Sunday 9 December 2018

போக்குவரத்திற்கு பொது இடையூறு ஏற்படுத்தி வரும் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி!

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அவர்களின் உடனடி கவனத்திற்கு!

போக்குவரத்திற்கு பொது இடையூறு!

போக்கு வரத்திற்கும் பொது மக்களுக்கும் மிகுந்த இடையூறினை திட்டமிட்டு தினம் தினம் ஏற்படுத்தி வரும் திருப்பூர் அங்கேரிபாளையம் பிரதான  சாலையில் சட்ட விரோதமாக செயல் பட்டு வரும் கொங்கு வேளாள கவுண்டர் அறக்கட்டளைக்கு சொந்தமான கொங்கு வேளாளர் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி!

பிரதான சாலையில் இருந்து ஐந்து அடி தூரத்தில் சுற்று சுவரும் பிரதான வாயிலும் சட்ட விரோதமாக அமைத்துள்ளார்கள்.

காலை 9.00 மணிக்கு மேல் பிரதான வாயிலை மூடி விடுகிறார்கள்.

சுமார் 4188 மாணவர்கள் கல்வி பயிலும் பள்ளியில் பெற்றோர்கள் பள்ளி முன் வாகனங்களை நிறுத்துவதால் போக்கு வரத்திற்கும் பொது மக்களுக்கும் மிகுந்த இடையூறினை தெரிந்தே திட்டமிட்டு  ஏற்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது.

தனியார் பள்ளி நிர்வாகம் பொது இடையூறு ஏற்படுவது குறித்து கவலை கொள்வதில்லை.

இவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல் பட்டு வருகிறார்கள்.

எனவே தாங்கள்  உடனடியாக போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் பொது   இடையூறு ஏற்படுத்தி வரும்  பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் வேண்டி கொள்கிறோம்.

இணைப்பு ;காணொலி

LAACO நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
உலாபேசி ;98655 90723

No comments:

Post a Comment