Thursday 31 May 2018

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண விவரம்!

LAACO :கல்வி அவசர செய்தி!!
தனியார் பள்ளி கல்விக்கட்டணம்!!
2018-2019

திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் செயல்பட்டு வரும் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 2018-2019 இந்த கல்வி ஆண்டுக்கான கல்விக்கட்டண நிர்ணயகுழுவினர் நிர்ணயித்த அரசு கல்விக்கட்டணம் :
Laaco /02/06/18

LKG. வகுப்பு    = ₹ 6965.00
UKG.வகுப்பு     = ₹ 6965.00

1. ஆம் வகுப்பு = ₹ 8165 .00
2. ஆம் வகுப்பு = ₹ 8165.00
3. ஆம் வகுப்பு = ₹ 8165.00
4. ஆம் வகுப்பு = ₹ 8165 .00
5. ஆம் வகுப்பு = ₹ 8165.00

6. ஆம் வகுப்பு =₹ 9350.00
7. ஆம் வகுப்பு =₹ 9350.00
8. ஆம் வகுப்பு =₹ 9350.00

9. ஆம் வகுப்பு = ₹ 11935.00
10.ஆம் வகுப்பு =₹ 11935.00

11 ஆம் வகுப்பு = ₹ 19910.00
12 ஆம் வகுப்பு = ₹ 19910.00

மேற்காணும் அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணம் என்பது ஓர் ஆண்டுக்கான கல்வி கட்டணம் (TUTION FEES)  ஆகும். 
இந்த கட்டணத்தினை இரண்டு அல்லது மூன்று தவணைகளாகவோ அல்லது மாதா மாதம் பிரித்தும் கட்டலாம்.

நோட்டு புத்தகங்களுக்கு மட்டும் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

நோட்டு, புத்தகம்,சிலேட்,பென்சில்,  டைரி, டை,பெல்ட், சாக்ஸ், சூ, ஸ்கூல் பேக், யூனிபார்ம்  போன்ற எந்த ஒரு பொருட்கள் விற்பனை செய்தாலும் அதற்கான அதிக பட்ச விற்பனை விலையினை குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

விற்பனை செய்யப்படும்  பொருட்களுக்கான தனித்தனியான விலை விபரங்களை குறிப்பிட்டு பற்று சீட்டு (ரசீது ) வழங்க வேண்டும்.

நோட்டு புக் ஸ்டேசனரி என தோராயமாக ₹2000 ₹3000 ₹4000 என குறிப்பிட்டு கட்டணம் வசூலிக்கக்கூடாது.

ஸ்டேசனரி பொருட்களை கட்டாய படுத்தி விற்பனை செய்யக்கூடாது.
பெற்றோர்கள் விருப்ப பட்டால் மட்டும் வாங்கி கொள்ளலாம்.

கல்வி நிலையங்கள் ஸ்டேசனரி கடைகளாக செயல்பட கூடாது என கல்வி கட்டண நிர்ணய குழு தலைவர் அவர்கள் ஒரு உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். Laaco

இதனை தவிர்த்து அட்மிஷன் பீஸ்  ,கரிக்குலம், கோ-கரிக்குலம்,  லேபாரட்டரி ,கம்ப்யூட்டர் ஸ்மார்ட் கிளாஸ் போன்ற எந்த விதமான மறைமுக கட்டணங்களையும் வசூலிக்க கூடாது.

மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள அடிப்படை வசதிகள் கல்வி தரம் போன்றவைகளை
ஆராய்ந்து தான் கல்வி கட்டணங்கள் அரசால் நிர்ணயம் செய்யப்படுகிறது.

சமூக சேவையில் கல்வி பணி!

என வெற்று விளம்பரம் செய்து வரும் மேற்காண் பள்ளி துணை தலைவர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் என்பவர் கடந்த ஆண்டில் அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தினை வங்கி வரைவோலையாக கொடுத்த பெற்றோரிடம் அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தினை திருப்பூரில் எந்த பள்ளி நிர்வாகியாவது வாங்குவதினை நிரூபித்தால்  எனது ஒரு காதை அறுத்து கொள்கிறேன்! காதை அறுத்து கொள்கிறேன்! என சவால்  விட்டு மிரட்டினார்.

ஆனால் கடந்த ஆண்டு மூன்று மாணவர்கள் மட்டும் அரசு நிர்ணயம் செய்த கல்வி கட்டணத்தினை செலுத்தினார்கள்.

ஆனால் அவர் கூறியது போல் அவரின் காதுகளை இன்று வரை அறுத்து கொள்ளவே இல்லை.!

இந்த கல்வி ஆண்டில் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டண விபரங்களை தகவல் பலகையில் வெளியிட்டுள்ளனர்.

இதுவே நமக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாகும்.

இந்த கல்வி ஆண்டில்  4188 மாணவ மாணவிகள் கல்வி பயில்கிறார்கள்.

4188- 3 = 4185  பெற்றோர்களும் இனி மேலாவது அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை செலுத்துவீர்கள் என நம்புகிறோம்.

மேற்காண் பள்ளி நிர்வாகம் இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் இலவச கல்வி பயிலும் குழந்தைகளிடம் இருந்து கல்விக்கட்டணங்கள் வசூலிப்பதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது.

பெற்றோர்களே கல்விக்கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம்!

கடமை தவறிய மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர் ;

திருப்பூர் மாவட்டத்தில் செயல் பட்டு லரும் 160 தனியார் மெட்ரிக்மேல்நிலை பள்ளிகளும் அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக்கட்டணங்களை மட்டுமே வசூலித்து வருவதாகவும் வசூலிக்கும் கட்டணங்கள் அனைத்துக்கும் உரிய ரசீது வழங்கி வருவதாகவும் முழு பூசணிக்காயினை சோற்றில் மறைப்பது போல் சட்ட விரோதமாக செயல் பட்டு வரும் பள்ளி நிர்வாகிகளுக்கு ஆதரவாக செயல் பட்டு வரும் கடமை தவறிய ஈரோடு மெட்ரிக் பள்ளிகள் முன்னாள் ஆய்வாளர் கனிமொழி என்பவர் பொய்யான தகவல் வழங்கி உள்ளார்.

கடமை தவறிய முதன்மை கல்வி அலுவலர் :

பாதிக்கப்பட்ட. பெற்றோர்கள் புகார் அளித்தால் அனைத்து அதிகாரங்களும் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி அவர்கள் கல்வி கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல் பட்டு வருகிறார்.

பெற்றோர்களே!
ஏமாளியாய் இருந்தது போதும்!
கல்வி நமது உரிமை!
கல்வி கொள்ளையர்களை கண்டு பயப்பட வேண்டாம்!
இனி மேலாவது விழித்து கொள்ளுங்கள்!

மேலும் விபரங்களுக்கும் புகார்களுக்கும் தொடர்பு கொள்ளுங்கள்.

கல்வி விழிப்புணர்வு பணியில் .....!!

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363, காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
உலாபேசி :98655 90723

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
98655 43303

ஆ.பழனிக்குமார்
மாநில அமைப்பு செயலாளர்
உலாபேசி : 97910 50513

குறிப்பு : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் 2017-2018 & 2018-2019 & 2019-2020  அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக்கட்டண விபரங்கள் அறிய :98655 90723 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் பெற்று கொள்ளலாம்.

திருப்பூர் கணேஷ் டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் முறைகேடுகள்!

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அவர்களுக்கு,

அய்யா வணக்கம்.

அதிகபட்ச விற்பனை விலையைவிட கூடுதல் கட்டணம் வசூலித்த திருப்பூர் கணேஷ் டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் உரிமையாளர் மீது புகார் :31/05/2018

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு வட்டம் திருப்பூர் மாநகராட்சி 6 வது வார்டு கதவு எண் ; 58/10 அவிநாசி சாலை பெரியார் காலனியில் செயல் பட்டு வரும் கணேஷ் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் 30.05.2018 அன்று காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கினேன்.

கணேஷ் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் சொந்த தயாரிப்பான வடகம் 150 கிராம் பாக்கெட் ஒன்று வாங்கினேன்.

அதில் 150 கிராம் ₹ 30 .00 என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அவர்கள் வழங்கிய BILL NO :C01052974 இல் 150 கிராம் வடகம் ₹ 40.00 என என்னிடம் கூடுதலாக ₹ 10 ரூபாய் வசூலித்துள்ளார்கள்.

இது சம்பந்தமாக கடை கேஷியரை கேட்ட போது ₹ 40 ரூபாய் தான் பதிலளித்தார்கள்.

இது நுகர்வோராகிய எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோரிக்கை:

1.வடகம் பாக்கெட்டில் குறிப்பிட்டுள்ள அதிக பட்ச விற்பனை விலை ₹ 30 .00 பதிலாக ₹ 40.00 ரூபாய் என கூடுதலாக என்னிடம் ₹ 10 ரூபாய் சட்ட விரோதமாக  வசூலித்துள்ளார்கள் .

என்னிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட ₹ 10  பணத்தினை திரும்ப பெற்று தருவதுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோருகிறேன் .

2. வடகம் பாக்கெட்டில் Fssai Lic No : குறிப்பிட படவில்லை!

3. லாட் எண் மற்றும் காலாவதி தேதி குறிப்பிட படவில்லை .

4. பேக்கிங் தேதி,  எடையளவு, விலை உள்ளிட்ட விபரங்களை பாக்கெட்டின் பின்பகுதியில் ஸ்டிக்கரால் ஒட்டி விற்பனை செய்கிறார்கள்.

5. வடகம் பொள்ளாச்சி முகவரியில் தயாரிக்கப்படுவதாக பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

6. காலாவதியான பல உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறார்கள்.

7.திருப்பூர் மாநகராட்சியால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகிறார்கள்.

7. திருப்பூர் கடை மற்றும் பொள்ளாச்சி, உடுமலை,பல்லடம் ,கோவை ,ஆனை
மலை என பல்வேறு பகுதிகளில் இவர்களிள் கிளைகள் செயல் பட்டு வருகிறது.அந்த கிளைகள் அனைத்தினையும் முழுமையாக ஆய்வு செய்து சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுத்து அனைத்து நுகர்வோர்களையும் பாதுகாக்க  கோருகிறேன்.

குறிப்பு : வடகம் பாக்கெட்டின் புகைப்படம் மற்றும் கூடுதல் கட்டணம் வசூலித்த பில் புகைப்படம் இணைத்து அனுப்பியுள்ளேன்.

Tuesday 29 May 2018

தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் குறித்த புகாருக்கு!!


தனியார் மெட்ரிக்மேல்நிலை  பள்ளிகள் குறித்த புகாருக்கு :

தமிழகத்தில் செயல் பட்டு வரும் தனியார்  மெட்ரிக்மேல் நிலைப்பள்ளிகள் அனைத்தும் மெட்ரிக்பள்ளிகளின் இயக்குநரகத்தின் கீழ் செயல் பட்டு வருகிறது.

இந்த பள்ளிகளை கண்காணித்து ஆண்டு தோறும்  ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக மெட்ரிக்ப்பள்ளிகள் ஆய்வாளர்களை  கொண்ட அலுவலகங்கள் செயல் பட்டு வருகிறது.

32 மாவட்டங்களில்  ஒரு சில மாவட்டங்களை ஒருங்கிணைத்து மொத்தம் 15 மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகங்கள் செயல் பட்டு கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 150 மெட்ரிக்மேல்நிலை பள்ளிகள் செயல் படுகிறது.

இரண்டு மூன்று  மாவட்டங்களுக்கு ஒரு மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர் நியமிக்க பட்டுள்ளதால் ஒரு கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்வது என்பது இயலாத காரியம்.

ஆய்வாளர்களுக்கு ஓரு சில உதவியாளர்கள் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளதால் அலுவலக பணிகள் காலதாமதமாகிறது.

சட்ட விரோதமாக செயல் பட்டு வரும் பல  மெட்ரிக்மேல் நிலைப்பள்ளிகளுக்கு கடமை தவறிய ஆய்வாளர்களினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது .

எந்த ஒரு பள்ளிகளும் அரசாணைகளையும் விதிமுறைகளையும் கடை பிடிப்பதில்லை

ஆனால் அனைத்தையும் முழுமையாக கடை பிடிப்பதாக போலியான ஆவணங்களின் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளை ஆய்வு செய்யாமலே ஆய்வு அறிக்கை வழங்கி வருகிறார்கள்.

அனைத்து மாவட்டங்களுக்கும் தனித்தனியாக நேர்மையான மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளர்களை நியமித்து சட்ட விரோதமாக செயல் பட்டு வரும் பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குப்பகோணம் பள்ளி தீ விபத்து போன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும்.

மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்
Inspecter of Matriculation School
அலுவலக முகவரி : தொடர்பு எண்கள் :மின்னஞ்சல் முகவரியினை கொடுத்துள்ளோம் . Laaco

1 .Inspector of Matriculation Schools,
Dr. Ambedkar Government Higher Secondary School,
Egmore, Chennai 600 008.
044-28549253 imschennai2010@gmail.com
(சென்னை மாவட்டம்)

2 .Inspector of Matriculation Schools, M.M Complex,
Kancheepuram-631 501.
044-27230114
imskanchi@gmail.com
(காஞ்சீபுரம் மாவட்டம்)

3 .Inspector of Matriculation Schools,
No.52 JN Road,
Opp. Mahendra Show Room, Thiruvallur-1. 
044-27664184 imsthiruvallur2013@gmail.com
(திருவள்ளூர் மாவட்டம்)

4 .Inspector of Matriculation Schools, Shanmuga Industries Government Higher Secondary School Premises,
Chengam Road,
Thiruvannamalai -606 603.
04175-235980.
imstvm.2009@gmail.com
(திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள்)

5. .Inspector of Matriculation Schools, Government Girls Higher Secondary School Premises,
South Venugopalapuram,
Cuddalore – 607 001.  
04142-230870 imscuddalore2010@gmail.com
(கடலூர் ,விழுப்புரம் மாவட்டம்)

6 .Inspector of Matriculation Schools, Government Higher Secondary School Premises,
Tanjore- 9.
04362-231236
imstnj@gmail.com
(தஞ்சாவூர் ,திருவாரூர்  ,நாகப்பட்டினம் மாவட்டங்கள்)

7 .Inspector of Matriculation Schools, Government Syed Murdhusa Higher Secondary School Premises,
Trichy.- 620 008. 
0431-2701901
imstrichy2010@gmail.com
(திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள்)

8 .Inspector of Matriculation Schools, Arulmigu Bragadambal Government Higher Secondary School Premises, Pudukkottai – 622 001.
0431-266774
imspdkt@gmail.com
(புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள்)

9 .Inspector of Matriculation Schools, Chief Educational Office Complex, Thallakulam,
Madurai – 625 002.
0452-2531443 imsmadurai2012@gmail.com
(மதுரை, சிவகங்கை மாவட்டங்கள்)

10 .Inspector of Matriculation Schools, District Elementary Educational Office Premises,
62A, Palani Road,
Dindigul.0451-2441928. imsdgl@gmail.com
( திண்டுக்கல், கரூர், தேனி மாவட்டங்கள்)

11 .Inspector of Matriculation Schools, Government Subbiah Nadar Higher Secondary School Premises, Virudhunagar – 626 001.
04562-243655.
imsvnr@gmail.com
(விருது நகர், தூத்துக்குடி மாவட்டங்கள்)

12. Inspector of Matriculation Schools, Government High School Premises, Opp. Rathina Theatre,
Thirunelveli – 627 001.
0462-2552051.
imstvl2010@gmail.com
(கன்னியாகுமரி,  திருநெல்வேலி மாவட்டங்கள்)

13 .Inspector of Matriculation Schools, Chief Educational Office Complex, Municipal Higher Secondary School Premises,
Salem.
0427-2410158 imssalem2010@gmail.com
(சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள்)

14 .Inspector of Matriculation Schools, Chief Educational Office Complex,
Erode- 638 001. 
0424-2267466i
mserd@gmail.com
(நாமக்கல் ,ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் )

15. .Inspector of Matriculation Schools, Municipal Marketing Complex, Coimbatore – 641045.
0422-2315698i
mscovai@gmail.com
(கோவை, நீலகிரி மாவட்டங்கள்)

மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரக முகவரி :

இயக்குநர்
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககம்
D.P .I வளாகம்
கல்லூரி சாலை
நுங்கம் பாக்கம்
சென்னை - 600 006
044 28270169
044 28250404
நிகரி :91 44 28251108
மின்னஞ்சல் : dmschennai2010@gmail.com
வலை தளம் :www.tnmatricschools.com.

கல்வி விழிப்புணர்வு  பணியில் .....

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்திரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
மின்னஞ்சல் :nanjillaacot@gmail.com

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
உலாபேசி : 98655 90723

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
உலாபேசி :98655 43303

Wednesday 16 May 2018

விஷன் 2020 மாநாடு!!

விஷன் 2020 மாநாடு முக்கிய அறிவிப்பு!!

சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புகளை சார்ந்தவர்கள், தன்னார்வலர்கள் ,மாணவ மாணவிகள் இளைஞர்கள், பட்டதாரிகள் ஆன்றோர்கள், சான்றோர்கள் தாய்மார்கள்  அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

இந்திய அரசியலமைப்பு சாசனம்- 1950. கோட்பாடு 51 A (ஒ) இன் கீழ் நமது கடமைகளை நிறைவேற்றிடவும்  இந்திய தேசத்தினை  வல்லரசு நாடாக வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல் படுவோம் வாருங்கள்.

இந்திய வரலாற்றிலேயே  முதன் முறையாக இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்புகளின் சார்பில் நடை பெற இருக்கும் முதல் எழுச்சி மாநாடு!

மாநாடு நடைபெறும் இடம்:

ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி
திருவாச்சூர்
பெரம்பலூர் மாவட்டம்

நாள் : 19 சனி  & 20. ஞாயிறு மே 2018
இரு தினங்கள்

இந்தியா வல்லரசு தேசிய வளர்ச்சிக்கான மாநாடு
மற்றும்
விஷன் 2020 விருது வழங்கும்
விழாவிற்கான திருப்பூர் மாவட்ட மாநாடு ஒருங்கிணைப்பு குழுவினர்:

1.S.சுந்தர பாண்டியன்
நாளைய திருப்பூர் மக்கள் அமைப்பு
உலாபேசி :94452 44410

2.K.M.சுரேஷ் பாபு
டீசா திருப்பூர்
உலாபேசி :95009 57080

3.பழ.ரகுபதி
நேர்மை மக்கள் இயக்கம்
உலாபேசி :98942 43134

4.R.சாய் குமரன் ஜீ
தென் சீரடி சமஸ்தானம், மருத்துவம் கல்வி, அன்னதான அறக்கட்டளை
உலாபேசி :80725 47958

5.திரு.சதீஷ் குமார்
களம் அறக்கட்டளை
உலாபேசி :98421 23457

6.S.காதர் பாட்ஷா
தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேசன்
உலாபேசி :94430 29069

7.D.பிரபாகரன்
அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம்
உலாபேசி :99428 99998

8.ரா.செந்தில் குமார்
உழவர் சிந்தனைப் பேரமைப்பு
உலாபேசி :95243 12348

9..ஆ.பழனிக்குமார்
சமூக ஆர்வலர்
உலாபேசி :97510 50513

10..திரு.முத்து குமாரசாமி
சமூக ஆர்வலர்
உலாபேசி :98420 34057

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
உயர்மட்ட குழு
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
உலாபேசி :98655 90723

Sunday 6 May 2018

திருப்பூர் கேபிள் டி.வி ஆப்பரேட்டர் /மாவட்ட மேலாளர் மீது புகார்!!

மனுதாரர்:

செ.ராம் குமார்
S/O, செல்லைய்யா
99,B, திலகர் நகர்                                அனுப்பர்பாளையம்
திருப்பூர் -641 652.

எதிர் மனுதாரர்கள் :

01:   மோகன்ராஜ்
A.M.கேபிள் நெட்வொர்க
105,குமரன் வீதி       
அனுப்பர்பாளையம்                           திருப்பூர் -641 652             
                
02:   பொ.ஜெய்சிங்
தனிவட்டாட்சியர்/
மாவட்ட துணை மேலாளர்,
தமிழ்நாடு அரசு கேபிள் :டிவி.நிறுவனம்
திருப்பூர் மாவட்டம்.

பெறுநர் :

நுகர்வோர் பாதுகாப்பு தலைவர் /மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு தலைவர் அலுவலகம், மாவட்ட. ஆட்சியர் அலுவலக வளாகம்,
திருப்பூர் மாவட்டம்.

அய்யா,

பொருள் : அரசு இலவச செட்டாபாக்ஸ் வழங்க மறுத்ததுடன் கேபிள் இணைப்பினை துண்டித்து சேவை குறைபாடு ஏற்படுத்தி உள்ள எதிர்மனுதாரர்கள் 01.மோகன் ராஜ் அரசுகேபிள் டி.வி. ஆப்பரேட்டர் மற்றும் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஆப்பரேட்டர் மீது நடவடிக்கை எடுத்து கேபிள் இணைப்பினை வழங்க நடவடிக்கை எடுக்க தவறிய  எதிர்மனுதாரர் 02.: பொ.ஜெய்சிங் கேபிள் டி.வி. மாவட்ட மேலாளர் அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொண்டு துண்டிக்கப்பட்ட கேபிள் இணைப்பு மற்றும் அரசு இலவச செட்டாபாக்ஸ் வழங்க உத்தரவிடக் கோரி குற்றவிசாரணை முறைச்சட்டப் பிரிவு 2(4) இன் கீழ் புகார் மனு,

பார்வை :
01. மாத சந்தா செலுத்தியதற்கான அட்டையின் நகல்

02. எனது புகார் கடிதம் நாள்:  01-02-2018

03.எதிர்மனுதாரர் :02 என்பவரிடம் இருந்து வந்த பதில் கடிதம்  ந.க.எண் :45/2017,TACTV /TUP.நாள் :12-03-2018.

04. வங்கி வரைவோலை நாள் :26-03-2018 மற்றும் புகார் கடித நாள் :31-03-2018

05.எதிர் மனுதாரர் :02 என்பவரின் கடித ந.க .எண் :45/2017/TACTV /TUP. நாள் :04-04-2018.

06.எதிர்மனுதாரர் :02 என்பவரின் கடித ந.க.எண் :45/2017,TACTV / TUP.நாள் :10-04-2018

       மேற்காண் முகவரியில் வசித்து வரும் மனுதாரராகிய நான் எதிர்மனுதாரர் :01 என்பவரிடம் இருந்து அரசு கேபிள் இணைப்பு பெற்றுள்ளேன்.

எனவே நான் ஒரு நுகர்வோர் ஆவேன்.

    எதிர்மனுதாரர் :01 .என்பவர் LCO :15233 அரசு கேபிள் டி.வி உரிமம் பெற்றுள்ள கேபிள் டி.வி ஆப்பரேட்டர் ஆவார்.

   பல ஆண்டுகளாக 01.எதிர்மனுதாரரிடம் கேபிள் இணைப்பு பெற்று மாத சந்தா செலுத்தி வருகிறேன்.

  அரசு நிர்ணயம் செய்துள்ள மாத சந்தா 70.00 ரூபாயினை பெறாமல் 100 ரூபாய் மாதசந்தா கூடுதலாக வசூலித்து வருகிறார்.

    இந்நிலையில் எதிர்மனுதாரர் 01: என்பவரிடம் அரசு இலவச செட்டாபாக்ஸ் இணைப்பு வழங்க கோரினேன்.

   ஆனால் அவர் அரசு இலவச செட்டாபாக்ஸ் வழங்க இயலாது என்றும் தனியார் செட்டாபாக்ஸ் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

   அதற்கு நான் தனியார் செட்டாபாக்ஸ் வேண்டாம் என்றும் அரசு இலவச செட்டாபாக்ஸ் வழங்கும் படி கூறினேன்.  

   எனவே, நான் பார்வை :02 இல் காணும் புகார் கடிதத்தினை எதிர்மனுதாரர் :02 என்பவரிடம் வழங்கினேன்.

    எதிர்மனுதாரர் :02 என்பவர் பார்வை:03 இல் காணும் விசாரணை கடிதத்தினை எதிர்மனுதாரர் :01 என்பவருக்கு அனுப்பி உள்ளார்.

   எதிர் மனுதாரர் :01 என்பவர் குறித்து எதிர்மனுதாரர் :02 என்பவரிடம் புகார் அளித்த காரணத்தினால் என்னை நேரில் வந்து மிரட்டியதுடன் மாத சந்தா தொகையினை பெற முடியாது என தெரிவித்ததுடன் எனது வீட்டு கேபிள் இணைப்பினையும் துண்டித்து விட்டார்.

   இதனால் மிகுந்த அதிர்ச்சி அடைந்த நான்  வாங்க மறுத்த இரண்டு மாத சந்தா  ரூபாய் 140 க்கான வங்கி வரைவோலையை அரசு கேபிள் டிவி நிறுவனம் பெயரில் எடுத்து துண்டிக்கப்பட்ட எனது கேபிள் இணைப்பினை வழங்கக் கோரி பார்வை :04 ல் காணும் புகார் கடிதத்தினை எதிர் மனுதாரர் :02 என்பவருக்கு அனுப்பினேன்.

    பார்வை :05-ல் காணும் கடிதத்தின் படி எதிர்மனுதாரர்:02 என்பவர், எதிர்மனுதாரர் :01 என்பவரை விசாரணைக்கு அழைத்ததாக கடிதம் அனுப்பிள்ளார்.
ஆனால் அன்றைய தினம் எதிர்மனுதாரர் :01 என்பவர் விசாரணைக்கு ஆஜராக வில்லை.

   துண்டிக்கப்பட்ட எனது வீட்டு கேபிள் இணைப்பினை எதிர் மனுதாரர்:01 என்பவர் மீண்டும் வழங்கினார்.

   இந்நிலையில் பார்வை :04 இல் நான் அனுப்பிய வங்கி வரைவோலையை பார்வை :06 இல் காணும் கடிதம் வாயிலாக எதிர்மனுதாரர்:02 என்பவர் எதிர்மனுதாரர் :01 என்பவருக்கு அனுப்பி உள்ளார்.

   அரசு கேபிள் டி.வி நிறுவனம் கணக்கில் செலுத்தப்பட்ட பணம் ரூபாய் 140 க்கான வங்கி வரைவோலையை எதிர்மனுதாரர் :01 ஆகிய கேபிள் ஆப்பரேட்டருக்கு எதிர்மனுதாரர் :02 என்பவர் திருப்பி அனுப்பி இருப்பது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

   இந்நிலையில் வீனஸ் சலூன் என்ற எனது கடை மற்றும் வீட்டு கேபிள் டி.வி இணைப்பினையும் மீண்டும் 02.05.2018 அன்று திடீரென எதிர்மனுதாரர் :01 என்பவர் துண்டித்து விட்டார்.

   எனவே பாதிக்கபட்ட நான் எதிர்மனுதாரர் :02 என்பவரின் கைபேசிக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தேன்.

   எதிர்மனுதாரர் :02 என்பவர் 03-05-2018 அன்று மதியம் 3:00 மணிக்கு கேபிள் டிவி அலுவலகத்திற்கு நேரில் வர சொன்னார்கள்.

   நான் நேரில் சென்றிருந்தேன் ஆனால் எதிர்மனுதாரர் :01 என்பவர் வரவில்லை.

    எதிர்மனுதாரர் :01 என்பவரை அவரது அலுவலகம் சென்று பார்க்கும் படி எதிர்மனுதாரர் :02 என்பவர் கூறினார்.

   எனவே எதிர்மனுதாரர் :01 என்பவர் அலுவலகம் நேரில் சென்றேன்.

   அங்கு எதிர்மனுதாரர்: 01  என்பவர் இல்லை .அலுவலக ஊழியர் மட்டும் தான் இருந்தார்.

   இந்நிலையில் 04-05-2018 அன்று எதிர்மனுதாரர் :02 என்பவர் என்னை சந்திக்க எனது கடைக்கு வந்திருந்தார்.

   மாநகராட்சி முதல் மண்டல அலுவலகத்தில் வைத்து என்னிடம் பேசினார்கள்.

    கேபிள் டி.வி அரசு கணக்கில் செலுத்திய வங்கி வரைவோலையை தெரியாமல் எதிர்மனுதாரர் :01 என்பவருக்கு அனுப்பி விட்டதாகவும். அவரிடம் இருந்து வங்கி வரைவோலையை  திரும்பி வாங்கி தருவதாகவும் தெரிவித்தார்.

    கூடுதல் கட்டணம் 100 ரூபாய் குறித்து கேட்டதற்கு அனைத்து கேபிள் ஆப்பரேட்டர்களும் 100 ரூபாய் தான் வாங்குவதாகவும் நான் எதுவும் செயய முடியாது எனவும் தெரிவித்தார்.

    அரசு செட்டாபாக்ஸினை எதிர்மனுதாரர் :01 என்பவர் வந்து வாங்க மாட்டங்கிறார்.

   நான் என்ன செய்ய முடியும் என தெரிவித்தது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும், மனவருத்ததையும் கொடுத்துள்ளது.

   அரசு கேபிள் டி.வி நிறுவனம் பெயரில் கொடுத்த 140 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை திரும்ப பெற்று கொண்டு கடை, மற்றும் வீட்டிற்கான சந்தா கட்டணம் 490 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை எடுத்து எதிர்மனுதாரர் :01 என்பவரிடம் கொடுத்து துண்டிக்கப்பட்ட கேபிள் இணைப்பினை பெற்றுக் கொள்ளும் படியும் கூறினார்கள்.

குற்றச்சாட்டு:01

     எதிர்மனுதாரர் :01கேபிள் ஆப்பரேட்டர் பல ஆயிரக் கணக்கான கேபிள் இணைப்புகளை அரசிற்கு தெரியாமல் முறைகேடாக வழங்கியுள்ளார்.

இதனால் அரசிற்கு மிகுந்த வருவாய் இழப்பு ஏற்டுத்தி வருகிறார்.

குற்றச்சாட்டு :02

      கேபிள் டி.வி சந்தா தாரர்களுக்கு அரசு இலவச செட்டாபாக்ஸ் வழங்காமல் தனியார் செட்டாபாக்ஸ்களை கட்டாய படுத்தி வழங்கி வருகிறார். இதனால் அரசுக்கு மிகுந்த வருவாய் இழப்பினை திட்டமிட்டு ஏற்படுத்தி வருகிறார்.

குற்றச்சாட்டு :03 

      அரசு கேபிள் டி.வி மாத சந்தா தொகை 70.00 க்கு பதிலாக 100 ரூபாய் அனைத்து சந்தா தாரர்களிடம் இருந்தும் கட்டாய படுத்தி வசூலித்து வருகிறார்.

குற்றச்சாட்டு :04

     மாத சந்தா தொகை வசூலிப்பதற்கான பற்று சீட்டு வழங்குவதில்லை.

குற்றச்சாட்டு :05

        எதிர்மனுதாரர்: 01 என்பவர் சட்ட விரோதமாக செயல்படுவது தெரிந்தும் எதிர்மனுதாரர் :02 ஆகிய கேபின் டி.வி மாவட்ட மேலாளர்  அவர்கள் அவர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அவருக்கு ஆதரவாக செயல் பட்டு வருகிறார்.

குற்றச்சாட்டு :06

     .அரசு கணக்கில் செலுத்திய வங்கி வரைவோலையை அரசு கணக்கில் வரவு வைக்காமல் எதிர்மனுதாரர்;01 என்பவருக்கு  அனுப்பி கால நேர விரையம் ஏற்படுத்தி வங்கி வரையோலையை திரும்ப பெற்று கொள்ளும்படி தெரிவித்ததுடன் மாத சந்தா தொகையினை எதிர்மனுதாரர் :01 என்பவர் பெயரில் வங்கி வரையோலை எடுத்து கொடுக்கும் படி கூறுகிறார்.

குற்றச்சாட்டு :07

      எதிர்மனுதாரர் :01 மற்றும் :02 என்பவர்கள் அரசு கேபிள் இணைப்பினை துண்டித்து தெரிந்தே தீங்கு செய்யும் நோக்கத்துடன் திட்ட மிட்டு எனக்கு சேவை குறைபாடு ஏற்படுத்தி உள்ளார்கள்.

கோரிக்கை :

      அரசு இலவச செட்டாபாக்ஸ் வழங்க கோரிய ஒரே காரணத்திற்காகவும் எதிர்மனுதாரர் :01 என்பவர் என்னிடம் மாத சந்தா தொகையினை பெறாத காரணத்தினால் இரண்டு மாத சந்தா தொகையினை எதிர்மனுதாரர்:02 என்பவருக்கு வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்பினேன்.

எதிர்மனுதாரர் :02 என்பவரிடம் புகார் அளித்த காரணத்தினால் எனது வீடு மற்றும் கடையின் கேபிள் இணைப்புகளை துண்டித்து விட்டார்.

இதனால் எங்களது சுதந்திரம் பாதிக்கப்பட்டதுடன் மிகுந்த துயரத்திற்கும் அலைச்சலுக்கும்  ஆளாகி உள்ளேன்.

இது நுகர்வோராகிய எனக்கு சேவை குறைபாடாகும் எனது மற்றும் குடும்ப  உறுப்பினர்களின் உரிமைகள் திட்ட மிட்டு பறிக்கப்பட்டுள்ளது.

கடமை தவறிய எதிர்மனுதாரர்கள் மீது நுகர்வோர் பாதுகாப்பு தலைவராகிய தாங்கள் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு கேபிள் இணைப்புகளை மீண்டும் வழங்க கோரியும், இலவச செட்டாபாக்ஸ் வழங்கக் கோரியும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணங்களை திருப்பி வழங்க கோரியும், சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் எதிர்மனுதாரர் :02 என்பவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும்,  எதிர்மனுதாரர் :01 என்பவரது LCO கேபிள் உரிமத்தினை ரத்து செய்யக் கோரியும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - 1986 இன் படியும், மனித உரிமைகள் பாதுகாப்புச்சட்டம் 1993 இன் படியும், இந்த புகார் மனு தங்களுக்கு எழுதபட்டுள்ளது.

தாங்களாலும் எனக்கு உரிய நிவாரணம் கிடைக்க பெறவில்லை எனில் நீதி வேண்டியும், உரிய இழப்பீடு பெறவும் மாவட்ட குறைதீர் மன்றத்தில் முறையிடுவதினை தவிர பாதிக்கப்பட்ட எனக்கு வேறு வழி தெரியவில்லை என்பதினை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.

இணைப்பு பக்கங்கள் :10

நாள் :07.05.2018                                              இடம்: திருப்பூர் 

மனுதாரர்
செ.ராம்குமார்