Sunday 6 May 2018

திருப்பூர் கேபிள் டி.வி ஆப்பரேட்டர் /மாவட்ட மேலாளர் மீது புகார்!!

மனுதாரர்:

செ.ராம் குமார்
S/O, செல்லைய்யா
99,B, திலகர் நகர்                                அனுப்பர்பாளையம்
திருப்பூர் -641 652.

எதிர் மனுதாரர்கள் :

01:   மோகன்ராஜ்
A.M.கேபிள் நெட்வொர்க
105,குமரன் வீதி       
அனுப்பர்பாளையம்                           திருப்பூர் -641 652             
                
02:   பொ.ஜெய்சிங்
தனிவட்டாட்சியர்/
மாவட்ட துணை மேலாளர்,
தமிழ்நாடு அரசு கேபிள் :டிவி.நிறுவனம்
திருப்பூர் மாவட்டம்.

பெறுநர் :

நுகர்வோர் பாதுகாப்பு தலைவர் /மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு தலைவர் அலுவலகம், மாவட்ட. ஆட்சியர் அலுவலக வளாகம்,
திருப்பூர் மாவட்டம்.

அய்யா,

பொருள் : அரசு இலவச செட்டாபாக்ஸ் வழங்க மறுத்ததுடன் கேபிள் இணைப்பினை துண்டித்து சேவை குறைபாடு ஏற்படுத்தி உள்ள எதிர்மனுதாரர்கள் 01.மோகன் ராஜ் அரசுகேபிள் டி.வி. ஆப்பரேட்டர் மற்றும் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஆப்பரேட்டர் மீது நடவடிக்கை எடுத்து கேபிள் இணைப்பினை வழங்க நடவடிக்கை எடுக்க தவறிய  எதிர்மனுதாரர் 02.: பொ.ஜெய்சிங் கேபிள் டி.வி. மாவட்ட மேலாளர் அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொண்டு துண்டிக்கப்பட்ட கேபிள் இணைப்பு மற்றும் அரசு இலவச செட்டாபாக்ஸ் வழங்க உத்தரவிடக் கோரி குற்றவிசாரணை முறைச்சட்டப் பிரிவு 2(4) இன் கீழ் புகார் மனு,

பார்வை :
01. மாத சந்தா செலுத்தியதற்கான அட்டையின் நகல்

02. எனது புகார் கடிதம் நாள்:  01-02-2018

03.எதிர்மனுதாரர் :02 என்பவரிடம் இருந்து வந்த பதில் கடிதம்  ந.க.எண் :45/2017,TACTV /TUP.நாள் :12-03-2018.

04. வங்கி வரைவோலை நாள் :26-03-2018 மற்றும் புகார் கடித நாள் :31-03-2018

05.எதிர் மனுதாரர் :02 என்பவரின் கடித ந.க .எண் :45/2017/TACTV /TUP. நாள் :04-04-2018.

06.எதிர்மனுதாரர் :02 என்பவரின் கடித ந.க.எண் :45/2017,TACTV / TUP.நாள் :10-04-2018

       மேற்காண் முகவரியில் வசித்து வரும் மனுதாரராகிய நான் எதிர்மனுதாரர் :01 என்பவரிடம் இருந்து அரசு கேபிள் இணைப்பு பெற்றுள்ளேன்.

எனவே நான் ஒரு நுகர்வோர் ஆவேன்.

    எதிர்மனுதாரர் :01 .என்பவர் LCO :15233 அரசு கேபிள் டி.வி உரிமம் பெற்றுள்ள கேபிள் டி.வி ஆப்பரேட்டர் ஆவார்.

   பல ஆண்டுகளாக 01.எதிர்மனுதாரரிடம் கேபிள் இணைப்பு பெற்று மாத சந்தா செலுத்தி வருகிறேன்.

  அரசு நிர்ணயம் செய்துள்ள மாத சந்தா 70.00 ரூபாயினை பெறாமல் 100 ரூபாய் மாதசந்தா கூடுதலாக வசூலித்து வருகிறார்.

    இந்நிலையில் எதிர்மனுதாரர் 01: என்பவரிடம் அரசு இலவச செட்டாபாக்ஸ் இணைப்பு வழங்க கோரினேன்.

   ஆனால் அவர் அரசு இலவச செட்டாபாக்ஸ் வழங்க இயலாது என்றும் தனியார் செட்டாபாக்ஸ் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

   அதற்கு நான் தனியார் செட்டாபாக்ஸ் வேண்டாம் என்றும் அரசு இலவச செட்டாபாக்ஸ் வழங்கும் படி கூறினேன்.  

   எனவே, நான் பார்வை :02 இல் காணும் புகார் கடிதத்தினை எதிர்மனுதாரர் :02 என்பவரிடம் வழங்கினேன்.

    எதிர்மனுதாரர் :02 என்பவர் பார்வை:03 இல் காணும் விசாரணை கடிதத்தினை எதிர்மனுதாரர் :01 என்பவருக்கு அனுப்பி உள்ளார்.

   எதிர் மனுதாரர் :01 என்பவர் குறித்து எதிர்மனுதாரர் :02 என்பவரிடம் புகார் அளித்த காரணத்தினால் என்னை நேரில் வந்து மிரட்டியதுடன் மாத சந்தா தொகையினை பெற முடியாது என தெரிவித்ததுடன் எனது வீட்டு கேபிள் இணைப்பினையும் துண்டித்து விட்டார்.

   இதனால் மிகுந்த அதிர்ச்சி அடைந்த நான்  வாங்க மறுத்த இரண்டு மாத சந்தா  ரூபாய் 140 க்கான வங்கி வரைவோலையை அரசு கேபிள் டிவி நிறுவனம் பெயரில் எடுத்து துண்டிக்கப்பட்ட எனது கேபிள் இணைப்பினை வழங்கக் கோரி பார்வை :04 ல் காணும் புகார் கடிதத்தினை எதிர் மனுதாரர் :02 என்பவருக்கு அனுப்பினேன்.

    பார்வை :05-ல் காணும் கடிதத்தின் படி எதிர்மனுதாரர்:02 என்பவர், எதிர்மனுதாரர் :01 என்பவரை விசாரணைக்கு அழைத்ததாக கடிதம் அனுப்பிள்ளார்.
ஆனால் அன்றைய தினம் எதிர்மனுதாரர் :01 என்பவர் விசாரணைக்கு ஆஜராக வில்லை.

   துண்டிக்கப்பட்ட எனது வீட்டு கேபிள் இணைப்பினை எதிர் மனுதாரர்:01 என்பவர் மீண்டும் வழங்கினார்.

   இந்நிலையில் பார்வை :04 இல் நான் அனுப்பிய வங்கி வரைவோலையை பார்வை :06 இல் காணும் கடிதம் வாயிலாக எதிர்மனுதாரர்:02 என்பவர் எதிர்மனுதாரர் :01 என்பவருக்கு அனுப்பி உள்ளார்.

   அரசு கேபிள் டி.வி நிறுவனம் கணக்கில் செலுத்தப்பட்ட பணம் ரூபாய் 140 க்கான வங்கி வரைவோலையை எதிர்மனுதாரர் :01 ஆகிய கேபிள் ஆப்பரேட்டருக்கு எதிர்மனுதாரர் :02 என்பவர் திருப்பி அனுப்பி இருப்பது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

   இந்நிலையில் வீனஸ் சலூன் என்ற எனது கடை மற்றும் வீட்டு கேபிள் டி.வி இணைப்பினையும் மீண்டும் 02.05.2018 அன்று திடீரென எதிர்மனுதாரர் :01 என்பவர் துண்டித்து விட்டார்.

   எனவே பாதிக்கபட்ட நான் எதிர்மனுதாரர் :02 என்பவரின் கைபேசிக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தேன்.

   எதிர்மனுதாரர் :02 என்பவர் 03-05-2018 அன்று மதியம் 3:00 மணிக்கு கேபிள் டிவி அலுவலகத்திற்கு நேரில் வர சொன்னார்கள்.

   நான் நேரில் சென்றிருந்தேன் ஆனால் எதிர்மனுதாரர் :01 என்பவர் வரவில்லை.

    எதிர்மனுதாரர் :01 என்பவரை அவரது அலுவலகம் சென்று பார்க்கும் படி எதிர்மனுதாரர் :02 என்பவர் கூறினார்.

   எனவே எதிர்மனுதாரர் :01 என்பவர் அலுவலகம் நேரில் சென்றேன்.

   அங்கு எதிர்மனுதாரர்: 01  என்பவர் இல்லை .அலுவலக ஊழியர் மட்டும் தான் இருந்தார்.

   இந்நிலையில் 04-05-2018 அன்று எதிர்மனுதாரர் :02 என்பவர் என்னை சந்திக்க எனது கடைக்கு வந்திருந்தார்.

   மாநகராட்சி முதல் மண்டல அலுவலகத்தில் வைத்து என்னிடம் பேசினார்கள்.

    கேபிள் டி.வி அரசு கணக்கில் செலுத்திய வங்கி வரைவோலையை தெரியாமல் எதிர்மனுதாரர் :01 என்பவருக்கு அனுப்பி விட்டதாகவும். அவரிடம் இருந்து வங்கி வரைவோலையை  திரும்பி வாங்கி தருவதாகவும் தெரிவித்தார்.

    கூடுதல் கட்டணம் 100 ரூபாய் குறித்து கேட்டதற்கு அனைத்து கேபிள் ஆப்பரேட்டர்களும் 100 ரூபாய் தான் வாங்குவதாகவும் நான் எதுவும் செயய முடியாது எனவும் தெரிவித்தார்.

    அரசு செட்டாபாக்ஸினை எதிர்மனுதாரர் :01 என்பவர் வந்து வாங்க மாட்டங்கிறார்.

   நான் என்ன செய்ய முடியும் என தெரிவித்தது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும், மனவருத்ததையும் கொடுத்துள்ளது.

   அரசு கேபிள் டி.வி நிறுவனம் பெயரில் கொடுத்த 140 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை திரும்ப பெற்று கொண்டு கடை, மற்றும் வீட்டிற்கான சந்தா கட்டணம் 490 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை எடுத்து எதிர்மனுதாரர் :01 என்பவரிடம் கொடுத்து துண்டிக்கப்பட்ட கேபிள் இணைப்பினை பெற்றுக் கொள்ளும் படியும் கூறினார்கள்.

குற்றச்சாட்டு:01

     எதிர்மனுதாரர் :01கேபிள் ஆப்பரேட்டர் பல ஆயிரக் கணக்கான கேபிள் இணைப்புகளை அரசிற்கு தெரியாமல் முறைகேடாக வழங்கியுள்ளார்.

இதனால் அரசிற்கு மிகுந்த வருவாய் இழப்பு ஏற்டுத்தி வருகிறார்.

குற்றச்சாட்டு :02

      கேபிள் டி.வி சந்தா தாரர்களுக்கு அரசு இலவச செட்டாபாக்ஸ் வழங்காமல் தனியார் செட்டாபாக்ஸ்களை கட்டாய படுத்தி வழங்கி வருகிறார். இதனால் அரசுக்கு மிகுந்த வருவாய் இழப்பினை திட்டமிட்டு ஏற்படுத்தி வருகிறார்.

குற்றச்சாட்டு :03 

      அரசு கேபிள் டி.வி மாத சந்தா தொகை 70.00 க்கு பதிலாக 100 ரூபாய் அனைத்து சந்தா தாரர்களிடம் இருந்தும் கட்டாய படுத்தி வசூலித்து வருகிறார்.

குற்றச்சாட்டு :04

     மாத சந்தா தொகை வசூலிப்பதற்கான பற்று சீட்டு வழங்குவதில்லை.

குற்றச்சாட்டு :05

        எதிர்மனுதாரர்: 01 என்பவர் சட்ட விரோதமாக செயல்படுவது தெரிந்தும் எதிர்மனுதாரர் :02 ஆகிய கேபின் டி.வி மாவட்ட மேலாளர்  அவர்கள் அவர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அவருக்கு ஆதரவாக செயல் பட்டு வருகிறார்.

குற்றச்சாட்டு :06

     .அரசு கணக்கில் செலுத்திய வங்கி வரைவோலையை அரசு கணக்கில் வரவு வைக்காமல் எதிர்மனுதாரர்;01 என்பவருக்கு  அனுப்பி கால நேர விரையம் ஏற்படுத்தி வங்கி வரையோலையை திரும்ப பெற்று கொள்ளும்படி தெரிவித்ததுடன் மாத சந்தா தொகையினை எதிர்மனுதாரர் :01 என்பவர் பெயரில் வங்கி வரையோலை எடுத்து கொடுக்கும் படி கூறுகிறார்.

குற்றச்சாட்டு :07

      எதிர்மனுதாரர் :01 மற்றும் :02 என்பவர்கள் அரசு கேபிள் இணைப்பினை துண்டித்து தெரிந்தே தீங்கு செய்யும் நோக்கத்துடன் திட்ட மிட்டு எனக்கு சேவை குறைபாடு ஏற்படுத்தி உள்ளார்கள்.

கோரிக்கை :

      அரசு இலவச செட்டாபாக்ஸ் வழங்க கோரிய ஒரே காரணத்திற்காகவும் எதிர்மனுதாரர் :01 என்பவர் என்னிடம் மாத சந்தா தொகையினை பெறாத காரணத்தினால் இரண்டு மாத சந்தா தொகையினை எதிர்மனுதாரர்:02 என்பவருக்கு வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்பினேன்.

எதிர்மனுதாரர் :02 என்பவரிடம் புகார் அளித்த காரணத்தினால் எனது வீடு மற்றும் கடையின் கேபிள் இணைப்புகளை துண்டித்து விட்டார்.

இதனால் எங்களது சுதந்திரம் பாதிக்கப்பட்டதுடன் மிகுந்த துயரத்திற்கும் அலைச்சலுக்கும்  ஆளாகி உள்ளேன்.

இது நுகர்வோராகிய எனக்கு சேவை குறைபாடாகும் எனது மற்றும் குடும்ப  உறுப்பினர்களின் உரிமைகள் திட்ட மிட்டு பறிக்கப்பட்டுள்ளது.

கடமை தவறிய எதிர்மனுதாரர்கள் மீது நுகர்வோர் பாதுகாப்பு தலைவராகிய தாங்கள் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு கேபிள் இணைப்புகளை மீண்டும் வழங்க கோரியும், இலவச செட்டாபாக்ஸ் வழங்கக் கோரியும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணங்களை திருப்பி வழங்க கோரியும், சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் எதிர்மனுதாரர் :02 என்பவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும்,  எதிர்மனுதாரர் :01 என்பவரது LCO கேபிள் உரிமத்தினை ரத்து செய்யக் கோரியும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - 1986 இன் படியும், மனித உரிமைகள் பாதுகாப்புச்சட்டம் 1993 இன் படியும், இந்த புகார் மனு தங்களுக்கு எழுதபட்டுள்ளது.

தாங்களாலும் எனக்கு உரிய நிவாரணம் கிடைக்க பெறவில்லை எனில் நீதி வேண்டியும், உரிய இழப்பீடு பெறவும் மாவட்ட குறைதீர் மன்றத்தில் முறையிடுவதினை தவிர பாதிக்கப்பட்ட எனக்கு வேறு வழி தெரியவில்லை என்பதினை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

இணைப்பு பக்கங்கள் :10

நாள் :07.05.2018                                              இடம்: திருப்பூர் 

மனுதாரர்
செ.ராம்குமார்

No comments:

Post a Comment