Thursday 26 July 2018

மெட்ரிக்பள்ளிகள் இயக்குநரக பெண் அலுவலர் பேசிய ஆடியோ!!

அம்மா அழைப்பு மையத்தில் அளித்த புகாருக்கு சென்னை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அலுவலகத்தில் எவ்வாறு தீர்வு காணப்படுகிறது?

திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் செயல் பட்டு வரும் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி நிர்வாகம் இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 1 ஆம் வகுப்பில்  கல்வி பயிலும் ஏழை மாணவன் காந்தி ஜீ என்பவருக்கு கல்விக்கட்டணம் செலுத்தாத காரணத்தினால் நோட்டு புத்தகம் உள்ளிட்ட  எதுவும் வழங்க வில்லை!

இது சம்பந்தமாக திருப்பூர் மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலர் சாந்தி அவர்களிடம் புகார் அளித்த போது கல்வி கட்டணம் மட்டும் தான் அரசு வழங்கும். மற்ற படி பள்ளி நிர்வாகம் கேட்கும் அனைத்து கட்டணங்களையும் கட்டாயமாக கட்டி தான் ஆக வேண்டும் . அது தான் அரசு விதி என தெரிவித்தார்.

எது கட்டாயம்?

யார் கேட்டார்கள் இலவசம்!

இலவச கட்டாய கல்வி கட்டாயமா?

அல்லது

கல்வி கொள்ளையர்கள் கேட்கும் அநியாய கட்டணங்கள் கட்டாயமா?

இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டதின் நோக்கத்தினை நீர்த்து போக செய்யும் கடமை தவறிய கல்வி அலுவலர்கள்!

அப்படியானால் இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் என்பதினை மானிய கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் என பெயரை மாற்றி சட்டம் இயற்றலாமே?

சட்ட விரோதமாக செயல் படும் பள்ளிக்கு ஆதரவாக பேசிய திருப்பூர்  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாந்தி அவர்கள் குறித்து அம்மா அழைப்பு மையத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர் புகார் அளித்துள்ளார் .

புகார் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பபட்டுள்ளது .

புகாரின் மீது விசாரணை செய்வதற்காக மெட்ரிக்பள்ளிகள் இயக்குநர் அலுவலக பெண் அலுவலர் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ உரையாடலை கேளுங்கள் நண்பர்களே!

திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி சட்ட விரோதமாக செயல் படுகிறது மேடம்!

தமிழ்நாட்டில் இந்த ஒரு பள்ளி தான் சட்ட விரோதமாக செயல் படுகிறதா?

என் குழந்தை அங்கு படிக்கிறான் மேடம்
நான் ஒரு இந்திய பிரஜை தப்பை தட்டி
கேட்கும் கடமை எனக்கு உள்ளது மேடம்.

நீங்கள் ஒருவரோ  நானோ தப்பை தட்டி கேட்டால் நாட்டை திருத்தவே முடியாது!

அப்போ நீங்க சட்ட விரோதமாக செயல் படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா மேடம் .

சட்ட விரோதமாக திருப்பூர் மாநகராட்சி அனுமதி இல்லாமல் பள்ளி கட்டிடம் கட்டி வருகிறார்கள் மேடம்.

நீங்களோ நானோ சொல்வதால  அவர்கள் கட்டிடம் கட்டாமல் விட்டு விடுவார்களா?

கும்ப கோணம் பள்ளி தீ விபத்துல எத்தனை குழந்தைகள் செத்து போச்சு மேடம்!

கும்பகோணம் சரி மற்ற
எல்லா பள்ளிகளும்  பெர்பக்டா செயல் படுகிறதா?

இலவச கல்விக்கு  கட்டணம் கேட்கிறார்கள் மேடம்.

நோட்டு புத்தகங்களுக்கு கட்டணம் கட்ட வேண்டும்.

MRP இல்லாமல் நோட்டு புத்தகங்களுக்கு  ₹ 7000 ரூபாய் கேட்டால் நான் எப்படி கட்ட முடியும் மேடம்.

உங்க குழந்தை சட்ட விரோதமாக செயல் படும் பள்ளியில் படித்தால் நீங்கள் தப்பை தட்டி கேட்க மாட்டீங்க அப்படித்தானே மேடம்!

நான் இது போன்ற பள்ளியில் என் குழந்தையை படிக்கவே வைக்க மாட்டேன்.

நீங்க சொல்வது நூறு சதவீதம் சரி!

நீங்கள் பள்ளி மீது புகார் அளித்தால்
உங்கள் குழந்தையல்லவா ஸப்பராகும்?

முதலில் குழந்தையை பாருங்க!!

இது போன்ற கடமை தவறிய அரசூழியர்கள் பணியில் நீடித்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப்போவதில்லை!

இவர்களை போன்ற கையாலாகாத கடமை தவறிய கல்வி அலுவலர்கள்  சட்ட விரோதமாக செயல் படும் பள்ளி நிர்வாகிகள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்!

பொது நலன் கருதி வெளியிடுவோர் ;
LAACO
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி : 98655 90723

No comments:

Post a Comment