Tuesday 31 July 2018

திருப்பூர் லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் அவர்கள் கவனத்திற்கு!

திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு!

தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட திருப்பூர் மாவட்டத்தில் செயல் பட்டு வரும் பெரும்பான்மையான அரசுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் கொடுப்பதும் குற்றம்! லஞ்சம் வாங்குவதும் குற்றம்! என்ற விழிப்புணர்வு தகவல் பலகை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் இயக்குநர் அலுவலக முகவரி தொடர்பு எண்களுடன் பொது மக்கள் பார்வையில் தெரியும் வண்ணம் வைக்கப்படவில்லை!

நாட்டில் அமலில் உள்ள சட்டங்களையும் அரசு ஆணைகளையும் செயல் படுத்த தவறிய கடமை தவறிய அரசூழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.

திருப்பூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரின் முகவரியுடன் உள்ள தகவல் பலகை பல ஆண்டுகளாக மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.

இது குறித்து கடந்த ஆண்டு செய்தி வெளியிட்டோம்.

ஆனால் கடமை தவறிய மருத்துவமனை நிர்வாகம் கண்டு கொள்ள வில்லை!

எனவே தாங்கள் கடமை தவறிய அதற்கு பொறுப்பு வகிக்கும் ஊழியர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.

அது போல் திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல அலுவலகத்தில் தகவல் பலகை வைக்கப்படாத காரணத்தினால் மாநில தகவல் ஆணையம் மூலம் 2011 ஆம் ஆண்டு தகவல் பலகை வைக்க உத்தரவு பெற்றோம்.

ஆனால் தகவல் பலகை செய்து  அதனை பொது மக்கள் பார்வைக்கு வைக்காமல் கிடப்பில்  போட்டுள்ளார்கள்.

பல முறை நேரில் சென்று எச்சரித்தும் நடவடிக்கை இல்லை!

இதன் மூலம் இந்த அலுவலக மாநகராட்சி ஊழியர்கள் லஞ்சம் பெறுவது உறுதி படுத்தப்பட்டுளது .

எனவே உடனடியாக அனைத்து அரசுத்துறை அலுவலகங்களையும் கண்காணித்து தகவல் பலகைகள் வைக்க உத்தரவிடக்கோருகிறோம்.

லஞ்சம் ஊழலை தடுப்பதும் கண்காணிப்பதும் தங்கள் கடமையாக உள்ளதாலும்  அதனை சுட்டி காட்டுவது எங்களின் கடமையாக இருப்பதாலும் இதனை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு,
பெரியார் காலனி,
திருப்பூர் -641 652
மின்னஞ்சல் :nanjillaacot@gmail.com
உலாபேசி :98655 90723

No comments:

Post a Comment