Tuesday 16 July 2019

நல்லாற்றில் கழிவுகளை கொட்டிய கருப்பையா டையிங் சாய ஆலை உரிமையாளர் மீது புகார் மனு.

மனுதாரர் :

ஆ பழனிக்குமார்  :வயது : 34
த/பெ  ஆண்டியப்பன்
5/419, வேலன் நகர்
வெங்கமேடு
அங்கேரிபாளையம்
திருப்பூர் - 641 603
செல் :97910 50513

எதிர் மனுதாரர்கள்:

01.பொங்கலூர் உழவர் உற்பத்தியாளர்
வாகன பதிவு எண் :TN 42 AB 2653
தமிழ்நாடு அரசு கூட்டு பண்ணை திட்டம்
அக்ரிகல்சுரல் டிராக்டர்
முகவரி மற்றும் முழுமையான விவரம் தெரியவில்லை

02 கருப்பையா,
சுமாரான வயது :50
உரிமையாளர்.
கருப்பையா டையிங்
வெங்கமேடு
அங்கேரிபாளையம்
திருப்பூர் - 641 603

பெறுநர் :

சார்பு ஆய்வாளர் அவர்கள்
காவல் நிலையம்
அனுப்பர்பாளையம்
திருப்பூர் மாநகரம்

பொருள் : திருப்பூர் நல்லாற்றில் சட்ட விரோதமாக கட்டிட கழிவுகளையும் குப்பைகளையும்   கொட்டி மாசு ஏற்படுத்திய  எதிர் மனுதாரர் :01  என்பவரிடம் நல்லாற்றில் கழிவுகள் கொட்ட கூடாது என நான் கூறிய காரணத்தினால் எதிர்மனுதாரர்:02  என்பவர்
பொதுச்சாலையில் ஆபாச வார்த்தை பேசி கொலை செய்து அங்கேயே புதைத்து விடுவதாகவும் அடித்து தூக்கி பாய்லரில் போட்டு எரித்து  விடுவதாகவும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் கொலை வெறியுடன் தாக்க வந்த காரணத்தினால் எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், நீர்நிலையை தெரிந்தே திட்டமிட்டு மாசு படுத்திய குற்றத்திற்காகவும் எதிர் மனுதாரர்கள்: 01 மற்றும் : 02 என்பவர்கள்  மீது உரிய விசாரணை மேற்கொண்டு குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரியும்  குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவு 154 (1) இன் கீழ் புகார் மனு,

மேற்காண் முகவரியில் வசித்து வரும் மனுதாரராகிய நான் இந்திய அரசியலமைப்பு சாசன கோட்பாடு 51(அ) இன் கீழ் எனது கடமைகளை சிறப்புடன் ஆற்றிவரும் ஒரு இந்திய குடிமகன் ஆவேன்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டத்தில் இருந்து திருமுருகன் பூண்டி, ஆத்துப்பாளையம், வெங்கமேடு, பிச்சம்பாளையம் வழியாக ஊத்துக்குளி  வட்டம் நஞ்சராயன் குளம் வரை சென்றடையும் ஆறு நல்லாறு ஆகும்.

திருப்பூர் மாநகராட்சி முழுவதும் பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் கழிவு நீர்கள் அனைத்தும்  கழிவு நீர் கால்வாய்கள் மூலம் நல்லாற்றில் நேரடியாக சட்ட விரோதமாக கலக்கப்பட்டு வருகிறது.

வர்த்தகர்கள் பயன்படுத்தும் மாமிச கழிவுகள் அனைத்தும்  நல்லாற்றில் கொட்டப்பட்டு வருகிறது.

சாய ஆலை, சலவை ஆலை , பிரிண்டிங் ஆலை கழிவுகள், கட்டிட கழிவுகள் என அனைத்து வகையான கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது.

சாயக் கழிவுநீர் சாக்கடை கழிவு நீர் கலந்து நல்லாறு மாசடைந்து பொது சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.

இதனை கண்காணித்து தடுக்க வேண்டிய பொதுப்பணித்துறை - நீர்வள ஆதாரத்துறை, மாசு கட்டுப்பாடு வாரியம், மாநகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, மாவட்ட சுகாதார துறை, காவல்துறை, போன்ற மாவட்ட நிர்வாகங்கள் அனைத்தும் முற்றிலும்  செயல் இழந்து விட்ட காரணத்தினால் தான் நல்லாறு   மாசடைந்து கெட்ட ஆறாக மாறி மிகுந்த துர்நாற்றம் வீசுவதால் பொது சுகாதாரக்கேடு .ஏற்பட்டு வருகிறது. 

இதனால் நல்லாற்றின் இரு கரை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு விதமான தொற்று வியாதிகள் பரவி வருகிறது. 

மாநகராட்சி செப்டிக்டேங் கழிவு நீர் வாகனங்களில் கழிவு நீரினை கொண்டு வந்து  நல்லாற்றில் விட்டு தொடர்ந்து மாசு ஏற்படுத்தி வந்தனர். அதனை தடுத்த போது அப்படி தான் விடுவோம் என மாநகராட்சி முதல் மண்டல சுகாதார அலுவலர் முருகன் கூறி கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டார்.

சட்ட விரோதமாக நல்லாற்றை மாசு படுத்தி வந்த மாநகராட்சி முதல் மண்டல சுகாதார அலுவலர் முருகன் என்பவரை கண்டித்து ஐந்து தினங்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்  மேற்கொண்டேன். 

திருப்பூர் அரசு மருத்துவமனையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த என்னிடம் வந்து  திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் நெல்சன், மாநகராட்சி முதல் மண்டல உதவி ஆணையர் வாசுகுமார் , மற்றும் சில பொறியாளர்களுடன்  உண்ணாவிரத போராட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள் விரைவில் மாவட்ட நிர்வாகம் மூலம் நல்லாறு பாதுகாப்பு குழு ஒன்று உருவாக்கி நல்லாற்றினை பாது காப்போம்  என உறுதி அளித்ததின் பேரில் எனது உண்ணாவிரதப் போராட்டத்தினை அன்றைய தினம் நான் முடித்துக் கொண்டேன்.

ஆனால் மாவட்ட நிர்வாகம்  மூலம் நல்லாறு பாதுகாப்புக்குழு இன்றுவரை உருவாக்கப்படவும் இல்லை. நல்லாற்றை பாதுகாக்கவும் இல்லை.

எனவே "சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு" சார்பாக நல்லாறு பாதுகாப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

அந்த குழுவில் நான் நல்லாறு பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டேன்.

எங்கள் குழுவினர் நல்லாற்றை கண்காணித்து மாசுபடுத்துபவர்கள் குறித்த விவரம் தெரிய வந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் புகார் அளித்து வருகிறோம்.

இந்நிலையில் 15. 07.2019  அன்று மாலை சுமார் 3.30 மணி அளவில் நான் திருப்பூர் வடக்கு வட்டம் 4 வேலம்பாளையம் உள் வட்டம் செட்டிபாளையம் கிராம் அங்கேரிபாளையம் சாலை வெங்கமேடு ஹெச் பி. பெட்ரோல் பங்க் நல்லாற்று பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது  எதிர்மனுதாரர் :01 என்பவர் டிராக்டரில் கட்டிட கழிவுகளை கொண்டு வந்து கொட்டி வந்ததை  நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

மாநகராட்சி சார்பில் குப்பை கழிவுகள் எதுவும் கொட்ட கூடாது என அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பலகை கிழித்து எறியப்பட்டு இருந்தது.

எதிர்மனுதாரர்:01  என்பவரிடம்  நான்  இங்கு குப்பை கொட்ட கூடாது எனக் கூறினேன்.

அப்போது அருகிலிருந்த எதிர்மனுதாரர்: 02 என்பவரது கட்டிடத்தில் இருந்து வந்த பெயர் தெரியாத அடையாளம் தெரியக் கூடிய ஒரு நபர் வந்து ஏன் தடுக்கிறாய்  எல்லோரும் இங்கு தானே குப்பை கொட்டி இருக்கிறார்கள். நாங்களும் இங்கு தான் குப்பைகளை கொட்டுவோம்  என்றார்.
அதற்கு நான் நீர்நிலைகளில் குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டி மாசு படுத்தி பொது சுகாதாரக்கேடு ஏற்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றேன்.

உடனே அந்த நபர் எதிர்மனுதாரர்:02  என்பவரை மொபைல் போனில் அழைத்தார். அதற்கு எதிர்மனுதாரர் :02 என்பவர் குப்பையை கொட்டு  எவன் வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

எதிர்மனுதாரர்:01  என்பவரும் எதிர்மனுதாரர்:02 என்பவரின் பேச்சை கேட்டு குப்பைகளை நல்லாற்றில் கொட்டினார்.

மாநகராட்சி முதல் மண்டல உதவி ஆணையர் வாசு குமார் என்பவரை அழைத்து புகார் தெரிவித்தேன்.
சுகாதார அலுவலரை அனுப்புவதாக தெரிவித்தார்.
ஆனால் மாநகராட்சி சார்பில் யாரும் சம்பவ இடம் வரவில்லை.

எனவே நான் அருகில் இருந்த V. K. அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு நின்று கொண்டிருந்த  காவல்துறை ரோந்து வாகனத்தின் அருகில் சென்று ஓட்டுநரிடம் காவல் உதவி ஆய்வாளர் இருக்கிறார்களா என்றேன்.

அதற்கு அவர் பள்ளியில் ஏதோ விழா நடைபெறுவதாகவும் அங்கு சென்று இருப்பதாகவும்  தெரிவித்தார்.

எனவே அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்றேன் அங்கு தலைமை காவலர்  உதவி ஆய்வாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட பொறுப்பு அலுவலர்கள் யாரும் அப்போது பணியில் இல்லை.

அங்கிருந்த பெண் காவலூழியர்  கிருஷ்ணவேணி என்பவரிடம் புகார் தெரிவித்து பார்வையாளர் பதிவேட்டில் எனது புகாரை பதிவு செய்தேன்.

பெண் காவலூழியர்  தலைமைக் காவலூழியர் கணேஷ் என்பவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பழனிக்குமார் என்பவர்  நல்லாற்றில் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் அளிக்க வந்திருப்பதாக  தெரிவித்தார்.

அதற்கு ஓப்பன் மைக்கில் பதில் பேசிய அவர் அவனுக்கு வேறு வேலை மயிறு  எதுவும் கிடையாது அவனை போகச்சொல் என பதிலளித்தார்.

ஒரு குற்றம் நடைபெறும் முன்னர்  அதனை தடுத்து நிறுத்தும் கடமை காவல் துறையினர்களுக்கு உண்டு.

குற்றம் நடைபெறுவது குறித்து தகவல் கொடுத்த என்னை குறித்து தலைமை காவலர் அவதூறாகப் பேசியது எனக்கு மிகவும் அதிர்ச்சி அளித்தது.

உடனடியாக மாவட்ட ஆட்சியர்
K. S. பழனிச்சாமி அவர்களுடைய மொபைல் போனில் அழைத்து நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவித்தேன்
வாகன பதிவு எண்ணை எஸ். எம். எஸ் மூலம் அனுப்பும் படி தெரிவித்தார்கள். நானும் வாகன பதிவு எண்ணை அவரது மொபைல் எண்ணுக்கு எஸ். எம். எஸ் அனுப்பினேன். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அதன் பிறகு செட்டிப் பாளையம் கிராம நிர்வாக அலுவலருக்கு மொபைலில் அழைத்தேன். அவரது மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

எனவே 4 வேலம்பாளையம்  வருவாய் ஆய்வாளர் சரவணன் என்பவரை அழைத்து தகவல் தெரிவித்தேன்.

சிறிது நேரத்தில் வருவாய் ஆய்வாளர் சரவணன் மற்றும் செட்டி பாளையம் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி (பொறுப்பு) அவர்களும் சம்பவ இடம் வந்து என்னை அங்கு வரும்படி அழைத்தார்கள்.
நானும் அங்கு சென்றேன் அப்போதும் எதிர்மனுதாரர் :01  என்பவர் டிராக்டரில் குப்பைகளை கொட்டி கொண்டிருந்தார்.

நில வருவாய் ஆய்வாளர்  கிராம நிர்வாக அலுவலர் இருவரும்  குப்பைகளை கொட்ட கூடாது எனக் கூறினார்கள்.

இங்கு யாரு குப்பை கழிவுகளை  கொட்ட சொன்னார்கள் என கேட்டார்கள் . எதிர்மனுதாரர் :02 என்பவர் தான் கொட்ட சொன்னதாக எதிர்மனுதாரர் :01 என்பவர் தெரிவித்தார் 

எதிர்மனுதாரர் :02   என்பவரது கருப்பையா டையிங்  நிறுவனம் நல்லாற்று பாலம் அருகில் தான் உள்ளது. தற்போது அவர் கட்டிட கட்டுமான பணிகள் செய்து வருகிறார் 

வருவாய் ஆய்வாளர்  சரவணன் உரிமையாளர் யார் என கேட்ட போது உரிமையாளர் பெயர் கருப்பையா என நான் தெரிவித்தேன்.

கட்டிடத்தின் உள்பகுதியில்  இருந்து வேகமாகவும் ஆவேசமாகவும் எதிர்மனுதாரர் :02  கருப்பையா என்பவர் வந்து நீ என்னடா பெரிய ஆளுன்னு நினைச்சுட்டியா ! அன்னைக்கே உன்னை ஆனந்து  போட்டிருப்பான்.

நீ வாட்ஸ் ஆப்ல செய்தி அனுப்புவது இதே பொழப்பா போச்சுடா  உனக்கு.
உன்னை அடித்து போட அரை மணி நேரம் கூட ஆகாதுடா  

நீ என்னடா பெரிய புடிங்கியா, கேன புண்ட !
அவனை அடித்து தூக்கி போடுங்கடா
இங்கேயே கொன்று புதைச்சிடுவேன்.
என்ன மயிருக்கு கருப்பையான்னு சொன்ன?
உரிமையாளர் பெயர் தான் கருப்பையானு சொன்னேன் என்றேன்.
நான் தான்டா கருப்பையா 
என்னடா செய்வ?
நீ இந்த ஏரியாவுல குடியிருக்க முடியாது.
பொறம்போக்கு நாயே.

ஆற்றில் குப்பை கழிவுகளை கொட்டக் கூடாது என்றேன் 
உன் அப்பன்  வீட்டு ஆறாடா,
நீ பிச்சைக்காரன்டா உன்னால ஸ்கூல் பீஸ் கூட கட்ட  வக்கில்ல.

உன்னால்  என்ன செய்ய முடியும் அடிபட்டு சாகாதடா.
டேய் பசங்களை வர சொல்லுங்கடா இவன அடித்து  தூக்கிக் கொண்டு போய் பாய்லரில் போட்டு எரித்து விடுங்கள்.

என்று ஆவேசமாக பேசி கொண்டு என்னை கொலை வெறியுடன் தாக்க வந்தார். நில வருவாய்  ஆய்வாளரிடம் சார் உங்கள் முன்னிலையில்  இப்படி கொலை மிரட்டல் விடுத்து பேசுகிறார். என்றேன்.

நிலவருவாய் ஆய்வாளரும் அருகில் இருந்தவர்களும் எதிர்மனுதார் :02 என்பவரின் கொலை வெறி தாக்குதலில் இருந்து  தடுத்து என்னை காப்பாற்றினார்கள்.

அனைத்து அதிகாரங்களும் இருந்தும் பெண் கிராம நிர்வாக அலுவலர் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா நின்று கொண்டிருந்தார்.

இவ்வளவு நடந்த பிறகும் என்னை இங்கிருந்து சென்று விடுங்கள் என்று கூறினார்களே தவிர இது சம்பந்தமாக எதிர்மனுதார்கள் மீது காவல் நிலையத்தில் அவர்கள் எந்த புகாரும் அளிக்கவில்லை 

கொட்டிய கழிவுகளை அள்ளி விடுகிறோம் என எதிர்மனுதாரர் :02 என்பவர் தெரிவித்த பின்னர் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் அங்கிருந்து சென்று விட்டார்கள்.

பாதிக்கப்பட்ட நான் காவல்துறை ஆன்லைன் மூலம் புகார் செய்தேன்.

எதிர்மனுதாரர்: 01 என்பவர் விவசாய பயன்பாட்டிற்காக  வாங்கிய வாகனத்தை குப்பை கழிவுகள் அள்ள பயன்படுத்துவது சட்ட விரோதம்.

எனவே அவரது வாகனத்தை பறிமுதல் செய்து அவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யும் படியும் வேண்டிக் கொள்கிறேன்

எதிர்மனுதாரர் :02 என்பவர் தற்போது சட்ட விரோதமாக விதிமுறைகள் மீறி கட்டிடம் கட்டிவருகிறார்.

பொதுச்சாலையில் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் கொலை செய்து இங்கயே புதைத்து விடுவேன். பாய்லரில்  தூக்கிப் போட்டு எரித்து விடுவேன் நீ இந்த ஏரியாவுல குடியிருக்க முடியாது என ஆபாச வார்த்தைகள் பேசி எனக்குத் தீங்கு செய்யும் நோக்கத்துடன் திட்டமிட்டு நடந்து கொண்டதினால் எதிர்மனுதாரர்:02 என்பவரை உரிய முறையில் விசாரணை செய்து குற்ற வழக்கு பதிவு செய்யக் கோரியும் எனது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்கக் கோரியும், நல்லாற்றில் கழிவுகள் கொட்டி மாசு படுத்திய குற்றத்திற்காகவும் இந்த புகார் மனு குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவு 154 (1) இன் கீழ் சார்பு செய்யப்படுகிறது

குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவு 154 (2) இன் கீழ் முதல் தகவல் அறிக்கை நகல் ஒன்று எனக்கு இலவசமாக வழங்கும் படி வேண்டுகிறேன்

இந்திய சாட்சிய சட்டப் பிரிவு 101 மற்றும் 105 இன் கீழ் நான் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை எனது அறிவுக்கு எட்டிய வகையில் உண்மை என நிரூபிக்கும்  சுமை எனக்கு இருக்கிறது என்பதை நான் அறிவேன்.

மேற்காண் புகாரில் நான் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை என்னால் நிரூபிக்க இயலாமல் எதிரிகள் விடுதலை செய்யப்பட்டால் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு- 211 இன் கீழ் நீதிமன்றம் வழங்கும் தண்டனையை மனதார ஏற்றுக் கொள்வேன் என இந்திய சாட்சிய சட்டப்பிரிவு - 70 இன் கீழ் பிரம்மாணமாக இன்றைய தேதியில்  நான் கையொப்பம் செய்துள்ளேன்  என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இணைப்பு :
01. டிராக்டர் பதிவு எண் விபரம்
02.ஆன்லைன் புகார் நகல்
03.நாளிதழ் செய்தி

நாள் :17.07.2019
இடம் :திருப்பூர்

மனுதாரர்

ஆ. பழனிக்குமார்

No comments:

Post a Comment