Friday 12 July 2019

உண்ணாவிரத போராட்ட அழைப்பிதழ்!

முக்கிய செய்தி!
அவசர அழைப்பு!!

RTE இலவச கல்வியா?
மானிய கல்வியா?

மத்திய மாநில அரசுகள் தெளிவு படுத்த கோரி திருப்பூரில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்

தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வரும்  மாணவர்களின் பெற்றோர்களை அன்புடன் அழைக்கிறோம் 

தனியார் பள்ளி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோரா நீங்கள்?

தனியார் பள்ளிகளில் உங்கள் குழந்தைகள் கல்வி பயின்று வருகிறார்களா?

அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை  விட கூடுதல்   கல்வி கட்டணம் சட்ட விரோதமாக வசூலித்து வருகிறார்களா?

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உங்கள் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வருகிறார்களா?

இலவச கல்விக்கு கல்விக்கட்டணம் ஸ்டேஷனரி கட்டணம், கரிக்குலம் அல்லது எக்ஸ்ட்ரா கரிக்கலர்  ஆக்டிவிட்டீஸ் எனக் கூறி இது போன்ற பல்வேறு விதமான கட்டணங்களை வசூலித்து வருகிறார்களா?

மாணவர்களின் பாதுகாப்பு நலனில் அக்கறை இல்லாமல் சட்ட விரோதமாக தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறதா?

கல்வி அலுவலர்களிடம் புகார் அளித்தும் உங்கள் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க பட வில்லையா?

ஏன்! எதற்காக? இந்த உண்ணாவிரத போராட்டம்.?

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - 2009 12 (1) (C) மற்றும் 13 ( 1) இன் கீழ்  தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்களில் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்களிடம் கல்விக் கட்டண கொள்ளை அடித்து வரும் தனியார் பள்ளிகளை கண்டித்தும்,

தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதினை முறைப்படுத்துதல்) சட்டம் - 2009 மற்றும் அரசு கல்வி கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை கண்டித்தும்,

சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு துணை போகும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை கண்டித்தும்,

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமா?
அல்லது
இலவச மற்றும் மானிய கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமா?

என்பதினை மத்திய மாநில அரசுகள் தெளிவு படுத்த வேண்டும்  என "சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு"  தலைமையில் அமைதியான வழியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்   இந்திய அரசியலமைப்பு சாசனக் கோட்பாடு 19 (1) அ, ஆ மற்றும் 51 A (ஒ) வின் கீழ்  நடைபெற இருக்கிறது.

நாள் :14. 07. 2019
ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடம் : புதிய பேருந்து நிலையம்  முன் புறம்
திருப்பூர்

தனியார் பள்ளிகளை கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவதற்காள காரணங்கள் மற்றும் நோக்கங்கள் :

1 இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்- 2009 இன் படி கல்வி பயிலும்  25 விழுக்காடு ஏழை எளிய வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து  கல்வி கட்டணம் மற்றும் பல்வேறு விதமான கட்டணங்களை முறையான பற்றுச் சீட்டு இல்லாமல் சட்ட விரோதமாக வசூலித்து வருகிறார்கள் 

2 இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச கல்வி என சட்டத்தில் தெரிவித்து விட்டு மூன்று வயது குழந்தைகளுக்கு மட்டும் நுழைவு நிலை வகுப்பான L. K. G மட்டும் தான் அனுமதி என சட்டத்தில் திருத்தம் செய்து 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கல்வி பயில வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

எனவே 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கும் இந்த சட்டத்தின்கீழ் கல்வி பயில அரசு வழிவகை செய்ய வேண்டும்.

3.சட்ட விரோதமாக அரசு அனுமதி இல்லாமல் செயல்படும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை அரசு கண்டறிந்து மூடும் போது அந்த பள்ளியில் பயின்று வரும் ஏழை எளிய மாணவர்களுக்கு வேறு பள்ளிகளில் உடனடியாக கல்வியை தொடர அரசு வழிவகை செய்ய வேண்டும்.

4 தமிழ்நாடு ஆர் டி. இ விதிகள் 2011 பிரிவு 5 இல் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் சீருடைகள் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அனைத்து தனியார் பள்ளிகளும் நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் சீருடைகள் என உரிய பற்று சீட்டு வழங்காமல்  கட்டணங்களை வசூலித்து வருகிறார்கள்.

5.கரிக்குலம் எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் என்ற பெயரில் யோகா, கராத்தே, டேபிள் டென்னிஸ், டீச்சிங் எய்ட், பாண்டு வாத்தியம், டான்ஸ், கம்ப்யூட்டர், ஸ்போக்கன் இங்கிலீஷ், ஹேண்ட் ரைட்டிங், வாழ்க வளமுடன், மனவளக்கலை  போன்ற பல்வேறு விதமான கட்டணங்களை கட்டாயப்படுத்தி வசூலிக்
கின்றனர். கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளியை விட்டு வெளியேற்றுகின்றனர்.

6.அரசிடமிருந்து நிதி வரவில்லை வந்ததும் திரும்ப வழங்குகிறோம் எனக்கூறி மாணவர்களிடமிருந்து சட்ட விரோதமாக கல்விக் கட்டணங்களை வசூலித்து வருகின்றனர்.

7 கல்விக் குழு கூட்டம் நடைபெறும் போது கல்வி கட்டணம் பெற்றது குறித்து கல்வி அதிகாரியிடம் தெரிவிக்கக் கூடாது என்றும் அப்போது தான் அரசு எங்களுக்கு பணம் கொடுப்பார்கள் என்றும் பொய்  சொல்ல சொல்கின்றனர்.

8.எந்த ஒரு கல்வி கட்டணமும் வாங்க வில்லை என ஒரு பொய்யான உறுதிமொழி சான்றினை பெற்றோர்களிடம் வாங்கி தனியார் பள்ளி நிர்வாகிகள் அரசை ஏமாற்றி வருகின்றனர்.

9.இது குறித்து கல்வி அலுவலர்களுக்கு  தெரிந்தும் சட்ட விரோதமாக செயல்படும் பள்ளி நிர்வாகிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

10.அரசு உங்கள் குழந்தைகளுக்கு மானியமாக 5 ஆயிரம் ரூபாய் மட்டும் தான் வழங்குகிறார்கள். மீதி தொகையை நீங்கள் தான் வழங்க வேண்டும் என ஒவ்வொரு மாணவரிடமிருந்து 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கட்டணங்களை கட்டாயப்படுத்தி வசூலித்து வருகிறார்கள்.

11.25 விழுக்காடு மாணவர் சேர்க்கையில் மோசடி நடைபெற்று வருகிறது

150 மாணவர்களுக்கு மட்டும்  நுழைவு நிலை வகுப்பான L. K. G க்கு  அனுமதி இருக்கும் நிலையில்  400 க்கும் மேற்பட்ட மாணவர்களை நுழைவு நிலை வகுப்பில் சேர்த்து கொண்டு 150 மாணவர்கள் தான் என்றும்  25 விழுக்காடு 38 மாணவர்களுக்கு மட்டும் சேர்க்கை வழங்கி பெற்றோர்களையும் அரசையும் ஏமாற்றி வருகிறார்கள்.

12.மாணாக்கர் பாதுகாப்பு நலன் அரசாணைகளில் சொல்லப்பட்ட எந்தவிதமான பாதுகாப்பு நலன்களையும் கடைபிடிக்காமல் பொய்யான உறுதிமொழியை தனியார் பள்ளிகள் வழங்கி வருகின்றனர்.

13.20 மாணவர்களுக்கு ஒரு குடிநீர் குழாய் 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பிடம் 50 மாணவர்களுக்கு ஒரு மல கழிப்பிடம் உள்ளிட்டவைகள் இல்லை

14.அரசு அனுமதி பெறாமல் சட்ட விரோதமான பள்ளிக் கட்டிடங்களை கட்டி வருகிறார்கள் 
அந்த கட்டிடங்களுக்கு கட்டிட உறுதித் தன்மை இருப்பதாக தெரிய வில்லை.

15.அரசு விதிமுறைப்படி ஆர் சி சி கட்டிடம் அல்லாத சிமெண்ட் சீட், டின் சீட், தகர சீட், ஓட்டு வில்லை போன்ற கட்டிடங்களில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் வகுப்புகள் நடத்தி வருகிறார்கள்.

16.1 முதல் 5 வகுப்பு வரை 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் 5 முதல் 8 ஆம்  வகுப்பு வரை 35 மாணவர்களுக்கு  ஒரு ஆசிரியரும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பிற்கு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் நியமிக்கப்படாமல் ஒரு வகுப்பறையில் குறைந்தபட்சம் 50 மாணவர்களை அமர்த்தியுள்ளனர்.

17.1 முதல் 3 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களை தரைதளத்தில் அமர்த்தாமல் முதலாம் மற்றும் இரண்டாம் தளத்தில் அமர்த்தியுள்ளனர்.

18 பள்ளி பராமரிப்பு சம்பந்தமாக   ஆய்வு செய்வதற்காக பெற்றோர்களை கொண்ட அன்னையர் குழுவினை உருவாக்கி  பள்ளி முழுவதும் சென்று பார்வை இட்டு ஆய்வு செய்த விபரங்களை பதிவு செய்ய பதிவேடுகளையும்  எந்த ஒரு பள்ளியிலும் கடைபிடிக்கப் படவில்லை

19. பள்ளி கட்டிடங்களில் இடிதாங்கி பொருத்தப்படவில்லை

20 தீ விபத்து மற்றும் பேரிடர் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் தீயணைப்பு வாகனங்கள் பள்ளியை சுற்றி வந்து விபத்தில் சிக்கும் மாணவர்களை காப்பாற்ற  போதுமான இட வசதிகள் செய்யப்படவில்லை.

21.மாணவர்களின் குருதி வகை உடல் ஒவ்வாமை மருத்துவ விபரங்கள்  குறித்த பதிவேடுகள் பராமரிக்கப்படுவதில்லை .

22.1500 மாணவர்களுக்கு மேல் கல்வி பயிலும் பள்ளிகளில் முழு நேர மருத்துவ சேவை வசதிகள் செய்யப்பட வில்லை.

23 மாணவர்கள் பயன் படுத்தும் கழிவறைகள் அந்தந்த  வகுப்பறை கட்டிடங்களில் இல்லாமல் தனியாக ஒதுக்கு புறமாக கட்டப்பட்டுள்ளது.

24.பல பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லை.

26.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் Pre - Kg  வகுப்புகள் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக நடத்தி வருகிறார்கள்.

27 தனியார் பள்ளிகள்( கட்டணம் வசூலிப்பதினை முறை படுத்துதல்) சட்டம் - 2009  மற்றும் கல்வி கட்டண நிர்ணய குழு நி‌ர்ண‌யி‌த்த கல்வி கட்டணங்களை விட கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள்.

28.நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் ஸ்கூல் பேக் என விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு அதிக பட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதுடன் அதற்கான உரிய பற்று சீட்டு வழங்காமல் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

29. நகராட்சி, மாநகராட்சி, நகர ஊரமைப்புத்துறை, உள்ளூர் திட்டக்குழுமம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மாவட்ட பள்ளி கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்ககம், மாவட்ட செயல்துறை நடுவர்  வருமான வரித்துறை, மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை , கல்வி கட்டண நிர்ணயக்குழுவினர் சட்ட விரோதமாக செயல் படும் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்  மற்றும் இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மேற்காண் கடமை தவறிய அரசூழியர்கள் மற்றும் பள்ளி கல்வி துறை அமைச்சர் தான் தனியார் பள்ளி நிர்வாகிகள் சட்ட விரோதமாக செயல் பட முக்கிய காரணம். என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம்.

இந்த மாபெரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சமூக அமைப்புகளிள் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், சட்ட ஆர்வலர்கள், கல்வி ஆர்வலர்கள் என சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

தனியார் பள்ளி நிர்வாகத்தினால் பாதிக்கப்பட்டு வரும்  அன்பார்ந்த எனதருமை பெற்றோர்களே!

நீங்கள் தவறாமல் இந்த உண்ணாநிலை போராட்டத்தில் கலந்து கொண்டு உங்களின் புகாரினை பதிவு செய்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

மாறுங்கள்! மாற்றுங்கள்!
கொடுக்க வேண்டாம் லஞ்சம்!
இதுவே நமது தாரக மந்திரம்.

கல்விக் கொள்ளையர்களை சிறைக்கு அனுப்புவோம்.

கடமை தவறும் கல்வி அலுவலர்களை வீட்டிற்கு அனுப்புவோம்!

இனி சொல் அல்ல! செயல்!

ஊழலுக்கு விடை கொடுப்போம் 
கல்வி உரிமைக்கு குரல் கொடுப்போம்!

நல்ல சமுதாயம் மலர நாமும் துணை நிற்போம்!

வாழ்த்துக்களுடன்.....
நாஞ்சில் கோ கிருஷ்ணன் நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363 காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் - 641 652
உலாப்பேசி 98 655 90 723 மின்னஞ்சல்  :
nanjillaacot@gmail.com

அரிமா ரா. சங்கர்
மாநில தலைவர்
அரியலூர்
உலாபேசி :98655 43303

உண்ணாவிரத போராட்ட ஒருங்கிணைப்பாளர்:
ஆ பழனிக்குமார்
உலாப்பேசி: 97 910 50 513
நன்றி

No comments:

Post a Comment