Tuesday 9 July 2019

வங்கி லாக்கரில் அலாரம்!

ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO /0057 /2019 :நாள் :10..07.2019

குற்றம் நடந்தது என்ன !

உண்மை சம்பவம்!

ஒங்கி ஒலித்தது அலாரம்!

09.07.2019  அன்று இரவு 10.40 மணி முதல் 11.40 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் சிறிது பரபரப்பு!

திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பதிய பேருந்து நிலையம்  அருகில் அலாரம் சத்தம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது 

நண்பர்கள் பழனிக்குமார், சஞ்சீவ் குமார், சங்கர், முத்துகுமார், ராம் குமார் ஆகியவர்களுடன் அந்த வழியாக வந்து கொண்டிருந்தோம்.

எங்கிருந்து அலாரம் சத்தம் வருகிறது என பார்த்த போது கர்நாடகா வங்கி லாக்கரில்  இருந்து சத்தம் வருவதை அறிய முடிந்தது.

வங்கியின் ஒரு பகுதி முழுவதும்  புதர் மண்டி இருந்தது.

வங்கியின் சுற்று புறம் முமுவதும் சென்று கண்காணித்தோம்.

வங்கியின் முன் அமைந்துள்ள கர்நாடகா வங்கி ஏ. டி. எம் மையத்தில் இரவு நேர காவலாளி அப்போது பணியில் இல்லை.

எனவே இதனை அறிந்த நாம் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு எண்ணுக்கும் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கும்  வங்கி கிளை மேலாளருக்கும் தகவல் தெரிவித்தோம்.

சுமார்  30 நிமிடத்தில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

வங்கியின் கிளை மேலாளர்  பழைய பேருந்து நிலையம்  பகுதியில் இருந்து பதறி அடித்து வந்தார்.

வங்கியை காவல்துறை உதவியுடன் திறந்து உள்ளே சென்று அலாரம் சத்தத்தினை உடனடியாக வங்கி மேலாளர் நிறுத்தினார். 

பாதுகாப்பு பெட்டகம் இருக்கும் அறைக்குள் சென்று பார்வையிட்டு அங்கு எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை  உறுதி படுத்தி நமக்கு தெரிவித்தார்.

ஒரு வேளை எலி ஏதாவது  வந்து இருக்கலாம் என்றார்.

எலி பொறி வைக்கும்படி தெரிவித்தோம்.

சுமார் ஒரு மணி நேரம் ஒலித்து கொண்டிருந்த வங்கி  அலாரம்  நிறுத்தப்பட்டது.

ஏ  டி. எம்.  காவலாளிக்கு மாதம் நான்கு ஆயிரம் ரூபாய் தான் ஊதியமாம். அந்த குறைந்த ஊதியத்தையும் மாதா மாதம் சரியாக வங்கி நிர்வாகம் வழங்குவது இல்லை என புலம்பி கொண்டிருப்பாராம்.  இரவு நேரத்தில் ரோந்து பணிக்கு வரும் காவலூழியர் ஒருவர்  நம்மிடம் தெரிவித்தார்.
இன்று  விடுப்பு எடுத்து சென்று விட்டதாக  தெரிய வந்தது.

எந்த அசம்பாவிதமும் நடக்க வில்லை என்பதை அறிந்து தகவல் தெரிவித்த நமக்கு வங்கி கிளை மேலாளர் நன்றி சொன்னார்.

நன்றி நமக்கு தேவை இல்லை என்றோம். ஒரு குற்றம் நடைபெறுவது குறித்து  தகவல் தெரிவிப்பது நமது கடமை என்றோம்.

வங்கி காவலாளிக்கு முறையாக ஊதியம் வழங்கிடவும் காவலாளி விடுமுறையில் செல்லும் போது மாற்று ஏற்பாடு செய்யும் படியும்
நாம் வங்கி மேலாளரிடம் தெரிவித்தோம்.

பல வங்கிகளில் லாக்கர் அலாரம் ஓலிக்கும் போது வங்கி மேலாளரின் மொபைல் போனுக்கு
குறுஞ்செய்தி வரும் வசதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்.

ஆனால் கர்நாடகா வங்கியில் மட்டும் ஏன் இந்த வசதி செய்யப்பட வில்லை?

எது எவ்வாறு இருப்பினும் வங்கியில் எந்த அசம்பாவிதமும் நடை பெற வில்லை என்பதினை அறிந்து நாங்களும்  காவல்துறையினரும்  நிம்மதியுடன்  அங்கிருந்து கிளம்பினோம்.

நாஞ்சில் கோ கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஓழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும்.....

No comments:

Post a Comment