Sunday 25 February 2018

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை.

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!

ஸ்பாட்பைன் ரசீது வழங்காமல் சட்ட விரோதமாக உடனடி அபராதம் வசூலிக்கும் திருப்பூர் மாநகர காவல் துறையினர்!

உதவி ஆய்வாளர்களின் அத்து மீறல்கள்!

அறிவிப்பு நோட்டீஸை மட்டும் வழங்கி
காசு பார்க்கும்  காவலூழியர்கள்!

தொடர்ந்து நடை பெற்று வரும் முறைகேடுகள்!

அதிகார திமிரா?

மக்கள் எதிர் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற துணிச்சலா?

அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

இதோ ஒருவர் கேள்வி கேட்டு விட்டார்!
காணொலியை பாருங்கள

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!

மோட்டார் வாகனச்சட்டப்படி பொது சாலையில் வாகனங்களை இயக்கும் போது வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும்.

தவறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் மற்றும் குற்ற வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் காவல் துறையினருக்கு உண்டு.

போக்குவரத்தினை கண்காணிக்க போக்குவரத்து காவல் துறை தனியாக செயல் பட்டு வருகிறது.

சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டியது வாகன ஓட்டிகளின் கடமை!

ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிப்பது இல்லை!

இது மிகுந்த வருத்தமளிக்கிறது.

இதனை காவலூழியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.

1. அசல் ஓட்டுநர் உரிமம்  நீதிமன்ற உத்தரவு படி  கையில் வைத்திருக்க வேண்டும் .

2. வாகன பதிவு சான்று நகல்.

3.வாகன காப்பீடு சான்று நகல்.

4.புகைச்சான்று

5.தலைக்கவசம் .

6.மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது.

7.கைபேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது.

8.இருச்சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.

9.பின் இருக்கையில் இருப்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்.

10.சிக்னல்களில் நிறுத்த கோட்டினை தாண்டி வாகனங்களை நிறுத்த கூடாது.

11.அதி வேகமாக வாகனம் ஓட்டக்கூடாது.

12.நகர எல்லைக்குள் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் தான் வாகனங்களை ஓட்ட வேண்டும்.

13.போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது.

14.வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லாத இடங்களில் நிறுத்தக்கூடாது.

15.ஒரு வழி பாதையில் எதிர் திசையில் வாகனம் ஓட்டக்கூடாது.

16.குறுகிய வளைவில் முந்தி செல்லக்கூடாது.

17.சிக்னல்களில் நிறுத்தி பச்சை விளக்கு எரிந்த பின் செல்ல வேண்டும்.

மேலும் இது போன்ற சாலை விதிகள் அனைத்தையும் தவறாமல் கடை பிடிக்க வேண்டும்.

இதனை முற்றிலும் வாகன ஓட்டிகள் கடைபிடித்தால் எந்த ஒரு காவலூழியர்களுக்கும் லஞ்சம் கொடுக்க தேவை இல்லை!

செய்தி ;

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலை அரசு மருத்துவமனை அருகில் செயல் பட்டு வரும் காவல் துறையினர் சோதனை சாவடியில் ஸ்பாட் பைன் ரசீது இல்லாமல் அறிவிப்பு நோட்டீஸ் மட்டும் வழங்கி  சட்ட விரோதமாக அபராதம் வசூலிப்பவர் திருப்பூர் மாநகர காவல் துறை திருப்பூர் தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயேந்திரன்!

பழனிக்குமார் என்பவர் கடமை தவறிய காவலூழியரை கேள்வி கேட்ட காணொலி!

ஸ்பாட்பைன் ரசீது இல்லாமல் அபராதம் வசூலிக்கும் அதிகாரம் அவருக்கு இருப்பதாக பீலா விடுகிறார்.

காவல் ஆய்வாளர் கையொப்பம் இட்டு வழங்கிய ரசீதினை எடுத்து வர மறந்து விட்டாராம்!

மறு நாள் வந்து வாங்கி கொள்ளும் படி சொல்கிறார்!

நூறு ரூபாயினை வைத்து பில்டிங்கா கட்ட போகிறார்.?

அவரது சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அவரது அல்லக்கை காவலூழியர் ஒருவர் கேள்வி கேட்கிறார்.

இது குறித்து மாநகர காவல் ஆணையர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
ஏற்கனவே இந்த கடமை தவறிய காவலூழியர் மீது ஒரு புகார் நிலுவையில் இருப்பதாகவும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தகவல் அளித்துள்ளார்கள்!

அறிவிப்பு நோட்டீஸ் மட்டும் வழங்கி அபராதம் பெற்றால் அதுவும் லஞ்சமே!

கொடுக்க வேண்டாம் லஞ்சம்!
மாறுங்கள் மாற்றுங்கள்!

உரிய ஆவணங்களுடன் சாலை விதிகளை கடை பிடியுங்கள்!

சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பணியில் ......

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி :98655 90723
26.02.2018.

Friday 23 February 2018

வாகன ஓட்டிகளே உஷார்!!

வாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்!

வாகன ஓட்டிகள் அனைவரும்  அவசியம் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு பதிவு.

கொஞ்சம் நீளமான பதிவு தான். ஆனால் உங்கள் சட்ட அறிவை தட்டி எழுப்பும்  விழிப்பறிவுணர்வு பதிவு என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.  

★மத்திய அரசால், நாடு முழுவதற்குமான ஒரு சட்டம் நாடாளு மன்றத்தில் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று விட்டால், அந்த சட்டமானது இந்தியா முழுவதும் பரவலாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவே கருத வேண்டும். அதாவது அச்சட்டத்தின்படி, இந்திய குடிமக்கள் நடந்து கொள்ள வேண்டும்.

★அப்படி நடக்காத குடிமக்களை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள பிரத்தியோக அரசு ஊழியர்கள், அச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள வழிவகைகளை கையாண்டு சட்டத்தை அமல்படுத்துவதில் அதிகப்படியான முனைப்பை காட்ட வேண்டும்.

★அப்படி முனைப்பு காட்டாமல் அல்லது கண்டும் காணாமல் இருந்த காரணத்தால், ‘‘குற்றம் எதுவும் நிகழ்ந்தால் அக்குற்றத்திற்கு என்ன தண்டனையோ, அதில் பாதி தண்டனையை அந்த அரசு ஊழியருக்கும் விதிக்க வேண்டுமென இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 119 அறிவுறுத்துகிறது’’.

★ஆனாலும், குற்றம் நிகழ்வதற்கு அடிப்படை காரணமாக இருக்கிற அரசு ஊழியர்கள் எவரும் தண்டிக்கப்படுவதில்லை. 

காரணம், இதுபற்றி கேள்வி எழுப்ப வேண்டிய மக்களிடம் இருக்கும் சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையே! கடமையுணர்வு இன்மையே!!

★பொதுமக்களுக்கு தேவையான ஊழியங்களை செய்வதற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நியமிக்கப்படும், அரசு ஊழியர்கள் மற்றும் பொது ஊழியர்கள் தங்களின் சட்டப்படியான கடமைகளை செவ்வனே செய்து விட்டால், நாட்டில் எவருக்குமே பிரச்சினை இருக்காது.

★ஆனால், தங்களுக்கு என்னென்ன சட்டக்கடமைகள் இருக்கின்றன என்பது அவ்வூழியர்களுக்கு தெரிவதில்லை என்பது ஒருபுறமிருக்க, தனக்காக ஊழியம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு இருக்கும் கொஞ்ச, நஞ்ச சட்ட விழிப்பறிவுணர்வு கூட, அவர்களை வேலை வாங்க வேண்டிய முதலாளிகளான மக்களுக்கு இருப்பதில்லை. அதனாலேயே, அவர்கள் நம்மை ஏய்த்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

★நாமும், அவர்கள் சொல்வதே, செய்வதே சரி என அவர்களின் நடைமுறையை, சட்டம் என்றே நம்பிக் கொண்டு இருக்கிறோம். நடைமுறை என்பது, ஒருவர் தனக்கு ஏற்றபடி தன்னிச்சையாக சட்ட விரோதமாக செயல்படுவதாகுமே தவிர, சட்டமல்ல.

★அதனால், அந்நடைமுறைக்கு நாம் எவ்விதத்திலும் கடமைப்பட்டவர்கள் அல்ல. ஏனெனில், சட்டக் கடமை என்பது முற்றிலும் வேறு. அதற்குதான் நாம் கட்டுப்பட வேண்டும்.

★சுருக்கமாக சொல்லப் போனால், மக்களுக்கு போதிய சட்ட விழிப் பறிவுணர்வு வந்து விட்டால், யாருமே அரசு ஊழியத்துக்கும், அரசை ஆளும் ஊழியத்திற்கும் வரமாட்டார்கள். இதற்கு பதிலாக பிச்சை எடுத்து பிழைத்துக் கொள்ளலாம் என்பார்கள்.

★ஆனாலும், இப்படியொரு நிலை, அரசு ஊழியத்திற்கு வந்து விட்ட, அதில் சொகுசாக வாழ்ந்து விட்ட, தங்களுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே தாம், அரசை ஆள்பவர்களும், அதன் ஊழியர்களும் சட்டக் கல்வியை அடிப்படை கல்வியில் கொண்டுவர மறுக்கிறார்கள்.

★இந்த முறையானது நம்மை அடிமையாக வைத்திருக்க நினைத்த ஆங்கிலேயர்களின் நியாயமற்ற கொள்ளை முறை என்பதாலும், இதற்கு நீதிபதிகளும் உடந்தையாக இருப்பதாலும் தாம், நீதிபதிகள் கொள்ளை கூட்டத்தின் தளபதிகள் என்று நீதியைத்தேடி... சாட்சியங்களை சேகரிப்பது எப்படி என்கிற ஐந்தாவது நூலில் குறிப்பிட்டு உள்ளேன்.

★இதனை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகளும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அவர்களுக்கும் கொடுத்துள்ளோம்.

★பொதுவாக, எந்த காவல்துறையாக இருந்தாலும், அக்காவல்துறையின் கடமை, குற்றம் நடைபெறும் முன்பாகவே அதனை தடுத்து நிறுத்துவது தானே தவிர மாறாக, குற்றம் நடந்தப்பின் நடவடிக்கை என்ற பெயரில் சமுதாயத்தை சீர்கேடு செய்து, தங்களின் பொருளாதாரத்தை சீர்த்தூக்கிக் கொள்வது அன்று.

★ஆனால், இப்பொருளாதார சீர்கேட்டு கடைமையைத்தான் காவல்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் ஆற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ‘கடமை’ என்பது உயர்தரமான செயலை குறிக்கும் சொல். ‘கடைமை’ என்பது கீழ்தரமான செயலை குறிக்கும்.

★ஆம்! சட்ட அறியாமையால் வாகன ஓட்டிகள் செய்கிற குற்றங்களே பரவாயில்லை என்கிற அளவில், சட்ட அறிவோடு போக்குவரத்து காவல்துறை ஊழியர்களால் புரியப்படும் குற்றங்களே மிக, மிக அதிகம்.

★இவர்களின் அடிப்படை நோக்கம், வாகன ஓட்டிகளை குற்றம் புரிய வைத்து அல்லது குற்றம் புரிந்ததாக மாயையை உருவாக்கி பணம் பறிப்பதே!

★ஓர் குறிப்பிட்ட இடம் ஒரு வழிப்பாதை என்பது, அவ்வழியாக தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும். அவ்வழியாக புதிதாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

★இது குறித்து, போக்குவரத்து காவல்துறை நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட அளவில் வைத்திருக்கும் அறிவிப்பு பலகையை விட, பல நூறு மடங்கிலான தனியார் விளம்பர அறிவிப்பு பலகைகள் வாகன ஓட்டிகளின் கண்களை ஆக்கிரமித்து விடவே, அவ்வாகன ஓட்டி, அவ்வொருவழிப் பாதையில் போய் விடுகிறார்.

★உடனே, ஒருவழிப்பாதையின் உள்ளே ஒளிந்து நிற்கும் போக்குவரத்து காவலர், திருடர்களை வலைவீசி பிடித்தது போல, அந்த அப்பாவி வாகன ஓட்டியை பாய்ந்து பிடித்து, வழக்கு பதிவு செய்வேன் என பீலா விட்டு பணத்தை கறந்து விடுகிறார்.

★ஆனால், உண்மையில் இவரின் கடமை என்ன?

★ஒரு வழிப்பாதை எந்த இடத்தில் ஆரம்பிக்கிறதோ, அந்த இடத்தில் தனது காவல். பணியை செய்து, தவறாக நுழைய முயல்வோருக்கு தக்க வழி காட்டுவதும், அதையும் மீறி சென்றால் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி, இனி சட்டத்தை மீறக்கூடாது என்கிற வகையில் பாடம் கற்ப்பிப்பது தான்.

★இதே போல, பிரதான சாலைகளில் தனது சிறிய அளவிலான சொகுசு கார்களை போக்குவரத்துக்கு சிறிது இடைஞ்சல் தரும் வகையில் அல்லது தராத வகையில் (அதுவும்  அருகில் போதுமான பார்க்கிங் வசதி இல்லாத போது) நிறுத்தி விட்டுச் சென்றால் கூட, அச்சொகுசு கார்களின் உரிமையாளர்கள், தங்களுக்கான கப்பத்தை கட்டாமல் எடுத்துச் சென்று விட முடியாத வண்ணம், அதற்காகவே பிரத்தியோகமாக தயாரித்து வைத்துள்ள கருவியைக் கொண்டு பூட்டுவதோடு, அவ்வாகனத்தை கண்காணிக்கும் விதமாக, முன்பாகவோ அல்லது பின்பாகவோ தங்களது பெரிய அளவிலான தங்களது கனரக வாகனத்தை நிறுத்தி வைத்து, உண்மையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவது போன்ற கேலிக்கூத்தான செயல்களில் போக்குவரத்து காவல் ஊழியர்கள் ஈடுபடுவது ஊரறிந்த ஒன்றுதான்.

★இவைகள் குற்றத்தை தடுக்கும் பொறுப்பில் உள்ள தாங்கள் பொறுப்பின்றி குற்றங்களை புரிந்து விட்டு, பாவம் ஒரு பக்கம் பழியொரு பக்கம் என்பது போல, ஏமாளிகள் மீது குற்றம் சுமத்தி பணம் பறிக்கும் செயல் என்றால், குற்றம் புரிந்தது போன்ற மாயையை ஏற்படுத்தி பணத்தையும் பறிக்கிறார்கள். எப்படி தெரியுமா?

★பொதுவாக, வாகன ஓட்டிகள் தனக்கான ஓட்டுனர் உரிமம் உட்பட, வாகனத்துக்கான ஆவணங்கள் அனைத்தையும் (பை, கை)யிலேயே வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என நினைக்கிறார்கள். இது தவறு. இந்த ஆவணங்களை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ அல்லது வேறு பாதுகாப்பான இடத்திலோ கூட வைத்திருக்கலாம்.

★ஒரு வேளை, வாகனச் சோதனையின் போது இந்த ஆவணங்கள் இல்லையென்றால், சம்பந்தப்பட அந்த ஆவணங்களை, குறைந்தது பதினைந்து நாள் கால அளவில் எப்போது வேண்டுமானாலும் சரி பார்ப்பதற்காக, தனது மேல்நிலை ஊழியரிடம் காண்பிக்க கோரி சட்டப்பூர்வ அறிவிப்பை தான் தர முடியுமே தவிர, உடனே அபராதம் விதிக்க முடியாது.  

★இவ்வறிவிப்பின்படி, அதில் குறிப்பிட்ட அக்காலத்திற்குள் நமக்கு நேரம் இருக்கும் போது காண்பித்து விட்டால், அந்த அறிவிப்பை ரத்து செய்து கொள்வார்கள். அப்படி காண்பிக்கா விட்டால் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். வழக்கு தொடுத்தாலும் கூட, வழக்கில் காண்பித்துக் கொள்ளலாம். இதனால், ஒன்றும் குடிமுழுகி போய்விடாது.

★இதெல்லாம், ஏதோ என் கற்பனையென்று நினைத்து விடாதீர்கள். சந்தேகம் இருந்தால், கீழேயுள்ள போக்குவரத்து காவலூழியர்கள் வழங்கிய அறிவிப்பை இருபுறமும் நன்றாகப் படித்துப் பாருங்கள். குறிப்பாக, நான் கட்டமிட்டு காட்டியுள்ள பகுதியைப் படியுங்கள்.  

★அதேபோல, ஓரு வாகனமானது திருடப்பட்டுள்ளது அல்லது ஒரு குற்றத்தை புரிந்து விட்டு தப்பிப்பதற்காக அவ்வாகனம் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான அடிப்படை முகாந்திரம் இல்லாமல், சாவியை எடுப்பதோ, ஆவண பரிசோதனைக்கு தேவையான சுமார் பதினைந்து நிமிட கால அளவிற்கு மேல் எந்தவொரு வாகனத்தையும் நிறுத்தி வைக்கவோ அல்லது பறிமுதல் செய்யவோ முடியாது.

★ஒரு வேளை பறிமுதல் செய்வதாக இருந்தால், அப்படி பறிமுதல் செய்ததற்கான காரண காரியத்தோடு கூடிய ஒப்புதலை, காவல் ஊழியர்கள் அவ்வாகனத்தை ஒட்டி வந்தவருக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

★ஆஹா! என்ன அருமையான யோசனைகள். இப்படியெல்லாம் சட்ட விதிகள் இருக்க கூடாதா என ஏங்காதீர்கள். நான் மேலே சொன்னவை யாவும் யோசனைகள் அல்ல. உண்மையில், இது தான் சட்ட விதிகளின் அறிவுறுத்தல்.

★நான் சொல்வதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால்,  போக்குவரத்து காவலர்கள் தரும் காவல்துறை அறிவிப்பின் இரண்டு பக்கங்களையும் படித்து பாருங்கள். எனது கூற்றின் உண்மை நன்றாகவே விளங்கும்.

★இது தலைக்கவசம் அணியாததற்கான அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்துவதாக கூறி பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதன்படி அபராதத்தை காவலூழியர்களும், நிதிபதிகளும் கேட்கவில்லை. இவர் கட்டவுமில்லை. 

பலே பாண்டியா... பலே! 

ஏன் தெரியுமா?

★நீதிமன்றத்துக்கு செல்வதெல்லாம் பெரிய வேலையென நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ, அப்படித்தான் காவலூழியர்களும், அரசூழியர்கள் உள்ளிட்ட பலரும் பயப்படுவார்கள். ஆனால், இது அதிகபட்சமாக அபராதம் என்றப் பெயரில் வழிபறி செய்யும் வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.   

★இப்படி கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு நொந்து அலைந்த கதையாக, கையில் தரும் காகிதத்தைக் கூட படித்துப் பார்க்காமலும், இது போன்ற சட்ட விசயங்களை தெரிந்து வைத்துக் கொள்ளாமலும் உரிமைகளை இழக்கிறோம்.

★ஆமாம், அது இல்லை, இது இல்லையென காவலூழியர்கள் அபராதம் கேட்கும்போது, முதலில் நீங்கள் எனக்கு கொடுக்க இருக்கும் அறிவிப்பில், உங்களுக்கு சொல்லப்பட்டுள்ள அறிவுறுத்தலை படிக்கவும் என அறிவுறுத்துங்கள்.

★ஒரு வேளை பின்பக்கத்தில் கட்டமிட்டு காட்டியுள்ள செய்திக்கு மாறாக வேறு தகவல் அச்சிடப்பட்டு இருந்தாலோ அல்லது அச்செய்தியே இல்லாமல் இருந்தாலோ, அது பொய்யான அறிவிப்பு என்பதை புரிந்து கொண்டு, இது நீங்களே அச்சிட்டதா என சம்பந்தப்பட்ட காவலூழியர்களை கேட்டால் மிரண்டு விடுவார்கள். 

★இதற்காக இவ்விரு பக்கங்களையும் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.  வேறு ஏதாவது ஏடாகூடமாக செய்தால், அங்கிருந்தப் படியே 100 க்கு தொடர்பு கொண்டு, சம்பவ இடத்தை குறிப்பிட்டு, ‘‘இங்கு காவலூழியருக்கான சீருடையில் இருக்கும் நபர், எவ்வளவு சட்ட விதிகளை எடுத்துச் சொன்னாலும் சட்டத்துக்குப் புறம்பாக நடக்கிறார். எனவே, போலியான நபராக இருப்பாரோ என சந்தேகிக்கிறேன்’’ என புகார் சொன்னால் போதும்.

★அதற்குப் பிறகு அங்கு வாகன சோதனையே நடக்காது. ஆம், வாகன ஓட்டிகளிடம் வழிபறி செய்து வசூலித்தது போதுமென மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார்கள் என்பதை, நானே பலமுறை செய்து காட்டியதும், கண்டதும் உண்டு.

★அப்படியானால், வாகன சோதனைகளின் அடிப்படை நோக்கந்தான் என்ன... குற்றங்களைத் தடுப்பதா என்றால் இல்லை. குற்றங்களை செய்யவிட்டு, அதனை காரணங்காட்டி வழிபறி செய்வதே!

★சரி, எதற்காக வழிபறி செய்கிறார்கள் என்றால், அவர்களுக்கு அரசால் கொடுக்கப்படும் தெண்டக் கூலியைப் போல, பலமடங்கு தொகையை மக்களிடம் வழிபறி செய்தாவது கொடுக்க வேண்டுமன்பது, அவ்வடிமை ஊழியர்களுக்கான எழுதப்படாத சட்டமாம்!

★ஆனால், சட்டம் என்பது நமது நல்வாழ்விற்கு வழி காட்டுவதுதானே தவிர, துன்பப்படுத்துவதற்கு அன்று என்பதற்கு ஓரிரு சட்ட விதிகளைப் பற்றி பார்ப்போம். 

குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 424 இன்படி, சட்டப்படியான விசாரணைக்கு பின் நீதிமன்றத்தால் அபராதம் மட்டுமே தண்டனையாக விதிக்கப்படும் போது, அதைச் செலுத்தவும் கூட, அறுபது நாள் கால அவகாசமும், முன்று தவனைகளும் இருக்கிறது.

இம்மூன்று தவனைகளில் முதல் தவனையை சரியாக முப்பது நாட்களுக்குள் விதிக்கப்பட்ட அபராதத்தில் சரி பாதியையும், மீதி பாதி தொகையை எப்படி வேண்டுமானாலும் இரு தவனைகளில் செலுத்தலாம். 

இப்படி செலுத்தாது போனால் மட்டுமே, சிறையில் அடைக்க முடியும். இப்படி அடைத்தப் பின்னுங்கூட, அபராதத்தை கட்டி விட்டு வெளியே வரலாம்.  

இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 69 இன்படி, இதிலும் சிறப்பு என்றால், ரூ 500 அபராதத்துக்கு ஐந்து நாள் சிறைவாசம் என வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் சிறையில் இருந்து விட்டால், ரூ 400 ஐக் கட்டினால் போதும் என சட்டம் நியாயமாகவே இருக்கிறது.  


★இவை பேரூந்தில் பயணச்சீட்டில்லாமல் பயணம் செய்யும் பயணிகள் உட்பட எந்தவொரு குற்ற நடவடிக்கையின் பேரில் அபராதம் விதிக்கப் பட்டாலும் பொருந்தும். ஆனால், மக்களின் ஊழியப் புறம் போக்குகளுக்கு இதெல்லாம் தெரிவது இல்லை. 

மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 178 இன்படி, பயணச்சீட்டில்லாமல் பயணம் செய்வது குற்றம் என பேரூந்தில் அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும். 

இதில், 178(1), 178(2) என இரண்டு  உட்பிரிவுகள், முன்னிருக்க வேண்டியது பின்னுக்கும், பின்னிருக்க வேண்டியது முன்னுக்கும் என உள்ளன.  

ஆமாம், உண்மையில் நடத்துனர்களின் ஊழியம் பயணிகளை எண்ணிப்பார்த்து பயணச் சீட்டை வாங்குவதே. பயணிகளுக்கு இந்தப் பொறுப்பு இருந்தாலும், பயணிகள் விவரிக்க இயலாத பல்வேறு சூழ்நிலைகளில் பயணிப்பவர்கள். ஆகையால், பயணச்சீட்டைப் பெற தவறி விடலாம். 

எனவே, பயணியிடம் பயணச்சீட்டை கேட்டு வழங்காத நடத்துனருக்கே பிரிவு 178(1) இன்கீழ் முதலில் அபராதம் விதிக்கப்பட வேண்டும். பின்னரே 178(2) இன்கீழ் பயணிக்கு விதிக்கப்பட வேண்டும். இதற்கான வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். 

★ஆனால், இந்திய வரலாற்றில் நடத்துனருக்கு அபராதம் விதிக்கப்பட்டதே கிடையாது என்பதற்கு நமது மடத்தனம்தானே காரணம்.

★இந்நிலையில், சட்ட முறையான விசாரணை இல்லாமல் எந்த நபரின் உயிரையோ அல்லது உரிமையையோ பறிக்க கூடாது என்ற இந்திய அரசமைப்பு கோட்பாடு 21 க்கு முற்றிலும் எதிராக, தாங்களே நீதிபதிகள் என்பன போன்ற மாயையை ஏற்படுத்தி, போக்குவரத்து காவல்துறை உடனடியாக பணத்தை பறிக்கிறது என்றால், நடமாடும் நீதிமன்ற நீதிபதிகளும் கூட போக்குவரத்து காவல்துறைப் போன்றே திட்டமிட்டு பணத்தை பறிக்கிறார்கள்.

★இதையே நாம் மற்றவர்களிடம் செய்தால், வழிபறிக் கொள்ளை என வழக்கு பதிவு செய்யும் இக்கூட்டு களவானி கொள்ளையர்கள், எந்தெந்த நாட்களில், எங்கு பணம் பறிப்பது, இதற்கு எந்த நிதிபதி பொறுப்பேற்பது என்று போடுகின்ற திட்டத்தை ஒவ்வொரு மாவட்ட மற்றும் மாநகர தலைமை குற்றவியல் நடுவர்களின் அறிவிப்பு பலகையில் ஒருவாரம் முன்பாகவே ஒட்டப்பட்டிருக்கும்.

★நீதியைத்தேடி... வாசகர் ஒருவர் தலைக்கவசம் அணியவில்லை என்று நடமாடும் நிதிபதி ரூ.100 ஐ அபராதமாக விதித்து உடனே கட்டு, இல்லையென்றால் சிறையில் அடைத்து விடுவேன் என மிரட்ட என்ன செய்வது என்று என்னிடம் உலாப்பேசியில் ஆலோசனை கேட்டார்.

★இதை அறிந்த போக்குவரத்து காவலர், ‘உன்னை மாதிரி எத்தன பேர பாத்திருக்கோம்...’ என இல்லாத பீலாக்களை எல்லாம் அவிழ்த்து விட்டது எனக்கும் கேட்டது.

★நானோ, நேராக நிதிபதியிடம் சென்று குற்ற விசாரணை முறை விதி 424 ஐ படித்து விட்டு, ‘பின் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்க சொல்லுங்கள்’ என ஆலோசனை சொன்னேன்.

அதை சொல்லுவதற்காக நடமாடும் நிதிமன்றத்துக்கு சென்ற போது, ‘அவரிடம் பீலா விட்டுக் கொண்டிருந்த காவலர் எங்கே போகிறாய் என கேட்க, நான் சொன்ன ஆலோசனையை அப்படியே சொல்லி நிதிபதியிடம் சொல்லப் போகிறேன்’ என வாசகர் சொன்னதும், ‘என்ன திடீர்னு சட்டமெல்லாம் பேசுற; நீ கிளம்பு, உனக்கு விதித்த அபராதத்தை நான் கட்டிக் கொள்கிறேன்’ என வாசகருக்கு கும்பிடு போட்டு வழியனுப்பி வைத்து விட்டார்.   

★சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தற்போது  தலைக்கவசம் அணியாத, இருசக்கர வாகனம் ஓட்டுநர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும், மேலும் தொடர்ந்தால், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவ்வப்போது தனது அறிக்கை மூலம் அச்சுருத்தி வருகிறது.

★தனது இச்செயலுக்கு கடந்தாண்டுகளில், தலைக்கவசம் அணியாததால் இறந்தவர்கள் என்ற இரு புள்ளி விபரங்களை முன் மொழிந்துள்ளது. ஆனால், அதனை நாம் வழிமொழிய இயலாது. ஏன்?

★உண்மையில், வாகனம் ஓட்டும் ஒவ்வொரு நபரும் அல்லது சவாரி செய்யும் ஒவ்வொரு நபரும் (அதாவது பின்னால் அமர்ந்து செல்பவரும்) தலைக்கவசம் அறிய வேண்டியது அவசியம் என மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் பிரிவு 129 வாகன ஓட்டிகளுக்கும், அதில் பயணம் செய்பவருக்கும் அறிவுறுத்துகிறது.

★பல்வேறு இருசக்கர வாகன விபத்துக்களில், அவ்வாகனத்தை ஓட்டியவர்கள் எவ்வித சிறு காயமும் இல்லாமல் தப்பித்து விடுவதும், பின்னால் அமர்ந்து சென்றவரே அமரர் ஆனதும், இங்கு கவணம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு பல்வேறு சூழ்நிலைகள் இருந்தாலும், ஒரு சில நிகழ்வுகளில் ஓட்டுனர் விழிப்பறிவுணர்வோடு வாகனத்தை ஓட்டும் போது, சமயோசித்தமாக செயல்பட்டு தப்பித்து விடுகிறார். இதில், தடை ஏற்படும் போது தப்பிக்க முடியாமல் போய் விடுகிறது.

★வாகனத்தை ஓட்டுபவருக்கு இருக்கும் இருக்கும் பொறுப்புணர்வு, பின்னால் அமர்ந்து செல்பவருக்கு இருக்க வேண்டிய அவசியமில்லாத நிலையில், ஓட்டுனர் தப்பித்தாலும் கூட, பின்னால் அமர்ந்து சென்றவர் அமரராகி விடுகிறார் என்பதை கருத்தில் கொண்டே, இவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

★இச்சட்டமானது 1988 முதல் அமலில் இருந்தாலும் கூட, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்குத் தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் அ(வ்வ)ப்போதும், தலைக்கவசம் அணிவது கெடு பிடியாக்கப்பட்டு பின் வழக்கம் போலவே (தேவையான வசூல் அல்லது வழக்குப்பதிவு முடிந்த பின்) கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப்போய், பின் தேவைப்படும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் உயிர்தெழுவது வாடிக்கையும், வேடிக்கையும் ஆகி விட்டது.

★தலைக்கவசத்தால், தலையில் அடிப்பட்டு ஏற்படும் உயிரிழப்பு தடுக்கப்படுகிறது என்றாலும் கூட, உடலின் மற்ற பகுதிகளில் ஏற்படும் ஊனத்தோடு நடைப்பிணமாக உற்றார், உறவினர், நண்பர்கள் என பலருக்கும் பாரமாய் உயிர்வாழ்வதை விட, உயிர் விடுவதையே விரும்புகிறோம் என்பது அப்படி பாதிக்கப்பட்டு, சொல்லொனா துயரத்திலும், அனைவரிடம் இருந்து தூரத்திலும் நடைபிணமாய் வாழ்ந்து வருபவர்களின் ஆதங்கமாகும்.

★தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டும் போது தங்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான இன்னல்கள், இடர்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்து, தலைக்கவசம் அணிய வேண்டும் என கட்டாயப்படுத்துவது எங்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாகவே உள்ளது எனவும், எனவே தலைக்கவசம் அணிவதும் வாகன ஓட்டிகளின் விருப்பத்தைப் பொறுத்தது என்கிற அளவில் உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

★இத்தள்ளுபடிக்கு அடிப்படை காரணம், மத்திய அரசு இயற்றியுள்ள மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக எவ்விதமான உத்தரவையும் பிறப்பிக்க உயர்நீதிமன்றத்துக்கு போதிய சட்ட அதிகாரம் இல்லாததுதான். ஆனால், இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இயலும் என்றாலும் கூட, அப்படிச் செய்ததாக தெரியவில்லை. பாதிக்கப்பட்டு நடை பிணமாக உள்ளவர்களுக்கு உச்சநீதிமன்றம் செல்வது  சாத்தியமானதும் அல்ல.

★இது போன்ற தர்க்கத்துக்கு உரிய சட்ட சங்கதிகளில், சம்பந்தப்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகளிடமே கருத்து கேட்டு, கருத்தொற்றுமை அடிப்படையில் சட்டத்தை செயல்படுத்துவது அல்லது தேவையானபடி திருத்துவது அல்லது நீக்குவது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைக்கு அரசு வித்திட வேண்டும்.

★இதைவிட சிறப்பானதாக, வாகன ஓட்டுனர் தலைக்கவசம் அணியாததால் விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு ஊனமுற்றாலோ அல்லது உயிரிழந்தாலோ மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே விபத்து காப்பீட்டு நஷ்ட ஈட்டை கோர முடியும் என்று, அரசு ஓர் அறிவிப்பின் மூலம் தலைக்கவசம் அணிவதும், அணியாததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது என்று இது தொடர்பான அனைத்து சச்சரவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்.

★வாகன விபத்துக்களுக்கு வாகன ஓட்டிகளின் அவசர வேகம் மட்டுமே காரணமல்ல. தங்களின் விலை மதிப்பில்லாத உயிரை மாய்த்துக் கொள்ள அல்லது உடலுறுப்புகளை சிதைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எவருமே வாகனம் ஓட்டுவதில்லை.

★ஆனாலும் விபத்தில் சிக்குகிறார்கள் என்றால், அடிப்படை காரணம், அரசின் மது விற்பனையே. மகிழ்ச்சியில் ஆரம்பித்து துன்பத்தில் முடிவதுதான், ‘மது’ என்ற மதுவின் உள்ளர்த்தம் அவ்விரு எழுத்துக்களிலேயே பொதிந்துள்ளது பலருக்கும் தெரிவதில்லை.

★இன்ப, துன்ப நிகழ்வு எதுவாக இருந்தாலும், மது விருந்து என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது. இப்படி விருந்தில் மது அருந்தியவர்கள் அல்லது வீட்டிற்கு தெரியாமல் அல்லது வீட்டில் வைத்து மனுவை அருந்தும் சூழ்நிலை இல்லாதவர்கள், தங்களின் இஷ்டம் போல் மதுவை குடித்து விட்டு, அதன் மயக்கத்தில் வீட்டிற்கோ அல்லது வேறு இடத்திற்கோ வாகனத்தை ஓட்டிச் செல்லும் போதுதான், பெரும்பாலான விபத்துக்கள் நிகழ்கிறது என்றால்,  இவ்விபத்துக்களில், மது அருந்தும் பழக்கமில்லாத பலரும் கூட, பலிகடா ஆக வேண்டிய பரிதாபமும், ஒவ்வொரு நிமிடமும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது.

★ஆம்! ஒரு வாகன ஓட்டி சட்ட விதிகளுக்கு உட்பட்டு, என்னதான் முறையாக வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருந்தாலும், எதிரே வருபவரோ அல்லது இவரை கடந்து செல்பவரோ தவறாக வந்தால் அல்லது கடந்தால், அதனால் ஏற்படும் விபத்தில் சிக்குவது சம்பந்தப்பட்ட இருவாகன ஓட்டிகளும்தானே தவிர, தவறாக வந்தவர் மட்டுமே அல்ல.

★விபத்துக்குரிய அடுத்த காரணங்களாக, சீர்கேடான சாலைகள், வாகன தணிக்கை மற்றும் இதர காரணங்களுக்காக, சாலைகளின் நடுவே திடீர் திடீரென முளைக்கும் காவல் துறையின் முறையற்ற தடுப்புகள், வேகத்தடைகள், சாலைகளில் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டு, முறையாக மூடப்படாத அதல, பாதாள குழிகள் என அடிப்படையான காரணங்கள் பல இருக்கும் போது அவைகளை களைய முனைப்பு எதையும் காட்டாமல் தலைக்கவசத்தின் மீது மட்டும் கண் வைத்திருப்பது போக்குவரத்து காவல்துறையின் கண்ணியமிக்க செயலாக தெரியவில்லை.

★மாறாக, அரசின் காலியாக உள்ள கஜானாவில், தங்களின் பங்கை நிரப்பி, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசிடம் நற்பெயரையும், பதவி உயர்வுகளை உயர்த்திக் கொள்ள நினைப்பவர்களின் அறிக்கையே இது என எண்ணத் தோன்றுகிறது.

★மேலும், தொடர்ந்து தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது முழுக்க முழுக்க சட்டத்தை தவறாக பயன்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது.

★மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 184 இன்படி, அபாயகரமான விதத்தில் வாகனத்தை ஓட்டி, பிறரின் உயிருக்கு ஊறு விளைவித்த குற்றத்துக்காக, அச்சட்டத்தின் பிரிவு 21-இன்படி, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் காலத்தில் தற்காலிகமாக ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவோ அல்லது விசாரணையின் முடிவில் தண்டிக்கப்பட்டால் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உரிமத்தை ரத்து செய்ய நீதிபதிக்கு மட்டுமே அதிகாரமிருக்கிறது.

★ஒரே காவல்துறை தலைவரின் தலைமையின் கீழ்தான், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகர மற்றும் மாவட்ட போக்குவரத்து காவல்துறையும் உள்ளபோது, சென்னை போன்ற ஒரு சில இடங்களில் மட்டும் இதுபோன்ற சட்ட நடவடிக்கையை எப்படி நாம் நியாயப்படுத்தி வழிமொழிய முடியும்?

நன்றி : சட்ட ஆராய்ச்சியாளர்

திரு.வாரண்ட் பாலா  அவர்கள் 

நாஞ்சில் கோ.கிருஷ்ணன் நிறுவனர் சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு, 363, காந்தி ரோடு, பெரியார் காலனி, திருப்பூர் -641 652 உலாபேசி :98655 90723 




.


Tuesday 20 February 2018

கல்விக்கட்டண நிர்ணயக்குழு தலைவர் அவர்களுக்கு!

#பகிரங்க #குற்றச்சாட்டு!!

  " L.K.G. கல்வி கட்டணம் ₹ 42000.00 நாற்பத்து இரண்டாயிரம்  தானாம் "
(இது சென்னையில் ஒரு பள்ளிக்கு மட்டும் நாளிதழ் செய்தி)

அரசு கல்வி கட்டண நிர்ணயக்குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி சிங்கார வேலு  அவர்களே!

இது நியாயம் தானா?

இது தான் அரசு நிர்ணயம் செய்யும் கல்விக்கட்டணமா? 

சாமானிய ஏழை நடுத்தர மக்களின் குழந்தைகள் இந்த கட்டணம் செலுத்தி கல்வி பயில முடியுமா?

உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பார்ப்போம்.

கல்வியை வியாபார நோக்குடன் நடத்தும் கல்வி கொள்ளையர்கள் பல அடிப்படை வசதிகள் செய்துள்ளோம்  என்றவுடன் ஆஹா! ஓகோ!  என அவர்களுக்கு சாதகமாக கட்டணம் நிர்ணயம் செய்துள்ளீர்களே!  இது நியாயம் தானா?

சமச்சீர் கல்வி கொண்டு வந்த பின்  ஏன் இந்த கட்டண முரண்பாடு?  

வேண்டாம் கல்வியில் பாகு பாடு?

10000 தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்துள்ள நீங்களோ உங்களது குழுவினரோ ஏதாவது ஒரு பள்ளியை நேரில் சென்று ஆய்வு செய்திருப்பீர்களா?

பள்ளி நிர்வாகிகள்  போலியான ஆவணங்களையும் சான்றிதழ்களையும் லஞ்சம் கொடுத்து வாங்கி   உங்களிடம் கொடுக்கின்றனர். 

அரசுத்துறை லஞ்ச அதிகாரிகள் கொடுக்கும் சான்றிதழ்கள் அனைத்தும் போலியானது என தெரிந்திருந்தும் கடமை தவறிய லஞ்சம் என்னும் மலம் தின்னும் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் அரசு விதிமுறைகள் அனைத்தும் முழுமையாக தனியார் பள்ளிகள் கடை பிடித்துள்ளதாக பொய்யான ஆய்வறிக்கை அளித்து அரசையும் மக்களையும் ஏமாற்றி வருகின்றனர்.

நீங்கள் ஆவணங்களின் அடிப்படையில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்வது வடி கட்டிய முட்டாள் தனமாக உங்களுக்கு தெரிய வில்லையா?

கும்ப கோணம் பள்ளி தீவிபத்து ஏற்பட்டு 94 மழலை குழந்தைகளை தீக்கிரையாக்கியதற்கு காரணம் யார்?

நீதிபதி சம்பத் கமிஷன் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் இல்லை என அறிக்கை அளித்த  2661 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ஏன் இது நாள் வரையிலும் இரத்து செய்யப்பட வில்லை!

மாணாக்கர் பாது காப்பு நலன் அரசாணை :
48. பள்ளி கல்வி (  எக்ஸ்:2.) 2004  மற்றும் 2012  விதி முறைகளின் படி செயல் படும் ஒரே ஒரு பள்ளியை உங்களால் காட்ட முடியுமா?

கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009. ன் படி எவனாவது செயல் படுகிறானா? 

கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் 1992. ன்  படி  எவனுமே நன் கொடை பெறுவதில்லையா?

நீங்கள் நிர்ணயம் செய்த கட்டணம் மட்டும் தான் வசூலிக்கிறார்கள் என உங்களால் சொல்ல முடியுமா? 

எனது கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது?

மொத்தத்தில் நீங்கள்  வேஸ்ட்!

உங்களுக்கு கொடுக்கும் ஊதியங்கள் அரசுக்கு இழப்பீடு!

மக்கள் ஏமாளியாக இருக்கும் வரையில் தான் உங்களுக்கு மதிப்பு!

கூடிய விரைவில் மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள் . அந்த பணியை தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

நான் கூறிய குற்ற சாட்டுகள் அனைத்தும் எனது அறிவுக்கு எட்டிய வகையில் நிரூபிக்கும் சுமை இந்திய சாட்சியச்சட்டம் 101 மற்றும் 105 ன் கீழ் எனக்கு இருக்கிறது என்பதினை நான் அறிவேன்.

இந்த குற்றச்சாட்டுகளை என்னால் நிரூபிக்க இயலாமல் போனால் இந்திய தண்டணைச் சட்டம் 211 ன் கீழ் நீதி மன்றம் வழங்கும் தண்டணையை மனதார. ஏற்று கொள்வேன் என சாட்சியச் சட்டம் 70 ன் கீழ் பிரம்மாண வாக்கு மூலம் அளிக்கிறேன்.

கல்வி விழிப்புணர்வு பணியில் .......!!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி
திருப்பூர் -641 652

நண்பர்களே!
பெற்றோர்களே!
உங்கள் குழந்தைகள் அரசு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணத்தில் படிக்க வைக்க  வேண்டுமா?

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில்  உங்கள் குழந்தைகளை  கல்விக் கட்டணம் இல்லாமல் இலவச கல்வி பயில வேண்டுமா?
அழையுங்கள் :

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
98655 90723
குறிப்பு : (தொடர்பு கொள்ளும் நேரம் தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும்)

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
98655 43303
(தொடர்பு கொள்ளும் நேரம் தினமும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி மற்றும் மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரையிலும்)

மாறுங்கள்! மாற்றுங்கள்!
கொடுக்க வேண்டாம் லஞ்சம்!
பதிவு செய்த  நாள் :20.02.2016

Sunday 18 February 2018

சட்ட விரோதமாக ஸ்பாட் பைன் வசூலிக்கும் திருப்பூர் காவல் உதவி ஆய்வாளர்!

திருப்பூர் மாநகர காவல்துறை 4.வேலம்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகம் அவர்களின் கவனத்திற்கு,

தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட திருப்பூர் அவிநாசி சாலை  அனுப்பர்பாளையம் புதூர் சிக்னல் அருகில் 18.02.2018 இரவு 10.30 மணி அளவில் வாகன சோதனை!

தங்கள் கையொப்பம் இட்ட ஸ்பாட் பைன் கேஷ் ரசீது மூலம் சட்ட விரோதமாக காவல் உதவி ஆய்வாளர்
அபராதம் வசூலித்து வருவதாக புகார் வரப்பெற்றுள்ளது. .

தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞர் பால முரளி என்பவரிடம் ₹100 ரூபாய் மற்றும் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாததினால் ₹500. சேர்த்து ₹600 ரூபாய் அபராதம் தங்கள் பெயரில் வசூலித்து இருக்கிறார்கள்.

தங்களிடம் இருக்க வேண்டிய. அபராத ரசீது உதவி ஆய்வாளரிடம் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

தங்கள் கையொப்பம் இட்டு  அபராதம் வசூலிக்க காவல் உதவி ஆய்வாளருக்கு அதிகாரம் வழங்கி உள்ளீர்களா?

அல்லது தங்களுக்கு தெரியாமல் நடை பெறுகிறதா? என ஐயப்பாடு எழுகிறது.

அறிவிப்பு நோட்டீசில் காவல் உதவி ஆய்வாளரின்  கையொப்பம் இடப்பட்டுள்ளது.

உடனடி அபராதம் ₹600 செலுத்தி ரசீது பெற்று திரும்பி அதே பகுதியில் செல்லும் போது மீண்டும் வாகன சாவியை புடுங்கி எடுத்து வைத்துள்ளனர்.

அபராதம் இப்ப தான் சார் செலுத்தினேன் என அந்த இளைஞர் கூறி உள்ளார்.

உதவி ஆய்வாளரை எதிர்த்து பேசுகிறாயா?

கேஷ் போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என மிரட்டி உள்ளார்.

காவல் ஆய்வாளர் கையொப்பம் இட்ட ரசீது மூலம் சட்ட விரோதமாக உடனடி அபராத தொகை வசூலித்ததுடன்,வாகன சாவியை எடுத்து வைத்து கொண்டும் கேஷ் போட்டு சிறையில் அடைத்து விடுவேன் என சட்டம் ஒழுங்கை பேணி காக்கும் உதவி ஆய்வாளர் வாகன ஓட்டியை மிரட்டுவது ஏற்புடையது தானா?

இத்துடன் அறிவிப்பு நோட்டீஸ் நகல், ஸ்பாட் பைன் கேஷ் ரசீது நகல் மற்றும் உதவி ஆய்வாளர் . மைக்கேல் என்பவர்  மிரட்டி பேசிய காணொலி தங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.

குறிப்பு : அறிவிப்பு நோட்டீசில் உள்ள எண் ஸ்பாட் பைன் கேஷ் ரசீதில் தவறாக உள்ளது. எனவே இந்த ரசீதும் போலியாக இருக்க வாய்ப்புள்ளது.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்.
18.02.2018

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தான் முக்கிய காரணம்!

📢 🏛  *அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் போராட்டங்களுக்கும்* *வன்முறைகளுக்கும்*
*முக்கிய காரணம்*
*தொழிற்   சங்கங்களே*
*என பகிரங்கமாக*
*குற்றம் சாட்டலாம்*
👎👎👎👎👎👎👎👎👎👎👎

*அரசு போக்குவரத்து கழக வாகனங்களை இயக்கும் பணியாளர்கள் மக்கள் நல பணியாளர்களே*

இவர்கள் எப்படி மக்கள் விரோதமாக செயல் பட முடியும்?

மக்கள் விரோதமாகவும் சட்ட விரோதமாகவும்  செயல் படுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்.

*போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணங்களையும் சலுகைகளையும்  பெறுவது அவர்களின் உரிமை*!

*அதனை வழங்க வேண்டியது அரசின் முக்கிய கடமை*!

*அந்த நிவாரணங்களை தொழிலாளர்களுக்கு  பெற்று தருவது தொழிலாளர்கள் சார்ந்து இருக்கும் அந்தந்த தொழிற்சங்கங்களின்  பொறுப்பாகும்*!

சொந்த சுய நல தேவைகளுக்காக ஒட்டு மொத்த மக்களையும் கஷ்ட பட வைப்பது நியாயமான செயலா?

*போராடுங்கள்!  நீதி கிடைக்கும் வரை தார்மீக வழியில் போராடுங்கள்*

நீதிமன்றமே ஓய்வூதிய நிலுவை தொகையை கொடுக்க சொல்லி உள்ளதாக தகவல்.

அராஜக வழியில் சட்ட விரோதமான போராட்டம் எதற்கு? 

*ஏன் ஒட்டு மொத்த தொழிற் சங்கங்களும் இணைந்து போராட முன் வர வில்லை*?

அப்படியானால் போராட முன் வராத தொழிலாளர்களுக்கு எந்த சலுகையும் தேவை இல்லையா?

இந்த தொழிற்சங்க நிர்வாகிகள் தனியாக கணிசமாக கவனிக்கப்பட்டிருப்பார்களோ?

*இது அரசியல் கபட நாடகம் என்பது தான் நிதர்சனமான உண்மை*! 

அரசியல் கட்சிகள் மூலம் தொழிற்சங்கம் நடத்தும்
அரசியல் வியாதிகள்  அப்பாவி தொழிலாளர்களை பகடை காயாக பயன் படுத்துவது எதற்காக

சக ஓட்டுநர்களை தாக்கியும்  அரசு பேருந்துகளான பொது சொத்துகளை சேதப்படுத்தும் அதிகாரத்தினை  இவர்களுக்கு கொடுத்தது யார்?

எதுக்கும் உதவாத பேருந்துகள் என இவர்களுக்கு இப்போது தான் தெரியுமா?

ஊழலை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்க காரணம் என்ன என இவர்களுக்கு தெரியாதா?

ஏதோ அனைத்தும் ஒரே நாளில் நடை பெற்ற சம்பவம் போல் தொழிற்சங்கத்தினர் பொங்கி பொங்கல் வைப்பதேன்? 

இத்தனை நாட்கள் எங்கு போய் இருந்தார்கள்?

*சிபாரிசு மற்றும் லஞ்சம் கொடுக்காமல் எத்தனை தொழிலாளர்கள் பணியில் சேர்ந்திருப்பார்கள் என தொழிற்சங்கத்தினர் சொல்ல தயாரா*?

ஒன்றுக்கும் உதவாத ஓட்டை பேருந்துகளை இயக்க போட்டி போடுவது ஏன்? 

*போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறதே! லாபத்தில் இயங்க வைக்க  தொழிற்சங்கத்தினர் ஏன் நடவடிக்கை மேற் கொள்ள வில்லை*?

உரிமைகளை பெற வன்முறை ஒரு போதும் தீர்வாகாது!

*ஒவ்வொரு ஆண்டும் அரசுடன் பல கட்ட  பேச்சு வார்த்தை நடத்தி வரும்  தொழிற்சங்கங்கள் ஏன் தொழிலாளர்களின் உரிமைகளை இன்றைய தினம் வரையில் பெற்றுத்தர  முன் வர வில்லை*?

கோரிக்கை  ;

*மக்கள் நலனுக்கு எதிராக தொடர்* *போராட்டத்தில் தொழிலாளர்களை தூண்டி விட்டு பொது மக்களுக்கு* *சொல்லொணா துயரத்தினை திட்டமிட்டு ஏற்படுத்தி வருவதுடன்*
*வன்முறையில் ஈடுபடும்* *தொழிற்சங்கங்களை அரசு  உடனடியாக தடை செய்ய வேண்டும்*

*அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையினை ஏற்று இந்த போராட்டத்தினை உடனடியாக ஆட்சியாளர்கள்  முடிவுக்கு கொண்டு வர வேண்டும்*

*ஒன்றுக்கும் உதவாத அரசு பேருந்துகளுக்கு போலி சான்றிதழ் வழங்கும் போக்குவரத்து துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்*

*அனைத்து அரசு  பேருந்துகளுக்கும் காப்பீடு செய்ய வேண்டும்*

*உபயோக படுத்த. இயலாத நிலையில் உள்ள தரமற்ற பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்க கூடாது*

*தரமான புதிய பேருந்துகளை வாங்க வேண்டும். அதனை முழுமையாக பராமரிக்க வேண்டும்*

*பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் பயண சீட்டு வாங்காமல் பயணிப்பதில்லை*

*அப்படியானால் பேருந்துகள் நஷ்டத்தில் இயங்க முக்கிய  காரணம் என்ன என்பதினை நேர்மையான  அரசு உயர் அதிகாரிகள் கொண்ட. சிறப்பு குழு அமைத்து  ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்*

*திறமை இல்லாத  ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகளை இயக்க அனுமதிக்க கூடாது*

*போக்கு வரத்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க இயலாமலும் வரவினை விட செலவுகள் அதிகம்  செய்து  அரசு  பேருந்துகள் நஷ்டத்தில் இயங்குவது  எதற்கு*?

*ஒரு தனியார் பேருந்து வைத்து சம்பாதித்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் பல பேருந்துகளை நஷ்டம் இல்லாமல் எப்படி இயக்க முடியும்*?

*நிர்வாக திறன் இல்லாத கடமை தவறிய. போக்குவரத்து துறை அதிகாரிகளும்,  ஆளுமை திறன் இல்லாத போராட்டத்தினை கட்டு படுத்த தவறிய  ஆட்சியாளர்களும் தான் பொது மக்களின் இந்த துயரங்களுக்கும்  வேதனைகளுக்கும் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்*!
💥💥💥💥💥💥💥💥💥💥💥
✍ நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
*ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்*
திருப்பூர் மாவட்டம்
☎ 98655 90723
08.01.2018

Monday 5 February 2018

பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!!

★பெற்றோர்களுக்கு  எச்சரிக்கை!!
***********************************
கல்வி நிறுவனங்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினரின் தடையின்மை சான்று எவ்வாறு  பெறுகின்றனர்.?

அரசு ஆணை எண் :122 மற்றும் 123 பள்ளிக்கல்வி(2)துறை நாள் :14.09.2004
தமிழ்நாடு தீயணைப்புத்துறை  நடைமுறை நூல் ஆணை எண்:248
தமிழ்நாடு தீயணைப்பு(ம)மீட்புப்
பணித்துறை இயக்குநர் குறிப்பாணை ந.க.எ.ண் :17483/இ1/2004;நாள் :29.09.2004

தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் எவ்வாறு இருக்க வேண்டும்
என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினர் அரசாணைகளில்  வகுத்துள்ள விதிமுறைகளின் படி பள்ளிக்கூட கட்டிடங்கள் நிறுவப்பட வேண்டும்.

அதனை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையின் நிலைய அலுவலர் /ஆய்வு அலுவலர் நேரில் சென்று முழுமையாக ஆய்வு மேற்கொண்டு அனைத்து அம்சங்களும் முறையாக இருக்கும் பட்சத்தில்  பள்ளி கட்டிடங்கள் நிறுவவோ, அல்லது பள்ளிக்கூடத்திற்கு அங்கீகாரம் வழங்கிடவோ  அந்த கட்டிடங்களில்  மாணவர்கள் கல்வி பயிலவோ ஏதொரு தடையும் இல்லை என "தடையின்மை சான்று " வழங்க வேண்டும்.

                       CHECK LIST
                       *************
1. கல்வி நிறுவனத்தின் பெயர் மற்றும் உரிமையாளர் பெயர் :

2. இட அமைவு மற்றும் விலாசம் :

3. தலைமை ஆசிரியர் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் :

4.அதிக பட்ச கட்டிட உயரம்.:

5.மொத்த தளங்களின் எண்ணிக்கை:

★கட்டிடம் :
***********
6. கட்டிடம் எந்த வகையில் கட்டப்பட்டது
Type= | = ||= ||| .//ச.வி..ம.ஊ.ஒ.அ. //

7.தற்காலிக கூறை வேய்ந்துள்ளதா?
ஆம் /இல்லை
இல்லை

8.மாணாக்கர்களின் மொத்த எண்ணிக்கை மொத்த தளபரப்பு சதுர மீட்டரில் நான்கு எண்ணிக்கைக்கு மிகுந்துள்ளதா?  ஆம் /இல்லை
இல்லை

9.வெளியேறும் வழியின் பரப்பின் தூரம் 22.5 மீட்டருக்கு மிகுந்துள்ளதா? ஆம் /இல்லை
இல்லை

10.ஒவ்வொரு தளத்திலும் குறைந்த பட்சம் இரண்டு வெளியேறும் வழிகள் உள்ளனவா?ஆம்/இல்லை .
ஆம்

11.வெளியேறும் வழிகள் கூடுமான வரையில் தள்ளிஅமைக்கப்
பட்டுள்ளதா? ஆம் /இல்லை
ஆம்

★கதவுகள் :
*************
12.45 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்பறையில் 2 கதவுகள் உள்ளனவா? ஆம் /இல்லை
ஆம்

13.வெளியேறும் வழிகள் உபயோகப்படுத்த கூடிய அளவில் சுத்தமாக இடையூறின்றி வைக்கப்பட்டுள்ளதா? ஆம் /இல்லை
ஆம்

★தாழ்வாரங்கள் :
*******************
14.தாழ்வாரங்கள் மற்றும் வெளியேறும் வழிகளின் உயரம் 2.5 மீட்டருக்கு மேல் உள்ளதா? ஆம்/இல்லை
ஆம்

15.அனைத்து படிகட்டுகள்/லிப்ட், தாழ்வாரங்கள் வெளியேறும் வழிகள் காற்றோட்டமாகவும் வெளிச்சமாகவும் உள்ளதா? ஆம் /இல்லை
ஆம்

★வெளியேறும் வழிகள் :
***************************
16.வகுப்பறைகளின் வெளியேறும் வழிகள் அகலம் 1 மீட்டருக்கு குறையாமலும் மற்ற அரங்குகளின் வெளியேறும் வழிகள் 2 மீட்டருக்கு குறையாமலும் உள்ளதா? ஆம்/இல்லை
ஆம்

17.வெளியேறும் வழிகளின் உயரம் 2 மீட்டருக்கு குறையாமல் உள்ளனவா?ஆம்/இல்லை
ஆம்

18.அனைத்து கதவுகளும் வெளிப்புறமாக திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா? ஆம் /இல்லை
ஆம்

19.தள்ளு கதவுகள்/இழுவை கதவுகள் அமைக்கப்பட்டுள்ளதா? ஆம்/இல்லை
இல்லை

20.மாடிப்படிகள் இறங்குமிடத்திற்கு மிக அருகாமையில் வெளியேறும் கதவு வழிகள் அமைக்கப்பட்டுள்ளதா?
ஆம்/இல்லை
இல்லை

★மாடிப்படிகள்:
*****************
21.500 சதுர மீட்டர் தள பரப்பு மற்றும் தரை தளத்துடன் 2 மாடி அதற்கு மேல் உள்ள பள்ளிகளில் குறைந்தது இரண்டு மாடிப்படிகள் அமைக்கப்பட்டுள்ளனவா? ஆம்/இல்லை
ஆம்

22.குறைந்த பட்சம் ஒரு மாடியாவது மாடியின் மேல் தளத்திலிருந்து தொடர்ச்சியாகவும் திறந்த வெளிக்கு வெளியேற்றும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளனவா? ஆம்/இல்லை
ஆம்

23.அனைத்து மாடிப்படிகளுக்குமான பிரயாண தூரம் ஒவ்வொரு தளத்திலும் 22.5 மீட்டருக்கு மிகாமல் உள்ளதா? ஆம்/இல்லை
ஆம்

24.உள் மாடிப்படிகள் ஏதேனும்  எளிதில் தீ பற்றும் பொருட்களால் கட்டப்பட்டுள்ளதா? ஆம்/இல்லை
இல்லை

25.ஏதேனும் கேஸ் பைப் மாடிப்படியினை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளனவா?
ஆம்/இல்லை.
இல்லை

26.கீழ்கண்ட அளவு  கோல்களின் வரையறைகளுக்கு உட்பட்டு மாடிப்படிகள் அமைக்கப்பட்டுள்ளனவா?

அ)மாடிப்படிகளின் அகலம் 1.5 மீட்டர் : ஆம்/இல்லை
ஆம்

ஆ) கால் வைக்கும் மாடிப்படியின் அகலம் 30 செ.மீ:  ஆம்/இல்லை
ஆம்

இ) மாடிப்படியின் உயரம் 15 செ.மீ
ஆம்/இல்லை
ஆம்

ஈ) மாடிப்படிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றுக்கும் அதிக பட்சம் 15 எண்ணிக்கை : ஆம்/இல்லை
ஆம்

உ) பாதுகாப்பு சுவரமைப்பின்
உயரம்1மீட்டர் : ஆம் /இல்லை
ஆம்

ஊ) பாதுகாப்பு அமைப்பில் இடை வெளிகள்  20 செமீ  : ஆம்/இல்லை
ஆம்

27.ஆய்வகங்கள் உரிய பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளனவா?
ஆம்/இல்லை
ஆம்

28.அபாயகரமான /நச்சு தன்மையுள்ள வேதி பொருட்கள் உரிய பாதுகாப்புடன் தனியே சேமிக்கப்பட்டுள்ளதா?
ஆம்/இல்லை
ஆம்

29.மின்சார டிரான்ஸ்பார்மர்  HT/LT Control Panels தனியாக உரிய பாதுகாப்புடன்அமைக்கப்பட்டு
உள்ளனவா? ஆம் /இல்லை
ஆம்

30.மாடிப்படிகள் மற்றும் வெளியேறும் வழிகளில் உள்ள விளக்குகள் தனி மின் சுற்றுடன் இணைக்கப்பட்டுள்ளதா? ஆம்/இல்லை
ஆம்

31. MCB/ELCB அமைக்கப்பட்டுள்ளதா?
ஆம்/இல்லை
ஆம்

32.ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களில் உள்ள கட்டிடங்களுக்கு உரிய எர்த்திங் வசதி செய்யப்பட்டுள்ளதா?
ஆம்/இல்லை
ஆம்

33.உரிய பாதுகாப்பு முறையுடன் கட்டிடத்தின் இடிதாங்கி நிறுவப்பட்டுள்ளதா? ஆம் /இல்லை
ஆம்

34.பிரதான வாயில்களின் அகலம் 4.5 மீட்டர் மற்றும் உயரம் 5 மீட்டருக்கு குறையாமல் உள்ளதா? ஆம்/இல்லை
ஆம்

35.கட்டிடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தீயணைப்பு ஊர்திகள் எளிதில் சென்று வர சாலை வசதி உள்ளதா? ஆம் /இல்லை
ஆம்

36.ஆசிரியர் மற்றும் மாணாக்கர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா? ஆம்/இல்லை
ஆம்

37.இந்த கல்வி ஆண்டில் பள்ளியில் தீத்தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டுள்ளதா? ஆம்/இல்லை
ஆம்

38.பள்ளியில் தீயணைப்பான்கள் விதிமுறைப்படி நிறுவப்பட்டுள்ளனவா?
(IS :2190:1992 மற்றும் தேசிய கட்டிட வசதி தொகுப்பு 2005, பகுதி 4 தீ மற்றும் உயிர் பாதுகாப்பு) //Laaco //
ஆம்/இல்லை

94 மழலை குழந்தைகள் தீயில் கருகி மடிந்த கும்ப கோணம் தனியார் பள்ளியில்  இந்த விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்பட வில்லை!

கும்ப கோணம் பள்ளி தீவிபத்து குறித்து
விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் சம்பத் தலைமையிலான விசாரணை ஆணையம்
2661 தனியார் பள்ளிகளை மட்டும் ஆய்வு செய்து அதிர்ச்சியூட்டும் ஆய்வு அறிக்கையினை தாக்கல் செய்துள்ளனர்.

அதில் கட்டிடம் உரிமம் பெறாமல் 1670 பள்ளிகளும், கட்டிட உறுதித்தன்மை இல்லாமல் 1557 பள்ளிகளும், சரியான மின் இணைப்பு செய்யப்படாமல் 1281 பள்ளிகளும், தீத்தடுப்பு உபகரணங்கள் இல்லாமல் 2386 பள்ளிகளும் முறைகேடாகவும் ,சட்ட விரோதமாகவும் இயங்கி வருவதினை உறுதி படுத்தி உள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் யார்?

ஒரு கணம் சிந்தியுங்கள் பெற்றோர்களே!

கல்வியாளர்கள் என்ற பெயரில் கல்வியை வியாபாரமாக்கி  கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளி நிர்வாகிகள்!

இவர்களுக்கென சில கோட்பாடுகளை வகுத்து  வைத்துக் கொண்டு மாணவர்களையும் பெற்றோர்களையும் கைப்பாவையாக்கி  கோலோச்சும் சூத்திரதாரிகள்!

இவர்கள் கொடுக்கும் லஞ்சத்தினை பெற்று கொண்டும்,

அரசு வழங்கும் ஊதியங்களையும் சலுகைகளையும் பெற்று கொண்டும்,

மாணவ மாணவிகளின் நலனில் அக்கறை இல்லாத கடமை தவறிய கல்வித்துறை மற்றும் இதற்கு பொறுப்பு வகிக்கும்  அரசூழியர்களும்
இவர்களை வழி நடத்தும் கேடு கெட்ட ஆட்சியாளர்களும் தான் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம்.

லஞ்சம் எனும் மலம் தின்னும் கயவர்கள்
இருக்கும் வரை கல்வி கொள்ளையர்களை தடுக்க இயலாது.

L.K.G வகுப்பு அட்மிஷனுக்காக தனியார் பள்ளிகளின் முன் இரவு பகலாக போட்டி போட்டு  காத்து கிடக்கும் பெற்றோர்கள் மாற வேண்டும்.

இந்த நிலை மாற வேண்டும்!  மாறித்தான் ஆக வேண்டும்!

மாறுங்கள்! மாற்றுங்கள்!

இது பெற்றோர்களாலும் இளைஞர்களாலும் தான் சாத்தியம்.

தனியார் பள்ளிகள் எவ்வாறு செயல் பட வேண்டும் எனவும் மாணாக்கர்களின் நலன் கருதி பல அரசாணைகளையும் உத்தரவுகளையும் ஆட்சியாளர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆனால் அதனை நடைமுறை படுத்த நேர்மையான ஊழியர்களை தான் காணோம்.

ஒரு சில நேர்மையான அரசூழியர்களும் ஆட்சியாளர்களினால் பழி வாங்கப்படுகின்றனர். தங்களது பதவிகளை தற்காத்து கொள்ள போராடுகிறார்கள்.

இந்திய அரசியலமைப்பு சாசனம் வழங்கி உள்ள உரிமைகளின் படி நாம் ஒவ்வொருவரும் சிறப்புடன் செயல் பட்டால் மட்டுமே அனைத்தும் சாத்தியமாகும்.

புலம்பி தவிப்பதினை விட்டு விட்டு எதிர்கால நம் சந்ததியினரான மாணவ செல்வங்களின் நலன் கருதி களத்தில் இறங்கி கை கோர்த்து போராட முன் வாருங்கள் பெற்றோர்களே!

கல்வி கொள்ளையர்களை அடையாளம் காணுங்கள்!

சட்ட விரோதமாக செயல் படும் கல்வி கூடங்களை ஆய்வு செய்யுங்கள்!

உங்கள் குழந்தைகள் கல்வி பயிலும் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதன் முழுமையான விபரங்களை எங்களுக்கு அனுப்புங்கள்.

கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் 1992
இன் படி கல்வி நிலையங்கள் நன்கொடை வசூலிப்பது தடை செய்யப்பட்டுள்ளது .

மற்றும்
தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதினை முறை படுத்துதல் சட்டம் -2009. இன் படி அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும்.

மற்றும்
இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் -2009 இன் படி 
தனியார் பள்ளிகள் LKG. வகுப்பில்  கல்வி  பயில 25% இலவச கல்வி அளிக்க வேண்டும். LKG. வகுப்பில் சேரும் குழந்தைகள் 8 ஆம் வகுப்பு வரையிலும் கல்விக்கட்டணம் செலுத்த தேவை இல்லை!

தனியார் பள்ளி நிர்வாகத்தினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள்
அரசு நிர்ணயம் செய்த கட்டணங்களை  செலுத்த விரும்பும் பெற்றோர்கள் இலவசக்கல்வி பெற விரும்பும் பெற்றோர்கள் மற்றும் கூடுதல் தகவல் பெற விரும்பும் பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மட்டும் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

"தனியார் பள்ளி கல்வி ' என்ற வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைய விரும்பும் நண்பர்கள்  98655 90723 என்ற எண்ணிற்கு உங்கள் விபரங்களை அனுப்பவும்.

கல்வி விழிப்புணர்வு பணியில் ..........
தலைமை அலுவலகம்
பதிவு எண் : 10/2015, 44/2015
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
LEGAL AWARENESS AND ANTI- CORRUPTION ORGANIZATION
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
மின்னஞ்சல் :nanjillaacot@gmail.com

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
உலாபேசி:98655 90723
தொடர்பு நேரம் : (தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை)

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
உலாபேசி:98655 43303
தொடர்பு நேரம் :( தினமும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை )