகுதியை சார்ந்தவர்கள் வீட்டில் மரணம் அடைந்தால் மின் மயானங்களில் உடலை  தகனம் செய்வது வழக்கம்!

மின் மயானத்தில் தகனம் செய்ய வேண்டுமானால் மின் மயானத்தில் கொடுக்கும் விண்ணப்பத்தில் மருத்துவரிடம் சான்று பெற வேண்டும்.

*இவரிடம் இறப்புச்சான்று கேட்டு செல்பவர்களை கூட மருத்துவர் பார்க்க மாட்டார்!  உதவியாளர் மூலம் அவர்களிடம் கடிதம் மட்டும் எழுதி வாங்குவார்கள்*

*இறந்தவர் எப்படி இறந்தார் என இறந்தவரின் உடலை பரிசோதனை பண்ண மாட்டார்*!

*₹1000 ₹1500 பெற்றுக்கொண்டு பிரேதத்தினை பார்க்காமலே இயற்கை மரணம் என சான்று வழங்குவார்*!!

சமீபத்தில் ஹரீந்திரன் என்ற  நண்பர் ஒருவர் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்ற போது  இரத்த வகை சான்றிதழ் கேட்டுள்ளனர்.

நண்பர்  இரத்த வகை சான்று பெற இந்த மருத்துவமனையில் செயல் படும் இரத்த பரிசோதனை மையத்தில் இரத்தம் பரிசோதனை செய்துள்ளார்.

*₹ 50 ரூபாய் கட்டணம் பெற்றுக்கொண்டு
பரிசோதனை அறிக்கையில் B பாஸிட்டிவ் என கொடுத்துள்ளனர்!

*நண்பருக்கு அதிர்ச்சி!  அவரது இரத்த வகை AB பாஸிட்டிவ்*!!

நம்மை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.  நமது அறிவுறுத்தலின் படி வேறு ஒரு தனியார் இரத்த பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்ததில் AB
பாஸிட்டிவ் என சரியான இரத்த வகை சான்று பெற்றுள்ளார்.

*பிரேதத்தை பார்க்காமல் சான்று வழங்குவது போல் இரத்தத்தினை பரிசோதனை செய்யாமல் சான்று வழங்கி இருப்பாரோ*?

ஒரு வேளை நோயாளிகளுக்கு இரத்தம் செலுத்தும் போது இரத்த வகை மாற்றி செலுத்தி இருந்தால் அவர்களின் நிலை என்ன?

*மொத்தத்தில் இந்த மருத்துவர்  வைத்தியம் பார்க்க தகுதியானவர்  தானா*?

*இங்கு பணி புரியும் ஊழியர்கள் மருத்துவ பணியாளர்கள் தானா*?

*காவல் துறையினருக்கு வைத்தியம் பார்க்கும் அரசு மருத்துவர் என்ற துணிச்சலா*?

*அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் மட்டும் விழித்து கொள்ளும் மாவட்ட நிர்வாகம் சட்ட விரோதமாக செயல் பட்டு வரும் மருத்துவர் மீதும் மருத்துவமனை மீதும் நடவடிக்கை  எடுக்குமா என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வி*?
💥💥💥💥💥💥💥💥💥💥💥
✍ நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
*ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்*
திருப்பூர்
உலா பேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும்  ......!!

No comments:

Post a Comment