Sunday 28 July 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0061

RTE இலவச கல்விக்கு  கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்தது குறித்து தமிழ் நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அவர்களின் நேரடி விசாரணை!

ஊழல் ஒழிப்பு செய்தி : LAACO/0061/2019 :நாள் :28.07.2019

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

உண்மை சம்பவம்.

திருப்பூர் எம். எஸ். நகரில் சட்டவிரோதமாக செயல்பட்டு கொண்டிருந்த விகாஸ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மூடப்பட்டு விகாஸ் வித்யாலயா ஜூனியர் மெட்ரிக் பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட காரணத்தினால்  மழலையர் பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் சுமார் 68 நலிவடைந்த வாய்ப்பு மறுக்கப்பட்ட ஏழை எளிய மாணவர்களுக்கு  இனி மேல் இலவச கல்வி பயில இயலாது எனவும் கட்டணம் செலுத்தி தான் கல்வி பயில வேண்டும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்து விட்ட காரணத்தினால் பெற்றோர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சிலர் சட்ட உதவியினை நாடி  சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பினை தொடர்பு கொண்டனர்.

நமது வழி காட்டுதல் படி பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சார்பாக  திருப்பூர் மாவட்ட கல்வித்துறை  மற்றும் அனைத்து கல்வி துறை இயக்குநர்களுக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது.

ஆனால் திருப்பூர் மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் சாந்தி மற்றும் தற்போதைய முதன்மை கல்வி அலுவலர் சாந்தா  தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட கல்வி அலுவலர்கள் அனைவரும் சட்ட விரோதமாக செயல்படும் பள்ளிக்கு ஆதரவாகவும், கூட்டு சதியில் ஈடுபட்டு குற்றவாளிக்கு உடந்தையாகவும், செயல் பட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

இரண்டு மாத காலமாக குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்க வில்லை.

பல பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தால் மிரட்டப்பட்டனர்.

40,000. 00 ரூபாய் கேட்ட பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணம் 17,000.00 போக மீதி இதர கட்டணம்   23,000.00 செலுத்த கோரினர்.

டியூசன் பீஸ் போக இதர கட்டணங்களை செலுத்த வேண்டும் இல்லையெனில் ஸ்போக்கன் இங்கிலீஷ், ஹேண்ட் ரைட்டிங் உள்ளிட்ட இதர கல்விகள் வேண்டாம் என எழுதி கொடுத்து விட்டு நோட்டு புத்தகங்களுக்கான கட்டணத்தினை மட்டும் செலுத்த கோரியது பள்ளி நிர்வாகம்.

இதற்கு திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி சாமரம் வீசினார்கள்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே.எஸ். பழனிச்சாமி அவர்களின் நேரடி கவனத்திற்கு பாதிக்கப்பட்ட பெற்றோர் புகார் அளித்தும்  வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், கோட்டாட்சியர் என  முறையற்ற  பல கட்ட விசாரணைகள் நடை பெற்ற போதும்   மாவட்ட செயல் துறை நடுவரின் கீழ் இயங்கி வரும் மாவட்ட நிர்வாகத்தினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு இன்று வரையிலும் நீதி கிடைக்க வில்லை.

தமிழ் நாடு RTE விதிகள் - 2011 பிரிவு 5 இல்   இலவச கல்வி பயிலும் மாணவர்களுக்கான நோட்டுப் புத்தகம், சீருடை, எழுது பொருட்கள் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளதே?

இதற்கு கல்வி துறை ஏன் பதில் அளிக்க வில்லை?

இலவச கல்வி என்ற பெயரில் புகார் அளித்த பெற்றோர்களிடம்  மட்டும் சுமார் 5,00000
ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலித்துள்ளார்களே?

அப்படியானால் மொத்த அனைத்து பெற்றோர்களிடம் சுமார் 30,00000
ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளார்களே.?

இலவச கல்வியா?
மானிய கல்வியா?

இதற்கு பொறுப்பு வகிக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செயல் இழந்து விட்ட காரணத்தினால் பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட திருப்பூர் விகாஸ் வித்யாலயா ஜூனியர் மெட்ரிக் பள்ளிக்கு நேரடியாக வந்து விசாரணை செய்யும் அவல நிலை.
ஏற்பட்டுள்ளது.

பள்ளி கல்வி இணை இயக்குநர் அவர்களின் நேரடி விசாரணை

இடம் : திருப்பூர் விகாஸ் வித்யாலயா ஜூனியர் மெட்ரிக் பள்ளி
(மேல்நிலைப் பள்ளி என கடமை தவறிய முதன்மை கல்வி அலுவலரின் கடிதத்தில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது)
எம். எஸ்  நகர்
திருப்பூர்- 641 607

நாள் :29.07.2019

நேரம் :காலை 10. 30 மணி

விசாரணைக்கான காரணம் :

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் கல்வி பயிலும் ஏழை எளிய வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதாகவும் மற்றும் கூடுதலாக சட்ட விரோதமாக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் அனைத்தையும்  திரும்பப் பெற்றுத் தரக்கோரி 12  பெற்றோர்கள்  விகாஸ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மீது அளித்த புகார் மனு மீது நேரடி  விசாரணை நடை பெற இருப்பதாக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கடிதம்.

விசாரணைக்கான அழைப்பாணை கடிதம் விபரம் அசலாக கீழே தரப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்:
ந க எண் :7112/ஆ3 /2019
நாள்: 07. 2019

பொருள்:   புகார் - திருப்பூர் மாவட்டம் - திருப்பூர் கல்வி மாவட்டம் - விகாஸ் வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 சட்டப்பிரிவு 12 ( 1) C இன் கீழ் கல்வி பயிலும் மாணவருக்கு இலவச கல்வி மறுக்கப்படுவதாகவும் சட்ட விரோதமாக அதிகப்படியான வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்பப் பெற்றுத்தர  கோரியும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் பெறப்பட்டுள்ளது சார்பாக, 

பார்வை: தமிழ்நாடு தொடக்க கல்வி இணை இயக்குநர் (உதவி பெறும் பள்ளிகள்) அவர்களின் செயல்முறைகள் ந. க. எண் :10122 / எப்1/2019
நாள் :21.06.2019

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் கல்வி மாவட்டம் விகாஸ் வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - 2009 சட்டப்பிரிவு 12 (1) C இன் கீழ்  இலவச கல்வி மறுக்கப்படுவதாகவும்,

சட்டவிரோதமாக அதிகப்படியாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற்றுத்தர தெரிவிக்கப்பட்ட புகார் சார்பாக,
29.07.2019  அன்று காலை  10.30 மணிக்கு விகாஸ் வித்யாலயா ஜூனியர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களால் நேரடி விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது   

மேற்படி விசாரணையில் தங்கள் தவறாது கலந்து கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகின்றது.

முதன்மை கல்வி அலுவலருக்காக,
திருப்பூர்
25.07.2019

பெறுநர்: 
1.திரு. M. சஞ்சீவ்குமார்
40 V. R. P நகர்
M. S. நகர் வடக்கு
திருப்பூர்- 641 607

2.முதல்வர் /செயலர் /தாளாளர்
விகாஸ் வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி

நகல்:
1.மாவட்ட கல்வி அலுவலர் திருப்பூர்

2.வட்டார கல்வி அலுவலர் திருப்பூர் வடக்கு

பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் அவர்களின் விசாரணையிலாவது பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு நீதி கிடைக்குமா?

நாஞ்சில் கோ கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ் திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள்
தொடரும்.......

Monday 22 July 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0060

*நைருதி வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் கல்விகட்டண கொள்ளை*!!
😡😡😡😡😡😡😡😡😡

📢 *ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO/0060/2019 :நாள் :22.07.2019*

*குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன*?

உண்மை சம்பவம்!

குற்றவாளி யார்?

*சசூரி குரூப்ஸ் கல்வி நிறுவனங்களின் முறைகேடுகள்*!

*திருப்பூர் மண்ணரையில் செயல்படும் நைருதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் கல்விக்கட்டண கொள்ளை* !

2018 - 2019 ஆம் கல்வி ஆண்டில்
எட்டாம் வகுப்பிற்கான கல்வி கட்டணம் வசூலித்ததிற்கான (FEES PAID CERTIFICATE) சான்று வழங்கி உள்ளனர்.

1.TUTION FEES :10250.00
(கல்வி கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த ஒர் ஆண்டுக்கான கல்விக் கட்டணம்)

2. LIBRARY FEES : 5000.00
(படிப்பகம்)

3. E C A :10000.00
EXTRA CURRICULAR ACTIVITYS
(ஸ்போக்கன் இங்கிலீஷ், ஹேண்ட் ரைட்டிங்,, கம்ப்யூட்டர், யோகா, கராத்தே ஹிந்தி, போன்ற இதர பயிற்சிகள்)

4. QUESTION  PAPER  FEES AMOUNT :4200.00
(வினாத்தாள் கட்டணம்)

5.BOOKS FEES :7050.00
(புத்தக கட்டணம்)

6. NOTE FEES :7500.00
(நோட்டு கட்டணம்)

ஆக மொத்தம் : 44,000.00 ரூபாய் கட்டணம் வசூலித்து அதற்கான சான்றிதழும் பள்ளி லெட்டர் பேடில் பள்ளி முதல்வரின் கையொப்பம் இட்டு வழங்கி உள்ளனர்.

இதில் என்ன முறைகேடு நடந்துள்ளது ?

*இந்த சான்றிதழ்களை எல்லாம் வருமான வரித்துறையின் கவனத்திற்கு கொண்டு போய் இருப்பார்களா*?

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண கொள்ளையினை தடுப்பதற்காக தானே கல்விக்கட்டண நிர்ணய குழு மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் அந்தந்த பள்ளிகளின் உள் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கு ஏற்ப மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனியாக கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் மேற்காண் பள்ளிக்கு எட்டாம் வகுப்பிற்கான அரசு நிர்ணயம் செய்த ஒர் ஆண்டுக்கான கல்வி கட்டணம் 10250.00  ரூபாய் மட்டும் தான்.

ஆனால்
பள்ளி நிர்வாகம் லைப்ரரி கட்டணம் என 5000.00 ரூபாய்  கூடுதலாக வசூலித்துள்ளனர்.

இதில் வேறு லைப்ரரியே இல்லை என பாதிக்கப்பட்ட  பெற்றோர் குற்றச்சாட்டு.

எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் என 10000.00 வசூலித்துள்ளனர்.

வினாத்தாள் கட்டணம் என 4200.00
வசூலித்துள்ளனர்

புத்தக கட்டணம் என 7050.00 வசூலித்துள்ளனர்.

நோட்டு கட்டணம் என 7500.00 வசூலித்துள்ளனர்.

கூடுதல் கட்டணமாக 33750.00 வசூலித்துள்ளனர்.

இதை தானே நாம் கல்வி கட்டண கொள்ளை என்கிறோம்.

அப்படியானால்
திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு இவர்கள் எவ்வளவு ரூபாய் லஞ்சம் கொடுத்திருப்பார்கள்?

பாதிக்கப்பட்ட பெற்றோர் ஒருவர்  தனது மகனின் எதிர்காலம் கருதி  புகார் அளிக்க  பயப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சபாஷ்!

பயம்! பயம்! பயம்!!

பயம் தானே பெற்றோரின் பலவீனம்!

இதனை தானே இந்த கல்வி கொள்ளையர்கள் எதிர் பார்க்கின்றனர்!

இது தானே அவர்களின்அதிகார  பலம்!

நகை நட்டை எல்லாம் அடமானம் வைத்தேன்

வாயை கட்டி வயிற்றை கட்டி சிறுக சிறுக பணம் சேர்த்தேன்.

வட்டிக்கு பணம் வாங்கினேன்.
கடன் பெற்றேன்.

எனது குழந்தையின் படிப்பிற்காக!

நான் படிக்க வில்லை.

ஆனாலும் எனது மகன் ஆங்கில வழி கல்வி பயில வேண்டும்.

எப்படியாவது அவன்  படித்து நல்ல வேலையில் அமர்ந்து கை நிறைய சம்பாதித்து நிம்மதியாய் வாழ வேண்டும்.

நான் பட்ட கஷ்டம் அவன் படக்கூடாது.

இது தானே ஒவ்வொரு ஏழை பெற்றோரின் கனவு!

*தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை*!

ஏழை எளிய மக்கள் உழைப்பிலும்  கண்ணீரிலும் சேர்த்த பணத்தினை கொள்ளை அடிப்பது நியாயமா?

அவர்களின வயிற்றெரிச்சல் உங்களை சும்மா விடுமா?

நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஒரு நாள் நாசமாய் போய் விடக்கூடும்.

*அரசூழியர்களுக்கு எச்சரிக்கை*!

ஏழைகளிடம் சுரண்டி  தனியார் பள்ளி நிர்வாகிகள்  கொள்ளை அடித்த பணத்தில் லஞ்சம் பெறும்  அரசூழியர்களே!

நீங்களும் உங்கள் குடும்பமும் ஒரு நாள் நாசமாக போய் விடக்கூடும்.
கவனம்.

என்னடா இது சாபமா?
ஆமாம்.

*ஒட்டு மொத்த ஏழை எளிய மக்களின் சாபம்*.

ஏதோ ஒரு சில பெற்றோர் புகார் அளித்தாலும் லஞ்சம் எனும் மலம் தின்னும் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லையே  ஏன்?

லஞ்சம்! லஞ்சம்! லஞ்சம்! மட்டுமே காரணம்.

நாட்டில் அமலில் உள்ள சட்டங்களும் அரசாணைகளும் கடமை தவறிய கேடு கெட்ட அரசூழியர்களினால் கேலிக் கூத்தாக ஆக்கப்பட்டுள்ளதே ஏன்?

இதற்கு ஒரே தீர்வு!

அரசு பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தையும் மேம்படுத்த வேண்டும்.

*தனியார் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தையும் அரசுடமை ஆக்க வேண்டும்*

*அனைத்து தரப்பு மக்களுக்கும் பாரபட்சமற்ற இலவச சமச்சீர் கல்வி கிடைக்க வேண்டும்*

*கல்வி முற்றிலும் இலவசம் என அரசு அறிவிக்க வேண்டும்*.

*கல்வி இலவசம் என அரசு அறிவிக்கும் வரை மக்கள் ஒன்று பட்டு கல்வி உரிமைக்காக போராட முன்வர வேண்டும்*.

நேர்மையான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் 👍

வாக்கு என்னும் கூர்மையான ஆயுதத்தை விரல் நுனியில்  கொண்டுள்ள மக்கள் அனைவரும் சரியாக பயன் படுத்தினால் மட்டுமே இது சாத்தியம்.

மாறுங்கள்! மாற்றுங்கள்!
கல்வி புரட்சி வெடிக்கட்டும்.
தமிழகம் தலை நிமிரட்டும்.
💥💥💥💥💥💥💥💥💥
✍️ *நாஞ்சில்*
*கோ கிருஷ்ணன்* செய்தியாளர்
*ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்* திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும்... 👋

Sunday 21 July 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0058

*யார் இந்த ஆண்டவர்  ராமசாமி*?

📢 *ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO /0058/2019 :நாள் :17.07 2019*

*குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன*?

*உண்மை சம்பவங்கள்*

*குற்றவாளிகள்  யார்* ?

இதோ
*இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைக்காக போராடி வரும் ஒரு பெற்றோரின் நெஞ்சம் நெகிழ வைக்கும் கண்ணீர்  கடிதம்*

*திருப்பூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு தலைவருக்கு வங்கி வரைவோலை  அனுப்பப்பட்ட நாளிலேயே நுகர்வோர் பாதுகாப்பு செயலாளர் மூலம் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது*.
இத்துடன் அவரது கடமை முடிந்து விட்டதாக கருதுகிறார் போலும்!

சபாஷ்!

புகாரில் குறிப்பிட்டுள்ள எதிர்மனுதாரர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவருக்கு  இருக்கிறதா? என்ன?

*திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வங்கி வரைவோலையை வாங்கி வைத்து  கொண்டு சிறப்பு பூஜை ஏதேனும் செய்கிறாரா*?

*கல்வி தந்தை என தன்னை தானே விளம்பர படுத்தி கொண்ட விகாஸ் வித்யாலயா குரூப்ஸ் ஆப் பள்ளிகளின்  நிர்வாகி  ஆண்டவர் டெக்ஸ்டைல் ராமசாமி பெரிய அப்பா டக்கரா? என்ன*?

ஆம்.

*என்ன கலெக்டர் கிட்ட போய் புகார் செய்கிறாயா*?
செய்.

*பத்திரிக்கையில் ஒரு நாள் செய்தி வருமா*!
வந்துட்டு போகட்டும் 

*எதை பத்தியும் நான் கவலை பட மாட்டேன்*.

ஏனென்றால்.............!!

*ஒட்டு மொத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் சட்ட விரோதமாக செயல் பட்டு வரும் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக  செயல் பட காரணம் என்ன*?

இந்த ஆண்டவர் ராமசாமி யார் என்று இப்போது தெரிந்திருக்குமே?

*பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கும்  குழந்தைகளுக்கும்  நீதி மறுக்கப்படுவது எதனால்*?

*நீதிமன்றம் சென்று தான் கல்வி உரிமையை பெறும் அவல நிலையில் ஏழை எளிய மக்கள்*.

அய்யகோ!
*நெஞ்சு பொறுக்குதில்லையே*!!

*கல்வி அவசர மனு*
😡😡😡😡😡😡😡😡😡
                             
மனுதாரர் :
K. சங்கர்
1/51.A முருகானந்தபுரம் முதல் வீதி
புதிய பேருந்து நிலையம்
பி. என் ரோடு,
திருப்பூர்- 641 602

எதிர்மனுதாரர்கள்:
01.N. ரேணுகாதேவி / பள்ளி முதல்வர்
மாதேஸ்வரன் / பள்ளி செயலாளர்
நிறுவன தலைவர் ஆண்டவர் ராமசாமி
விகாஸ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்ட
விகாஸ்  வித்யாலயா ஜூனியர் மெட்ரிக்குலேசன் பள்ளி
எம். எஸ். நகர்,
திருப்பூர் - 641 607

02. சாந்தி
முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் திருப்பூர்
தற்போதைய திருச்சி மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் திருச்சி மாவட்டம்.

03.இயக்குநர் அவர்கள்
மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்
DPI காம்ப்ளக்ஸ்
கல்லூரி சாலை
நுங்கம் பாக்கம்
சென்னை- 600 006

04.மாநில திட்ட இயக்குநர் அவர்கள் (SSA)
அனைவருக்கும் கல்வி இயக்ககம்
DPI காம்ப்ளக்ஸ்
கல்லூரி சாலை
நுங்கம்பாக்கம்
சென்னை - 600 006

05.இயக்குநர் அவர்கள்
தொடக்கப் பள்ளிகள் இயக்குநரகம் 
DPI காம்ப்ளக்ஸ்
கல்லூரி சாலை
நுங்கம்பாக்கம்
சென்னை - 600 006

06. அரசு முதன்மை செயலாளர்  அவர்கள்
பள்ளிக் கல்வித்துறை
தலைமை செயலகம்
சென்னை - 600 009

07 அழகர்சாமி AEO
வட்டார கல்வி அலுவலர்
திருப்பூர் தெற்கு

08. விஸ்வநாதன் AEO
வட்டார கல்வி அலுவலர்
திருப்பூர் வடக்கு -641 601

09. ராஜா
மாவட்ட கல்வி அலுவலர்
திருப்பூர்-641 604

10. பெ. சாந்தா
முதன்மைக் கல்வி அலுவலர்
முதன்மை கல்வி அலுவலகம்
திருப்பூர் -641 604

11.கோட்டாட்சியரின்  நேர்முக உதவியாளர்
வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம்
திருப்பூர் -641 601

12. S. செண்பகவல்லி
கோட்டாட்சியர்
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
திருப்பூர் -641 601

13 .ஜெயக்குமார்
வட்டாட்சியர் 
வட்டாட்சியர் அலுவலகம்
திருப்பூர் வடக்கு -641 601

பெறுநர் :
K..S. பழனிச்சாமி
மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு தலைவர்
மற்றும்   மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
திருப்பூர் - 641 604

பொருள் :
RTE இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பயிலும் எனது மகன்கள் S. சித்தார்த் மற்றும் .S. அர்ஜுன்   என்பவர்களுக்கு  நோட்டு    புத்தகங்களுக்கான  கட்டணமாக சுமார் 1500+ 1500 ரூபாய்க்கான வங்கி வரைவோலை  எடுத்து தங்களுக்கு இத்துடன் அசலாக  இணைத்து பதிவஞ்சலில் அனுப்பி உள்ளேன்.  

எதிர்மனுதாரர்: 01 என்பவரிடம் கொடுத்து எனது  இரு மகன்களுக்கு நோட்டு புத்தகங்கள்  பெற்று  கொடுத்து தொடர்ந்து இலவச கல்வியை பயிலவும்  எதிர் மனுதாரர்கள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி குற்ற விசாரணை முறை சட்டப் பிரிவு  2(4) இன் கீழ் முறையீடு,

பார்வை :  
01.  17. 06 .2019 அன்று மக்கள் குறை தீர்க்கும் முகாமில்   கொடுக்கப்பட்ட மனு நகல்

02.  வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் கடித
ந. க.1639/2019/அ1 நாள் :19.06.2019

03 .கர்நாடகா வங்கி
வரைவோலை எண் :77814
மற்றும் 77815  நாள் :   03.07.2019 தொகை:  1500+1500=3000

மனுதாரர் ஆகிய நான்  மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.

எதிர்மனுதாரர்  :01 என்பவரது  பள்ளியில் எனது இரு மகன்கள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 இன் கீழ் கல்வி பயின்று வருகின்றனர். .

2019 - 20 கல்வி ஆண்டில் சுமார்
80 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று  எதிர்மனுதாரர் :01 என்பவர் கூறிய காரணத்தினால் எதிர்மனுதாரர் :03 மெட்ரிக் பள்ளி இயக்குனர் எதிர்மனுதாரர் 04.அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் எதிர்மனுதாரர் :05. தொடக்கப் பள்ளிகள் இயக்குனர்  எதிர்மனுதாரர் :06  பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் ஆகியவர்களுக்கு 08.06.2019 அன்று புகார் மனு அனுப்பி இருந்தேன்.

கல்வி கட்டண நிர்ணய குழு தலைவர் அவர்களுக்கு புகார் மனு அனுப்பியதற்கு எனது புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி எதிர்மனுதாரர் :05 என்பவருக்கு அனுப்பி அவரது கடமையினை செவ்வனே செய்துள்ளார்கள்.

இன்றைய தினம் வரையிலும் எனது புகாரின் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுத்து நோட்டு புத்தகங்கள் பெற்று தரவில்லை.

இந்நிலையில் எதிர்மனுதாரர் :01 என்பவர் 11.06.2019 அன்று மாலை 6.00 மணிக்கு பள்ளிக்கு வருமாறு அழைத்தார்.

அங்கு சென்ற போது சுமார் 7.00 மணி அளவில் எதிர்மனுதாரர் :02 என்பவர் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி பள்ளிக்கு வந்தார்.

அனுமதி இன்றி செயல் பட்ட 17 பள்ளிகள் மூடப்பட்டது. அதில் விகாஸ் வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியும் ஓன்று.
பள்ளி மூடப்பட்டதால் RTE  மாணவர்களுக்கு சலுகை எதுவும் கிடைக்காது.

ஏதோ பள்ளி சேர்மனுக்கு விகாஸ் வித்யாலயா ஜூனியர் மெட்ரிக் பள்ளி இருப்பதினால் உங்கள் குழந்தைகளை வெளியேற்றாமல் பள்ளிக்குள் அனுமதி அளித்துள்ளார்.

டியூசன் பீஸ் மட்டும் தான் அரசு வழங்கும். நோட்டு புத்தகங்கள்  எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்க்கு பள்ளி நிர்வாகம் 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்டாலும் செலுத்தி தான் ஆக வேண்டும் என்றார்.

இந்நிலையில்  சட்ட விரோதமாக செயல் பட்டு வரும் எதிர்மனுதாரர் : 01 என்பவருக்கு ஆதரவாக செயல்பட்ட எதிர் மனுதாரர்: 02 என்பவர் மீதும் பார்வை :01 இல் காணும் புகார் கடிதத்தினை குறைதீர்ப்பு நாளில் தங்களிடம் நேரில் கொடுத்தேன். 

தாங்கள் இரண்டு தினங்களில் விசாரணை செய்து நோட்டு புத்தகங்கள் வழங்குவதாக தெரிவித்தீர்கள்.

18. 6. 2019 அன்று எதிர்மனுதாரர் :07  என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த  புகார் மனு மீது விசாரணை செய்வதற்காக மதியம் 1.00 மணிக்கு   பள்ளிக்கு வரும்படி அழைத்தார்கள்.

திடீரென்று அழைத்துள்ளீர்கள். மாலை 4.00 மணிக்கு வருகிறேன் என தெரிவித்து 4.00 மணிக்கு
எதிர்மனுதாரர் :01 என்பவரது பள்ளிக்கு சென்றேன்.

அங்கு சென்ற போது  RTE சட்டம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் நோட்டு புத்தகங்கள் இலவசம் என்ற அரசாணை ஏதாவது இருந்தால் கொடுங்கள் படித்து பார்க்கிறோம் என எதிர்மனுதாரர்கள் 7 மற்றும் 8 தெரிவித்தார்கள்.

மற்றபடி பள்ளி நிர்வாகத்திற்கு  இதர கட்டணங்களை செலுத்தி தான் ஆக வேண்டும் என கூறினார்கள். இவர்கள் கல்வி துறைக்கு தகுதியற்ற நபர்கள் என இதன் மூலம் தெரிய வருகிறது.

நான் செலுத்த  முடியாது என கூறினேன்.

மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிப்பதாக கூறி சென்றனர்.

19  06 .2019  அன்று எதிர்மனுதாரர் 7 மற்றும் 8  என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் நீங்கள் கொடுத்த புகார் மனு மீது  வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகும்படி தெரிவித்தார்.

அதற்கு நாங்கள் முறையான அழைப்பாணை அனுப்பினால் விசாரணைக்கு கலந்து கொள்வதாக தெரிவித்தேன்.
வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் தெரிவிக்கிறேன் என்றார்

எதிர்மனுதாரர்:11 என்பவர்  அழைத்து விசாரணை கடிதம் அனுப்பினால் தான் வருவீர்களா? விசாரணை  கடிதம் எதுவும் அனுப்ப முடியாது என தெரிவித்து விட்டார்.

இதனை அடுத்து 19.06.2019  அன்று தேதியிட்ட  வருவாய் கோட்டாட்சியர் விசாரணை  கடிதம் 20.06.2019 அன்று கிராம நிர்வாக அலுவலர் மூலம் கிடைத்தது.

அதில் 27. 06.2019 அன்று மாலை 3 மணி அளவில் விசாரணை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது

அன்றைய தினம் அந்த விசாரணையில் கலந்து கொண்டேன்.

அங்கே விசாரணையில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் ஆஜராகவில்லை.

எதிர்மனுதாரர்கள் : 7 & 8 மற்றும் 9  ஆஜராகினர்.
எதிர்மனுதாரர் :01 பள்ளி முதல்வர்/ பள்ளி செயலாளர் / நிறுவன தலைவர் ஆண்டவர் ராமசாமி மற்றும் அடையாளம் தெரியாத பத்துக்கும் மேற்பட்டவர்களுடன் வந்தனர்.

எதிர்மனுதாரர் :12 என்பவர் விசாரணைக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேறுமாறு தெரிவித்தார்.

ஆனால் எதிர்மனுதாரர் :01 ஆண்டவர் ராமசாமி அவருடன் வந்த வழக்கறிஞர் வெளியேற முடியாது இங்கேயே தான் இருப்போம் என தெரிவித்தனர்.

அதற்கு எதிர்மனுதாரர் :12 அலுவலக  பாது காவலரை அழைத்து அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.

நாங்கள் கொண்டு சென்ற  ஆவணங்கள்  எதுவும் எதிர்மனுதாரர் :12  வாங்கிப் பார்த்து விசாரணை மேற்கொள்ள வில்லை 

Extra Curricular Activities என தெரிவிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டணங்களான  ஸ்போக்கன் இங்கிலீஷ், ஹேண்ட் ரைட்டிங் ,ஸ்மார்ட் கிளாஸ், ஹிந்தி உள்ளிட்டவைகள் கல்வி சம்மந்தப்பட்டது என்றும் அதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் இதர  பயிற்சிகளுக்கான   கட்டணங்களை பெற்றோர் விருப்ப பட்டால்  செலுத்தலாம்

நோட்டு புத்தகங்களுக்கான கட்டணம் எவ்வளவு என தெரிவித்து அதை மட்டும் பெற்றுக் கொள்ளும்படி கூறினார்.

அதற்கு எதிர்மனுதாரர் :01 என்பவர் இப்பொழுதே  எனது குழந்தைக்கு எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ் எதுவும் தேவையில்லை என உடனடியாக கடிதம் எழுதிக் கொடுக்குமாறு வற்புறுத்தினார்.

நான் கடிதம் எதுவும் எழுதி கொடுக்க முடியாது என கூறி கூறிவிட்டேன்.

அவசர வேலை நிமித்தமாக எதிர்மனுதாரர் :12 வெளியில் செல்ல இருப்பதால் மனுதாரர்கள் செலுத்த வேண்டிய  கட்டண விபரங்களை எதிர்மனுதாரர்கள் :7 & 8 மற்றும்  9  என்பவர்கள் எதிர்மனுதாரர் :01 என்பவரிடமிருந்து வாங்கி கொடுக்கும் படி   கூறி சென்று விட்டார்.

ஆனால் எதிர்மனுதாரர் :01 என்பவர் கட்டண விபரங்களை வழங்க மறுத்து விட்டார்.

எதிர் மனுதாரர்கள் 7 & 8 மற்றும் 9 என்பவர்களிடம்  தெரிவித்த போது எதிர்மனுதாரர் :9 என்பவர் பள்ளி நிர்வாகத்திடம் போய் கேட்கும் படி கூறினார்.

எதிர் மனுதாரர் :12 என்பவரிடம் இது குறித்து தெரிவித்த போது  கல்வி அதிகாரிகளிடம் பேசுகிறேன் என்றார்.

ஆனால் இன்றைய தினம்  வரையிலும் எனது மகனுக்கு நோட்டு புத்தகங்கள் எதுவும் வழங்காமல் பள்ளி நிர்வாகம் அலைகழித்து வருகிறது.

எதிர்மனுதாரர் :13 என்பவர் எதிர்மனுதாரர் :12 என்பவரின்  விசாரணையில் கலந்து கொள்ளாமல் நிராகரித்து விட்டார்

சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் எதிர்மனுதாரர் :01 என்பவருக்கு எதிர்மனுதாரர்கள் 2 முதல் 13 வரை அனைவரும் சாதகமாக செயல்பட்டு வருகின்றனர் .

பாதிக்கப்பட்ட எனக்கு நீதி கிடைக்கவில்லை .
எனது மகன்களின் கட்டாய கல்வி உரிமை  திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளது.

இதனால் நானும் எனது குடும்பமும் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி உள்ளோம்.

இதற்கு முழுக்க முழுக்க கடமை தவறிய எதிர்மனுதாரர்:10 என்பவர்  தான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்நாடு  RTE  விதிகள்  2011 பிரிவு 5 இல் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவடைந்த ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் சீருடைகள் இலவசம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தொடர்ந்து எதிர்மனுதாரர் :01 என்பவர் பல்வேறு கட்டணங்களை சட்ட விரோதமாக வசூலித்து வருகிறார்.

நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை தவறிய கல்வி அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

*நோட்டு புத்தகங்களுக்கான  கல்வி கட்டணங்களை எதிர்மனுதாரர் :01 என்பவர் தெரிவிக்காத காரணத்தினால் பார்வை: 3 இல் காணும் 1500+1500  ரூபாய்க்கான வங்கி வரைவோலையை  இத்துடன் இணைத்து தங்களுக்கு பதிவு அஞ்சலில் அனுப்பி உள்ளேன்*.

*தாங்கள் உடனடியாக இந்த வங்கி வரைவோலைகளை  எதிர்மனுதாரர்:01  பள்ளி நிர்வாகத்திடம் கொடுத்து எனது மகன்களுக்கு நோட்டு புத்தகங்கள் பெற்றுக் கொடுத்து கல்வி உரிமையை மீட்டு கொடுக்கும் படி வேண்டிக் கொள்கிறேன்*

*எனது  இந்த அவசர கோரிக்கையினை  மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு தலைவர்/ மாவட்ட ஆட்சியர் /மாவட்ட செயல்துறை நடுவர் என பல்வேறு பதவி வகிக்கும்  தங்களால் நிராகரிக்கப்பட்டால்  நீதி வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் எதிர்மனுதாரர்கள் அனைவர் மீதும் உடனடியாக வழக்கு பதிவு செய்து உரிய நிவாரணம் பெறுவதினை  தவிர பாதிக்கப்பட்ட எனக்கு வேறு வழி இருப்பதாய் தெரிய வில்லை  என்பதினை  நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - 1986  மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் - 1993   மற்றும் குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவு 2 (4)  இன் கீழ் இக்கடிதம் பதிவஞ்சல்  ஒப்புகையுடன் சார்பு செய்யப்படுகிறது என்பதினை தெரிவித்து கொள்கிறேன்*

இணைப்பு பக்கங்கள்:  05 மற்றும் வங்கி வரைவோலைகள் அசல்      

நகல் தக்க மேல் நடவடிக்கைக்காக :

தமிழக முதல்வர் /தலைமை செயலகம்

மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் _ டெல்லி.

தகவலுக்காக :
எதிர்மனுதாரர்கள் 1 முதல் 13  வரை.
💥💥💥💥💥💥💥💥💥
✍  *நாஞ்சில்*
*கோ. கிருஷ்ணன்* செய்தியாளர்
" *ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்*" திருப்பூர் மாவட்டம்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும்.... 🙏