Saturday 23 February 2019

ஊழல் ஒழிப்பு செய்தி:0044 ஆளும் கட்சி விழா!

ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO /0044/2019 ;நாள் :24.02.2019

குற்றம் நடைபெற்று கொண்டிருப்பது  என்ன?

உண்மை சம்பவம்.

காத்து கொண்டிருக்கும் பேராபத்து! 

கடமை தவறிய திருப்பூர் மின்சார வாரிய ஊழியர்கள்?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 71 ஆவது பிறந்த தின விழா மற்றும் கபடி போட்டி!

விழா நடை பெறும் இடம் ;

அங்கேரிபாளையம்  சாலை
மாநகராட்சி முதல் மண்டல பிரிவு அலுவலகம் பின்புறம்
க.ச.எண் :389 தனியாருக்கு சொந்தமான இடம்.
திருப்பூர் மாவட்டம்.
நாள் :23 & 24.02.2019

ஆபத்தை உணராத ஆளும் கட்சி  திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள்!

கபடி வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் பாது காப்பில்லை?

அக்கறை இல்லாத காலி இட உரிமையாளர்.

மாநகர காவல் துறையினர் ஆய்வு செய்யாமல் அனுமதி வழங்கினார்களா?
அல்லது

ஆளும் அதிகார திமிரில் அனுமதி பெறாமல் நடத்துகிறார்களா?

பிளக்ஸ் பேனர்கள் பொது இடையூறு ஏற்படுத்தும்  வகையில் திருப்பூர் மாநகரம் முழுவதும் உயர்நீதிமன்ற உத்தரவினை மீறி சட்ட விரோதமாக வைக்க திருப்பூர் மாநகர காவல் துறையினர்  எப்படி அனுமதி அளித்துள்ளனர்?

க.ச.எண் : 389
பட்டா எண் :23
ப.அருள் ஜோதி
என்பவருக்கு சொந்தமான 3.40 ஏக்கர் பரப்பளவு கொண்ட. பள்ளமான இடத்தில் மழை காலங்களில் கழிவு நீருடன்  மழை நீரும் தேங்கி குட்டை போல் காணப்பட்டது. 

தேங்கிய கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்களின் பிறப்பிடமாக இருந்து வந்தது .

குப்பையும் கட்டிட  கழிவுகளும் கொட்டப்பட்டு தீயிட்டு எரித்து பொது சுகாதார கேடு ஏற்படுத்தி வந்த நிலையில் அங்கேரிபாளையம் நண்பர்கள் குழுவினர் குப்பை கொட்டிய வாகனங்களை பல முறை சிறை பிடித்து  புகார் அளித்ததின் பேரில் மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்பட்டு தற்பொழுது அந்த குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது

அதே பகுதியில் பிரதான சாலையில் கழிவு நீர்கால்வாய் தரை பாலம் கட்டும் பணி நடை பெற்று வருவதினால் மேற்காண்
தனியாருக்கு சொந்தமான இடம் வழியாக போக்குவரத்து மாற்றம்
செய்யப்பட்டு வாகனங்கள் சென்று
வருகிறது.

அந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம் வழியாக தாழ்வழுத்த மின்சாரம் மின்கம்பங்கள் வழியாக சென்று கொண்டிருக்கிறது.

அதில் ஒரு மின்கம்பம் சேதமடைந்து உடைந்து விழும் தருவாயில் உள்ளது.

மின்சாரம் செல்லும் மின்கம்பிகள் தொட்டு விடும் உயரத்தில் மிகவும் தாழ்வாக தொங்கி கொண்டிருக்கிறது.

எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின் விபத்து ஏற்படக்கூடும்.

இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி 4 மற்றும் 7 ஆவது  வார்டு ஆளும் அ.இ.அ.தி.மு.க கட்சியினர் சார்பாக மேற்காண் தனியாருக்கு சொந்தமான இடத்தினை சுத்தம் செய்து மேடை மற்றும் கூரை அமைத்து கபடி போட்டி நடத்தி வருகிறார்கள்.

மேடை அருகிலேயே மின்சார கம்பிகள்  தாழ்ந்த நிலையில் செல்வது கபடி வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பாதுகாப்பில்லா நிலை ஏற்பட்டுள்ளது.

யார் பொறுப்பு ?

பல ஆண்டுகளாக அறுந்து விழும் நிலையில் தொங்கி கொண்டிருக்கும் மின்சாரம் செல்லும் கம்பிகள் சரி செய்யப்படாத காரணம் என்ன?

விபத்து நடந்து விட்டால் எதிர்பாரா விதமாக ஏற்பட்டு விட்டது என கூறி வழக்கம் போல் அனுதாபம் தெரிவிக்க முடியுமா?

பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் இடத்தில் தெரிந்தே விழா நடத்துவது எதனால்?

மக்கள் பிரதிநிதியான சட்டமன்ற உறுப்பினர் பொது மக்கள் நலனில் ஏன் அக்கறை கொள்ள வில்லை?

அதே பகுதியில் இருக்கும் செட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஏன் இதனை கண்டு கொள்ள வில்லை?

கோரிக்கை ;
தனியார் இடமாக இருந்தாலும் மின்கம்பங்கள் பிரதான சாலையின் குறுக்கே செல்வதால் பொது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே திருப்பூர் மாவட்ட மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அவர்கள் ஆய்வு செய்து  கவன குறைவாக இருக்கும் இட உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக தொங்கி கொண்டிருக்கும் மின்கம்பிகளை சரி செய்யக்கோருகிறோம். 

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள் தொடரும்.....!

Thursday 21 February 2019

ஊழல் ஒழிப்பு செய்தி 0046 திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் விபத்து ஏற்படுத்தும் சிக்னல் !!

ஊழல் ஒழிப்பு செய்தி :LAACO /0046 / 2019 :நாள் ;.08.03.2019

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

உண்மை சம்பவம்.!

திருப்பூர் அவிநாசி பிரதான சாலையில் போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறு!

பயனற்ற போக்குவரத்து சிக்னல்!

உயிர் பலி கேட்கிறதா?
திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து காவல் துறை?

போக்குவரத்து காவல் துறையினர் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு  பிரச்சாரங்கள் விழிப்புணர்வு பதாகைகள்  வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பில்லாமல் செயல் பட்டு வரும் திருப்பூர் அவிநாசி சாலை அனுப்பர்பாளையம் புதூர் சிக்னல்.

நெடுஞ்சாலை துறையினர் கழிவு நீர்க்கால்வாய் தரைப்பாலம் கட்டுமான பணி முடித்து பல மாதங்கள் ஆகியும் போக்குவரத்து சிக்னல்  பயன் பாட்டிற்கு கொண்டு வர வில்லை!

யார் பொறுப்பு?

நாதியற்று கிடக்கும் அனுப்பர்பாளையம் புதூர்  போக்குவரத்து சிக்னல்!

கண்டு கொள்ளாத போக்குவரத்து காவல் துறை!

அவிநாசியில் இருந்து திருப்பூர் நோக்கி வரும் வாகனங்களை கட்டு படுத்த ஒரு போக்குவரத்து காவலூழியர்  பணியில் இருக்கிறார்.
அவரும் முழு நேரம் பணியில் இருப்பதில்லை.

திருப்பூரில் இருந்து அவிநாசி நோக்கி செல்லும் வாகனங்களும் ,அங்கேரிபாளையம் செல்லும் வாகனங்களும்  4.வேலம் பாளையம் சாலையில் இருந்து திருப்பூர் நோக்கி செல்லும் வாகனங்களும் அவிநாசி சாலையில் இருந்து 4.வேலம்பாளையம் செல்லும் வாகனங்களும் எந்த விதமான கட்டு பாடுகளும் இல்லாமல் ஒரே நேரத்தில்  சிக்னலை கடந்து செல்லும் போது மிகுந்த போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருவதினை தினம் தினம் காண முடிகிறது.

ஸ்பாட் பைன் வசூலிப்பதிலும் பொய் வழக்கு போடுவதிலும் கவனம் செலுத்தும் போக்குவரத்து காவலூழியர்கள்  இதனை
ஏன் கண்டு கொள்ள வில்லை?

பிரதான சாலையில் தாறு மாறாக விதி முறைகள் மீறி  விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலையை கடந்து  செல்லும் வாகனங்களால் இருச்சக்கர வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் கடும் அவதி!

முதல்வர் திருப்பூர் வருவதற்கு முதல் நாள் இரவோடு இரவாக பழுதடைந்த சாலைகள் சுகாதார பணிகள் மாநகராட்சி ஊழியர்களை கொண்டு அவசர அவசரமாக செய்து முடிக்க பட்டதே?

முதல்வர் யார்?
அவரும் மக்கள் பிரதிநிதி தானே?

மக்கள் நல பணிகளை மேற்கொள்வதற்காக தான் பல அரசுத்துறைகள் உள்ளன.

பொது மக்களிடம் பல்வேறு வழிகளில் வரியாகவும் சேவை கட்டணமாகவும் அபிவிருத்தி கட்டணமாகவும் சுகாதார கட்டணமாகவும் குறிப்பிட்ட நாள் நேரம் நிர்ணயம் செய்து கட்டணங்களை வசூலிக்கும் அரசுத்துறை ஊழியர்கள் ஏன் மக்கள் நல பணிகளை முறையாக செய்வது இல்லை?

4.லேலம் பாளையம் சாலை சந்திப்பில் கழிவு நீர் கால்வாய் பணிகளை கிடப்பில் போட்டு போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் ஏன் இடையூறு செய்து வருகிறார்கள்.?

கீழ்நிலை ஊழியர்கள் முதல் மேல்நிலை ஊழியர்கள் வரை தினமும் முறைகேடாக எவ்வளவு ரூபாய் சம்பாதிக்கலாம் என்பதிலேயே குறியாய் இருக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கினால் தான் இது போன்ற நிகழ்வுகள் நடை பெற்று வருகிறது.

மக்கள் எதையும் கண்டு கொள்ள மாட்டார்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்பது தவறு!

அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டு தான் சகிப்பு தன்மையுடன் கடந்து செல்கின்றனர்.

எந்த ஒரு குற்றமும் நடை பெறும் முன்னர் அதனை தடுத்து நிறுத்தும் பொறுப்பு காவல்துறை கீழ்நிலை மற்றும் மேல் நிலை காவலூழியர்களுக்கு உண்டு.

ஒரு குற்றம் நடை பெற்று வருவது குறித்து  தகவல் அளிப்பது நமது கடமை!

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக  பொறுப்பு ஏற்றிருக்கும் சஞ்சய் குமார் அவர்களாவது  நடவடிக்கை எடுப்பார்களா ?

10.01 .2019. அன்றைய நமது புகார் :

📢 *விபத்து அவசர செய்தி*!!
🏍🛵🚜🚓🚑🚎🚌🚙🚕🚗🚒
*திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மனோகரன் அவர்களின் உடனடி கவனத்திற்கு* ;

விபத்து ஏற்படுத்தும் தற்காலிக போக்குவரத்து சிக்னல்!

மரண பயத்தில் தடுமாறும் வாகன ஓட்டிகள்!🛵

உயிர் பலி ஏற்படுத்தும் முன் பழைய  சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை.☠

தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட திருப்பூர் மாநகராட்சி அவிநாசிசாலை அனுப்பர்பாளையம் புதூர் 4 வேலம்பாளையம் போக்குவரத்து சிக்னல்   அருகில் நெடுஞ்சாலைத்துறையினரால் கழிவுநீர்க்கால்வாய் தரை பாலம் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணிக்காக போக்குவரத்து  மாற்றி அமைக்கப்பட்டது.

பணிகள் முடிந்து பல நாட்கள் ஆகியும் போக்குவரத்து சிக்னல் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

மாற்றி அமைக்கப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ள சிக்னல் போக்குவரத்திற்கும் வாகன ஓட்டிகளுக்கும்  மிகுந்த இடையூறு ஏற்பட்டு வருகிறது.

4.வேலம்பாளையம் பிரதான சாலையில் இருந்து வரும் வாகனங்கள் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் செல்ல. வேண்டுமானால்  அவிநாசி சாலையில் இடது புறம் திரும்பி உடனடியாக வலது புறம் சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது.

திருப்பூரில் இருந்து அவிநாசி சாலை நோக்கி வரும் வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத காரணத்தினால் வேகமாக வருகின்றன .
அதே சமயம்
4 வேலம்பாளையம் சாலையில் இருந்து அவிநாசி சாலை செல்லும் வாகனங்களும்  ஒரே இடத்தில் சந்திக்கின்றன.

அதே வேளையில் 4.வேலம்பாளையத்தில் இருந்து திருப்பூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் செல்லும் வாகன ஓட்டிகள்  வலது புறம் சாலையை கடந்து திரும்புவதற்குள் இரு சாலைகளில் இருந்து வரும் வாகனங்களுக்கு இடையில்  இருச்சக்கர வாகன ஓட்டிகள் சிக்கி தவிக்கின்றனர்.

மரண பயத்தில் தட்டு தடுமாறி சாலையை கடக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

பல விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளது.

போக்குவரத்து காவலர் சாலையின் எதிர்புறம் நிற்பதால் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பில்லை.

பேருந்துகள் வலது புறமாக சாலையை கடந்து செல்வதற்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது.

*எனவே பழைய போக்குவரத்து சிக்னலை மீண்டும்  பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வந்து வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க கோருகிறோம்*👍

மாநகராட்சி கிடப்பில் போடப்பட்டுள்ள 4 வேலம்பாளையம் பிரதான சாலை சந்திப்பில் உள்ள கழிவு நீர்க்கால்வாய் பணியினை விரைந்து முடிக்கக்கோருகிறோம்.

குறிப்பு : *போக்கு வரத்து காவல் ஆய்வாளர் ஒருவரை  சீருடை அணியாமல் பாதசாரி போல் சாலை ஓரமாக நின்று ஒரு ஐந்து நிமிடம் கண்காணித்து வாகன ஓட்டிகள் படும் சிரமத்தினை ஆய்வு செய்த பின்னர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்*

இணைப்பு : காணொளி

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பணியில் .......🙏
*LAACO நாஞ்சில் கோ.கிருஷ்ணன்*
செய்தியாளர்
*ஊழல் ஒழிப்பு செய்தி மாதஇதழ்*
திருப்பூர்.
உலாபேசி :98655 90723
நாள் ;10.01.2019
உண்மை சம்பவங்கள் தொடரும் .....!

Saturday 16 February 2019

மயூரா பேக்கரி மீது உணவு பாதுகாப்பு துறையில் புகார்

மனுதாரர் ;
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
159/12,A சரவண பவனம்
தியாகி குமரன் புதுக்காலனி
4 வேலம்பாளையம்
திருப்பூர் -641 652
உலாபேசி :98655 90723

எதிர்மனுதாரர் :
உரிமையாளர்
மயூரா கேக் கார்னர்
எம்.ஆர்.காம்ப்ளக்ஸ்
கருமத்தம் பட்டி நால் ரோடு
கருமத்தம் பட்டி
கோவை மாவட்டம்
தொலைபேசி :0421 2336468

பெறுநர் :
வாட்ஸ்ஆப் புகார்
ஆணையர் அவர்கள்
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை
சென்னை.

அய்யா,

பொருள் ; உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டத்திற்கு எதிராக செயல் படுவதுடன் அதிகபட்ச விற்பனை விலையை விட குளிர்பானத்திற்கு கூடுதலாக இரண்டு ரூபாய் வசூலித்த எதிர்மனுதாரர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி  குற்றவிசாரணை முறை சட்டப்பிரிவு 2(ஈ) இன் கீழ் பொதுநல புகார் மனு ,

மேற்காண் முகவரியில் வசித்து வரும் மனுதாரராகிய நான் இந்திய அரசியலமைப்பு சாசனக்கோட்பாடு 51A (அ ) இன் கீழ் எனது கடமைகளை சிறப்புடன் ஆற்றி வரும் ஒரு இந்திய குடிமகன் ஆவேன்.

10.02.2019 அன்றைய தினம் நண்பர்களுடன் மேற்காண் எதிர் மனுதாரருடைய மயூரா கேக் கார்னர் நிறுவனத்திற்கு சென்றிருந்தோம்.

சாப்பிட்ட பொருட்களுக்கு பில் கேட்டு பெற்று கொண்டோம்.

பில் எண் குறிப்பிட வில்லை .
அதில் டீ 1 ₹ 10.00
பிஸ்கட் 1 ₹ 20.00
ஸ்பிரைட் 1 ₹ 16. 00
என ஆக மொத்தம் ₹46.00 ரூபாய் பெற்றனர்.

ஸ்பிரைட் MRP எவ்வளவு என கேட்டேன்.
விற்பனையாளர் தெரியாது எனக்கூறினார்.

MRP எவ்வளவு என தெரியாமல் எப்படி விற்பனை செய்கிறீர்கள் என்றேன்.
கூலிங் கூலிங் இல்லாமல் என கேட்டீர்களா என்றார்.

நான் கூல்டிரிங்ஸ் தான் கேட்டேன் என்றேன்.
அது உங்க தவறு என்கிறார்.

MRP ₹15 ரூபாய் என. மற்றொரு விற்பனையாளர்  ஒருவர் தெரிவித்தார்.

அப்படியானால் ₹1.00 ரூபாய் எப்படி அதிகம் வாங்குகிறீர்கள் என்றேன்.

கூலிங் சும்மா வராது
கரண்ட் பில் மாதம் ₹ 90 ஆயிரம் கட்டுகிறோம் .

அதனால் தான் கூடுதலாக வாங்குவதாக தெரிவித்தார்.

கோயம்புத்தூர் போய் கேட்டு பாருங்கள் எல்லோரும் கூடுதலாக தான் வாங்குகிறார்கள் என்றார் மற்றொரு விற்பனையாளர் .

கூடுதலாக பெறப்பட்ட பணம் திருப்பி கொடுக்க முடியாது என திட்ட வட்டமாக மறுத்து விட்டனர்.

அங்கு ஐந்துக்கும் மேற்பட்ட  விற்பனையாளர்கள்
அப்போது பணியில் இருந்தனர்.
அனைவரும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

உரிமையாளர் யார் என தெரிய வில்லை.

வேடிக்கை பார்த்த வாடிக்கையாளர் ஒருவர் ஒரு ரூபாய் தானே விட்டு விடுங்கள் என்றார்.
ஒரு ரூபாய் நீங்கள் தருகிறீர்களா என்றேன்.
நான் தருகிறேன் என்கிறார்.

மற்றொரு வாடிக்கையாளர்  டாஸ்மாக் சாராயக்கடையில் கோட்டர் பாட்டிலுக்கு  ₹10 ரூபாய் கூடுதலாக வாங்குகிறான் அவனிடம் போய் கேட்க வேண்டியது தானே என்கிறார்.

மற்றொரு வாடிக்கையாளர் நீங்கள் கேட்பது  100% சரி தான் என்ன செய்வது விடுங்கள் என்கிறார்.

சட்ட விரோதமாக கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து எந்த வாடிக்கையாளரும் கேள்வி கேட்பதில்லை.

மினி ஸ்பிரைட் பாட்டில் MRP ₹14.00 ரூபாய் தான்.
ஆனால் விற்பனையாளர் ₹15 ரூபாய் என பொய் சொல்லியதுடன் சட்ட விரோதமாக ₹2.00 ரூபாய் கூடுதலாக ₹16 ரூபாய் வசூலித்துள்ளார்.

குற்றசாட்டுகள் :

1.குளிர்பான பாட்டிலிற்கு அதிக பட்ச விற்பனை விலையை விட கூடுதலாக ₹2.00. ரூபாய் சட்ட விரோதமாக வசூலித்துள்ளார்கள்.

2.மயூரா கேக் கார்னர் என அச்சிடப்பட்டு விற்பனை செய்யும் பிரட் பாக்கெட்டுகளில் MRP குறிப்பிட படவில்லை.
லாட் எண் இல்லை..
சீல் வைக்கப்படாமல் ரப்பர் பைண்டு கொண்டு  கட்டப்பட்டுள்ளது.

3.பொட்டலங்களில் விற்பனை செய்யப்படும் எந்த ஒரு  உணவு பொருட்களில் Fssai விதிமுறைகள் ழுழுமையாக கடை பிடிக்க வில்லை.

4.வாடிக்கையாளர்களுக்கு உணவு பொருட்கள் தடை செய்யப்பட்ட செய்திதாள்களில் வழங்கப்படுகிறது.

5 .காலாவதியான பல வகையான உணவு பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோரிக்கை:

1.வாடிக்கையாளர் நலனில் அக்கறை இல்லாமல் உணவு பொருட்கள் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டங்கள் ,பொட்டல விதி சட்டங்கள், எடையளவு சட்டங்கள் போன்ற எந்த சட்ட விதிகளையும் விதிமுறைகளயும் கடை பிடிக்காமல் உணவு  பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்யும் நிறுவனம் முழுவதும் சோதனை செய்து தரமற்ற காலாவதியான உணவு பொருட்களை  பறிமுதல் செய்து உரிமையாளர் மீது சட்ட நட வடிக்கை மேற்கொண்டு  நுகர்வோர்களை பாதுகாக்கக்கோருகிறோம்.

2.கூடுதலாக வசூலிக்கப்பட்ட ₹ 2.00 ரூபாயினை திரும்ப பெற்று வழங்க கோருகிறோம்.

3.தரமற்ற உணவு பொருட்களின் விற்பனை   மற்றும் முறைகேடுகளை கண்டு பிடிக்க மேற்காண் நிறுவன கண்காணிப்பு கேமராக்களை பரிசோதிக்க வேண்டுகிறேன்.

4.சட்ட விரோதமாக கூடுதல் கட்டணம் வசூலித்ததுடன்  விற்பனையாளர்கள் அனைவரும் சேர்ந்து நுகர்வோராகிய என்னிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் மனவருத்தத்தையும் கொடுத்துள்ளது.
நீதி வேண்டி மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் முறையிட்டு நிவாரணம் பெற உள்ளேன்.

இணைப்பு : எதிர் மனுதாரர் வழங்கிய பில்  மற்றும் நிறுவன ஊழியர்கள் பேசிய காணொலி

நாள் :17.02.2019
இடம் : திருப்பூர்.

Sunday 10 February 2019

ஊழல் ஒழிப்பு செய்தி :0043 காவல் துறையினரை ஒருமையில் பேசிய வைகோ?

ஊழல் ஒழிப்பு செய்தி ::LAACO;0043/2019;நாள் :10..02.2019

குற்றம் நடந்தது என்ன?

மதிமுக Vs பிஜேபி  மோதல் ஏன்?

உண்மை சம்பவம்.

காவல் துறையினரை ஓருமையில் பேசிய வைகோ!

வன்முறையை தூண்டும் விதமாக ஆவேச பேச்சு!

தடையை மீறி திருப்பூரில் தர்ணா போராட்டம்.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி!

அரசியல் கட்சியை வழி நடத்தும் வழக்கறிஞரான வைகோவின் அதிரடி பேச்சு!

மதிமுக கூட்டத்தில் அத்து மீறி நுழைந்த
பிஜேபி பெண் நிர்வாகி தாக்கப்பட்டார்.

பிஜேபி யினர் மதிமுகவினர் இடையில் மோதல்.!

கலவரத்தை தடுத்த திருப்பூர் மாநகர காவல் துறையினர்.

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் இரயில் நிலையம் முன்பு 10.02.2019 அன்று கருப்பு கொடி ஏந்தி மதிமுக ஆர்ப்பாட்டம்!

வை.கோபால்சாமி என்ற
வைகோ ம.தி.மு.க கட்சி தலைவர் தலைமையில்
திருப்பூரில் நடை பெற்றது.

போராட்டங்கள் நடத்துவது அவர்களின் உரிமை!

காவல்துறையில் உரிய அனுமதி பெற்று பொது இடையூறில்லாமல் அமைதி வழியில் தான் போராட வேண்டும்.

போராட்டகாரர்களை கட்டு படுத்தி பொது அமைதியையும் சட்டம் ஒழுங்கையும் பேணி காப்பது காவல் துறையினரின் தலையாய கடமை!

காவல்துறையினர் வாகனத்தினை நெருங்க விடாமல் தொண்டர் படை தடுக்க வேண்டும் என வைகோ பேச்சு.

போலீசு கைது செய்ய கூடாதாம்!

மின்மாற்றியில் ஏறிய தொண்டர் சாவுக்கு துணிந்து தான் ஏறி இருக்கிறான்.

தொண்டர் சாவை பற்றி கவலை இல்லை!

தொண்டர் படை மட்டும் நில்லுங்கள்.
டிரைவர் பக்கம் நான்கு பேர் போய் நில்லுங்கள்.

கூட்டம் நடக்கும் பிரச்சார வேனுக்குள் காவல்துறை எவனாவது   நுழையாமல் தடுக்க வேண்டும்.

டேய் பாஸ்கர் போலீசை உள்ளே விடாதே  !

எவனாவது போலீசு வேனுக்குள் நுழைந்தால் நீ செத்து உன் பிணத்தின் மீது ஏறித்தான் காவல்துறை வேனுக்குள் நுழைய வேண்டும்.

ஏய் போலீசு கிட்ட வராதே!

மரியாதையா போய் விடுங்கள்

நெருங்கினால் ரத்த களறி ஆகி விடும்!

மிஞ்சி போனா என்ன செய்வீங்க.?  சுடுவீங்களா?

காவல்துறை லேடி ஆபிசர் நீ சுடுறயா சுடு! சுடு பார்ப்போம்?

நீ லத்தியால்  அடித்தால்  எங்க ஆள் லத்தி கம்பை  பிடுங்குவார்கள்! ஆமாம் பிடுங்குவார்கள்.

சுட வந்தார்கள் அதனால் தான்
IPC இன் கீழ் தற்காப்புக்காக லத்தி கம்பை பிடுங்கினோம் என்று சொல்வோம் .

வன்முறை வழக்கு போடுறியா போடு!

பல போராட்டங்களை பார்த்திருக்கிறேன்.

ஜென்செட்டை ஆப்பண்ணிட்டா கூட்டம் நடக்காதா என்ன?

டேய் உட்காரு இல்லேனா வெளியே போ!

எதற்கும் துணிந்து தான் தயாராக வந்திருக்கான் இந்த. வைகோ.

என்ன உங்களுக்கு கைது செய்ய வேண்டும் அப்படித்தானே!

மோடி ஒழிக ......!!............!! இத்யாதி! இத்யாதி .............!!

இதனிடையில் மதிமுக கூட்டத்தில் அத்து மீறி நுழைந்த பி.ஜே.பி பெண் நிர்வாகி சசிகலா என்பவர் பாரத் மாதாக்கி ஜே என கோசம் போட்டுள்ளார்.

பெண் விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் பெண் உரிமைக்காகவும் போராடிய தந்தை பெரியார் மற்றும் அண்ணா சிலை முன்பு  பெண் என்றும் பாராமல் கொலை வெறி தாக்குதல் நடத்தி இருப்பதினை மதிமுக வினர் தவிர்த்திருக்க வேண்டும்.

திட்டமிட்டு ஆயுதங்கள் இன்றி கலகம் செய்யும் நோக்கத்துடன் வந்த பி.ஜேபி பெண் நிர்வாகியை காவல் துறை மூலம் பாதுகாப்பாக அப்புற படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் பெரியார் மற்றும் திராவிட கொள்கைக்கு எதிராக மதிமுக வினர் அவரை  பைப்பினால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

போராட்ட காரர்களிடம் இருந்து காவல் துறையினர் அவரை காப்பாற்றி ஒரு கடையில் அடைத்துள்ளனர் .

காவல் துறையினர் இல்லை எனில் பெண் படுகொலை  மற்றும் மானபங்கம் நடந்திருக்க கூடும்.

இதனை அறிந்து வந்த பி.ஜே.பி மற்றும் இந்து அமைப்பினர்களுக்கும் மதிமுக வினர்களுக்கும் கைகலப்பு நடந்துள்ளது.

மதிமுகவினர்  கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

பிஜேபி யினர் கொடி எரிக்கப்பட்டது.

வன்முறை வெடித்தது.
கலவர பூமியாகியது

கலவரம் தீவிரமடைவதினை கண்ட காவல் துறையினர் கூட்டத்தை கலைத்துள்ளனர் .

மதிமுக தடையை மீறி நடத்திய போராட்டத்தில் பி.ஜே.பி யினர் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டது கொஞ்சமும் ஏற்புடையது அல்ல.

அரசியல் கட்சிகள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது.

ஒரு கட்சி தலைவன் எவ்வாறு செயல் பட வேண்டும் ?

மின்மாற்றியில் (டிரான்ஸ்பார்மரில்)ஆபத்தினை உணராமல் ஏறி போராடிய தொண்டனை கீழே இறங்கும் படி தலைவன் கூறி இருக்க வேண்டும்.

ஒரு வேளை மின்சாரம் தாக்கி தொண்டன் செத்து இருப்பான் என்றால் காவல் துறை வேடிக்கை பார்த்தது காப்பாற்றவில்லை! எனக்கூறி பிணத்தை வைத்து அரசியல் பண்ணி இருப்பார்கள்.

பெண்ணை தாக்கிய தொண்டர்களை தடுத்திருக்கலாம்.

ஒரு போராட்டத்தினை எப்படி நடத்த
வேண்டும்?

தொண்டர்களை எவ்வாறு வழி நடத்த வேண்டும்?

காவல் துறையினரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

மூத்த அரசியல் வாதியான அவருக்கு தெரியாமல் போனது ஏன்?

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற திராவிடக் கொள்கை என்ன ஆனது.

அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் விதமாகவும்  பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கட்சியை நடத்தும்
இவர் போன்றவர்களை மக்கள் அடையாளம் காணுங்கள்.

தடையை மீறி பொது இடையூறு ஏற்படுத்தி போராட்டம் நடத்தினால் காவல் துறையினர் கைது செய்து போராட்ட காரர்களை அப்புற படுத்துவார்கள் என சட்டம் பயின்ற வழக்கறிஞரான வைகோவிற்கு தெரியாமல் போனது ஏன்?

இவர்களை போன்றவர்களால் நாட்டிற்கு பேராபத்து.

போராட்டத்தில் தொண்டர் செத்தால் வீர வணக்கம் செய்வார்கள்.

தொண்டர்களே எச்சரிக்கை!
உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது.

தவறாக வழி காட்டும் தலைவன் எவனாக இருந்தாலும் அவர்களுக்கு அடிமை ஆகி விடாதீர்கள்.

தேர்தல் தோறும் கூட்டணியை மாற்றி மாற்றி சுய நலத்திற்காக கூட்டு சேர்ந்து வாக்கு கேட்டு வரும் இவர்களை போன்ற அரசியல் கட்சியினரை   மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பதவிக்காக நேற்று மோடியுடன் கை கோர்த்து ஒரே மேடையில்!

இன்று மோடியை எதிர்த்து போராட்டம்.

இது அரசியல் சடு குடு ஆட்டம்.

இவர்களுக்கு மானம் சூடு சொரணை வெட்கம் எதுவுமே கிடையாது.

தொண்டர்களே இவர்களை நம்பி நீங்கள் பலிகடா ஆகி விடாதீர்கள்.

திருப்பூர் மாநகர காவல் துறையினருக்கு  சவால் விட்டு ஒருமையில் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய மதிமுக தலைவர் வைகோ மீதும் கூட்டத்தில் புகுந்து வன்முறை ஏற்பட காரணமான பிஜேபினர் மீதும்  காவல் துறை தலைவர் அவர்கள் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

வருங்காலங்களில் குற்றம் நடைபெறும் முன்னர் காவல்துறையினர் இது போன்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
திருப்பூர்
உலாபேசி :98655 90723
உண்மை சம்பவங்கள்  தொடரும்.....
இணைப்பு : சன் நியூஸ் காணொளி