Sunday 9 December 2018

லஞ்சம் Vs ஊழல்!! LAACO வின் விழிப்புணர்வு பதிவு!!

லஞ்சம் Vs ஊழல்!!
LAACO. வின் விழிப்புணர்வு பதிவு!!

09 டிசம்பர் 2018
இன்று சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்!

உலக நாடுகளின் ஊழலை கட்டு படுத்த
ஐக்கிய நாடுகள் சபை முடிவு!

ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலை ஒழிக்கும் சர்வதேச முயற்சியில் இந்தியாவும் சேர்ந்து கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை ஜனவரி 1997 இல் ( 51/59 ) 51 நாடுகள் கலந்து கொண்ட ஒரு பொது சபை தீர்மானத்தில் உலக நாடுகளில் பரவலாக வளர்ந்து வரும் ஊழலையும்
அதன் காரணங்களையும் கவலையுடன் அடையாளம் கண்டு தனது உறுப்பு நாடுகளுக்கு வழிகாட்டும் ஒரு ஊழல் ஒழிப்பு முறையையும் வெளியிட்டுள்ளது.

ஐ.நா சபையின் ஊழல் ஒழிப்பு தீர்மானங்கள் ;

1.அரசு நிர்வாக பொறுப்புகள் ஒரு அறங்காவலர் பொறுப்புகளுக்கு ஒப்பானவை என்று வலியுறுத்தப்படுகிறது.

2.சமுதாய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர் களாயினும் நியமிக்கப்பட்டவர் களாயினும் தமது கடமைகளைத் திறமையுடனும் களங்கமற்று நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மற்றும் நிர்வாக கொள்கைகளுக்கு உட்பட்டு தமது கடமைகளை செய்ய உறுதி கொள்ள வேண்டும்.
தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களின் செல்வம் திறனுடனும் சீராகவும் செலவிடப்படுவதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

3.இந்த பொறுப்பாளர்கள் தர்ம நியாயத்துடனும் பாரபட்சமின்றியும்  நடந்து கொள்ள வேண்டும். தமது அதிகாரத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கோ, குழுமத்திற்கோ, பிரிவிற்கோ பாரபட்சத்துடன் எதிராக துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.

4.சமுதாய பொறுப்பாளர்கள் தமது அதிகாரத்தை தமக்கோ அல்லது தம்மை
சேர்ந்தவர்களுக்கோ தமது  குடும்பத்தினருக்கோ முறையற்ற முறையில் பயன் படுத்தக்கூடாது.
தமது பொறுப்புக்கு ஒவ்வாத விஷயங்களில் அவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது.

5.சமுதாய பொறுப்பாளர்கள் தமது பொறுப்புகளுக்கு ஒவ்வாதது போல் தோன்றக்கூடிய தமது மற்ற முயற்சிகளை மக்களின் பார்வைக்கு வெளியிடுவது அவசியம்.

6.சமுதாய பொறுப்பாளர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களின் செல்வத்தையும் விவரங்களையும் தவறாக தமது பொறுப்புகளுக்கு அப்பாற்பட்ட வகையில் உபயோகிக்கக்கூடாது.

7.சமுதாய பொறுப்பாளர்கள் குறிப்பாக நியமனம்  செய்யப்பட்ட அதிகாரிகள் மேலாண்மையினர் தமது பதவி காலத்திற்கு பின்பு பதவிகளின் அடிப்படையில் முறையற்ற வாய்ப்புகளை பெறுவது தவிர்க்கப்பட வேண்டும்.

8.சமுதாய பொறுப்பாளர்கள் அதற்குண்டான சட்ட திட்டங்களின்படி தமது மற்றும் தமது மனைவி /கணவர் உறவினர்களின் சொத்துக்களையும் பிற வசதிகளையும் மக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும்.

9.சமுதாய பொறுப்பாளர்கள் தமது பணியை செய்யும் போது இந்த பணியை  பாதிக்கக்கூடிய பரிசுகளையோ மற்ற அனுகூலங்களையோ ஏற்றுக்கொள்ளக்கூடாது.

10.சமுதாய பொறுப்பாளர்கள் அரசியலில் ஈடுபடும் போது அந்த அரசியல் ஈடுபாடு அவர்களது பொறுப்புகளை பாரபட்சமில்லாமல் செய்வதிலும் குறுக்கிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.இதனால் பொதுமக்களின் பார்வைக்கு பாரபட்சம் இல்லாமல் செய்கிறார் என்ற நம்பிக்கை குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

ஐ.நா பொது சபையின் மேற்காண் தீர்மானத்தில் கையொப்பம் இட்டு சுமார் 21 ஆண்டுகள் கடந்து விட்ட போதும்  இந்திய தேசத்தில் லஞ்சமும் ஊழலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.
Laaco Nanjil

லஞ்சம் கொடுக்காமல் மக்களின் எந்த ஒரு அடிப்படை தேவைகளும் நிறை வேறுவதில்லை!

ஆட்சி பணிக்கும் அரசு பணிக்கும் வருபவர்கள்  நேர்மையானவர்களாக இருப்பது இல்லை!

மக்களின் மேல் இவர்களுக்கு எந்த விதமான  அக்கறையும் கிடையாது.

நாட்டில் அமலில் உள்ள சட்டங்களையும் அரசாணைகளையும் உறுதி மொழிகளையும் நடை முறை படுத்தாமல் ஏட்டளவிலே வைத்துள்ளனர் .
வெளிப்படை தன்மை இவர்களிடம் அறவே கிடையாது.

ஆட்சி அதிகாரத்தை  பிடிக்க பல லட்சம் பணம் செலவு செய்தேன் .அதனால் ஊழல் செய்கிறேன்.

அரசு பணிக்கு வர லஞ்சம் கொடுத்தேன்
அதனால் லஞ்சம் வாங்குகிறேன்.

லஞ்சம் கொடுத்த பணத்தை பல ஆயிரம் மடங்கு லஞ்சமாகவும் ஊழல் செய்தும் பெற வேண்டும் என்ற அர்ப்ப எண்ணத்தில் தான் இவர்கள் செயல் படுகிறார்கள்.

ஆட்சிக்கு வருபவர்களும் இவர்களுக்கு  கூஜா தூக்கும் அரசூழியர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல ..!!

அரசு வழங்கும் ஊதியங்களையும் சலுகைகளையும் ஓய்வூதியங்களையும் பெற்றுக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும்  இவர்கள் மக்கள் பணிகளை சரிவர செய்வது இல்லை.

இவர்களுக்கு வானளாவ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நினைக்கின்றனர்.

மத்திய மாநில அரசுகளின் அரசுத்துறை வாரியாக அரசு பணிக்கு நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் மக்கள் பணி செய்ய நியமிக்கப்பட்டவர்களே.
இவர்கள் அனைவரும் மக்கள் சேவகர்களே!

ஆனால் இவர்கள் மக்களை அலைகழித்து மிகவும் கேவலமாக நடத்தப்பட்டு வருகிறார்கள்.

மக்களின் ஒவ்வொரு சேவைகள் பெறுவதற்கும் ஒரு குறிப்பிட்டுள்ள தொகையினை லஞ்சமாக பெறுகின்றனர்.

பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம் கொடுத்து வாழும் அவலை நிலை தொடர்கிறது.

மக்கள் நல பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகளில் பெரும் முறைகேடுகள் செய்கின்றனர்.

சாலைகள் பாலங்கள் கழிவு நீர்கால்வாய்கள் கட்டிடங்கள் என எந்த ஒரு வேலைகளையும் தரமற்ற முறையில் செய்து கோடி கோடியாக கொள்ளை அடிக்கின்றனர்.

மக்கள் பணிகளை செய்யாமலே ஒதுக்கப்பட்ட நிதிகளை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்கின்றனர்.

இந்த கேடு கெட்ட கயவர்களை கண்காணித்து சிறைக்கு அனுப்ப வேண்டிய மத்திய மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையங்கள் சிறப்பாக செயல் படாத காரணத்தினால் தான் லஞ்சமும் ஊழலும் கட்டு படுத்த படாமல் உள்ளது.

லஞ்சம் கொடுப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் சட்ட விரோதமாக செயல் படுபவர்களாகவே காணப்படுகின்றனர்.

இவர்கள் சுய நலனுடன் இருப்பதினால்
லஞ்சம் வாங்கும் கயவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு சென்று தண்டனை வாங்கி கொடுக்க  மறுக்கின்றனர்.

கல்வி நிலையங்களும் மருத்துவமனைகளும் கொள்ளை கூடங்களாக மாறி விட்டது.

நாட்டில் பசி பட்டினி வறுமை இன்னும் ஒழிய வில்லை.

வழக்கறிஞர்கள் குற்ற செயல்களுக்கு துணை போகும் பொய்யர்களாக மாறி விட்டனர்.

நீதி மன்றங்களில் நீதி நிலை நாட்ட படுவதில்லை.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற காவல் துறையிலும் கண்ணியம் இல்லாமல் போய் விட்டது.

போதையூட்டும் மதுவினால் மக்களை மதி மயக்கத்தில் வைத்துள்ளனர் ஆட்சியாளர்கள்.

பெண் குழந்தைகள் இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுக்கப்பட வில்லை.

அரசியல் வாதிகளும் அரசு ஊழியர்களும் லஞ்சத்தை ஒருக்காலும் ஒழிக்க மாட்டார்கள்.

இவர்களின் சுய தேவைகளுக்காக அவ்வ போது  மக்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆண்டாண்டு காலமாக இவ்வாறு புலம்பி புலம்பி செத்து மடந்து விட தாம் நாம் பிறந்தோமா?

இல்லை! இல்லை!
இனி மேல் யாரையும் நம்பி பயனில்லை

நமது உரிமைகளை பெற்றிட நாமே களத்தில் இறங்கி போராட தான் வேண்டும் .

எனவே
எனதருமை மக்களே!
இளைய சமுதாயமே!
மாணவ செல்வங்களே!
நண்பர்களே!
நீங்கள் விழித்து கொள்ளுங்கள்

இந்த கயவர்களின் முகத்திரையை கிழித்தெறியுங்கள்!

மக்களை சுரண்டி சட்ட விரோதமாக லஞ்சம் வாங்கி வயிறு வளர்பவர்கள் தேச துரோகிகளே!
இவர்களது குடும்பத்தினரும் சபிக்கப்பட்டவர்களே!

சாதி மதம் இனம் மொழியால் மக்களை பிரித்து அடிமை படுத்தி வைத்துள்ள அரசியல் கட்சிகளின் சூத்திரதாரிகளை
அடையாளம் காணுங்கள்.

அடிமை பட்டு கிடந்தது போதும்.

கேடு கெட்ட ஆட்சியாளர்களை தூக்கி எறியுங்கள்!

அரசியலமைப்பு  சாசனம் வழங்கி உள்ள நமது கடமைகளையும் உரிமைகளையும் கேட்டு பெறுங்கள்.

விரல் நுனியில் வாக்கு என்னும்  விலை மதிக்க முடியாத உரிமைகளை பெற்றுள்ள நீங்கள் அதனை சரியாக பயன் படுத்தி நேர்மையான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுங்கள்.

தயவு செய்து உங்களது எந்த ஒரு தேவைகளுக்கும் லஞ்சம் கொடுக்காதீர்கள்.

மாறுங்கள்! மாற்றுங்கள்!?

கொடுக்க வேண்டாம் லஞ்சம்!

ஊழல் எங்கு நடந்தாலும் தடுத்து நிறுத்துங்கள்.

லஞ்சம் ஊழலுக்கு எதிரான. உங்கள் கருத்துக்களை பகிரங்கமாக பதிவு செய்யுங்கள்.

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

எதற்கும் எவனுக்கும் அச்சப்படாதீர்கள்.

தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெரியுங்கள்!

இந்த நாட்டில் நடக்கும் அவலங்கெளுக்கெல்லாம் காரணம் ஆங்காங்கே இருக்கும் ஒரு சிவ தீயவர்கள் அல்ல.
நம்மை போன்ற பெரும் பான்மையானவர்களின் மௌனத்தால் தான் என்றார் ,
மார்ட்டின் லூதர் கிங்.

எனவே நாம் அனைவரும் நமது மௌனத்தை கலைத்து நமது தேசத்தை காப்பாற்ற நாம் அனைவரும் சபதம் ஏற்போம்.

லஞ்சம் ஊழல் ஒழிந்து இந்திய தேசம் வல்லரசு ஆவது நமது கடமையாக கொண்டு செயல் படுவோம் .

உங்களுக்கு வழிகாட்டியாய் " சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு " என்றென்றும் துணை நிற்கும் என்ற உறுதி மொழியினை இன்றைய  சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தில் உறுதியாய் உரக்க சொல்கிறோம்.

சட்டம் தெரியாமல் சட்டப்படி வாழும் நாம் சட்டம் அறிந்து அனைவருக்கும் இலவச சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி வாழ்வாங்கு  வாழ்வோம் வாருங்கள் என அன்புடன் அழைக்கிறோம்.

நமது இந்திய தேசத்தில் நேர்மையாக மக்கள் பணி ஆற்றி வரும் ஒரு சில  அரசூழியர்கள் அனைவரையும் இந்த நாளில் வாழ்த்துவதில் "சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு " சார்பாக பெருமை அடைகிறோம்.

லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பணியில் ........

சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
LEGAL AWARENESS AND ANTI CORRUPTION ORGANIZATION
363 ,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
மின்னஞ்சல் :nanjillaacot@gmail.com

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
உலாபேசி :98655 90723

அரியலூர் ரா.சங்கர்
மாநில தலைவர்
உலாபேசி :98655 43303

No comments:

Post a Comment