Sunday 25 November 2018

கேபிள் டிவி RTI 7(1) மனு.

மனுதாரர் :
செ.ராம்குமார்,
த /பெ. செல்லைய்யா
99,B, திலகர் நகர்,
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் - 641 652.

பெறுநர் :
பொது தகவல் அலுவலர் அவர்கள்,
தகவல் அறியும் உரிமைச்சட்டம் - 2005,
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.கார்ப்பரேசன்,
துகர் டவர்ஸ்,
34,(123) 6-வது தளம், மார்சல் ரோடு,
எழும்பூர், சென்னை - 600 008.

அய்யா,
பொருள் : தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 சட்டப்பிரிவு 7(1) இன் கீழ் 48 மணி நேரத்திற்குள் சில தகவல்கள் பெறுவது சம்மந்தமாக,

பார்வை : 13.09.2018 அன்று தங்கள் அலுவலக மேலாண்மை இயக்குநர் அவர்களுக்கு அனுப்பிய கடித நகல். ET 671643945IN

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம் அனுப்பர்பாளையம் அரசு கேபிள் டி.வி A.M.நெட் ஒர்க் கேபிள் டி.வி. ஆப்பரேட்டர் மோகன சுந்திரம் என்பவர் எனது கேபிள் டி.வி இணைப்பினை துண்டித்துவிட்டார். இது சம்மந்தமாக பார்வையில் காணும் புகார் மனுவினை அனுப்பி இருந்தேன். கேபிள் டி.வி இணைப்பு எனது சுதந்திரம்  சம்பந்தப்பட்ட காரணத்தினால் பார்வையில் காணும் எனது பார்வையில் காணும் எனது புகார் மனு மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் விபரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்ட பிரிவு 7(1) இன் கீழ் 48மணி நேரத்திற்குள் வழங்க கோருகிறேன்.

1.பார்வையில் காணும் புகார் மனு தங்கள் அலுவலகத்தில் கிடைக்க பெற்று பதிவு செய்யப்பட்டுள்ள பதிவேட்டின் ஒளிநகல் வழங்கவும்.

2.பார்வையில் காணும் புகார் மனு மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையின் விபரங்களின் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவேடுகளின் அனைத்து பக்க ஒளிநகல்கள் வழங்கவும்.

3. பார்வையில் காணும் புகார் மனு சம்ந்தமாக எனக்கும் எதிர்மனுதாரர்களுக்கும் ஏதேனும் கடிதம் அனுப்பப் பட்டிருந்தால் அதன் ஒளிநகல்கள் வழங்கவும்.

4. பார்வையில் காணும் எனது புகார் மனு நிராகரிப்பட்டிருப்பின் அதற்கான காரணங்களை சட்டப் பிரிவு 4(1)d இன் படிதெரிவிக்கவும்.

5. LCO NO :15233 A.M கேபிள் நெட் ஒர்க் அரசு கேபிள் டி.வி. இணைப்பு வழங்கப்படுள்ள மொத்த சந்தா தாரர்களின் எண்ணிக்கையின் விபரங்களை வழங்கவும்.

6.LCO NO :15233 கேபிள் டி.வி. ஆப்ரேட்டருக்கு அரசு இலவச செட்டா பாக்ஸ் இன்றைய தினம் வரையில் எத்தனை சந்தா தாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

7. திருப்பூர் மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி. உரிமம் வழங்கப்பட்டுள்ள அனைத்து கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்களின் பெயர், LCO NO, முகவரி, தொடர்பு எண்கள், மற்றும் உரிமம் வழங்கிய நாள்,  சந்தா தாரர்களின் எண்ணிக்கை முழுமையான விபரங்களை வரிசைபடி பட்டியலிட்டு வழங்கவும்.

8.திருப்பூர் மாவட்டத்திற்கு இன்றைய தினம் வரையில் அரசு இலவச செட்டாபாக்ஸ் வழங்கப்பட்டுள்ள எண்ணிக்கை, மற்றும் கேபிள் டி.வி ஆப்ரேட்டர்களின் விபரங்களை பட்டியலிட்டு வழங்கவும்.

9.தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி ஆப்ரேட்டர்கள் மீது சந்தா தாரர்களினால் நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்குகள் எதேனும் நிலுவையில் இருந்தால் அதன் விபரங்களை தெரிவிக்கவும்.

10.திருப்பூர் மாவட்டத்தில்  அரசு கேபிள் டி.வி தனி தாசில்தார்களாக பணியாற்றியவர்களின் பெயர் பட்டியல் மற்றும் பணியில் சேர்ந்த நாள் மாத ஊதியம் பற்றிய முழு விபரத்தினை வழங்கவும்.

11.அரசு கேபிள் டி.வி கார்ப்பரேசன் கணக்கில் ₹ 140.00 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை  எடுத்து திருப்பூர் மாவட்ட கேபிள் மேலாளருக்கு அனுப்பியதினை பெற்றுக்கொண்டு அரசு கணக்கில் வரவு வைக்காமல் மோசடி செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய குற்றத்திற்காக. அவர் மீது புகார் அளிக்க வேண்டிய பொறுப்பு அதிகாரியின் பெயர் பதவியின் பெயர் அலுவலக முகவரி வழங்கவும்.

மேற் காண் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் பத்துக்கான நீதிமன்ற வில்லை ஒட்டியுள்ளேன். மேல நான் கோரிய தகவல்களில் எதேனும் தகவல்கள் தங்கள் அலுவலத்தில் இல்லை எனில் அதற்கான தகவல்களை சட்டப்பிரிவு 6(3) இன் கீழ் நடவடிக்கை மேற் கொண்டு அனைத்து தகவல்களையும் வழங்க கோருகிறேன்.

இணைப்பு பக்கங்கள் :
மனுதாரர்
நாள் :
இடம் :திருப்பூர்
  செ.ராம்குமார்

No comments:

Post a Comment