Tuesday 27 March 2018

திருப்பூர் முத்து இட்லி தோசைமாவு எச்சரிக்கை!

பாக்கெட்டுகளில்  அடைத்து விற்பனை செய்யப்படும்  முத்து இட்லி தோசை மாவு வாங்கி பயன் படுத்தும் நுகர்வோர்களுக்கு எச்சரிக்கை! 

LAACO : வெற்றி செய்தி :004/27.03.2018
FSO புகார் எண் : 3034 /26.03.2018

திருப்பூர் முத்து இட்லி தோசை மாவு  தயாரித்து விற்பனை செய்வதில் முறைகேடுகள்!

புகார் தாரர் :
ஆ.பழனிக்குமார்
அங்கேரிபாளையம்
திருப்பூர்.

உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களின் உடனடி கவனத்திற்கு,

சுகாதாரமற்ற முத்து இட்லி தோசை மாவு விற்பனை !!

பாக்கெட்டுகளில் அடைத்து திருப்பூரில் பெரும்பாலான மளிகை கடைகளில் விற்பனை!

வாகனங்களில்  கொண்டு வந்து அனைத்து மளிகை கடைகளுக்கும்  விநியோகம் செய்கின்றனர்.

குற்றவாளி :

NEW MUTHU FOOD PRODUCTS
5/802 A ,Pichampalayam Pudur
TIRUPUR

Fssai Lic No : 124150270000221

குற்றச்சாட்டு  : 01
பாக்கெட்டுகள் மூடி முத்திரை செய்யப்படாமல் உரிய பாதுகாப்பில்லாமல் ரப்பர் பைண்டு கொண்டு கட்டப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு :02
பேக்கிங் செய்த தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிட படவில்லை.

குற்றச்சாட்டு :03
தரமற்ற அரிசி உளுந்து கொண்டு தயாரிக்கப்படுவதாக தகவல்.

குற்றச்சாட்டு :04.
தோசை மாவு கெட்டு போகாமல் இருக்க இரசாயனம் கலக்கப்படுவதாக தகவல்.

குற்றச்சாட்டு :05
கடைகளில் தினசரி மீதமாகும் பாக்கெட்டுகள் குளிர்சாதன பெட்டியில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

கோரிக்கை :

பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசிக்கும் திருப்பூரில் பல ஆயிரக்கணக்கான. மளிகை கடைகள் மூலை முடுக்குகளில் எல்லாம் காணப்படுகிறது ..

இந்த கடைகள் முழுவதிலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்வது என்பது இயலாத காரியம்.

எனவே இந்த தோசைமாவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஆய்வு செய்து அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள fssai. உரிமத்தினை  ரத்து செய்து முறைகேடுகள் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டால்  மாவு தொழிற்சாலையை  சீல் வைக்க கோருகிறேன்.

அனைத்து மளிகை கடைகளையும் சோதனை இட்டால்  முத்து, செந்தில்,
உதயம் என பல்வேறு பெயர்களில் பாக்கெட்டுகளில் அடைத்து  இட்லி தோசை மாவுகள் விற்பனை செய்து வருவதினை காண முடியும்.

குறிப்பு :  தினமும் மதியம் 2.00 மணியில் இருந்து  பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட. மாவுகள் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

புகைப்படம் எடுக்கப்பட்டது குரு மளிகை & ஜெனரல் ஸ்டோர்  திருப்பூர் மாநகராட்சி ஏழாவது வார்டு ஸ்ரீ நகர் மாஸ் கார்னர் பேக்கரி அருகில் செயல் பட்டு வருகிறது.

புகாரின் மீது திருப்பூர் உணவு பாதுகாப்பு துறையினர் விரைந்து நடவடிக்கை!

இரண்டு விதமான பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட இட்லி தோசை மாவு பாக்கெட்டுகள் 50 கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாம்.

ஒரு பாக்கெட் ஆய்வுக்காக எடுத்து கொண்டார்களாம்.

எந்த ஒரு பாக்கெட்டிலும் பேக்கிங் தேதி  காலாவதி தேதி,  லாட் எண்  உள்ளிட்ட எந்த விபரமும் குறிப்பிட பட வில்லையாம்.

பழைய முகவரியில் வாங்கிய fssai உரிமம் காலாவதி ஆகி விட்டதாம்.

புதிய முகவரியில் fssai உரிமம் இப்போது விண்ணப்பித்துள்ளார்களாம் .

தயாரிப்பு தேதி உள்ளிட்ட விபரங்களை
பாக்கெட்டுகளில் குறிப்பிட சொல்லி அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கினார்களாம்.

உடனடியாக இட்லி தோசை மாவு தயாரிப்பினை நிறுத்த சொல்லி விட்டார்களாம்.

அருமை!  அருமை! 

நுகார்வோர் நலனில் அக்கறைக் கொண்டு இதை செய்ததற்கு பெருமை பட வேண்டியது தான்.

ஆனால் ஓரு டவுட்டு!

அவர்கள் அனுப்பிய போட்டோக்களில் 50 மாவு பாக்கெட்டுகள் தான் கைப்பற்றி அழிக்கப்பட்டுள்ளது என்பது தான் நம்பும் படியாக இல்லை!

Respected madam,

Good morning, based on whatsapp complaint NO:3034/27/26,the concern FSO inspected that ( batter)New muthu kavi,5/802A, pitchampalayam pudhu, Tirupur corporation (N).

At the time of inspection there are two types of packing of batter was found without packing date,lot no,best before and etc.

The FBO advised to stop productions immediately.

1 surveillance sample taken.

50 batter packets were seized & destroyed. inspection notice issued.

Fssai LC has been obtained for prior address and expired

.Now,he applied new LC for new address.

Strictly warned to follow labelling manners.Thank you mam.DO Tirupur.

நுகர்வோர் விழிப்புணர்வு பணியில் ..
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி : 98655 90723

Thursday 22 March 2018

திருப்பூர் ஜெபா ஸ்டோர் எச்சரிக்கை!


திருப்பூர் ஜெபா ஸ்டோரில் பொருட்கள் வாங்கும் நுகர்வோர்களுக்கு எச்சரிக்கை!

FSO TIRUPUR வெற்றி செய்தி /003
புகார் எண் : 1906/27/14

உணவு பாதுகாப்பு துறையினரின் வாட்ஸ் ஆப் எண் :94440 42322 புகார் அளித்தவுடன் நடவடிக்கை தொடர்கிறது.

நுகர்வோர் விழிப்படைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

புகார்தாரர் :
முத்துக்குமார்

குற்றவாளி யார்?

உரிமையாளர்
ஜெபா  ஸ்டோர்.
s v காலனி வடக்கு மெயின் ரோடு.
பெருமாநல்லூர் ரோடு,
திருப்பூர் மாவட்டம்.

புகார் :
இந்த கடையில் காலாவதியான உணவு பொருட்களை வைத்து கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை :
உணவு பாதுகாப்பு அலுவலர் நேரில் ஆய்வு!

1.காலாவதியான பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பல்வேறு விதமான உணவு பொருட்கள் 52: பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டு குப்பை தொட்டியில் இடப்பட்டு அழிக்கப்பட்டது.

2.காலாவதியான மசாலா பவுடர் 5 பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டு குப்பை தொட்டியில் இடப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது.

காலாவதியான உணவு பொருட்களை தெரிந்தே விற்பனை செய்து வரும்  இவனை போன்ற. குற்றவாளிகளின் கடைகளில் நுகர்வோர்கள் யாரும் எந்த பொருளும் வாங்காமல் இருந்தால்  மட்டுமே இவர்கள் திருந்துவார்கள்.

உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து கெட்டு போன பொருட்களை குப்பை தொட்டியில் போட்டு  எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ் மட்டும் வழங்கினால் மட்டும் அவர்கள் கடமை முடிந்து விடுவதாக நினைக்கின்றனர்.

தொடர்ந்து இவர்கள் லஞ்சம் வாங்காமல் நேர்மையான முறையில் அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்வார்கள் என்றால் மட்டுமே இதனை முற்றிலும் தடுக்க முடியும்.

எப்படியோ இந்த புகாரினால் 57 குடும்பங்கள் காலாவதியான உணவு பொருட்களை உண்ணாமல் தடுக்கப்பட்டுள்ளதினை நினைத்து சற்று ஆறுதல் அடைகிறோம்.

Respected madam,
Good morning,based on whatsapp complaint NO;1906/27/14,

the concern FSO inspected
Jeba store
,SV colony,
PN road,
tirupur corporation (N)

.(1).52 packets of expired Snacks (various type of snacks) seized & destroyed

.5 packets of masala powder seized&destroyed

.Instructed to follow GMP &GHP regularly.Advised to  buy packed product's with complete label manner.

Instructed to keep all records for all product's.

They are having valid license.
1 improvement notice to be issued today. Thank you mam.DO Tirupur.

நுகர்வோர் விழிப்புணர்வு பணியில்..

LAACO நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி : 98655 90723
வெற்றி செய்திகள் தொடரும்.

Wednesday 21 March 2018

வழிபாட்டு சுதந்திரம் மத சுதந்திரம் என்றால் என்ன?

📢  #வழிபாட்டுசுதந்திரம் #மற்றும்
#மதசுதந்திரம்  #குறித்து #இந்திய #அரசியலமைப்புசாசனம்
#என்னசொல்கிறது*?
LAACO /21.03.2018

1 வழிபாட்டு சுதந்திரம் என்றால் என்ன?

#இந்தியஅரசியலமைப்பு #சாசனக்கோட்பாடு
25 (1)

★பொது ஒழுங்கு, ஒழுக்க முறைமை மற்றும் உடல் மனநலம் ஆகியவற்றிற்கும் இந்த பகுதியில் கூறப்பட்ட மற்றவற்றிற்கும் உட்பட்டு தம் மனசாட்சியின் படி செயல் படும் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு.

★ஒரு மதத்தை கொண்டாடவும் கடைப் பிடிக்கவும் பரப்பவும் அவர்கள் உரிமை உடையவராவார்.

#கோட்பாடு : 25 (2) அ

★இந்த பிரிவில் உள்ள எதுவும் மதச்செயல் பாட்டில் தொடர்புடைய பொருளாதார, நிதி சார்ந்த அரசியல் ரீதியிலான அல்லது மதம் சார்ந்த இதர செயல்களை ஒழுங்கு படுத்தவோ கட்டுபடுத்தவோ கூடாது.

#கோட்பாடு : 25(2) ஆ

★சமுதாய நலனுக்காகவும் சீர்திருத்தம் அல்லது இந்து மத சார்புள்ள இடங்களை இந்துக்களின் எல்லா வகுப்பினருக்கும் பாகுபாடின்றி திறந்து வைக்க தேவைப்படும் எந்த ஒரு சட்டத்தை செயல் படுத்துவதிலிருந்தும் அல்லது ஒரு புதிய சட்டத்தை அதற்காக உருவாக்கு வதிலிருந்தும் 🏛அரசை தடுத்து விட முடியாது.

2 மத சுதந்திரம் என்றால் என்ன?

#கோட்பாடு :26

★பொது ஒழுங்கு, ஒழுக்க முறைமை, நல்வாழ்வு இவற்றுக்கு கட்டுப்பட்டு ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களும் அல்லது அம்மத பிரிவைச் சார்ந்தவர்களும் நடந்து கொள்ள வேண்டும்.

#கோட்பாடு 26 (அ)

மதம் சார்ந்த மற்றும் அறப்பண்புடைய காரியங்களுக்கு அமைப்புகளை நிறுவவும், பராமரிக்கவும் உரிமை உண்டு.

#கோட்பாடு 26 (ஆ)

தமது மத விவகாரங்களை தாமே நிர்வகிப்பதற்கும் உரிமை உண்டு.

#கோட்பாடு :26 (இ)

அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தேடிக்கொள்ளவும் உரிமையாக்கி கொள்ளவும் உரிமை உண்டு.

#கோட்பாடு :26 (ஈ)

★அத்தகைய சொத்துக்களை சட்ட ஒப்புதலோடு நிர்வகிக்கவும் உரிமை உடையவராவார்.

★மத சுதந்திரத்தின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை இப்பிரிவு கையாள்கிறது,

★இதன் அடிப்படையில் தான் நாடு முழுவதும் வீதிக்கொரு இந்து கோவில்களும், கிறிஸ்துவ தேவாலயங்களும், மசூதிகளும், கட்டப்பட்டு அவரவர் மத வழக்கப்படி வழிபாட்டு சுதந்திரத்தினையும் மத  சுதந்திரத்தினையும் பெற்றுள்ளனர்!👍

★மதங்கள் வேறானாலும் வழி பாட்டு முறைகள் வேறானாலும் அனைத்து சமுதாயத்தினரும் சாதி, மதம் ,இனம், மொழி பாகுபாடில்லாமல் சகோதர ஒற்றுமையுடன் நமது இந்திய தேசத்தில் வாழ்ந்து வருவதில் பெருமை அடைகிறோம்🙏

★ஆனால் இந்திய அரசியலமைப்பு சாசன கோட்பாடுகளுக்கு எதிராக நமது இந்திய தேசத்தினை பிரித்தாலும் சூழ்ச்சிகளுடன் செயல் பட்டு வரும் ஒரு சில கேடு கெட்ட தேச  விரோதிகளினால் தான் சாதி, மத ,இன , மொழிகளுக்கு எதிரான போராட்டங்களும் கலவரங்களும் ஆங்காங்கே  தூண்டப்பட்டு நடை பெற்று வருகிறது 😡

★சுய நலன்களுக்காக மக்களை பிரித்தாலும் சூழ்ச்சியுடன்  செயல் பட்டுவரும் அனைத்து அரசியல் வாதிகளுக்கும்  இதில்  பெரும் பங்கு உண்டு

★இதனால் அப்பாவி மக்கள் பலர் பலியாக்கப் பட்டுள்ளனர் 😂

★அனைத்து சாதி ,மத ,இன மொழி சமுதாயத்தினை சேர்ந்த சகோதர சகோதரிகளே !!🤝

★தேச விரோதிகளையும் சமூக விரோதிகளையும்
சட்ட விரோதிகளையும் அடையாளம் காணுங்கள் ✅

★வன்முறைகளை கண்டு ஒதுங்குங்கள்

★நமது தாய்த்திரு நாடு இந்தியா.🇮🇳💪

★நம் தாய் நாட்டை மீட்டெடுக்க சாதி, மாத, இன, மொழி பாகுபாடில்லாமல் 😂 கண்ணீரூம் செந்நீரூம் சிந்தி உயிர் துறந்த தியாகிகளையும் ,தேச தலைவர்களையும் போற்றுவோம். 👏

★இந்திய அரசியலமைப்பு சாசனம் நாம் ஒவ்வொருவருக்கும்  வழங்கி உள்ள உரிமைகளின் படியும் கடமைகளின் படியும் சகோதர ஒற்றுமையுடன் வாழ்வாங்கு வாழ்ந்து உலக அரங்கில் நம் இந்திய தேசத்தினை தலை நிமிர செய்வோம் ஒன்று படுவோம் வாருங்கள்  என இந்திய அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு 51 A(ஒ) இன் கீழ்  உங்கள் பொற்பாதம் வணங்கி வேண்டுகிறோம்🙏
💥💥💥💥💥💥💥💥💥💥💥
✍ தேசத்தின் வளர்ச்சி பணியில் ........!!
வாழ்த்துக்களுடன்
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி :98655 90723

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
உலாபேசி :98655 43303

Tuesday 20 March 2018

TO ALL GOVERNMENT SERVANTS!

📢 *IMPORTANT NEWS* :

*🏛 TO ALL GOVERNMENT SERVANTS*! 🙏

*This Whatsapp group is not the government's whatsapp group*!

*This group is opened on behalf of LEGAL AWARENESS AND ANTI-CORRUPTION ORGANIZATION*

India is the democratic country where people from all walks of life are aware of  bribery and corruption that exist in our country. With the aim of bringing the nation into a developed country we are committed to carrying out our duty under Article 51 A. of the Indian Constitution.

Different government departments have been created separately to serve the people and have appointed officers and staff to each department.

Each service has a duration of time.

*But many government officers get bribe to fulfill the basic needs of the public*

Whatever the welfare of the people, there are massive irregularities and corruptions.

*No government department has been asked to bribe*!✅

*Instead, they say that giving bribe is a crime*

However, the government fails to stop these bribes.

Central and state corruption prevention and surveillance offices are in charge of monitoring bribes and halting corruption.

They can not stop any corruption.

*A lot of people affected by bribery are seeking our organization*

How many rupees are being bribed by the source of the bribery in the areas where they are.

In this case, those who violate the legal rules are heavily bribed
They are reluctant to show off the failure of duty officers.

Bribery officials are using it.

Each state sectors are individually associated with each other.

*But district administration is involved in all departments*

*District Collector under Criminal Procedure​ Code Section 20 should  act as its District acting judge*

*The District Authority has full responsibility for any corruption in any field*

Under the District Administration
Our main objective is to go to the attention of honest officials to take care of the information, irregularities, abuse,  compensation, bribery, and illegal anti-national activities.

We are across the country to provide free legal awareness to the public.

We have incorporated the number of government services provided to the State Government and the Officers working in the State Department.

Officers may change the work place! But contact numbers do not change.

We have incorporated the personal numbers of a few officers

There are a few of the staff and the number of retired officers involved in the district administration website.

Any way, however, any of the members of this group may interfere with the disruption. All staff members can attach the contact numbers of employees working in their fields so that the Group Admins.

*We want to inform the public about the services and announcements of the public through their departments*

*We are trying to implement the Whatsapp Group of Government Offices in all the districts*
Thank You .

💥💥💥💥💥💥💥💥💥💥💥
✍ *With Best Regarts*.......🌹

*Nanjil K.Krishnan*
Founder
*Legal Awareness and Anti-Corruption Organization*
363, Gandhi Road
Periyar colony
Tirupur-641 652
Mob: 98655 90723

Friday 16 March 2018

முப்பெரும் விழா அழைப்பிதழ்!

📢 முக்கிய செய்தி!!

#முப்பெரும்விழா #அழைப்பிதழ்!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் 👏

நாள் : 08. ஏப்ரல் 2018

இடம் : V.P.ரெஸிடென்ஸி
             GD -  1/68 ,
             மெயின் ரோடு                  
             மன்னார் புரம்
             திருச்சி -620 020

1. சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
LEGAL AWARENESS AND ANTI-CORRUPTION ORGANIZATION
நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் அறிமுக கூட்டம்

மாறுங்கள்!  மாற்றுங்கள்!

#கொடுக்கவேண்டாம் #லஞ்சம்! ! சிறப்பு பயிற்சி முகாம்

நேரம் :காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை

தலைமை:
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
உலாபேசி :98655 90723

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
உலாபேசி :98655 43303

2. இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு
FEDERATION OF ANTI -CORRUPTION TEAMS INDIA மாநில ,மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பங்கு பெறும் திருச்சி மண்டல கலந்தாய்வு கூட்டம்

நேரம் : மதியம் 12.00 மணி முதல் 2.00 மணி வரை

தலைமை :
M .மணிவேல்
மாநில தலைவர்
உலாபேசி:98438 12223

S.செல்வராஜ்
பொது செயலாளர்
உலாபேசி :94443 50648

லஞ்சம் ஊழலுக்கு எதிரான நமது பேக்ட் இந்தியா  கூட்டமைப்பில் இணைந்து மக்கள் சேவை ஆற்றிட. ஆர்வம் உள்ள சமூக ஆர்வலர்களையும் லஞ்ச ஊழலுக்கு எதிரான இயக்கங்களையும் 
,சமூக சேவையுடன் செயல் பட்டு வரும் அனைத்து சமூக அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளையும்  அன்புடன் வரவேற்கிறோம் .

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
மாநில இணை செயலாளர்.
உலாபேசி :98655 90723

3. மாரல் ரிசோர்ஸ் & ரிசர்ச் பவுண்டேசன் சார்பாக 19 மற்றும் 20 மே  2018 அன்று நடை பெற இருக்கும் கலாம் விஷன் 2020 இந்திய வல்லரசுக்கான வளர்ச்சி  மாநாடு மற்றும் சகோதரி நிவேதிதா அவர்களின் 150 ஆவது பிறந்தநாள் விழா  மற்றும் பல்துறைகளை சார்ந்த சமூக சேவகர்களுக்கு   விஷன் 2020 விருது வழங்கும் விழா ஆலோசனைக்கூட்டம்.

நேரம் : மதியம் 3.00 மணி முதல் 5.00 மணி வரை

தலைமை :
M .விவேகானந்தன்
நிர்வாக இயக்குநர் 
உலாபேசி : 94886 11427

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
                           &

இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு
                            &
விஷன் 2020 இந்திய வல்லரசுக்கான வளர்ச்சி மாநாடு ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு

சார்பாக
அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் சமூக ஆர்வலர்களும்  தவறாமல் கலந்து கொண்டு முப்பெரும் விழாவினை சிறப்பாக நடத்திட வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம்  .🙏

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
✍ வாழ்த்துக்களுடன்
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
அரியலூர் ரா.சங்கர்
17.03.2018
மேலும் தொடர்புக்கு :
☎98655 90723
☎98655  43303

படியுங்கள் ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை.


தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர்  தொடர்பு எண்கள் :

Name & Designation of the officers, Contact  Numbers

Thiru.A.G.Ponn Manickavel, IPS
Deputy Inspector General of Police-Idol Wing CID.
+91 96000 43442
+ 91 – 44 – 22504310

Tr. P.A. Sundaram
Deputy Superintendent of Police,
Idol Wing CID.
+91 98417 52537
+91 94981 04682

Thiru. M.Ravi
Inspector of Police (Administration)
Idol Wing CID.
+91 99401 50430
+91 94981 04690

Thiru.V.Natarajan
Inspector of Police
Idol Wing CID.
+91 94432 86904

Thiru. G.Janarthanan
Inspector of Police
Idol Wing CID.
+91 98406 19347

Thiru. R. Tamilselvan
Inspector of Police
Idol Wing CID.
+91 83000 60031

Tmt. Arivukannu
Inspector of Police
Idol Wing CID.
+91 94981 63952

Office Address:
SIDCO,Old Corporate Building,
Thiru.vi.ka Industrial Estate,
Guindy, Chennai-32.
+ 91 – 44 – 22504332

Wednesday 14 March 2018

" முப்பெரும் விழா அழைப்பிதழ் "

  "முப்பெரும் விழா அழைப்பிதழ்"

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

நாள் : 08. ஏப்ரல் .2018

இடம் : V.P.ரெஸிடென்ஸி
              GD 1/68 ,மெயின் ரோடு
              மன்னார் புரம்
              திருச்சி -620 020

1. சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
LEGAL AWARENESS AND ANTI-CORRUPTION ORGANIZATION 
நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் அறிமுக கூட்டம்.

நேரம் :காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை

தலைமை:
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
உலாபேசி :98655 90723

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
உலாபேசி :98655 43303

2. இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு 
FEDERATION OF ANTI -CORRUPTION TEAMS INDIA மாநில ,மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பங்கு பெறும் திருச்சி மண்டல கலந்தாய்வு கூட்டம்.

நேரம் : மதியம் 12.00 மணி முதல் 2.00 மணி வரை

தலைமை :
M .மணிவேல்
மாநில தலைவர்
உலாபேசி:98438 12223

S.செல்வராஜ்
பொது செயலாளர்
உலாபேசி :94443 50648

3.மாரல் ரிசோர்ஸ் & ரிசர்ச் பவுண்டேசன் சார்பாக 19 மற்றும் 20 மே  2018 அன்று நடை பெற இருக்கும் கலாம்  விஷன் 2020 இந்திய வல்லரசுக்கான  மாநாடு மற்றும் சகோதரி நிவேதிதா அவர்களின் 150 ஆவது பிறந்தநாள் விழா  மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு விஷன் 2020 விருது வழங்கும் விழா ஆலோசனைக்கூட்டம்

நேரம் : மதியம் 3.00 மணி முதல் 5.00 மணி வரை

தலைமை :
M .விவேகானந்தன்
நிர்வாக இயக்குநர் 
உலாபேசி : 94886 11427

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
                           &
இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு
                            &
விஷன் 2020 இந்திய வல்லரசுக்கான வளர்ச்சி மாநாடு ஒருங்கிணைப்பு கூட்டமைப்புகளின்
அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொண்டு முப்பெரும் விழாவினை சிறப்பாக நடத்திட. வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம் .

வாழ்த்துக்களுடன் .........
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
அரியலூர் ரா.சங்கர்
தொடர்புக்கு : 98655 90723
                           98655 43303

Tuesday 13 March 2018

ஊழல் ஒழிப்பு செய்தி:0026 பேக்கரி முறை கேடுகள்! புகார்!!

ஊழல் ஒழிப்பு வெற்றி செய்தி; 026/14.03.2018

குற்றம் நடந்தது என்ன?

உண்மை நிகழ்வுகள்.!

நமது புகாரின் தொடர்  நடவடிக்கைகள்!!

பேக்கரிகளில் தேநீர் மற்றும்  உணவருந்த செல்லும் பொது மக்களுக்கு ஓர்  முக்கிய எச்சரிக்கை! கவனம்!!

சட்ட விரோதமாக செயல் படும் பேக்கரி!

குற்றவாளி யார்?

முத்துராஜ் ,வயது :47
உரிமையாளர்
விஜய லட்சுமி ஐயங்கார் கேக் ஷாப்
நால் ரோடு
பிச்சம்பாளையம் புதூர்
பி.என் ரோடு , திருப்பூர்
திருப்பூர் மாவட்டம்.

புகார் செய்யப்பட்ட காரணம் என்ன?

1.குளிர் பானங்கள் அதிகபட்ச விற்பனை விலையை ( MRP )விட கூடுதல் விலைக்கு விற்பனை!

2. ஈக்கள் மொய்க்கும் பொது சுகாதாரக்கேடு விளைவிக்கும் உணவு பொருட்கள் விற்பனை!

3.காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை!

4.தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை!

5.கடையின் முன்பு துர்நாற்றம் வீசும் கழிவு நீர் கால்வாய் கழிவுகள் .அதிலிருந்து உற்பத்தியாகும் ஈக்கள் பாதுகாப்பில்லாமல் வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களில் ஐக்கியம்.

நானும் நண்பர் ஒருவரும் மேற்காண் எதிரியின் பேக்கரிக்கு 8 மார்ச் 2018 அன்று  சென்றிருந்தோம்.

அங்கே கண்ட காட்சி அதிர்ச்சியும் அருவருப்புமாக இருந்தது.

கடை முழுவதும் உணவு பொருட்களில் ஈக்கள் மொய்த்து கொண்டிருந்தது.

எனவே எதுவும் சாப்பிடாமல் குளிர்பானம் மினி  ஸ்பிரைட் இரண்டு மட்டும்  வாங்கினோம்.

₹ 30 ரூபாய் கட்டணத்தினை உரிமையாளர் வாங்கினார்.

பாட்டிலில் அதிக பட்ச விற்பனை விலை ₹14 என குறிப்பிடப் பட்டிருந்தது.

இரண்டு பாட்டிலுக்கு ₹ 28 ரூபாய் தானே எப்படி கூடுதலாக  ₹ 2 ரூபாய் வாங்குகிறீர்கள் என்றோம் .

கூலிங் கட்டணம் ஒரு ரூபாய் சேர்த்து தான் அனைவரிடமும் வாங்குகிறோம் என்றார் .

MRP யை விட கூடுதல் கட்டணம் வாங்குவது சட்ட விரோதம் என்றோம்.

சட்டம் எல்லாம் எங்கிட்ட பேசக்கூடாது என்றார்.

சுகாதாரமில்லாமல் இப்படி கடை முழுவதும் ஈக்கள் மொய்க்கிறதே என்றோம்.

ஏன் உங்கள் வீட்டில் ஈ இல்லையா?

மாநகராட்சி கழிவு நீர் கால்வாயை உன்னால் சுத்தம் செய்ய முடியுமா?

வந்தயா குடிச்சியா போயிட்டே இரு என சக ஊழியர்கள் கோபத்துடன் பேசினார்கள்.

உணவு பாதுகாப்புத்துறையில் புகார் செய்வோம் என்றோம்.

ஆனால் அரசூழியர்களை காதில் கேட்க முடியாத மிகவும் கேவலமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார்கள் .

பேக்கரி நடத்துகிற ஒருவன் வாடிக்கையாளரிடம்  சார்வாதிகாரியைப்போல் செயல்பட்ட விதம் நமக்கு மீண்டும் அதிர்ச்சியை அளித்தது.

அவருடைய பேச்சினை வீடியோ செய்தோம். ( அந்த வீடியோவினை வெளியிட்டால் நேர்மையான அரசூழியர்களுக்கு வருத்தம் அளிக்கக்கூடும் என்ற காரணத்தினால் அதனை வெளியிட விரும்ப வில்லை)

இரண்டு ரூபாயினை வாங்காமல் போக மாட்டோம் என்ற போது மிகவும் ஆவேசத்துடன்  திருப்பி கொடுத்து விட்டார்.

பொது சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வரும் எதிரி மீது உணவு பாதுகாப்புத்துறை வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அன்றைய தினம் மாலை 4.54 மணிக்கு புகார் செய்தோம்.

உடனடியாக திருப்பூர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எதிரியின் கடைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

1. தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் : 150 பாக்கெட்டுகள்

2. காலாவதியான ஸ்னாக்ஸ் :11  பாக்கெட்டுகள்

3.பிரட் :2 பாக்கெட்

4. பாதுகாக்கப்படாத ஜிலேபி:  30

5. தடை செய்யப்பட்ட பாலிதின் கவர் :500 கிராம்

6. நியூஸ் பேப்பர் : 2 கிலோ

ஆகியவற்றினை கைப்பற்றி அழித்ததுடன் எச்சரிக்கை நோட்டீசும் கொடுத்துள்ளனர்.

மாநகராட்சி சுகாதாரத்துறையினரை கொண்டு பேக்கரியின் முன்புறம் உள்ள கழிவு நீர் கால்வாய் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தி உள்ளனர்.

ஆய்வு செய்த விபரங்கள் அனைத்தும்  போட்டோ எடுத்தும் கைப்பற்றி அழித்து குப்பை தொட்டியில் போடப்பட்ட பொருட்களின் பட்டியலினையும்  09.மார்ச் 2018 அன்று  இரவு 8.26 மணிக்கு நமக்கு  வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பி உள்ளார்கள்.

நமது புகாரின் தொடர் நடவடிக்கையாக
திருப்பூர் தொழிலாளர் துறை உதவி ஆய்வர் (சரகம் ||  ) 12.03.2018 அன்று நேரில் சென்று ஆய்வு மேற் கொண்ட போது அன்றைய தினம் ஸ்பிரைட்  குளிர்பானம் வாங்கிய வாடிக்கையாளர் செல்வம் என்பவரிடம் விற்பனை  விலையை விட  கூடுதலாக ஒரு ரூபாய்
வாங்கியதினை நேரில் உறுதி செய்துள்ளனர் .

தொழிலாளர் ஆய்வாளர் அவர்கள்  பொட்டல விதி மற்றும் எடையளவு சட்டத்தின் கீழ் குற்றத்தினை ஒப்புக்கொண்டு காம்பவுண்டிங் அதிகாரி விதிக்கும் அபராத தொகையினை ஏழு தினங்களுக்குள் காம்பவுண்டிங் அதிகாரி முன் நேரில் ஆஜராகி  விளக்க கடிதத்துடன் செலுத்த தவறினால் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும்  என  பேக்கரி உரிமையாளருக்கு காம்பவுண்டிங் விளக்க அறிவிக்கை நோட்டீஸ் ந.க.எண் ; 115 /2018 நாள் :12.03.2018. அன்று வழங்கி உள்ளார்கள்.

நமது புகாரின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு  பொது சுகாதாரக்கேட்டினை தடுத்து நிறுத்திய அலுவலர்களையும் ,பொட்டல விதி மற்றும் எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்ட தொழிலாளர் துறை உதவி ஆய்வாளருக்கும்  இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் சார்பில் வாழ்த்தி வரவேற்கிறோம்.  இது போல் அதிரடி நடவடிக்கைகள் தொடர வேண்டும் என எதிர் பார்க்கிறோம்.

கோரிக்கை ;

இது போல் பொது சுதாரக்கேடு ஏற்படுத்தி  திருப்பூரில்
சட்ட விரோதமாக இயங்கி வரும் பேக்கரிகள் ,உணவகங்கள் ஏராளமாக உள்ளது .

அனைத்தையும் உணவு பாதுகாப்பு அலுவலர்களும் , தொழிலாளர் ஆய்வாளர்களும், மாநகர சுகாதாரத்துறையினரும் கூட்டாக இணைந்து அதிரடி சோதனை செய்வதுடன் பொது சுகாதாரக்கேடு ஏற்படுத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் படி வேண்டுகிறோம்.

இந்த செய்தியின் மூலம் பொது மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

பேக்கரிகள்  மற்றும் உணவகங்கள்,பல்பொருள் அங்காடிகள், புற்றீசல் போல் வீதிக்கு வீதி செயல் பட்டு வரும் ₹ 20   ரூபாய் பொட்டலங்கள் விற்பனை செய்து வரும்  ஸ்வீட் ஸ்டால்கள் ,கடைகளில் இது போன்ற சுகாதாரக்கேடுகள் ஏதேனும்  காணப்பட்டாலோ அல்லது நீங்கள் பாதிப்புக்கு உள்ளானாலோ  பொது மக்கள்  உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை வாட்ஸ் ஆப் எண் :  94440 42322. எண்ணிற்கு புகார் தெரிவித்து நிவாரணம் பெறலாம்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மாவட்ட தலைவராக பொறுப்பு வகிப்பதினால் அவர்களிடமும் உங்கள் புகாரினை தெரிவிக்கலாம்.

நுகர்வோர் நலம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில் பொது நலன் கருதி வெளியிடுவோர் :

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
மாநில இணை செயலாளர்
இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
தொடர்புக்கு :
உலாபேசி : 98655 90723
மின்னஞ்சல் : nanjillaacot@gmail.com