Monday 30 April 2018

அனுப்பர்பாளைய காவல் நிலையம்!

முக்கிய செய்தி!!

அவசர தேவைக்கு உதவிக்கு அழைத்தால் பொறுப்பற்ற முறையில் பதில் கூறும் ஆபத்துக்கு உதவாத திருப்பூர் மாநகர அனுப்பர்பாளையம் காவல் நிலையம் .!
தொலை பேசி எண் :0421 2238580

30.04.2018 அன்று இரவு சுமார் 10.00 மணி அளவில் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட அங்கேரிபாளையம் சாலை அரசு சேமிப்பு கிடங்கு அருகில் மின் கம்பத்தில் கார் மோதி விபத்து ஏற்பட்டதாக சமூக ஆர்வலர் பழனிக்குமாருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

விபத்து ஏற்படுத்திய  வாகன எண் : GA 05 B 1017

மின்கம்பம் உடைந்து சாய்ந்து
மின்கம்பி அறுந்து சாலையின் குறுக்கே தாழ்வான நிலையில் தொங்கி பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது.

இரவு நேரமாகையால் இருட்டான பகுதியில்  சாலையின் குறுக்கே மின்சார.இணைப்புடன் தொங்கி கொண்டிருந்த மின் கம்பிகள் வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும்  தெரிய வில்லை.

வாகன ஓட்டிகளுக்கும்  பொது மக்களுக்கும் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் நிலையினை  சமூக ஆர்வலர்  பழனிக்குமார் உடனடியாக தடுத்து நிறுத்தி உள்ளார்.

மின்சாரவாரிய மேற்பார்வை பொறியாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார் .

சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

போக்குவரத்தினை ஒழுங்கு படுத்தவும் பொது மக்கள் உயிருக்கு பாது காப்பு வழங்கவும் அனுப்பர் பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்த போது தொலை பேசியை எடுத்து பேசிய காவலூழியர் பதில் அளித்த விதம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கிறது.

குற்றம் நடைபெறும் முன்னர் தடுத்து நிறுத்தும் கடமை காவலூழியர்களுக்கு
இருந்தும் புகார் தெரிவித்தும் அசால்ட்டாக திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லை என்றும் எந்த இடம் என சரியான தகவல் தெரிவித்த போதும் திரும்ப திரும்ப எந்த இடம் என கேட்ட கடமை தவறிய காவலூழியர்களை பணி நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் அவர்கள் நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.
இணைப்பு : ஆடியோ

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
01.05.2018

No comments:

Post a Comment