Wednesday 18 July 2018

ஊழல் ஒழிப்பு செய்தி;0027:திருப்பூர் அரசு மருத்துவமனை அவலம்!!

ஊழல் ஒழிப்பு செய்தி :027/22.07.2018

திருப்பூர் அரசு பொது மருத்துவமனையின் அவலம்!

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

குற்றவாளிகள் யார்?

உண்மை சம்பவங்கள்!

உயிர் காக்கும் சிகிச்சைகள் எதுவும் இல்லாத கொடுமை!

பல லட்சம் தொழிலாளர்கள்!

பல ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் தொழில் நகரம் திருப்பூர் மாவட்டம்!

திருப்பூரில் உயிர் காக்கும் அவசர சிகிச்சைகள் இல்லாததினால் கோவை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் மேல் சிகிச்சைக்கு  அனுப்பப்படும்   அவல நிலை!

செல்லும் வழியிலேயே பல மரணங்கள்!

மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆட்சியாளர்கள்!

உள் நோயாளிகளை அலை கழிக்கும் மருத்துவமனை நிர்வாகம்!

நெஞ்சை பதற வைக்கும் நிகழ்வுகள்!

லஞ்சம் கேட்டு வாங்கும் ஒப்பந்த பணியாளர்கள்!

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் சுகாதார பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) திருமதி கோமதி தேவராஜன் அவர்களின் உடனடி கவனத்திற்கு!!

அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் நோயாளி அல்லது அவரின் உறவினர்களிடமிருந்து  லஞ்சம் கட்டாய படுத்தி கேட்டு வாங்குவது வெளிப்படையாக நடந்து வருகிறது.

மகப்பேறு மற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படும் நோயாளிகளிடம் இருந்து ஊழியர்கள் ஒரு குறிப்பிட்டுள்ள தொகையினை லஞ்சமாக கேட்டு வாங்குவது தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

கையூட்டு பெறுவது தண்டனைக்குரிய குற்றம் என்ற தகவல் பலகை பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படாமல்  பின்பக்கம் No Parking என எழுதப்பட்டு அந்த பலகை மருத்துவமனையின் உள் நுழைவு வாயில் அருகே வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அறிவிப்பு பலகையின் முன்னர் இருச்சக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் முகவரி தொடர்பு எண்களுடன் லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் என்ற தகவல் பலகை பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வில்லை!

2009 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்பொழுது பணி புரியும் மருத்துவர்கனின் பெயர் விபரங்கள் தகவல் பலகையில் பொறிக்கப்பட வில்லை!

பார்வையாளர்கள் நோயாளிகளுக்கு மதுபானம், பீடி சிகரெட், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு செல்வது குறித்து பல முறை  புகார் அளித்த காரணத்தினால் ஆண் பெண் பாதுகாவலர்கள் மூலம் பார்வையாளர்கள் அனைவரும் பரிசோதனை செய்த பிறகே மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் தற்பொழுது எந்த வித பரிசோதனைகளும் செய்யப்படுவதில்லை.

மருத்துவமனையின் நுழைவு வாயில் முன்பாக பேருந்து நிறுத்தம் இருப்பதினால் பேருந்துகளால் மிகுந்த
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இதனால்  அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் சென்று வர கால தாமதம் ஆகிறது.

உள் நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுகிறது.

நோயாளிகள் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது சிகிச்சை அறிக்கை (Discharge Summery ) உரிய படிவத்தில் மருத்துவர் கையொப்பம் இட்டு வழங்குவதில்லை!

கேட்பவர்களுக்கு மட்டும் வெள்ளை காகிதத்தில் சிகிச்சை விபரங்களை குறிப்பிட்டு அரசு மருத்துவமனை முத்திரை இல்லாமல் வழங்கப்படுகிறது.

குற்றம் நடந்தது என்ன?

நண்பர் அருண் கில்பர்ட் என்பவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு கை கால்கள் செயல் இழந்து வாய் கோணலாகி 18.07.2018 அன்று இரவு 12 மணியளவில் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

பரிசோதனை செய்த மருத்துவர் மூளையில் ஸ்கேன் எடுத்து பார்த்த பிறகு தான் சிகிச்சை அளிக்க முடியும்  என கூறியுள்ளார்.

M M வார்டு பெட் எண் :15 இல் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

ஸ்டெச்சரில் வார்டுக்கு
கொண்டு வந்த பணியாளர் ₹ 50 ரூபாய் லஞ்சம் கொடு என அவரது மனைவியிடம் கேட்டுள்ளார் .₹ 20 ரூபாய் கொடுத்த போது வாங்க மறுத்து 
₹ 50 ரூபாய் கட்டாய படுத்தி கேட்டு வாங்கியுள்ளார்.

காலையில் 7.30 மணிக்கு ஸ்கேன் எடுப்பதற்கான துண்டு சீட்டினை கொடுத்துள்ளனர். ஆனால் காலை 10.30 மணிக்கு வீல் சேர் கொண்டு வந்த பணியாளர் ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்து சென்றுள்ளார்.

அந்த பணியாளர் ₹100 ரூபாய் லஞ்சம் கேட்டு வாங்கி உள்ளார்.

பல நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுத்து முடியும்  வரை வரிசையில் காக்க வைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் ஸ்கேன் பண்ணும் நேரம் முடிவடைந்து விட்டது என்றும். ஸ்கேன் மிஷின் பழுது ஏற்பட்டு உள்ளது! இனிமேல் நாளை காலை தான் ஸ்கேன் எடுக்க முடியும் என திருப்பி வார்டுக்கு  அனுப்பப்பட்டுள்ளார்.

மீண்டும் வார்டுக்கு வீல்  சேரில் வைத்து தள்ளி கொண்டு வந்த மற்றொரு பணியாளர் ₹50 ரூபாய் லஞ்சம் கேட்டு வாங்கியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்தோம் .

விசாரித்த போது ஸ்கேன் பண்ணாத காரணத்தினால் உரிய சிகிச்சைகள் செயப்பட வில்லை என செவிலியர்கள் தெரிவித்தனர்.

இதற்கு காரணம் யார்?

ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிக்கு ஸ்கேன் எடுக்க தவறியது யார்?

குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் தான் ஸ்கேன் எடுக்க வேண்டும் என கால நேர நிர்ணயம் செய்து உத்தரவிட்ட அதிகாரி யார்?

C T .ஸ்கேன் ₹ 500 ரூபாய் கட்டணம் வாங்கி கொண்டு தானே எடுக்கிறார்கள்!  இலவசம் இல்லையே?

நேரில் கண்ட காட்சி!!

அப்போது இன்னொரு நோயாளியை ஸ்டெச்சரில் கொண்டு வந்து பெட்டில் சேர்த்த பெண் ஒப்பந்த பணியாளர் ஒருவர் ₹ 100 ரூபாய் லஞ்சம் கேட்டு வாங்குவதினை நேரில் கண்ட. நாம் எதற்காக பணம் வாங்கினீர்கள் என கேட்டோம். உடனடியாக ₹100 ரூபாயினை திருப்பி கொடுத்து விட்டு வேகமாக சென்று விட்டார்.

பின் தொடர்ந்து சென்று கேட்ட போது லஞ்சம் வாங்க வில்லை!  அவர்கள் டீ வாங்க சொல்லி தான் பணம் கொடுத்தார்கள் என ஒரு அப்பட்டமான பொய்யை சொன்னார்.
(காணொளி இணைப்பில்)

ஒப்பந்த பணியாளர்கள் ஏழை எளிய நோயாளிகளிடம் லஞ்சம் கேட்டு வாங்குவது தொடர்ந்து நடை பெற்று கொண்டு தான் இருக்கிறது.

இந்த லஞ்ச ஊழியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது யார்?

புகார் செய்யலாம்  என அலுவலகம் சென்றோம்.

அங்கே நிர்வாக அலுவலர் அறைக்கதவு திறந்திருந்தது.
அவரை அங்கு காண வில்லை!

கண்காணிப்பாளர் அறை பூட்டப்பட்டிருந்தது.

R M O இல்லை!

பாதுகாவலரிடம் விசாரித்த போது நிர்வாக அலுவலர் நேற்றே சென்னை சென்று விட்டதாக கூறினார்.

கண்காணிப்பாளர் தான் இணை இயக்குநர் ஆக கூடுதல் பொறுப்பு வகிப்பதாகவும் தெரிவித்தார்.

R M O விடம் தொடர்பு கொண்டு பேசிய போது அலுவலகத்தில்  மதியம் 1.30  மணி வரையிலும் தான் அலுவலர்கள் இருப்பார்கள் என தெரிவித்தார் .

அப்படியானால் இவர்கள் அனைவரும் பகுதிநேர அரசூழியர்களா?

அரசு அலுவலக வேலை நேரம் காலை 9.45 மணி முதல் 5.45 மணி வரை என்றிருக்கும் போது அரசு மருத்துவமனை அலுவலகம் மதியம் 1.30 மணி வரை தான்  செயல் படும் என RMO கூறியது அதிர்ச்சி அளிக்கிறது.

C T ஸ்கேன் ஒரு வாரமாக விட்டு விட்டு பழுது ஏற்படுவதாகவும் அதனால் தான் ஸ்கேன் எடுத்திருக்க மாட்டார்கள் எனவும்  தெரிவித்தார்.அதனை சரி செய்யும் பொறுப்பு அதிகாரி யார்?

ஒப்பந்த பணியாளர்கள் லஞ்சம் வாங்குவது குறித்து  புகார் தெரிவித்த போது கோபம்  கொண்டதாக தெரிய வில்லை!

தனியார் ஒப்பந்த பணியாளர்கள் ஓடி போய்விடுவார்களாம்!
விசாரிப்பதாக கூறினார் .

ஏன் என்றால் அலுவலர்களுக்கு தெரியாமல் இது போன்ற எந்த ஒரு செயலும் நடை பெற முடியாது .

இது சம்பந்தமாக பல முறை புகார் அளித்துள்ளோம்.

ஒரு சில பணியாளர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

முன்னால் சுகாதாரபணிகள் இணை  இயக்குநர் அவர்களிடம்  புகார் அளித்த போது ஒப்பந்த பணியாளர்கள் ₹50 ₹100 என வாங்குவார்கள் என தெரிவித்தார்.

இது போன்ற கடமை தவறிய அரசூழியர்கள் இருக்கும் வரை லஞ்சத்தினை கட்டு படுத்த முடியாது.

104 க்கு அழைத்து நமது புகாரினை பதிவு செய்தோம்.

RMO விடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள்!

19.07.2018 அன்று காலை C T ஸ்கேன் எடுத்துள்ளார்கள்.

மதியம் 1.00 மணி அளவில் C T ஸ்கேன் ரிப்போர்ட் கொண்டு வந்து நோயாளியிடம்  கொடுத்துள்ளார்கள்.

104 இல் இருந்து அழைத்து ஸ்கேன் எடுத்து விட்டார்களா என்றார்கள். ஆம் என்றோம்.

ஆனால் அன்றைய தினம் மருத்துவர் ஸ்கேன் ரிப்போர்ட் குறித்து எந்த தகவலும் நோயாளிக்கு தெரிவிக்க வில்லை!

20.07.2018 அன்று காலை வந்த மருத்துவர் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்கள்.

என்ன ஒரு கொடுமை!

நோயாளிக்கு நோய் ஏற்பட்ட காரணத்தினை கண்டு பிடித்து சிகிச்சை அளிக்க மூன்று தினங்கள்!

அதற்குள் மரணம் ஏற்பட்டு விட்டால் ஏழை  எளிய மக்கள் என்ன செய்வார்கள்!

இது போன்று நோயாளிகளின் உயிரில் விளையாடவா அரசு பொது மருத்துவமனைகள்!!

ஊழியர்களுக்கு ஊதியங்கள்! பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பீடு!!

இந்நிலையில் பத்துக்கும் மேற்பட்ட ஆண் பெண் உள் நோயாளிகள் மூக்கில் டியூப் மாட்டப்பட்ட நிலையிலும் குளுக்கோஸ் மாட்டப்பட்ட. பாட்டிலினை கையில் பிடித்த படி நடந்து சென்று கொண்டிருந்ததினை பார்த்த நமக்கு அதிர்ச்சி அளித்தது.

எங்கு செல்கிறீர்கள் என கேட்ட போது ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு கட்டிடத்திற்கு  பெட் மாற்றி உள்ளதாக தெரிவித்தனர்.

நோயாளிகளை இவ்வாறு அலைகழிப்பது ஏற்புடையதா?

மருத்துவமனையின் பின்புறம் கழிவுகளுக்கு யாரோ வைத்த  தீ கொழுந்து விட்டு எரிந்து அதிலிருந்த கரும்புகை மருத்துவ மனையினை சுற்றிலும்  சூழ்ந்து காணப்பட்டது.

அரசு பொது மருத்துவமனையினை நாடி வருபவர்கள் ஏழை எளிய மக்கள் தான்!

சிகிச்சை பெற வருபவர்களுக்கு உரிய முறையில் காலம் தாழ்த்தாமல் சிகிச்சை அளிப்பது ஊழியர்களின் கடமை!

M M வார்டு 15 ஆம் எண் பெட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் கில்பர்ட் என்பவருக்கு  உரிய முறையில் சிகிச்சை அளிக்க கோருகிறோம்.

லஞ்சம் பெற்ற மூன்று ஒப்பந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்வதுடன் லஞ்சமாக பெற்ற பணம் ₹200 ரூபாயினை அவர்களிடம் இருந்து திரும்ப வழங்க கோருகிறோம்.

ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒப்பந்தம் செய்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தினை உடனடியாக  ரத்து செய்ய கோருகிறோம்.

கோரிக்கை!!

அனைத்து நோயாளிகளுக்கும் பாகுபாடில்லாமல் லஞ்சம் வாங்காமல் உரிய நேரத்தில் முறையான அனைத்து  சிகிச்சைகளும்  அளிக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை!!

கோவை அரசு மருத்துவமனைக்கு நிகராக உயிர் காக்கும் சிகிச்சைகள் அனைத்தும் இங்கேயே செய்வதற்கு உண்டான வசதிகள்  அனைத்தையும் அரசு நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட ஏழை எளிய  மக்களின் விலை மதிப்பற்ற உயிரினை பாதுகாக்க  வேண்டும்.!!

LAACO நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
மாநில இணை செயலாளர்
இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு

உண்மை சம்பவங்கள் தொடரும் ......!!

1 comment: