Thursday 7 April 2022

ஐந்து இலட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேலு கைது!

நாகர்கோவில் ஜவுளி கடை அதிபரிடம் ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேலுவை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Wednesday 6 April 2022

முற்றிலும் சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்கள் கட்டி தார்ச்சாலை அமைக்க கோரி திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல அலுவலக உதவி ஆணையருக்கு மனு!

நியாயம் தான் சட்டம் !                   
                  தனிக்கவனம்
        மிகவும் அவசரம்/ அவசியம்

நாஞ்சில் கோ.கிருஷ்ணன் 
நிறுவனர் 
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு 
363,காந்தி ரோடு 
பெரியார் காலனி 
திருப்பூர் - 641 652 
உலா பேசி:98655 90723
மின்னஞ்சல்: nanjillaacot@gmail.com

பெறுநர்: 
திரு.சுப்பிரமணியம் அவர்கள்
உதவி ஆணையர்
திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல அலுவலகம் 
அனுப்பர்பாளையம் 
திருப்பூர்- 641 652

வழி:
இந்திய அஞ்சல் துறையின் ஒப்புகையுடன் இணைந்த பதிவஞ்சல் மின்னஞ்சல்/ வாட்ஸ் ஆப்

கடிதம் எண்: LAACO/Nanjil / CORP/ZONE 1/TPR/ PWF/EL /0010 2022/ நாள்:19.03.2022

அய்யா,

பொருள் : முற்றிலும் சேதமடைந்த கழிவுநீர் / மழை நீர் கால்வாய்களை சீரமைத்து கட்டி தார்ச்சாலை அமைக்கக்கோரி அவசர அவசிய பொது நல மனு,

தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி பதினொன்றாவது வார்டு (பழைய வார்டு ஒன்று) தியாகி குமரன் புதுக்காலனி விநாயகர் கோயில் வீதியில் பாதாள சாக்கடை குழாய்  மற்றும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடை பெற்று முடிந்து தற்போது தார்ச்சாலை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.

மேற்படி 23 அடி அகலம் கொண்ட சாலையில் இரு புறமும் தரமில்லாமல் கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாய்கள் முற்றிலும் மிகுந்த சேதமுற்று உடைந்த நிலையில் உள்ளது.

சேதமடைந்த கழிவுநீர் / மழைநீர் கால்வாய்களை கட்டாமல் தார்சாலை அமைப்பதால் எந்த ஒரு பலனும் இல்லை.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் கால்வாய் கட்டும் போது  தார்சாலை சேதமாகி அரசுக்கு மீண்டும் நிதி இழப்புகள் ஏற்படும்.

எனவே தாங்கள் இந்த பகுதியை முழுமையாக ஆய்வு செய்து திட்ட மதிப்பீடு தயார் செய்து அவசர கால நிதி ஒதுக்கி இரு புறமும் புதிய கழிவுநீர் / மழை நீர் கால்வாய்களை கட்டிய பின்னர் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.

மாநகராட்சி நிதி வீணடிப்பு!

திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி ஆக அறிவிக்கப்பட்ட பின்னர் அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை குழாய் அமைத்தல்  மற்றும் புதிய குடிநீர் குழாய்  பதித்து குடிநீர் இணைப்பு அனைத்து வீடுகளுக்கும்  வழங்க பட்டு வரும் நிலையில் அந்த பணிகளை மேற் கொள்ளாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருப்பூர் மாநகராட்சி பதினொன்றாவது வார்டு  திலகர் நகர் மேற்கு பகுதியில் நான்கு வீதிகளில் அவசர கதியில் அவசர அவசரமாக இரவோடு இரவாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது.

இதன் மூலம் கடமை தவறிய அதிகாரிகள் மாநகராட்சிக்கு நிதி இழப்பினை தெரிந்தே ஏற்படுத்தியதின் காரணமாக மாநகராட்சி பணம்  வீணடிக்கப்பட்டுள்ளது.

தற்போது பாதாள சாக்கடை குழாய் அமைத்தல் மற்றும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளுக்காக மேற்படி பல இலட்சம் ரூபாய் செலவில் போடப்பட்ட  தார்ச்சாலைகள் முழுவதும் தோண்டப்பட்டு சாலைகள் அனைத்தும் முற்றிலும் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் மீண்டும் தார்ச்சாலை அமைக்கும் சூழ்நிலை உள்ளதால் மீண்டும் மீண்டும் அரசுக்கு இதனால் மிகுந்த நிதி இழப்புகள் ஏற்படுவதை காண முடிகிறது.

மேற்படி நிதி இழப்பினை அதற்கு பொறுப்பு வகிக்கும் கடமை தவறிய மாநகராட்சி அதிகாரிகள் மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய கோருகிறோம்.

மேலும் அவிநாசி சாலை அனுப்பர் பாளையம் புதூரில் இருந்து 
4 வேலம்பாளையம் வரை பிரதான சாலையில் செல்லும் பிரதான கழிவுநீர் கால்வாய் கட்ட சரியான திட்ட மதிப்பீடு செய்து கட்டப்பட வில்லை.

சக்தி தேவி பள்ளி முதல் சிறுபூலுவப்ட்டி ரிங் ரோடு பிரிவு வரை  437 மீட்டர் நீளம் வரை மட்டுமே கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது.

₹86 இலட்சம் செலவு செய்தும் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் கழிவுநீர் கால்வாய் சேதமுற்று காணப்படுகிறது.

பிரதான கழிவுநீர் கால்வாய் சரியான திட்ட மதிப்பீடு செய்யப்படாமல்  முழுமையாக கட்டி முடிக்கப்படாத காரணத்தால் மழை காலங்களில் கழிவுநீர் மழை நீருடன் கலந்து பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால்  இப்பகுதியை கடந்து செல்லும் பொது மக்களுக்கு பொது சுகாதார கேடுகளும் பொது போக்குவரத்து இடையூறுகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இது குறித்து முன்னாள் இன்னாள் முதல்வர்களுக்கு பல புகார்கள் அளித்தும் கடமை தவறிய ஆட்சியாளர்கள்/ அரசூழியர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நமது கோரிக்கை:
தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி ஒன்று முதல் 15 வார்டு அனைத்து பகுதிகளையும் தாங்கள் முழுமையாக ஆய்வு செய்து நேர்மையான/ திறமையான பொறியாளர்கள் மூலம் சரியான திட்ட மதிப்பீடு தயார் செய்து நிதி ஒதுக்கி பாதாள சாக்கடை குழாய் பதித்தல் மற்றும் புதிய குடிநீர் குழாய் பதித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்த பின்னர் சாலைகளின் இரு புறமும் மழை காலங்களில் மழை நீர் செல்ல கால்வாய்கள் கட்டி பழைய தார்ச்சாலை களை முற்றிலும் பெயர்த்து எடுத்து தரமான புதிய தார்ச்சாலைகள் அமைத்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு நிதி இழப்புகள் ஏற்படாத வண்ணம் தங்களின் கடமைகளை சிறப்புடன் ஆற்றி திருப்பூர் மிடுக்கான நகரத்தினை/ ஸ்மார்ட் சிட்டி உருவாக்க கோருகிறோம்.

நகரின் பல்வேறு பகுதிகளில் பழைய தார்ச்சாலைகளை பெயர்த்து எடுக்காமல் புதிய தார்ச்சாலைகள் போடப்பட்டு வருவதினையும் காண முடிகிறது. இது போன்ற முறைகேடுகளை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.

மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளின்  போது சாலைகளில் தோண்டப்படும் குழிகளை ஒப்பந்ததாரர்கள் சரியாக மூடப்படுவது இல்லை. இதனால் பாத சாரிகளும் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளும்  மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி விபத்துகள்  ஏற்படும் சூழல் உள்ளது.  இதனை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

நாள்:19.03.2022
இடம்: திருப்பூர்

                                                  ஒப்பம்



நகல்: 01.ஆணையர் அவர்கள்
            திருப்பூர் மாநகராட்சி அலுவலகம்

          02.பொது நலன் கருதி;
             சமூக வலை தளங்கள்

RTI 6(1) PIO CEO TPR சஞ்சீவ் குமார்

நியாயம் தான் சட்டம்
வாய்மையே வெல்லும்
RTI  ACT -2005 U/s 6(1)

தனிக்கவனம் /மிகவுமஅவசியம்/அவசரம்

மனுதாரர்: 
M.சஞ்சீவ் குமார்
த/ பெ R. மணி
49 வி.ஆர்.பி.நகர்
எம்.எஸ்.நகர் வடக்கு
திருப்பூர்,-641 603

பெறுநர்:
பொது தகவல் அலுவலர் அவர்கள்
தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005
முதன்மை கல்வி அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
திருப்பூர்-641 607 

வழி:
இந்திய அஞ்சல் துறையின் ஒப்புகையுடன் இணைந்த பதிவஞ்சல்

கடிதம் எண்: M.S.K. /RTI / U/s 6(1) / 001//PIO/CEO/ TPR/ /2022 
நாள்:       03.2022

பொருள்: தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005 சட்டப்பிரிவு 6(1) இன் கீழ் RTE / இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம்-2009  குறித்த சில தகவல்களை வழங்க கோருவது சம்பந்தமாக,

கீழ் காணும் தகவல்களை பத்தி வாரியாக வழங்கவும்.

01.இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம்-2009 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மத்திய அரசு ஒவ்வொரு கல்வி ஆண்டுகளிலும் என்னென்ன விதமான கல்வி கட்டண சலுகைகள் வழங்கி வருகிறது என்ற தகவல் வழங்கவும்.

02.இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம்-2009 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் LKG முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் குழந்தைகளுக்கு தமிழக அரசு ஒவ்வொரு கல்வி ஆண்டுகளிலும் என்னென்ன விதமான கல்வி கட்டண சலுகைகள் வழங்கி வருகிறது என்ற தகவல் வழங்கவும்.

03. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம்-2009 25 சதவீத ஒதுக்கீட்டில் சேரும் குழந்தைகளுக்கு அந்தந்த தனியார் பள்ளிகள் மூலம் என்னென்ன விதமான கல்வி கட்டண சலுகைகள் வழங்கப்படுகிறது என்ற தகவல் வழங்கவும்.

03.(அ) தனியார் பள்ளிகளில் LKG நுழைவு நிலை வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் எவ்வளவு ரூபாய் செலுத்த வேண்டும் என்ற தகவல் வழங்கவும்.

03.(ஆ) இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் குழந்தைகளிடமிருந்து தனியார் பள்ளிகள் என்னென்ன விதமான கல்வி  கட்டணங்கள் வசூலித்து கொள்ள அனுமதி வழங்க பட்டுள்ளது என்ற தகவல் வழங்கவும்.

04.(அ) தமிழ்நாடு RTE விதிகள்-2011 பிரிவு 5 இல் நோட் புக்ஸ் சீருடை இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதி தற்போது அமலில் உள்ளதா என்ற தகவல் வழங்கவும்.

04. ( ஆ) மேற்படி இந்த விதி தற்போது அமலில் இல்லை எனில் அதற்கான அரசு உத்தரவு / குறிப்பாணை/ சுற்றிக்கை ஏதேனும் இருந்தால் அதன் ஒளி நகல் வழங்கவும்.

04.(இ) மேற்படி விதி 5 இல் சொல்லப்பட்ட நோட் புக்ஸ் சீருடை உள்ளிட்டவை இலவசமாக அரசால் வழங்க படுகிறதா? அல்லது அந்தந்த தனியார் பள்ளிகள் தான் வழங்க வேண்டுமா என்ற தகவல் வழங்கவும்.

05. சிறுபான்மை பள்ளிகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து விதி விலக்கு அளிக்க காரணம் என்ன என்பதை சட்டப்பிரிவு  4(1) d இன் படி அதற்கான காரணங்களை தெரிவிக்கவும்.

06. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை அரசே செலுத்தி வரும் நிலையில் சிறுபான்மை பள்ளிகளுக்கு மட்டும் அதன் மூலம் எவ்வாறு இழப்பீடு ஏற்படுகிறது என்ற தகவல் வழங்கவும்.

07(அ) கட்டாய கல்வி உரிமை சட்டம்- 2009  25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில்  சேரும் ஏழை எளிய குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ்  ஸ்போக்கன் இங்கிலீஷ் ஹேன்ட் ரைட்டிங், கணிணி , யோகா , வாழ்க வளமுடன், மனவள கலை , பாண்டு, கராத்தே ,டேபிள் டென்னிஸ், டான்ஸ் ,கரிக்குலம் / எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் என்ற பெயரிலான  மேற்படி  இதர படிப்புகள் அனைத்தும்  இலவசமாக கற்று தரப்படுகிறதா என்ற தகவல் வழங்கவும்.

07.(ஆ) மேற்படி இதர படிப்புகளுக்கான  கட்டணங்களை பெற்றோர்கள் தான் செலுத்த வேண்டும் என்றால் ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும் மேற்படி  இதர கட்டணங்கள் அனைத்தும் அரசால்  நிர்ணயம் செய்யப்படுகிறதா?  அல்லது அந்தந்த தனியார் பள்ளிகள் தான் நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி வழங்க பட்டுள்ளதா  என்ற தகவல் வழங்கவும்.

07.(இ) மேற்படி கரிக்குலம் என்ற பெயரிலான இதர படிப்புகள் அனைத்தும் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் -2009 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் குழந்தைகளுக்கு கட்டாயமா என்ற தகவல் வழங்கவும்.

மேலே நான் கோரிய தகவல்கள் அனைத்தும் சட்டப்பிரிவு 4 (1) இன் கீழ் பொது தகவல்கள் தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டப்பிரிவு 6(1) இன் கீழ் நான் கோரிய தகவல்களை சட்டப்பிரிவு 7 (1) இன் கீழ் முப்பது தினங்களுக்குள் வழங்க கோருகிறேன்.

மேற்காண் தகவல்களை பெற விண்ணப்ப கட்டணமாக ரூபாய் பத்துக்கான நீதிமன்ற வில்லை ஒட்டியுள்ளேன்.

நான் கோரிய தகவல்களில் ஏதேனும் தகவல்கள் தங்கள் அலுவலகத்தில் இல்லை எனில் அதற்கான சட்டப்பிரிவு
6 (3)இன் கீழ் நடவடிக்கை மேற் கொண்டு அனைத்து தகவல்களையும் வழங்க கோருகிறேன்.

தங்களால் குறிப்பிட்ட தினங்களுக்குள் தகவல் வழங்காமல் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலோ அல்லது முழுமையுறாத குறை பாடான தகவல்கள் வழங்கப்பட்டாலோ நீதி வேண்டி சட்டப்பிரிவு 19(1) இன் கீழ் முதல் மேல்முறையீடு செய்யப்படும் என்பதினை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

நாள்:     03.2022 
இடம் : திருப்பூர்                        ஒப்பம்

Tuesday 5 April 2022

திருப்பூர் மாநகராட்சி குறை கேட்பு கூட்டம்.நல்லாறு பாதுகாக்க கோரி மனு!

"திருப்பூர் நல்லாறு "மற்றும் "நஞ்சராயன்" குளத்தினை பாது காப்போம்! மீட்டெடுப்போம்!!

மனுதாரர்:
ஊர் பொது மக்கள் சார்பாக
ஆ.பழனிக்குமார்
நல்லாறு பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர்
க.எண்:5/419 வேலன் நகர்
வெங்கமேடு
அங்கேரிபாளையம்
திருப்பூர்- 641 603
செல்:97910 50513

பெறுநர்கள்:
01.உயர்திரு.டாக்டர்.எஸ்.வினீத். இ.ஆ.ப
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
திருப்பூர்.

02.உயர்திரு.கிராந்தி குமார் பாடி இ.ஆ.ப.
ஆணையாளர் அவர்கள்
திருப்பூர் மாநகராட்சி

03.மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்கள்.
செய்தி துறை அமைச்சர்
தமிழ் நாடு

04. மாண்புமிகு.கயல் விழி செல்வராஜ் அவர்கள்
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்
தமிழ் நாடு

05.உயர்திரு.க.செல்வராஜ் அவர்கள்
திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர்

இடம்: திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாநகராட்சி
மக்கள் குறை கேட்பு முகாம்
ஜெகா கார்டன்
அங்கேரிபாளையம்
திருப்பூர்.

நாள்:30.12.2021
நேரம்: காலை11.00 மணி.

பொருள்: திருப்பூர் நல்லாற்றில் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றிடவும், திருப்பூர் மாநகராட்சி மூலம் கழிவுநீர் கலப்பதினை தடுத்திடவும், சட்ட விரோதமாக பதிக்கப்பட்டுள்ள சாய ஆலை கழிவு நீர் குழாய்களை அப்புற படுத்திடவும், 
நல்லாற்றின் மைய பகுதியில் நீர் வழி போக்குவரத்திற்கு இடையூறாக தமிழக மின்சார வாரியம் மூலம் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள/அமை க்கப்பட்டு வரும் உயர் மின் கோபுரங்களை அகற்றிடவும்,
நல்லாறு சென்றடையும் நஞ்சராயன் குளத்தில் செயல் படாமல் இருக்கும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை செயல் படுத்திடவும், நல்லாற்றினையும் நஞ்சராயன் குளத்தினையும் தூர் வாரி பாது காக்கக்கோரி பொது நல புகார் மனு,

ஆறு ,குளம் ,குட்டை, ஏரி வாய்க்கால்   போன்ற நீர்நிலைகளை பாது காப்பது இந்திய அரசியலமைப்பு சாசன கோட்பாடு 51 A இன் கீழ் வழங்கி உள்ள எமது கடமையாக கொண்டு இந்திய அரசியலமைப்பு சாசன கோட்பாடு 19(1) அ இன் கீழ் இம் பொது நல மனு நல்லாறு பாதுகாப்பு குழு சார்பாக  தாக்கல் செய்ய படுகிறது.

நல்லாறு:
உங்களின் மேலான பார்வைக்கு;

இது  அசுத்தம் நிறைந்த துர் நாற்றம் வீசும் மனித உயிருக்கு மிகுந்த சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வரும் கெட்ட ஆறாக காட்சி அளிக்கிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத்தில் இருந்து  திருமுருகன் பூண்டி , ஆத்து பாளையம் ,அங்கேரிபாளையம், பிச்சம்பாளையம் வழியாக ஊத்துக்குளி வட்டம் சர்க்கார் பெரியபாளையம் நஞ்சராயன் குளம் வரை செல்லும் மிக குறைந்த நீளம் கொண்ட ஆறு தான் நல்லாறு ஆகும்.

மழைக்காலங்களில் மட்டுமே நல்லாற்றில் மழை நீர் வழிந்தோடும்.

பெயர் தான் நல்லாறு!

ஆனால் ஆக்கிரமிப்புகளினால் ஆங்காங்கே குறுகிய ஓடைகளாக  மாற்றப்பட்டும் கழிவுகளாலும் கழிவு நீர்களினாலும் பொது சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வரும் மற்றொரு திருப்பூர் கூவமாக கெட்ட ஆறாக மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டது.

கடந்த சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நல்லாற்றில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கால் அவிநாசி சீனிவாசபுரம் பகுதியில் 150 க்கும் மேற்பட்ட  பலர் வீடுகளை இழந்து  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ஆஞ்சநேயர் மடத்தில் தங்க வைக்கப்பட்டதாக தகவல் தெரிய வருகிறது.

அவிநாசி முதல் திருமுருகன் பூண்டி வரையிலும் நல்லாறு வறண்டும் ஆக்கிரமிப்புகளால் குறுகியும் நீர் வழிப்பாதை ஆங்காங்கே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே ஒருசில இடங்களில் மட்டும் சிறிய அளவில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது.

ஆனால் திருமுருகன் பூண்டியில் இருந்து நஞ்சராயன் குளம் வரையில் தான் அனைத்து பகுதிகளில் இருந்தும் சாக்கடை கழிவு நீர் நல்லாற்றிற்குள் நேரடியாக கலக்கப்படுகிறது.

நல்லாறு முழுவதும் சாக்கடை கழிவு நீர்களும், சாய சலவை ஆலை கழிவு நீர்களும் கழிவுகளும் கொட்டப்பட்டிருப்பதினை காண முடிகிறது.

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி என தமிழக அரசால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் நல்லாற்றில் கழிவு நீரினை விட்டு மாசுபடுத்தி வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எங்கும் துர்நாற்றமும் ஆற்று ஓரம் வசிக்கும் மக்களுக்கு மிகுந்த சுகாதாரக்கேடும் ஏற்பட்டு வருவதினை நல்லாறு பாதுகாப்பு குழுவினரின் கள ஆய்வில் நேரில் காண நேரிட்டது.

இது நமக்கு மிகுந்த அதிர்ச்சியினையும் சொல்லொணா துயரத்தினையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் பல சாய ஆலை தொழிற்சாலைகள் நல்லாற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.

அந்த தொழிற்சாலைகளில் இருந்து சாயக்கழிவுகளையும் குப்பைகளையும் நேரடியாக ஆற்றில் தொடர்ந்து கொட்டி மாசு படுத்தி வருகிறார்கள்.

அவிநாசியில் இருந்து நஞ்சராயன் குளம் வரையில் ஆற்றின் இருபுறமும் அளவீடு செய்து அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பார பட்சம் பார்க்காமல் திருப்பூர் மாவட்ட பொதுப்பணிதுறை -நீர்வள ஆதாரத்துறையினர் அகற்ற வேண்டும் எனக்கோருகிறோம்.

நொய்யலாற்றில் திருப்பூர் சாய ஆலை கழிவு நீர் கலந்ததின் விளைவாக சுமார் மூன்று இலட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாய் போய் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

பின்னலாடை தொழில் மூலம் பல ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி தரும் திருப்பூர் என மார்தட்டி பெருமையாக சொல்லி கொண்டிருக்கலாம்.

பின்னலாடை தொழில் அதிபர்கள் மாட மாளிகைகளுடன் உல்லாசமாய் வாழ்கின்றனர்.இவர்களுக்கு எதனை பற்றியும் கவலை இல்லை.

அரசு வழங்கிய ₹200 கோடி செலவில் சாய ஆலை பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்த பிறகும் நல்லாறு மற்றும் நொய்யலாற்றில் சாயக்கழிவு நீர் எவ்வாறு கலக்கப்படுகிறது என்பது வருத்தம் அளிக்கிறது.

நல்லாறு பாதுகாப்பு குழுவினரின் கோரிக்கைகள் :

1.ஆடு ,மாடு ,கோழி ,பன்றி ,மீன் ,முட்டை போன்ற மாமிச கழிவுகளையும் குப்பைகளையும் கட்டிட கழிவுகளையும் வியாபாரிகளும் பொது மக்களும்  நல்லாற்றில் கொட்டுவதினை தவிர்க்கவும்/ தடுக்கவும் வேண்டுகிறோம்.

2.சாய ஆலை, பிளீச்சிங் ஆலை பிரிண்டிங் ஆலை ,போன்ற பின்னலாடை தொழில் சார்ந்த நிறுவனங்கள் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக நல்லாற்றில் கலப்பதினை தவிர்க்கவும்/ தடுக்கவும்  வேண்டுகிறோம்.

3.சாய ஆலைகளில் சேகரமாகும் கழிவுகளை வாகனங்களில் கொண்டு வந்து நல்லாற்றிலும் அதன் கரைகளிலும் கொட்டுவதினை தவிர்க்கவும்/ தடுக்கவும் வேண்டுகிறோம்.

4.தனியார் செப்டிக் டேங் (Sevege) கிளீனிங் லாரிகள் கழிவுகளையும் கழிவு நீரினையும் நல்லாற்றில் விட்டு  மாசு படுத்துவதை தவிர்க்கவும் /தடுக்கவும் வேண்டுகிறோம்.

5.மாநகராட்சி கழிவு நீர் அகற்றும் வாகனங்களிலும் குப்பை அள்ளும் வாகனங்களிலும் சேகரிக்கப்படும் கழிவுகளை நல்லாற்றில் கொட்டுவதினை தவிர்க்கவும் /தடுக்கவும் வேண்டுகிறோம்.

6.வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் 
இருந்து பொது கழிவு நீர்க்கால்வாய்கள் மூலம் வெளியேறும் கழிவு நீரினை நேரடியாக  நல்லாற்றில் கொண்டு சென்று நல்லாற்றினை மாசு படுத்தி வருவதினை திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் தவிர்க்கவும் /தடுக்கவும் வேண்டுகிறோம்.

உடனடியாக மாநகராட்சி பொது கழிவு நீர் கலப்பதினை தடுத்தால் மட்டுமே நல்லாற்றினை பாதுகாக்க முடியும்.

7.திறந்த நிலை கழிவு நீர் கால்வாய் கழிவு நீரினையும் மாற்று ஏற்பாடுகள் செய்து பாதாள சாக்கடை மூலம் பொது  சுத்திகரிப்பு நிலையம் கொண்டு சென்று  சுத்திகரிப்பு செய்ய மாநகராட்சி நிர்வாகம் அவசர /அவசிய  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம் .

8.நல்லாற்றின் இருகரை ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும்  உடனடியாக அப்புற படுத்த கோருகிறோம்.

9.சாய ஆலை கழிவு நீரினை நேரடியாக சட்ட விரோதமாக நல்லாற்றில்  கலக்கும் ஆலைகளின் உரிமத்தினை ரத்து செய்வதுடன் அதற்கு காரணமானவர்கள் மீது  இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு /IPC 431 இன் கீழ்  குற்ற வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு தண்டனை பெற்று தர  கோருகிறோம்.

10.கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள்  டயர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டுபவர்கள் மீதும் அதனை தீயிட்டு எரித்து மாசு மற்றும் பொது சுகாதார கேடு ஏற்படுத்துப வர்கள் மீதும் அபராதம் விதிப்பதுடன் குற்ற வழக்கு பதிவு செய்து தண்டனை பெற்று தர கோருகிறோம்.

11.நல்லாற்றின் கரையோரம்  மாநகராட்சி மூலம் நிரந்தர எச்சரிக்கை பலகைகள் வைக்க கோருகிறோம்.

12.மாவட்ட நிர்வாகம் சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்றி நல்லாற்றை தூர்வாரி சுத்தப்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்ய கோருகிறோம்.

13. நல்லாறு கலக்கும் நஞ்சராயன் குளத்தில் செயல் படாமல் இருக்கும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை செயல் படுத்தி கழிவு நீரினை சுத்திகரிப்பு செய்து நஞ்சராயன் குளத்தில் விடக்கோருகிறோம்.

14  நல்லாற்றின் குறுக்கிலும் இரு புறமும் தாறுமாறாக ஆற்றிற்குள் நீர் வழி பாதைக்கு இடையூறாக  பதிக்கப்பட்டுள்ள சாய ஆலை சுத்திகரிப்பு நிலையம் செல்லும் குழாய்களை உடனடியாக அப்புற படுத்தி ஆற்றின் மேற்பகுதியில் வெளியில் தெரியும் வகையில் உயரமாக மாற்றி அமைக்க கோருகிறோம்.

15. ஆற்றிற்குள் செல்லும் சாயக்கழிவு நீர் குழாய்களை பராமரிப்பு பணி என்ற பெயரில் சாய ஆலை உரிமையாளர்களினால் அவ்வபோது ஆற்றிற்குள் சாயக்கழிவு நீர் திட்டமிட்டு  கலப்பதினை தவிர்க்க/ தடுக்க கோருகிறோம்.

16.வர்த்தக நிறுவனங்கள் வியாபாரிகளின் மாமிச கழிவுகள் நல்லாற்றில் கொட்ட படுவதை தவிர்க்க/ தடுக்க மாநகராட்சியின் பாதுகாக்கப்பட்ட வாகனங்கள் மூலம் மாமிச கழிவுகளை தினமும் சேகரிக்க வேண்டுகிறோம்.

17.அங்கேரிபாளையம் பகுதியில் நல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணையின் உடைக்கப்பட்ட ஒரு பகுதி தடுப்பு சுவரினை கட்ட நடவடிக்கை எடுப்பதுடன் அனைத்து தடுப்பணைகளையும் பராமரிக்க   வேண்டுகிறோம்.

18.நல்லாற்றின் இருபுறமும் கரையை பலபடுத்த வேண்டுகிறோம்.

19.திருமுருகன் பூண்டியில் இருந்து அங்கேரிபாளையம் வரை நல்லாற்றின் கரையினை இணைக்கும் சாலையை செப்பனிட வேண்டுகிறோம்.

20.நல்லாற்றின் கரையோரம் பல ஆண்டுகளாக சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் சொல்லொணா துயரத்துடன் வசித்து வரும் ஏழை எளிய வீடற்ற மக்களுக்கு நிரந்தரமாக வசிக்க மாற்று இடம் அல்லது வீடு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழி வகை செய்ய கோருகிறோம்.

21. திருப்பூர் அங்கேரி பாளையம் வெங்கமேடு சாலையில் ஜெகா கார்டன் அருகில் உள்ள நல்லாற்று பாலத்தை கடந்து செல்லும் பாத சாரிகளுக்கும்  வி.கே. அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் இரண்டாயிரத்து நானூற்று பதினெட்டு மாணவ மாணவிகளுக்கும் ஆபத்து மற்றும் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் அதி நவீன தொழிற் நுட்பத்துடன் பாலத்தின் மீது நடை பாதை அமைத்து தர கோருகிறோம்.
 
22. நல்லாறு பாதுகாப்பு சம்பந்தமாக மேற்படி புகார் மனு நல்லாறு‌ பாதுகாப்பு குழு மூலம் 28.08.2019 அன்று திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல அங்கேரிபாளையம் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர் அவர்களின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாமில் மனு எண் 97 ஆக வழங்க பட்டும் இது நாள் வரையிலும் நல்லாற்றிலும்  நஞ்சராயன் குளத்திலும் எந்த ஒரு ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படாமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்க பட வில்லை என்பதினை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

நஞ்சராயன் குளம்:
தங்களின் மேலான பார்வைக்கு;

இதனை நஞ்சு கலந்து வரும் குளம் என அழைப்பதே நல்லது.

தமிழ்நாடு அரசு -பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் (முறைசாரா குளமாக ) வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டம் : திருப்பூர்

வட்டம் : ஊத்துக்குளி

ஒன்றியம் : ஊத்துக்குளி

கிராமம் : சர்க்கார் பெரியபாளையம்.

நீர் நிரப்பு பரப்பு : 96 சதுர மைல்கள்

நீர் நிரப்பு பகுதி :10.6 மில்லியன் சதுர அடி (அ) 243.34 ஏக்கர்

கொள்ளளவு : 89.34 மில்லியன் கன அடி (அ) 2.5289 மில்லியன் கன அடி

மிகு வெள்ள நீர் அளவு : 5422 கன அடி/விநாடி (அ) 153.48 கன மீட்டர் /விநாடி

குளத்தின் முழு நீர்மட்டம் : 37.50 அடி (அ)
11.43 மீட்டர்

குளத்தின் மிகு நீர்மட்டம் : 39.50 அடி (அ)12.4 மீட்டர்

கரையின் மேல்மட்ட அளவு : 45.50 அடி (அ) 13.87 மீட்டர்

மதகுகளின் எண்ணிக்கை : 02

மதகின் கிடை மட்ட அளவு 01: 17.32 அடி(அ) 5.28 மீட்டர்

மதகின் கிடை மட்ட அளவு : 02: 30.21 அடி(அ) 9.20 மீட்டர்

நீரின் ஆழம் : 20.18 அடி (அ)6.15 மீட்டர்

கரையின் நீளம் : 2297 அடி (அ)700.13 மீட்டர்

கலிங்கின் நீளம் : இடது 367 அடி (அ) 111.86 மீட்டர்

கலிங்கின் நீளம் : வலது 250 அடி (அ)78.94 மீட்டர்

ஆயக்கட்டு : 108 ஏக்கர்

பொதுசுத்திகரிப்பு நிலையம் :
உங்களின் மேலான பார்வைக்கு;

நஞ்சராயன் குளத்தினை புனரமைப்பு செய்து சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்க தக்க எரிசக்கி நிதியில் (Environment Protection Renewable Energy Devlopment Fund ) இருந்து ₹400 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரர்: சித்ரா ஹெம் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி 
109, அம்மன் சந்நதி வீதி,
செங்கோட்டை - 627 809.

மேற்காண் ஒப்பந்ததாரர் மூலம் ஆறு மாத காலத்தில் கட்டி முடிக்கப்பட்டதாக தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் நாள்,மாதம் ஆண்டு எதுவும் குறிப்பிடப்பட வில்லை.

நல்லாறு பாதுகாப்பு குழுவினர் நேரடி கள ஆய்வில் கண்ட அதிர்ச்சி தகவல்!!

மாசடைந்து வரும் நல்லாற்று கழிவு  நீர் நேரடியாக நஞ்சராயன் குளத்தில் கலக்காமல் இருப்பதற்காக தடுப்பணை கட்டி  குளத்தினை புனரமைத்து சுத்திகரிப்பு நிலையம் கட்டி நீரினை சுத்திகரிப்பு செய்து நஞ்சராயன் குளத்தில் விடுவதற்காக சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கதக்க எரிசக்தி நிதியில் இருந்து ₹400 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளது.

நல்லாறு நீரினை தேக்கி அங்கிருந்து சிறிய கால்வாய் மூலமாக சுத்திகரிப்பு நிலையம் கொண்டு சென்று சுத்திகரிப்பு செய்து மீண்டும் நஞ்சராயன் குளத்தில் செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவ்வாறு சுத்திகரிக்கப் படாமல் குளத்திற்கு  வெளிப்புறம் வழியாக கால்வாய் அமைத்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டு மீண்டும் நொய்யல் ஆற்றில் கலக்கப்பட்டு வருகிறது.

நீர் தேக்கத்தில் மதகுகள் அடைக்கப்பட்டிருந்தாலும் நீர் நிறைம்பி வழிந்து நேரடியாக குளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

நீர் தேக்கம் ழுழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்து சாய ஆலை மற்றும் கழிவு நீரின் துர்நாற்றம் வீசுகிறது.

பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும்  செயல் படாமல்  பூட்டப்பட்டுள்ளது.

243 ஏக்கர் நில பரப்பளவில் நஞ்சராயன் குளம்  கண்கொள்ளா காட்சி அளிக்கிறது.

குளம் முழுவதும் கருவேல மரங்கள் புதர் போல் மண்டி வளர்ந்துள்ளது.

அங்கும் சாய ஆலை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த அரிய வகை பறவைகளையும் காண முடிகிறது.

மீன்களை பிடிப்பதோ பறவைகளை வேட்டையாடுவதோ சட்டப்படி குற்றம் என பொது பணித்துறையால் வைக்கப்பட்ட தகவல் பலகை புதருக்குள் மறைந்துள்ளது.

ஆனால் பலர் கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக  தூண்டிலிலும் வலை விரித்தும் கழிவு நீரில் உயிர் வாழும் மீன்களை பிடித்து கொண்டிருக்கிறார்கள்.

ஆடு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.கழிவு நீரினை கால்நடைகள் குடிப்பதினையும் காண நேரிட்டது. கழிவுநீர் அருந்தும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

குளத்தின் விபரங்கள் அடங்கிய தகவல் 
பலகை உடைந்து தலை கீழாய் தரையில் தொங்கி கொண்டிருக்கிறது.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையினரின் அலட்சிய போக்கினால் சுத்திகரிப்பு நிலையம் செயல் படாமல் கழிவு நீர் குளத்திற்குள் நேரடியாக செல்கிறது.

₹400 இலட்சம் ரூபாய் அரசு  பணம்  வீணடிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி  ஸ்மார்ட் சிட்டி/ மிடுக்கான நகரம் திட்டம் செயல் படுத்த பட்டு வரும் நிலையில்

பொதுப்பணி துறை, 
மாசு கட்டுப்பாட்டு வாரியம்
மாநகராட்சி சுகாதாரத்துறை
வருவாய் துறை
காவல்துறை அதிகாரிகள் மூலம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் குழு அமைத்து மேற்படி நல்லாறு பாதுகாப்பு குழுவினரின் கோரிக்கைகளை ஆய்வு செய்து நல்லாற்று நீர் மாசடையாமல் பாது காத்திடவும், நீலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நஞ்சராயன் குளம் முழுவதும் நிறைந்து உபரி நீர் விவசாயத்திற்கும் பயன்படும் வகையிலும் நமது எதிர்கால சந்ததியினர் பயன் பெறும் வகையில் நல்லாற்றிலும்  நஞ்சராயன் குளத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றி மீட்டெடுத்து  தூர்வாரி சுத்த படுத்தி பாதுகாத்திடவும், நீர் நிலை  ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்திய உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் வழி காட்டுதல் படி ஆவண செய்ய கோருகிறோம்.

மேற்படி மனுவின் நகல்  பொது நலன் கருதி உரிய நடவடிக்கைக்காக பணிவுடன் சமர்பிக்கப்படுகிறது.

01.மாண்பு மிகு பொது பதிவாளர் அவர்கள்
மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம்.

02.மாண்புமிகு.மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி அவர்கள்
மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம்
திருப்பூர்.

இடம்: திருப்பூர்
நாள்:30.12.2021 
     
ஒப்பம்


ஆ.பழனிக்குமார்

மாநகராட்சி குறை கேட்பு கூட்டம் .கழிவுநீர் கால்வாய்.ராம் குமார் மனு.

வாய்மையே வெல்லும்

மனுதாரர் :
செ.ராம்குமார் 
சமூக ஆர்வலர்
த/ பெ.செல்லையா
159/12A, தியாகி குமரன் புதுக்காலனி
4 வேலம்பாளையம்
திருப்பூர்- 641 652
செல்:98655 90723

பெறுநர்கள்:

01.உயர் திரு‌.மாவட்ட ஆட்சியர் அவர்கள்

02.உயர் திரு. மாநகராட்சி ஆணையர் அவர்கள்
திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாநகராட்சி குறை கேட்பு முகாம்

நேரம்: காலை 10.00 மணி
நாள்:30.12.2021

இடம்,: கரிய காளியம்மன் திருமண மண்டபம்
4 வேலம்பாளையம்
திருப்பூர் ‌.

பொருள் : திருப்பூர் 4 வேலம்பாளையம் பிரதான கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றி மணீஸ் தியேட்டரில் இருந்து அனுப்பர்பாளையம் புதூர் வரையிலும் கழிவுநீர் கால்வாய் கட்டக்கோரி அவசர அவசிய பொது நல மனு,

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம், திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட 4 வேலம்பாளையத்தில் இருந்து அவிநாசி சாலை அனுப்பர் பாளையம் புதூர் வரை செல்லும் பிரதான கழிவுநீர் கால்வாயில்
திருப்பூர் மாநகராட்சி 1, 5, 14, 15. பழைய  வார்டு வேலம்பாளையம் பகுதிகளில் பொது மக்கள் பயன் படுத்தும் கழிவு நீர், மற்றும் மழை நீர் இந்த பிரதான கால்வாய் மூலம் தான் செல்கிறது.

4 வேலம் பாளையம் முதல் சிறு பூலுவப்பட்டி பிரிவு ரிங் ரோடு வரை 15 வது  வார்டுக்கும், சிறு பூலுவப்பட்டி பிரிவில் இருந்து மணீஸ் தியேட்டர் வரை 1 வது வார்டுக்கும், மணீஸ் தியேட்டரில் இருந்து கோவை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வரை 5 வது வார்டுக்கும் சேர்ந்த பகுதிகளில் இந்த பிரதான கழிவு நீர் கால்வாய் செல்கிறது.

இந்த கழிவு நீர் கால்வாய் திருப்பூர் வடக்கு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானதாகும்.

திருப்பூர் மாநகராட்சி மூன்று வார்டு பகுதிகளை கடந்து செல்லும் பிரதான கழிவுநீர் கால்வாய் கட்ட சரியான திட்ட மதிப்பீடு செய்யப்பட வில்லை.

இந்நிலையில் இயக்குதல் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்புதல் நிதி 2014-2015. மதிப்பீட்டு தொகை ரூபாய் 86.25 இலட்சம் சிறுபூலுவப்பட்டி ரிங்  ரோடு பிரிவில் இருந்து மணீஸ் தியேட்டர் வரை உள்ள 
முதல் வார்டுக்கு மட்டும் 437 மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் கால்வாய் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

ஒப்பந்ததாரர் ஹரி கன்ஸ்ட்ரக்சன் 20.07.2015 அன்று பணியை துவக்கி 19.10.2015 அன்று பணியை முடித்துள்ளார்.

கழிவு நீர் கால்வாய் தரமற்ற முறையில் கட்டப்பட்டது.

இதில் பெருமளவு ஊழலும் முறைகேடுகள் நடைபெற்றதாக  28.10.2015 அன்று சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஏற்கனவே புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த புகார் மனுக்கள் மீது இன்று வரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரிய வில்லை.

437 மீட்டர் நீளத்திற்கு 5 .5 அடி அகலம் 5.5 அடி உயரத்திற்கு கழிவு நீர்க்கால்வாய் கட்டி மேல் புறம் முழுவதும் மூடி விட்டார்கள்.

மழை காலங்களில் சாலையில் செல்லும் மழைநீர் கழிவுநீர் கால்வாய்க்குள் செல்லும்  வகையில் வடிகால் வசதி செய்யப்படாத காரணத்தினால்  சாலையிலேயே கழிவுநீர்  பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் தார்சாலை சேதமாகி வருகிறது.

தரமற்ற முறையில் கட்டிய கழிவு நீர் கால்வாய் ஆங்காங்கே உடைந்து விட்டது.

மணீஸ் தியேட்டரில் இருந்து கோவை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வரையிலும் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட வில்லை!

நெடுஞ்சாலை துறையில் எந்த அனுமதியும் பெறாமல் அந்த பகுதிகளில் வர்த்தகர்கள்,தொழிற்
சாலையினர் சிறிய அளவிலான சிமெண்ட் குழாய்களை பதித்து மண்ணால் மூடியும்  தரை பாலங்கள் அமைத்தும் உள்ளனர்.

மழை காலங்களில்  மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் செல்கிறது.

சரியான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு கழிவு நீர் கால்வாய் முறையாக அமைக்கப்படாததே இதற்கு முக்கிய காரணம்.

போக்குவரத்துக்கு  இடையூறு ஏற்படுத்தி வருவதுடன் ‌ பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சுகாதார கேட்டினையும், பொது தொல்லையையும் தெரிந்தே மாநகராட்சி முதல் மண்டல  நிர்வாகம் ஏற்படுத்தி கொண்டு இருப்பது மிகுந்த வேதனை   அளிக்கிறது.

சுத்தத்தை நோக்கி ஒரு படி மேலே!  என விளம்பர படுத்தும் திருப்பூர் மாநகராட்சியை தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சி என தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.

₹86.25 இலட்சம் செலவு செய்து தரமற்ற முறையில் கட்டப்பட்ட பிரதான கழிவு நீர் கால்வாய் பயனற்றதாக போய் விட்டது.

கோரிக்கை : 01 
 திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல உதவி ஆணையர் அவர்களிடம்‌ 30.11.2017 அன்று கொடுக்கப்பட்ட மனு மீது இன்றைய தினம் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

கோரிக்கை :02 
மழை காலங்களில் கழிவு நீருடன் மழை நீரும் கலந்து பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடும் போது 
பாதசாரிகளும் வாகன ஒட்டிகளும் பொது மக்களும் படும் துயரத்தை நேரடியாக வந்து கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

கோரிக்கை :03
பிரதான கால்வாயில் தனியாரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறிய குழாய் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுகிறோம்

கோரிக்கை :04
437 மீட்டர்  கழிவு நீர் கால்வாயின் மேல் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் உடைந்த  கழிவு நீர் கால்வாய் மேற் பகுதியை உடனடியாக பழுது நீக்க வேண்டுகிறோம் .

கோரிக்கை :05
437 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயில் சாலையில் தேங்கும் மழை நீர் செல்ல ஆங்காங்கே வடிகால் வசதி செய்ய வேண்டுகிறோம்.

கோரிக்கை ;06
மணீஸ் தியேட்டரில் இருந்து அனுப்பர் பாளையம் புதூர் வரையிலும் கழிவுநீர்  கால்வாய் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

கோரிக்கை:07. பிரதான சாலையில் இரு புறமும் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட வில்லை. ஒரு புறம் மட்டுமே பிரதான கழிவுநீர் கால்வாய் உள்ளது. 

எதிர் புறம் கழிவுநீர் கால்வாய் கட்ட படாத காரணத்தால் அப்பகுதி குடியிருப்புகள் தொழிற்சாலைகள் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் சட்ட விரோதமாக விடப்பட்டு வருகிறது.

இதனால் சாலையை கடந்து செல்லும் பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் தினம் தினம் பொது சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.

சட்ட விரோதமாக பொது சாலையில் கழிவுநீர் விட்டு பொது சுகாதார கேட்டினை தெரிந்தே ஏற்படுத்துபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

 கோரிக்கை:08.
சாலையின் எதிர் புறம் அனுப்பர்பாளையம் புதூரில் இருந்து சிறு பூலுவபட்டி ரிங் ரோடு பிரிவு வரையிலும்  திட்ட மதிப்பீடு/அளவீடு செய்து கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

கோரிக்கை:09.
வேலம்பாளையம் பிரதான சாலை ஒலிம்பிக் பேக்கரி எதிரில் அப்பன் என்கிற சுப்பிரமணி என்பவர் ஆழ் துளாய் கிணறு மூலம் சட்ட விரோதமாக நிலத்தடி நீரினை லாரிகள் மூலம் விற்பனை செய்து வருகிறார்.

தண்ணீர் பிடித்து செல்ல வரும் லாரிகள் பிரதான சாலையில் போக்குவரத்து க்கும் பொது மக்களுக்கும் இடையூறாக நிறுத்த படுவதால் மிகுந்த போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படும் சூழலும் உள்ளது.

எனவே தினம் தினம் பொது போக்குவரத்துக்கு  இடையூறினை தெரிந்தே திட்டமிட்டு ஏற்படுத்தி வரும் அவர்  மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

கோரிக்கை:10.
அதே பகுதியில் மூர்த்தி என்பவர் இரு சக்கர வாகனங்களை பிரதான சாலையில் வைத்து சட்ட விரோதமாக வாட்டர் சர்வீஸ் செய்து பொது சுகாதார கேட்டினை தெரிந்தே ஏற்படுத்தி வருகிறார்.
அவர் மீதும் உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேற்படி புகார் சம்பந்தமாக 28.8.2019 அன்று நடைபெற்ற முன்னாள் தமிழக முதல்வர் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் கொடுக்கப்பட்ட மனு மீதும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதினையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

கோரிக்கை வைக்காமலே மக்கள் பணி செய்வது தான் மாநகராட்சியின் கடமை!

நாமு‌ம் நமது கடமையாகவும் உரிமையாகவும் கருதி குறை கேட்பு முகாமில் தங்களின் சிறப்பு கவனத்திற்கு மேற்படி பொதுநல மனுவினை‌ கொண்டு வந்துள்ளோம்.

திருப்பூர் மாநகராட்சி தற்போது ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தப்பட்டு‌ பணிகள் படை  பெற்று வருவதால் 
மேற்படி இப்பகுதி மக்களின் கோரிக்கை களை உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

நகல்: தக்க மேல் நடவடிக்கைக்காக சமர்ப்பிக்க படுகிறது.

மாண்புமிகு முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி அவர்கள்
முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம்
திருப்பூர் மாவட்டம்.

நாள் :30.12.2021
இடம் : திருப்பூர் 

ஒப்பம்


(செ.ராம்குமார்)

செந்தில் மனித உரிமை ஆணையம்

ஒப்புகையுடன் இணைந்த பதிவு அஞ்சல் 

மனுதாரர் பெயர் :
N. செந்தில் குமார், 

வயது : 23 

தந்தை பெயர் :.நடராஜன்

இருப்பிட முகவரி :
18/421, M.K.P . லே-அவுட், 
சேயூர் ரோடு, சூளை
அவினாசி – 641 654,

மாவட்டம்: திருப்பூர் 

தொடர்பு எண்  : 77080 84736

எதிர் மனுதாரர்கள் :

01. திரு செல்வம் 
தலைமை காவலர்
திருப்பூர் தெற்கு காவல் நிலையம்
திருப்பூர் மாநகரம்

02. திரு. கார்த்திக் 
காவலூழியர்
திருப்பூர் தெற்கு காவல் நிலையம் 
திருப்பூர் மாநகரம்

03. திரு. அர்ச்சுனன் 
காவலூழியர்
திருப்பூர் தெற்கு காவல் நிலையம் 
திருப்பூர் மாநகரம்

04. திரு ஜெயசந்திரன் 
சார்பு ஆய்வாளர் 
திருப்பூர் தெற்கு காவல் நிலையம் 
திருப்பூர் மாநகரம்

05.  திரு. பிரகாஷ் 
காவல் ஆய்வாளர் 
திருப்பூர் தெற்கு காவல் நிலையம்
திருப்பூர் மாநகரம்

06.திரு.சஞ்சய் குமார் 
காவல் ஆணையர்
திருப்பூர் மாநகரம்

07. திரு டாக்டர் கே எஸ். பழனிச்சாமி 
முன்னாள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் 
இன்னாள் ஊரக வளர்ச்சி இயக்குநர் 
ஊரக வளர்ச்சி இயக்குநரகம் 
சென்னை

08 பொது தகவல் அலுவலர் /  துணை ஆணைய‌ர் 
மாநகர காவல் ஆணையர் அலுவலகம் 
திருப்பூர்

09.மேல்முறையீட்டு அலுவலர்/காவல் ஆணையர் 
மாநகர காவல் ஆணையர் அலுவலகம் 
திருப்பூர்

10.திரு.சுரேஷ் குமார் 
உதவி ஆணையர் 
சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு  அலுவலகம் 
திருப்பூர்

11.திரு அருண் குமார் 
தலைமை காவலர் 
சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு அலுவலகம் 
திருப்பூர்.

பெறுநர் :
தலைவர் அவர்கள்
மாநில மனித உரிமைகள் ஆணையம்    
143,P S  குமாரசாமி ராஜா சாலை, கிரீன்வேஸ் சாலை, அடையார், சென்னை - 600 028

அய்யா,

பொருள் : தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்பு சட்டம்- 2003 க்கு எதிராக கூடுதல் வட்டி வசூலித்ததுடன் எனது இருசக்கர வாகனத்தினை சட்ட விரோதமாக பறித்து சென்ற எதிரிகள்  மீது எதிர்மனுதாரர் களிடம் புகார் அளித்தும் எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யாமலும் எனது இருச்சக்கர வாகனத்தினை  மீட்டு தராமலும்  எதிரிகளுக்கு ஆதரவாக செயல் பட்டு வரும் எதிர்மனுதாரர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும், கந்து வட்டி கும்பல் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டு எனது இருச்சக்கர வாகனத்தினை மீட்டு தரக்கோரியும் எனக்கு மிகுந்த மன உளைச்சலையும், பொருளாதார இழப்பீட்டினையும் ஏற்படுத்திய எதிர்மனுதாரர்களிடம் இருந்து உரிய இழப்பீட்டு தொகையினை பெற்றுத்தர கோரியும் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் - 1993  சட்டப்பிரிவு 36/2  இன் கீழான மனு,

பார்வை : 
01.இருச்சக்கர வாகன பதிவு சான்று(R C BOOK) நகல் 

02.திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு நான் அனுப்பிய CrPc 154(3)   இன் கீழ் புகார் மனு நாள் :12.03.2019

03.தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு  7(1) இன் கீழ் 48 மணி நேரத்தில் தகவல் வழங்க கோரி நான் அனுப்பிய மனு நாள் :31.03.2019

04.தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு  19(1) இன் கீழ் நான் அனுப்பிய முதல் மேல் முறையீட்டு மனு நாள் :08.04.2019

05.திருப்பூர் தெற்கு காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்களின் 91 CrPc ன் கீழ் அழைப்பானை நாள் :22.04.2015 (ஆண்டு தவறாக உள்ளது) 
அனுப்பப்பட்ட நாள் :23.04.2019 
கிடைக்கப்பெற்ற நாள் : 25.04.2019 நேரம் :4 மணி 
விசாரணை நாள் :25.04.2019  நேரம் :காலை 10 மணி 

06.இந்திய அஞ்சல் துறையின்  ஆன்லைன் சான்று நகல்: 25.04.2019

07  ஏழு தினங்களுக்கு முன் விசாரணை அழைப்பானை அனுப்ப கோரிய எனது கடிதநாள்:03.05.2019

08. திருப்பூர் தெற்கு காவல்நிலைய காவல் ஆய்வாளர் அவர்களின் 91 CrPc  ன் கீழ் அழைப்பானை நாள் :04.05 .2015(ஆண்டு தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது) 
கிடைக்கப்பெற்ற நாள் :07.05.2019
விசாரணை நாள் :07.05.2019 நேரம் குறிப்பிட படவில்லை. 

09. .இந்திய அஞ்சல்துறை ஆன்லைன் சான்று நகல் :07.05.2019

10 .07.05.2019 அன்று தெற்கு காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக்கு சென்றது  குறித்து காவல் ஆய்வாளர் அவர்களுக்கு நான் அனுப்பிய விளக்க கடிதம் நாள் : 13.05.2019

11.பொது தகவல் அலுவலரின் பதில் கடித நாள் :17.05.2019 
அனுப்பபட்ட நாள் : 21.05.2019
கிடைக்கப்பெற்ற நாள் : 23.05.2019

12. .பொது தகவல் அலுவலரின் பதில் கடித நாள் :17.05.2019 
அனுப்பபட்ட நாள் : 21.05.2019
கிடைக்கப்பெற்ற நாள் : 23.05.2019

13. பொதுதகவல் அலுவலரும் மேல் முறையீட்டு அலுவலரும் ஒரே பதில் கொடுத்ததுடன்  நான் கோரிய தகவல்களை மறுத்திருப்பதின் மூலம் முழுமையான தகவல்களை வழங்கக்கோரி  மீண்டும் சட்டப்பிரிவு 19(1) இன் கீழ் முதல் மேல்முறையீட்டு இரண்டாவது கடிதத்தினை 28.05.2019 அன்று அனுப்பி உள்ளேன். 

14. திருப்பூர் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவி ஆணையர் அவர்களுக்கு 07.08.2019 அன்று அனுப்பப்பட்ட  கடிதம். 

15.சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவி ஆணையர் அவர்கள் 11.09.2019 அன்று கையொப்பமிட்டு 12.09.2019 அன்று அனுப்பிய விசாரணை அழைப்பாணை கடிதம். கிடைக்கப்பெற்ற நாள் :14.10.2019 

16. விசாரணை அழைப்பாணை காலதாமதமாக பெறப்பட்டதற்கான இந்திய அஞ்சல் துறையின் ஆன் லைன் சான்று. 

17.விசாரணை அழைப்பாணை காலதாமதமாக கிடைக்கப்பெற்றது குறித்து சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவி ஆணைய‌ர் அவர்களுக்கு 03.10  2019                              அன்று நான் அனுப்பிய கடிதம் 

18. எனது இருச்சக்கர வாகனத்தினை பறித்து சென்ற எதிரிகள்  கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ பதிவுகள் மற்றும் எதிர்மனுதாரர்கள் 04, 05 மற்றும் 11 பேசிய ஆடியோ நுண்பட சுருள்.

மனுதாரராகிய நான் மேற்காண் முகவரியில் வசித்து வரும் ஒரு இந்திய குடிமகன் ஆவேன்.

எதிரியான விக்னேஷ்வரன் என்பவர் கோவை  R.V.S.  கலைக்கல்லூரியில் 2013 – 2016 கல்வி ஆண்டில் என்னுடன் கல்வி பயின்ற கல்லூரி நண்பர் ஆவார் .

எனது தந்தையின் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ செலவுகளுக்கு பணம் தேவைபட்டதால் எதிரி விக்னேஷ்வரன் என்பவரிடம் 25.07.2018 அன்று ரூபாய் 25,000.(இருபத்தைந்தாயிரம்) கடனாக பெற்றேன்.

ஒரு வாரத்தில் திருப்பி கொடுப்பதாக சொன்னேன்.ஆனால் , என்னால் பணத்தினை திருப்பி கொடுக்க முடியவில்லை.

எனவே முதல் தவணையாக ரூபாய் 5000 , இரண்டாம் தவனையாக ரூபாய் 3000 , மூன்றாம் தவணையாக ரூபாய் 5000 , நான்காம் தவணையாக ரூபாய் 5000 , ஐந்தாம் தவணையாக ரூபாய் 5000 , ஆறாம் தவணையாக ரூபாய் 10,000 . ஆக மொத்தம் ஆறு தவணைகளாக ரூபாய் 33,000 திருப்பி கொடுத்து விட்டேன்.

5000 ரூபாய் மட்டும் வங்கி கணக்கு மூலமாகவும் , ஐந்து தவணைகள் நேரடியாகவும் கொடுத்துள்ளேன்.பணம் கடன் கொடுக்கும் போது வட்டி எவ்வளவு என்பது குறித்து விக்னேஷ்வரன்  என்பவர் எதுவும் கூறவில்லை.

எனினும் அசல் 25,000. 00 த்துடன் ஆறு மாத கால வட்டியாக சுமார் 
8,000. 00 ரூபாய் திருப்பி கொடுத்து விட்டேன்.

இந்நிலையில் 25,000 ரூபாய்க்கு வாரம் 1500 ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கான வட்டி மட்டும் 36,000 ரூபாய் ஆகி உள்ளது. 33,000 ரூபாய்தான் கொடுத்திருக்கிறாய், வட்டி 3000 ரூபாய் மற்றும் அசல் 25,000 ரூபாய் சேர்த்து ஆக மொத்தம் 28,000 ரூபாய் கொடுக்கும் படி எதிரி விக்னேஷ்வரன்  என்பவர் கூறினார்.

எனக்கு இது மிகுந்த அதிர்ச்சி அளித்தது. 

வாரம் 1500 ரூபாய்  வட்டி கொடுப்பதாக நான் ஒப்புக்கொள்ளவில்லை. 25,000 ரூபாய் அசல் மற்றும் வட்டியாக சுமார் ரூபாய் 8000 கொடுத்துவிட்டேன். இனிமேல் என்னால் கூடுதல் வட்டி கொடுக்க முடியாது என கூறினேன்.

இந்நிலையில் 20.01.2019 அன்று திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான உஷா தியேட்டர் அருகில் நான் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது எதிரி விக்னேஷ்வரன் என்பவர் முத்துப்பாண்டி என்பவருடன் வந்து எனது இருசக்கர வாகனத்தினை பறித்து எடுத்து சென்றுவிட்டனர்.

முழு பணத்தினையும் கொடுத்தால் தான் இருச்சக்கர வாகனத்தினை திருப்பி கொடுக்க முடியும் என கூறிவிட்டார்.

பார்வை :01  இல் காணும் எனது தந்தை நடராஜன் என்பவருக்கு சொந்தமான TN 39 BV 7722 ஹோண்டா HORNET என்ற ஒரு இலட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தினை பறித்து சென்றது அதிர்ச்சி அடைந்தேன்.

அதன் பிறகு மூன்று முறை வாகனத்தினை திருப்பி கொடுப்பதாக கூறி திருப்பூர் உஷா தியேட்டர் அருகே விக்னேஷ்வரன் :என்பவர் வரச் சொன்னார். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் செல்லும் போது என்னிடம் வாகனத்தை கொடுக்க மறுத்து விட்டார்.

எனது வாகனத்தினை பறித்து சென்ற குற்றம் நடந்த இடம் திருப்பூர் மாநகர காவல் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்ற காரணத்தினால் தெற்கு காவல் நிலையம் சென்று இது குறித்து 19.02.2019 அன்று புகார் அளித்தேன்.

திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் அன்றைய தினம் பணியில் இருந்த  எதிர்மனுதாரர் :01 தலைமை காவலர் செல்வம் மற்றும்  எதிர்மனுதாரர் :02  கார்த்திக், எதிர்மனுதாரர் :03 அர்ச்சுனன் என்ற காவலூழியர்கள் , எனது புகார் குறித்து கேட்டறிந்தனர்.

நான் புகார் அளித்த எதிரி  விக்னேஷ்வரன் என்பவரை காவல் நிலையம் வரும்படி 
அழைத்தனர் .

எதிரி விக்னேஷ்வரன்  என்பவருடன்  இந்து முன்னணியை சேர்ந்த சங்கர் கணேஷ் மற்றும் இருவர் வந்திருந்தனர்.

எதிரி விக்னேஷ்வரன் என்பவர் நான் பணம் எதுவும் திருப்பி கொடுக்க வில்லை என கூறினார். 
ஆடியோ ஆதாரம் உள்ளது என நான் தெரிவித்த போது பணம் வாங்கியதை ஒப்புகொண்டார்.

எதிரி விக்னேஷ்வரன் என்பவருடன் வந்தவர்கள்  இந்து முன்னனியை சேர்ந்த அப்பகுதி பிரமுகர்கள்  என சொன்னார்கள்.

எதிரியுடன் வந்தவர்கள் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் வைத்து என்னை மிரட்டினார்கள் . 
வாரம் 1500 ரூபாய் வட்டி கொடுத்து தான் ஆக வேண்டும் எனக் கூறினார்கள்.

அதற்கு  எதிர்மனுதாரர்கள் 01,02 மற்றும் :03   என்பவர்கள் ஆமாம் வட்டி கொடுத்து தான் ஆக வேண்டும். அப்போது தான் இருச்சக்கர வாகனத்தினை திருப்பி கொடுப்பார்கள் என்றார்கள் .

என்னால் கூடுதல் வட்டி கொடுக்க பணம் இல்லை என்றேன்.

அதற்கு எதிர்மனுதாரர் :01 தலைமை காவலர் செல்வம் என்பவர் பணம் கொடுக்க முடியாது என்றால் செத்து போ என ஒருமையில் பேசினார். 

இது எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்தது 

உதவி ஆய்வாளர் ஜெயசந்திரன் என்பவரும் எனது புகார் குறித்து விசாரனை செய்தார்கள்.

கூடுதல் வட்டி வசூலிப்பது தவறு என்றும் இருச்சக்கர வாகனத்தினை வாங்கி என்னிடம் கொடுக்குமாறு எதிர்மனுதாரர் :03 காவலூழியர்  அர்ச்சுனன் என்பவரிடம் கூறினார்.

ஆனால் ,எதிர்மனுதாரர் :03 காவலூழியர் அர்ச்சுனன் என்பவர் எனது வாகனத்தினை திரும்ப பெற்று தரவில்லை.

மற்றொரு காவல் உதவி ஆய்வாளரும் (பெயர் தெரிய வில்லை) எனது புகாரினை விசாரனை செய்து எதிரி விக்னேஷ்வரன் என்பவரிடம் செல்போனில் பேசினார்.

பெர்னாண்டஸ் என்ற காவலூழியரும் எனது புகார் குறித்து கேட்டு குறிப்பு எடுத்துக் கொண்டார்.சுமார் பத்து தினங்களாக  தெற்கு காவல் நிலையம் அலைந்தேன். 
எனது புகாரின் மீது எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.

எனது புகாரினை பெற்று மனு ரசீது வழங்கவோ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவோ இல்லை.

ஆளாளுக்கு வாய் மொழியாக தான் விசாரணை செய்தார்கள்.
எதிரியுடன் வந்த இந்து முன்னணியை  சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் வைத்தே கூடுதல் வட்டி கொடுக்க வேண்டும் என்றதை தெற்கு காவல் நிலைய காவலூழியர்கள்  வேடிக்கை பார்த்தனர்.கந்து வட்டிக்கு ஆதரவாக காவலூழியர்கள் செயல் பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

கந்து வட்டி கும்பலிடம் இருந்து எனது இரு சக்கர வாகனத்தை மீட்டு கொடுங்கள் என நீதி கேட்டு சென்ற எனக்கு கடமை தவறிய திருப்பூர் தெற்கு காவல் நிலைய காவல் ஊழியர்களால் நீதி மறுக்கப்பட்டுள்ளது.

எனது புகாரினை பெற்று உரிய மனு ரசீது வழங்கி அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை செய்திருக்க வேண்டும்.

புகார் அளித்த எதிரி விக்னேஷ்வரன்  என்பவருடன் எனக்கு சம்பந்தமே இல்லாத இந்து முன்னனியை சேர்ந்த மூவர் காவல் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு காவலூழியர்கள் முன்னிலையில் என்னை மிரட்டினார்கள் 

25,000 கடனுக்கு 36,000 ரூபாய் வட்டி மட்டும் கொடுக்க வேண்டும் என காவல் ஊழியர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதின் மூலம் கந்து வட்டி கும்பலுக்கும் திருப்பூர் தெற்கு காவல் ஊழியர்களூக்கும் தொடர்பு இருக்கும் என இதன் மூலம் உறுதியாக தெரிய வருகிறது.  

திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் எனக்கு நீதி மறுக்கப்பட்ட காரணத்தினால் நீதி வேண்டி மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு குற்ற விசாரணை முறைச்சட்டப் பிரிவு 154(3) இன் கீழ் மேல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பதிவு அஞ்சல் ஒப்புகையுடன் பார்வை:02 இல் காணும் புகார் மனுவினை  12.03.2019 அன்று அனுப்பி இருந்தேன்.

அதன் நகலினை எதிர்மனுதாரர் :07 திருப்பூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் அவர்களுக்கும் அனுப்பினேன்.

இந்நிலையில் எதிரி விக்னேஷ்வரனுடன் வந்த இந்து முன்னணியை சேர்ந்த சங்கர் கணேஷ் என்பவர் மீதும் புகார் அளித்த காரணத்தினால் மற்றொரு இந்து முன்னணி நிர்வாகி நித்யானந்தம் என்பவர் எனது மொபைல் போனுக்கு அழைத்து சங்கர் கணேஷ் மீது கையை நீட்டினாலே கையை வெட்டுவேன். நீ நேரில் வா புகார் ஏன் கொடுத்தாய் என கொலை மிரட்டல் விடுத்தார்.

மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு புகார் அனுப்பிய பின்னர் எதிரிகளிடமிருந்து எனக்கு கொலை மிரட்டல் வந்த காரணத்தினாலும் சுமார் 18 தினங்களாக எனது புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினாலும் எனது புகார் மனு குறித்து பார்வை :03 இல் காணும்  மாநகர காவல்துறை எதிர்மனுதாரர் :08 பொது தகவல் அலுவலரிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 7(1) இன் கீழ் 48 மணி நேரத்தில் 31.03.2019 அன்று தகவல் கோரினேன்.

எதிர்மனுதாரர் :08 கடமை தவறிய பொது தகவல் அலுவலர் அவர்களும் 48 மணி நேரத்திற்குள் எனக்கு பதில் வழங்க வில்லை. எனவே பார்வை :04 இல் காணும் தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 19(1) இன் கீழ் 08.04.2019 அன்று எதிர் மனுதாரர் :09 என்பவருக்கு முதல் மேல்முறையீடு செய்தேன்.

எதிர்மனுதாரர் :05 திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளர் அவர்களின் பார்வை :05 இல் காணும் CrPc 91  இன் கீழ் 22.04.2019 அன்று அனுப்பப்பட்ட  அழைப்பாணை கடிதம் விசாரணை நாளான 25.04.2019  அன்று பார்வை :06 இல் காணும் இந்திய அஞ்சலக சான்று மூலம் 25.04.2019 அன்று தான் கிடைக்கப்பெற்றது 

விசாரணை  கடிதம் காலதாமதமாக கிடைக்கடப் பெற்றதால் விசாரணை நாளான 25.04.2019 அன்றைய தினம் காலை 10 மணி விசாரணையில் கலந்து கொள்ள இயலாத காரணத்தினை எதிர்மனுதாரர்:05 காவல் ஆய்வாளர் அவர்களின்  மொபைல் எண்ணிற்கு அழைத்து தெரிவித்தேன். 

விசாரணைக்கு அழைக்கும் போது தான் வரவேண்டும் என தெரிவித்து விட்டார்கள்.

எனவே விசாரணை தேதிக்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக  கடிதம் அனுப்பக்கோரி பார்வை :07  இல் காணும் கடிதத்தினை எதிர்மனுதாரர் :05 காவல் ஆய்வாளருக்கு 03 05.2019 அன்று அனுப்பினேன்.

04.05.2019 தேதியிட்டு   CrPc 91  இன் கீழ் 07. 05.2019 அன்று விசாரணைக்கு வருமாறும், நான் கோரிய ஒரு வாரகால அவகாசம் வழங்க முடியாது என தெரிவித்து எதிர்மனுதாரர்:05  காவல் ஆய்வாளர் அவர்களிடம் இருந்து வரப்பெற்ற  பார்வை :08 இல் காணும் கடிதம் இந்திய அஞ்சலக ஆன்லைன் சான்று பார்வை:09 இன் மூலம் விசாரணை நாளான 07.05. 2019 அன்று தான் எனக்கு கிடைக்கப்பெற்றது.

அதில் விசாரணை நேரம் குறிப்பிடாத காரணத்தினால் மாலை சுமார் 7.00 மணி அளவில் திருப்பூர் தெற்கு காவல் நிலையம் சென்றேன்.

அங்கு அப்போது எதிர் மனுதாரர் :05 காவல் ஆய்வாளர் பணியில் இல்லை.

பணியில் இருந்த எதிர்மனுதாரர் :04 உதவி ஆய்வாளர் ஜெயசந்திரன் என்பவரிடம் விசாரணைக்கு நேரில் ஆஜராகி இருப்பதாக தெரிவித்த போது எதிர் மனுதாரர்:05  காவல் ஆய்வாளர் விடுப்பில் சென்றிருப்பதாகவும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் போது வருமாறும் தெரிவித்தார்.

இதனால் மிகுந்த மன துயரத்திற்கு ஆளாகினேன்

விசாரணைக்கு நேரில் ஆஜராகியது குறித்து பார்வை :10  இல் காணும் விளக்க கடிதத்தினை எதிர்மனுதாரர் :05 காவல் ஆய்வாளர் அவர்களுக்கு 13.05 2019 அன்று அனுப்பினேன்.

ஆனால் அதன் பிறகு எந்த விசாரணை அழைப்பாணையும் வரவில்லை.

இந்நிலையில் 31.03 2019  அன்று 48 மணி நேரத்தில் நான் கோரிய தகவல் பார்வை :11 இல் காணும் 23.05.2019 அன்று எதிர்மனுதாரர் :08 பொதுதகவல் அலுவலரிடம் இருந்து  சுமார் 52 தினங்கள் கடந்து வரப்பெற்றது.

08.04.2019 அன்று சட்டப்பிரிவு 19 (1) இன் கீழ் எதிர்மனுதாரர் :09 முதல் மேல்முறையீட்டு அலுவலருக்கு நான் அனுப்பிய மனுவிற்கு பார்வை :11 இல் காணும் 23.05 2019 அன்று பொதுதகவல் அலுவலரிடம் இருந்து சுமார் 44 நாட்கள் கடந்து பதில் வரப்பெற்றது.

பார்வை :10 மற்றும் 11 இல் ஒரே பதில் தான் வழங்கப்பட்டுள்ளது. 

அதில்  நான் கோரிய முழுமையான தகவல் வழங்கப்பட வில்லை. தங்களை விசாரணைக்கு ஆஜராக கோரி இரண்டு முறை 91 கு. வி. மு. ச. வின் கீழ் சம்மன் அனுப்பப்பட்டும் விசாரணைக்கு ஆஜராகாததால் மனு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் சொல்லொனா துயரத்தினையும் ஏற்படுத்தி உள்ளது.

எனவே பார்வை :12 இல் காணும் சட்டப்பிரிவு 19(1)  இன் கீழ் முதல் மேல்முறையீட்டு இரண்டாவது கடிதத்தினை 28.05.2019 அன்று 
எதிிர்மனுதாரர் :09 மேல்முறையீட்டு அலுவலருக்கு அனுப்பினேன்.

ஆனால் இன்று வரை எனக்கு பதில் வழங்க வில்லை.

சம்மன் காலதாமதமாக  அனுப்பப்பட்டதால் முதல் விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை என தெரிவித்தும்., இரண்டாம் விசாரணைக்கு ஒரு நாள் கூட கால அவகாசம் வழங்காமலும் இரண்டாம் விசாரணை நாளான 07.05.2019 அன்று விசாரணைக்கு நேரில் சென்ற போது விசாரணை அலுவலராகிய காவல் ஆய்வாளர் விடுப்பில் சென்று இருந்த காரணத்தினால் விசாரணை நடை பெறாத காரணம் குறித்தும் பார்வை :09 இல் காணும் கடிதத்தினை எதிர்மனுதாரர் :05 காவல் ஆய்வாளருக்கு அனுப்பினேன்.

திருப்பூர் தெற்கு காவல் நிலைய கடமை தவறிய காவலூழியர்களையும் எதிர் மனுதாரர்களாக பார்வை :02 இல் காணும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள காரணத்தினால் 
தான் எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என உறுதியாக தெரிய வருகிறது.

திட்டமிட்டு மறுக்கப்பட்ட நீதியை பெற வேண்டி பார்வை:13 இல் காணும் புகார் மனுவினை எதிர்மனுதாரர் :10  திருப்பூர் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவிஆணையர் அவர்களுக்கு  07.08.2019          அன்று
அனுப்பினேன் 

ஆனால் எதிர்மனுதாரர் :11 தலைமை காவலர் அருண் குமார் என்பவர் விசாரணைக்கு வருமாறு மொபைல் போனில் அழைத்ததின் பேரில் 23.08.2019 அன்று நேரில் சென்றேன். 

நான் புகார் அளித்த எதிரிகள்  வர வில்லை. 

அன்றைய தினம் எதிர்மனுதாரர்:10 உதவி ஆணையர் இல்லாத காரணத்தினால் விசாரணை நடை பெற வில்லை. 

எதிர்மனுதாரர் :11 தலைமை காவலர் அருண்குமார் எனது கோரிக்கையினை கேட்டு விட்டு இருச்சக்கர வாகனத்தினை பறித்து சென்ற எதிரிகள் மீது வழக்கு போட எங்களுக்கு அதிகாரம் இல்லை. வண்டியை வாங்கி கொடுப்போம் என்றும் மீண்டும் அழைப்பதாக தெரிவித்தார். 

நான் அங்கிருந்து வந்த பிறகு இந்து முன்னணியை சேர்ந்த எதிரிகள் வந்திருப்பதாகவும் அவர்கள் தெரியாமல் கொலை மிரட்டல் விட்டதாக தெரிவித்ததாகவும் என்ன செய்யலாம் என மொபைல் போனில் அழைத்து எதிர் மனுதாரர்:11 என்பவர் கேட்டார். 
நான் விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தேன். 

இந்நிலையில் பார்வை :14  இல் காணும் 13.09.2019 அன்று விசாரணைக்கு வருமாறு அனுப்பிய கடிதம்  11.09.2019 அன்று எதிர்மனுதாரர் :10 என்பவரால் கையொப்பமிடப்பட்டு  12.09.2019 அன்று பதிவஞ்சலில் அனுப்பப்பட்டு பார்வை :15  இல் காணும் இந்திய அஞ்சலக ஆன்லைன் விபரபடி 14.09.2019 அன்று எனக்கு கிடைக்கப்பெற்றது.

திருப்பூர் மாநகர காவல்துறையினர் எனக்கு தீங்கு செய்யும் நோக்கத்துடன் செய்து வரும் தவறினை சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவும் செய்திருப்பது  எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் சொல்லொணா துயரத்தினையும்  ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் எதிர்மனுதாரர் :11  தலைமை காவலர் அருண்குமார் 30.09.2019 அன்று அழைத்து விசாரணைக்கு வராதது குறித்து கேட்டு விட்டு  01.10.2019 அன்று உதவி ஆணையர் விசாரணைக்கு நேரில் வரும்படி கூறியதாக தெரிவித்தார். 

ஆனால்  நான் 01.10.2019 அன்று நேரில் சென்று காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரையிலும்  சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு அலுவலகத்தில் காத்திருந்தேன். 

அன்றைய தினமும் எதிர்மனுதாரர்: 10 அலுவலகம் வரவில்லை. 

நான் புகார் அளித்த எதிரிகளும் வரவில்லை. 
எதிரிகள் போனை எடுக்க வில்லை என தலைமை காவலர் தெரிவித்தார்கள். 

எதிர்மனுதாரர்:10 உதவி ஆணையர் வந்த பிறகு மீண்டும் விசாரணைக்கு அழைப்பதாக கூறி என்னை எதிர்மனுதாரர் :11 தலைமை காவலர் அனுப்பி விட்டார். 

எனவே  விசாரணை கடிதம் காலதாமதமாக வந்தது குறித்து விளக்க கடிதத்தினை பார்வை:16 இல் காணும் 03.10.2019 அன்று  எதிர்மனுதாரர் :10 உதவி ஆணையர் அவர்களுக்கு அனுப்பினேன். 

அதன் நகலினை காவல்துறை தலைவர் அவர்களுக்கும், உயர்நீதிமன்ற மனித உரிமை பிரிவு  பதிவாளர் அவர்களுக்கும் அனுப்பியுள்ளேன். 

கந்து வட்டி, கட்ட பஞ்சாயத்து கொலை மிரட்டல், கூடுதல் வட்டி கேட்டு எனது இருச்சக்கர வாகனத்தினை பறித்து சென்றவர்கள் மீது உரிய விசாரணை செய்து இந்திய  தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் இன்றைய தினம் வரையில் வழக்கு பதிவு செய்யவும் இல்லை. 

எனது இருச்சக்கர வாகனத்தினை எதிரிகளிடம் இருந்து இன்றைய தினம் வரையிலும் மீட்டு கொடுக்கவும் இல்லை. 

எனது இருச்சக்கர வாகனம் இல்லாமல்  பத்து மாதங்கள் சுமார் 283  தினங்களாக எனது வாழ்வாதாரமும் சுதந்திரமும்  எதிரிகளால்  திட்ட மிட்டு பறிக்கப்பட்டதன் மூலம் நானும் எனது குடும்பத்தினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். 

எனது இருச்சக்கர வாகன காப்பீடு தேதி காலாவதியாகிய பின்னரும் எதிரிகள் சட்ட விரோதமாக இன்றைய தினம் வரையிலும் பொது சாலையில் சட்ட விரோதமாக பயன் படுத்தி வருகின்றனர். 

திருப்பூர் மாநகர காவல்துறையினரால் எனக்கு நீதி கிடைக்க வில்லை என கருதி தான் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் உடனடியாக நீதி கிடைக்கும் என நம்பினேன்

அவர்களாலும் பாதிக்கப்பட்ட எனக்கு நீதி கிடைக்க வில்லை. 

எனது இருசக்கர வாகனத்தினை கந்து வட்டி கும்பல் சட்ட விரோதமாக பறித்து சென்றதின் மூலம்  மனித உரிமை மீறப்பட்டுள்ளது. 
எனது வாழ்வாதாரம் இழந்து கேள்வி குறியாகி உள்ளது

இறுதியாக  பாதிக்கப்பட்ட எனக்கு தங்களை விட்டால் நீதியை பெற்றுத்தர வேறு  யாரும் இருப்பதாய் தெரிய வில்லை. 

பார்வை :18 இல் காணும் எதிரி :01 விக்னேஷ்வரன் மொபைல் எண் :9976765562 மற்றும் கொலை மிரட்டல் விட்ட 
எதிரி 02 இந்து முன்னணியை சேர்ந்த சங்கர் கணேஷ் மொபைல் எண் :99521 67698
எதிரி 03.இந்து முன்னணியை சேர்ந்த நித்யானந்தம் மொபைல் எண் :99528 86871 மற்றும் 
எதிர்மனுதாரர் 04.ஜெயசந்திரன் சார்பு ஆய்வாளர் மொபைல் எண் :9442420502
எதிர்மனுதாரர் :05 பிரகாஷ் காவல் ஆய்வாளர் மொபைல் எண் :94981 59296
எதிர்மனுதாரர் :11 அருண்குமார் தலைமை காவலர்  மொபைல் எண் :6382904648 
ஆகியவர்கள் 
என்னிடம் மொபைல் போனில் அழைத்து  பேசிய ஆடியோ பதிவினை நுண்பட சுருளாக (CD) இத்துடன் இணைத்துள்ளேன்.

கோரிக்கைகள் :

01.எனது புகார் மனு மீது உரிய விசாரணை செய்து இருச்சக்கர வாகனத்தினை சட்ட விரோதமாக பறித்து சென்ற எதிரிகள் மீது தமிழ்நாடு வரம்பு மிகுந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் - 38/2003 இன் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோருகிறேன். 

02.என்னிடம் பறித்து சென்ற எனது தந்தை யின் இரு சக்கர வாகனத்தினை மீட்டு தரக்கோருகிறேன். 

03.கூடுதல் வட்டி வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என தெரிந்தும் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யாமலும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல் பட்டு வருவதுடன் நான் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத கடமை தவறிய திருப்பூர் தெற்கு காவல் நிலைய எதிர்மனுதாரர்கள் : 01 முதல் 05 மற்றும் எதிர்மனுதாரர்கள் :10, 11 சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு காவலூழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோருகிறேன். 

04.கடமை தவறிய காவலூழியர்களுக்கு தலைமை பொறுப்பு வகிக்கும் காவலூழிய பணிக்கு தகுதியற்ற  எதிர்மனுதாரர் :06 திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோருகிறேன். 

05.கந்து வட்டி குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க தவறிய திருப்பூர் மாவட்ட முதன்மை நிர்வாக ஊழியரான எதிர் மனுதாரர் :07  முன்னாள் மாவட்ட ஆட்சியர் / தற்போதைய ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் மீதும் நடவடிக்கை எடுக்க கோருகிறேன். 

06. பார்வை :03 இல் காணும் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவிற்கு பார்வை : 11 இல் காணும் பதில் மனுவில் இரண்டு முறை விசாரணைக்கு அழைத்தும் நான் விசாரணைக்கு செல்லாத காரணத்தினால் எதிர்மனுதாரர்:06 என்பவருக்கு அனுப்பிய புகார் மனு மீது விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக பொய்யான தகவல் வழங்கிய எதிர் மனுதாரர் :08 பொது தகவல் அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க கோருகிறேன். 

 07.பார்வை :04 இல் காணும் மேல் முறையீடு செய்த பின்னர் பார்வை :12 இல் காணும் எதிர்மனுதாரர் :08 பொது தகவல் அலுவலர் கொடுத்த அதே பொய்யான பதிலை மீண்டும் வழங்கியதுடன் பார்வை : 13 இல் காணும் மேல் முறையீட்டு இரண்டாவது கடிதத்திற்கு இன்றைய தினம் வரை பதில் வழங்காத எதிர்மனுதாரர் :09  என்பவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோருகிறேன். 

08.மேற்காண் எதிர்மனுதாரர்கள் அனைவர் மீதும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள ஆவண செய்ய வேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன்.

09..இருச்சக்கர வாகனம் இல்லாத காரணத்தினால்  பணிக்கு செல்வதற்கும் அவசர தேவைகளுக்கும் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலும், பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான எதிர் மனுதாரர்களிடமிருந்து உரிய இழப்பீட்டு தொகையினை பெற்று தருமாறு வேண்டிக் கொள்கிறேன். 

எதிர்மனுதாரர்கள் அனைவர் மீதும் நான் கூறியுள்ள சங்கதிகளை நிரூபிக்கும் சுமை இந்திய சாட்சிய சட்டப்பிரிவு 101 மற்றும் 105 இன் கீழ் எனக்கு இருக்கிறது என்பதினை நான் அறிவேன். 
எனது புகாரில் நான் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை என்னால் நிரூபிக்க இயலாமல் எதிர் மனுதாரர்கள் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டால்  இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு -211 இன் கீழ் நீதி மன்றம் வழங்கும் தண்டனையை மனதார ஏற்றுக்கொள்வேன் என இந்திய சாட்சியச்சட்ட உறுபு - 70 இன் கீழ் பிரம்மாணமாக இன்றைய தேதியில் கையொப்பம் செய்துள்ளேன்.

இணைப்பு பக்கங்கள் :

நாள் :01.11.2019                                 
இடம்:சேயூர்                                                                                                       

மனுதாரர் 



N. .செந்தில் குமார்

Friday 30 August 2019

கழிவுநீர் கால்வாய் தமிழக முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் புகார்

தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம்  பொதுநல புகார் மனு,

மனுதாரர் :
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாப்பேசி :98655 90723

எதிர்மனுதாரர் :
திரு. வாசுக்குமார் அவர்கள்
உதவி ஆணையர்
மாநகராட்சி முதல் மண்டல அலுவலகம்
அனுப்பர்பாளையம்
திருப்பூர் - 641 652

பெறுநர் :
முதல்வர் அவர்கள்,
தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம்
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி
குமார் நகர், திருப்பூர்.

அய்யா, 
கடிதம் எண் : LAACO/  CM/CL /008/TPR/2019 ;நாள் :30.08.2019

பொருள் :பிரதான கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றி 4 வேலம்பாளையம் பிரதான சாலை மணீஸ் தியேட்டர் முதல் அனுப்பர்பாளையம் புதூர் வரையில் கழிவு நீர் கால்வாய் கட்டக்கோரி பொதுநல புகார் மனு,

மக்களின் அடிப்படை பொது தேவைகளை நிறைவேற்று
வதற்காக  அரசாணை
களையும் பல்வேறு விதமான அரசு துறைகளையும்  அரசு  ஏற்படுத்தி உள்ளது.

அதனை நிறைவேற்ற அந்தந்த துறைகளுக்கு என அரசு  சார்பாக பலதரப்பட்ட ஊழியர்களையும் நியமித்துள்ளது.

பொது மக்களிடம்  இருந்து பல்வேறு விதங்களில் வசூலிக்கப்படும் வரி இனங்கள் மூலம் பெறப்படும் வருவாயில் இருந்து மக்கள் பணி செய்ய நியமிக்கப்பட்ட மக்களின் சேவகர்களான அரசூழியர்களுக்கு மாத
ஊதியம்,சொகுசு வாகனங்கள், பல்வேறு விதமான சலுகைகள், பணி ஓய்வுக்கு பின் ஓய்வூதியம் என வழங்கப்பட்டு வருகிறது.

மக்களின் உரிமைகளான அரசால் வழங்கப்படும் சான்றிதழ்கள், அரசு நல திட்டங்கள், சலுகைகள் போன்றவற்றை அரசுத்துறை
களிடம் கோரும் மக்களுக்கு மக்கள் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள தினங்களுக்குள் செய்து கொடுக்கும் கடமை அரசூழியர்களுக்கு உண்டு.

ஆனால் கடமை தவறிய அரசூழியர்கள் இதனை செய்வது இல்லை.

மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் வாராவாரம் நடை பெற்று வருகிறது. .

முதலமைச்சர் தனிப்பிரிவும் செயல் பட்டு வருகிறது.

இது அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானதாகும்.

இந்த குறைதீர்க்கும் முகாம்களினால் எந்த பயனும் இல்லை.

எந்த குறைகளும் தீர்க்கப்பட்டதாக தெரியவில்லை.

அரசாணைகளின் படி பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க படுவது இல்லை.

நீதிமன்றம் சென்றாலும் நீதி கிடைப்பதில்லை.

அப்படியானால் மக்கள் பணிகளை செய்வது யார்?

உள்ளாட்சி தேர்தல் நடை பெற இருக்கும் நிலையில் தாங்கள் இப்போது முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட  முகாம் என்ற பெயரில் நாடு முழுவதும் முகாம்களை அமைத்துள்ளீர்கள்.

பாதிக்கப்பட்ட பொது மக்களும் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை அளித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.எஸ் பழனிச்சாமி அவர்களிடம் நாம் கொடுத்த அவசர பொதுநல புகார் மனு சுமார் 327  நாட்களுக்கு பிறகு குப்பைக்கு சென்றது ஒரே ஒரு உதாரணம்.

நாமு‌ம்  எதிர்மனுதாரர் திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல உதவி ஆணைய‌ர் வாசுக்குமார் என்பவரிடம் கழிவு நீர் கால்வாய் சம்பந்தமாக 30.11.2017 அன்று பொது நல மனு அளித்தோம்.

அதுவும் குப்பைக்கு போய் விட்டது.

இந்த கடமை தவறிய அரசூழியர்களுக்கு மக்கள் வரிபணத்தில் இருந்து ஊதியம் வழங்கி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறிய முதலமை‌ச்ச‌ர் ஆகிய தாங்கள் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

எனினும் கீழ் காணும் கோரிக்கை மனுவினை தங்களின் நேரடி  சிறப்பு கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம், மாநகராட்சி முதல் மண்டல அலுவலக 5 ஆவது வார்டுக்கு  உட்பட்ட 4 வேலம்பாளையத்தில் இருந்து அனுப்பர் பாளையம் புதூர் வரை செல்லும் பிரதான கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டி 1998 ஆம் ஆண்டு முதல் பல கோரிக்கை வைத்து வருகிறேன் .

மாநகராட்சி 1, 5, 14, 15. வார்டு வேலம்பாளையம் பகுதிகளில் பொது மக்கள் பயன் படுத்தும் கழிவு நீர், மற்றும் மழை நீர் இந்த பிரதான கால்வாய் மூலம் தான் செல்கிறது.

4 வேலம் பாளையம் முதல் சிறு பூலுவப்பட்டி பிரிவு ரிங் ரோடு வரை 15 வது  வார்டுக்கும், சிறு பூலுவப்பட்டி பிரிவில் இருந்து மணீஸ் தியேட்டர் வரை 1 வது வார்டுக்கும், மணீஸ் தியேட்டரில் இருந்து கோவை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வரை 5 வது வார்டுக்கும் சேர்ந்த பகுதிகளில் இந்த பிரதான கழிவு நீர் கால்வாய் செல்கிறது.

இந்த கழிவு நீர் கால்வாய் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானதாகும்

மூன்று வார்டு பகுதிகளை கடந்து செல்லும் பிரதான கழிவுநீர் கால்வாய் கட்ட சரியான திட்ட மதிப்பீடு செய்யப்பட வில்லை.

இந்நிலையில் இயக்குதல் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்புதல் நிதி 2014-2015. மதிப்பீட்டு தொகை ரூபாய் 86.25 இலட்சம் சிறுபூலுவப்பட்டி பிரிவில் இருந்து மணீஸ் தியேட்டர் வரை உள்ள
முதல் வார்டுக்கு  மட்டும் 437 மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் கால்வாய் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

ஒப்பந்ததாரர் ஹரி கன்ஸ்ட்ரக்சன் 20.07.2015 அன்று பணியை துவக்கி 19.10.2015 அன்று பணியை முடித்துள்ளார்.

கழிவு நீர் கால்வாய் தரமற்ற முறையில் கட்டப்பட்டது.

இதில் பெருமளவு ஊழலும் முறைகேடுகள் நடைபெற்றதாக  28.10.2015 அன்று சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தேன்.

ஆனால் அந்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிய வில்லை

437 மீட்டர் நீளத்திற்கு 5 .5 அடி அகலம் 5.5 அடி உயரத்திற்கு கழிவு நீர்க்கால்வாய் கட்டி மேல் புறம் முழுவதும் மூடி விட்டார்கள்.

மழை காலங்களில் சாலையில் செல்லும் மழைநீர் கழிவுநீர் கால்வாய்க்குள் செல்லும்  வகையில் வடிகால் வசதி செய்யப்படாத காரணத்தினால்  சாலையிலேயே பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் தார்சாலை சேதமாகி வருகிறது.

தரமற்ற முறையில் கட்டிய கழிவு நீர் கால்வாய் ஆங்காங்கே உடைந்து விட்டது.

மணீஸ் தியேட்டரில் இருந்து கோவை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வரையிலும் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட வில்லை!

நெடுஞ்சாலை துறையில் எந்த அனுமதியும் பெறாமல் அந்த பகுதிகளில் வர்த்தகர்கள்,தொழிற்
சாலையினர் சிறிய அளவிலான குழாய்களை பதித்து மண்ணால் மூடியும்  தரை பாலங்கள் அமைத்தும் உள்ளனர்.

மழை காலங்களில்  மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் செல்கிறது.

சரியான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு கழிவு நீர் கால்வாய் முறையாக அமைக்கப்படாததே இதற்கு முக்கிய காரணம்.

போக்குவரத்துக்கு  இடையூறு ஏற்படுத்தியதுடன் பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் சுகாதார கேட்டினையும், பொது தொல்லையையும் தெரிந்தே மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி கொண்டு இருப்பது மிகுந்த வேதனையையும் சொல்லொணா துயரத்தையும்  அளிக்கிறது.

சுத்தத்தை நோக்கி ஒரு படி மேலே!  என வெற்று விளம்பர படுத்தும்
திருப்பூர் மாநகராட்சியை தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சி என தாங்கள் தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்திருப்பது  அதிர்ச்சி அளிக்கிறது.

₹86.25 இலட்சம் செலவு செய்து தரமற்ற முறையில் கட்டப்பட்ட பிரதான கழிவு நீர் கால்வாய் பயனற்றதாக போய் விட்டது.

கோரிக்கை : 01
எதிர்மனுதாரரிடம் 30.11.2017 அன்று கொடுக்கப்பட்ட மேற்காண் மனு மீது இன்றைய தினம் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். .

கோரிக்கை :02
மழை காலங்களில் கழிவு நீருடன் மழை நீரும் கலந்து பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடும்.
அப்போது பாதசாரிகளும் வாகன ஒட்டிகளும் படும் துயரத்தினை தாங்கள் ஒரு முறை வந்து நேரில் பார்வை இட்டு இந்த சாலையை கடந்து செல்ல வேண்டுகிறோம்.

கோரிக்கை :03
பிரதான கால்வாயில் தனியாரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறிய குழாய் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுகிறோம்

கோரிக்கை :04
437 மீட்டர்  கழிவு நீர் கால்வாயின் மேல் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் உடைந்த  கழிவு நீர் கால்வாய் மேற் பகுதியை உடனடியாக பழுது நீக்க வேண்டுகிறோம் .

கோரிக்கை :05
437 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள கால்வாயில் சாலையில் தேங்கும் மழை நீர் செல்ல ஆங்காங்கே வடிகால் வசதி செய்ய வேண்டுகிறோம்.

கோரிக்கை ;06
மணீஸ் தியேட்டரில் இருந்து அனுப்பர் பாளையம் புதூர் வரையிலும் கழிவு நீர்கால்வாய் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்

பல முறை புகார் செய்தும் கடமை தவறிய மாநகராட்சி ஊழியர்கள் கண்டு கொள்வதில்லை!

லஞ்சம் பெறுவதினையும் ஊழல் செய்வதினையும் தான் கடமை என நினைக்கின்றனர் போலும் .

கோரிக்கை வைக்காமலே மக்கள் பணி செய்வது தான் மாநகராட்சியின் கடமை!

நாமு‌ம் நமது கடமையாகவும் உரிமையாகவும் கொண்டு தங்களின் சிறப்பு கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

நாள் :30.08.2019
இடம் : திருப்பூர் 

மனுதாரர்

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்