Tuesday 31 July 2018

திருப்பூர் லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் அவர்கள் கவனத்திற்கு!

திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களின் கவனத்திற்கு!

தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட திருப்பூர் மாவட்டத்தில் செயல் பட்டு வரும் பெரும்பான்மையான அரசுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் கொடுப்பதும் குற்றம்! லஞ்சம் வாங்குவதும் குற்றம்! என்ற விழிப்புணர்வு தகவல் பலகை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் இயக்குநர் அலுவலக முகவரி தொடர்பு எண்களுடன் பொது மக்கள் பார்வையில் தெரியும் வண்ணம் வைக்கப்படவில்லை!

நாட்டில் அமலில் உள்ள சட்டங்களையும் அரசு ஆணைகளையும் செயல் படுத்த தவறிய கடமை தவறிய அரசூழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோருகிறோம்.

திருப்பூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரின் முகவரியுடன் உள்ள தகவல் பலகை பல ஆண்டுகளாக மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.

இது குறித்து கடந்த ஆண்டு செய்தி வெளியிட்டோம்.

ஆனால் கடமை தவறிய மருத்துவமனை நிர்வாகம் கண்டு கொள்ள வில்லை!

எனவே தாங்கள் கடமை தவறிய அதற்கு பொறுப்பு வகிக்கும் ஊழியர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.

அது போல் திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டல அலுவலகத்தில் தகவல் பலகை வைக்கப்படாத காரணத்தினால் மாநில தகவல் ஆணையம் மூலம் 2011 ஆம் ஆண்டு தகவல் பலகை வைக்க உத்தரவு பெற்றோம்.

ஆனால் தகவல் பலகை செய்து  அதனை பொது மக்கள் பார்வைக்கு வைக்காமல் கிடப்பில்  போட்டுள்ளார்கள்.

பல முறை நேரில் சென்று எச்சரித்தும் நடவடிக்கை இல்லை!

இதன் மூலம் இந்த அலுவலக மாநகராட்சி ஊழியர்கள் லஞ்சம் பெறுவது உறுதி படுத்தப்பட்டுளது .

எனவே உடனடியாக அனைத்து அரசுத்துறை அலுவலகங்களையும் கண்காணித்து தகவல் பலகைகள் வைக்க உத்தரவிடக்கோருகிறோம்.

லஞ்சம் ஊழலை தடுப்பதும் கண்காணிப்பதும் தங்கள் கடமையாக உள்ளதாலும்  அதனை சுட்டி காட்டுவது எங்களின் கடமையாக இருப்பதாலும் இதனை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு,
பெரியார் காலனி,
திருப்பூர் -641 652
மின்னஞ்சல் :nanjillaacot@gmail.com
உலாபேசி :98655 90723

Monday 30 July 2018

ஊழல் ஒழிப்பு செய்தி :0028

ஊழல் ஒழிப்பு செய்தி : 0028 /30.7.2018

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

உண்மை சம்பவங்கள்!

திராவிட முன்னேற்ற கழகம்!

தி.மு.க.
இந்த கட்சியின் தலைவர் மு.கருணாநிதி அவர்கள்!

இவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள்!

தற்பொழுது எதிர் கட்சியாக செயல் பட்டு கொண்டிருப்பவர்கள்!

மீண்டும் ஆட்சி அரியணைக்காக காத்து கொண்டிருப்பவர்கள்.

மத்திய மாநில அரசுகளின் பல பதவிகளை வகித்தவர்கள்! வகித்து கொண்டிருப்பவர்கள்!

சாராய ஆலை முதல் அனைத்து தொழில் துறைகளிலும் இவர்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறக்கிறது.

இக்கட்சியின் தலைவர் திருவாரூரில் இருந்து திருட்டு இரயில் ஏறி சென்னைக்கு வந்ததாக அவரே சொன்னதாக நியாபகம் .

சாதாரண மனிதராய் வாழ்க்கையை தொடங்கி திரைபட கதை வசனம் எழுத ஆரம்பித்து தமிழக முதல்வராய் பதவி வகித்து இன்று உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக. திகழ்கிறார்.

அரசியல் வித்தகர்.
எந்த ஒரு சர்ச்சையில் சிக்கினாலும் எதையும் சாதுர்யமாக சமாளிக்கும் வல்லமையும் பெற்றவர்!

உலகிலேயே முதன் முதலாக இரண்டாம் தாரம் அல்லது இரு மனைவி என்ற. சொற்களை தூக்கி எறிந்து மனைவிக்கு ஒரு துணைவி!
மனைவி துணைவி என புது அத்தியாயம் ஏற்படுத்தியவர்.

மிகப்பெரிய குடும்பத்திற்கு சொந்தக்காரர்.

பல அரசியல் தலைவர்களை தனது சாணக்கீய தனத்தால் வீழ்த்தியவர்!

இவரது பேச்சாலும் எழுத்தாலும் தமிழின தலைவராக தன்னை உயர்த்தி கொண்டவர்!

சர்க்காரியா கமிஷனால்  விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தவர் என்ற அடை மொழிக்கு சொந்தக்காரர் .

இவர் முதல்வராய் இருக்கும் போது சட்ட சபையில் எதிர்கட்சி தலைவியாக இரூந்த மறைந்த ஜெயலலிதாவின்  துகிலினை துச்சாதனன் போல் உருவி தாக்க முற்பட்ட. சம்பவம் இவர் கண் முன்னால் அரங்கேறியது.

அரசியல் என்ற போர்வையிலும் மக்கள்
நல போராட்டங்கள் என்ற பேரிலும் பல போராட்டங்களை நடத்தி உள்ளனர் .

மக்கள் நலம்! மக்கள் நலம் எனக்கூறி தன் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்.

ஒவ்வொரு போராட்டங்களின் போதும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு பொது மக்களுக்கும் பொது சொத்துகளுக்கும் மிகுந்த சேதம் விளைவிப்பதில் கை தேர்ந்தவர்கள்!

இந்திய அரசியலமைப்பு சாசன கோட்பாடுகளுக்கு எதிரான பல நடவடிக்கைகளில் திட்டமிட்டு ஈடுபடுவார்கள்.

கழக உடன் பிறப்புக்கள் என ஒரு மாபெரும் கூட்டம் இந்த கட்சியின் அனுதாபிகளாகவும், கட்சி தலைவர்களின் அனுதாபிகளாகவும் வும் குடும்ப உறுப்பினர்களின் அனுதாபிகளாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்!
இது தான் இக்கட்சியின் மிகப்பெரிய பலம்!

Thursday 26 July 2018

மெட்ரிக்பள்ளிகள் இயக்குநரக பெண் அலுவலர் பேசிய ஆடியோ!!

அம்மா அழைப்பு மையத்தில் அளித்த புகாருக்கு சென்னை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அலுவலகத்தில் எவ்வாறு தீர்வு காணப்படுகிறது?

திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் செயல் பட்டு வரும் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி நிர்வாகம் இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் 1 ஆம் வகுப்பில்  கல்வி பயிலும் ஏழை மாணவன் காந்தி ஜீ என்பவருக்கு கல்விக்கட்டணம் செலுத்தாத காரணத்தினால் நோட்டு புத்தகம் உள்ளிட்ட  எதுவும் வழங்க வில்லை!

இது சம்பந்தமாக திருப்பூர் மாவட்ட  முதன்மைக்கல்வி அலுவலர் சாந்தி அவர்களிடம் புகார் அளித்த போது கல்வி கட்டணம் மட்டும் தான் அரசு வழங்கும். மற்ற படி பள்ளி நிர்வாகம் கேட்கும் அனைத்து கட்டணங்களையும் கட்டாயமாக கட்டி தான் ஆக வேண்டும் . அது தான் அரசு விதி என தெரிவித்தார்.

எது கட்டாயம்?

யார் கேட்டார்கள் இலவசம்!

இலவச கட்டாய கல்வி கட்டாயமா?

அல்லது

கல்வி கொள்ளையர்கள் கேட்கும் அநியாய கட்டணங்கள் கட்டாயமா?

இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டதின் நோக்கத்தினை நீர்த்து போக செய்யும் கடமை தவறிய கல்வி அலுவலர்கள்!

அப்படியானால் இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் என்பதினை மானிய கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் என பெயரை மாற்றி சட்டம் இயற்றலாமே?

சட்ட விரோதமாக செயல் படும் பள்ளிக்கு ஆதரவாக பேசிய திருப்பூர்  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாந்தி அவர்கள் குறித்து அம்மா அழைப்பு மையத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர் புகார் அளித்துள்ளார் .

புகார் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பபட்டுள்ளது .

புகாரின் மீது விசாரணை செய்வதற்காக மெட்ரிக்பள்ளிகள் இயக்குநர் அலுவலக பெண் அலுவலர் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசிய ஆடியோ உரையாடலை கேளுங்கள் நண்பர்களே!

திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி சட்ட விரோதமாக செயல் படுகிறது மேடம்!

தமிழ்நாட்டில் இந்த ஒரு பள்ளி தான் சட்ட விரோதமாக செயல் படுகிறதா?

என் குழந்தை அங்கு படிக்கிறான் மேடம்
நான் ஒரு இந்திய பிரஜை தப்பை தட்டி
கேட்கும் கடமை எனக்கு உள்ளது மேடம்.

நீங்கள் ஒருவரோ  நானோ தப்பை தட்டி கேட்டால் நாட்டை திருத்தவே முடியாது!

அப்போ நீங்க சட்ட விரோதமாக செயல் படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா மேடம் .

சட்ட விரோதமாக திருப்பூர் மாநகராட்சி அனுமதி இல்லாமல் பள்ளி கட்டிடம் கட்டி வருகிறார்கள் மேடம்.

நீங்களோ நானோ சொல்வதால  அவர்கள் கட்டிடம் கட்டாமல் விட்டு விடுவார்களா?

கும்ப கோணம் பள்ளி தீ விபத்துல எத்தனை குழந்தைகள் செத்து போச்சு மேடம்!

கும்பகோணம் சரி மற்ற
எல்லா பள்ளிகளும்  பெர்பக்டா செயல் படுகிறதா?

இலவச கல்விக்கு  கட்டணம் கேட்கிறார்கள் மேடம்.

நோட்டு புத்தகங்களுக்கு கட்டணம் கட்ட வேண்டும்.

MRP இல்லாமல் நோட்டு புத்தகங்களுக்கு  ₹ 7000 ரூபாய் கேட்டால் நான் எப்படி கட்ட முடியும் மேடம்.

உங்க குழந்தை சட்ட விரோதமாக செயல் படும் பள்ளியில் படித்தால் நீங்கள் தப்பை தட்டி கேட்க மாட்டீங்க அப்படித்தானே மேடம்!

நான் இது போன்ற பள்ளியில் என் குழந்தையை படிக்கவே வைக்க மாட்டேன்.

நீங்க சொல்வது நூறு சதவீதம் சரி!

நீங்கள் பள்ளி மீது புகார் அளித்தால்
உங்கள் குழந்தையல்லவா ஸப்பராகும்?

முதலில் குழந்தையை பாருங்க!!

இது போன்ற கடமை தவறிய அரசூழியர்கள் பணியில் நீடித்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப்போவதில்லை!

இவர்களை போன்ற கையாலாகாத கடமை தவறிய கல்வி அலுவலர்கள்  சட்ட விரோதமாக செயல் படும் பள்ளி நிர்வாகிகள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்!

பொது நலன் கருதி வெளியிடுவோர் ;
LAACO
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652
உலாபேசி : 98655 90723

Wednesday 18 July 2018

ஊழல் ஒழிப்பு செய்தி;0027:திருப்பூர் அரசு மருத்துவமனை அவலம்!!

ஊழல் ஒழிப்பு செய்தி :027/22.07.2018

திருப்பூர் அரசு பொது மருத்துவமனையின் அவலம்!

குற்றம் நடந்து கொண்டிருப்பது என்ன?

குற்றவாளிகள் யார்?

உண்மை சம்பவங்கள்!

உயிர் காக்கும் சிகிச்சைகள் எதுவும் இல்லாத கொடுமை!

பல லட்சம் தொழிலாளர்கள்!

பல ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் தொழில் நகரம் திருப்பூர் மாவட்டம்!

திருப்பூரில் உயிர் காக்கும் அவசர சிகிச்சைகள் இல்லாததினால் கோவை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் மேல் சிகிச்சைக்கு  அனுப்பப்படும்   அவல நிலை!

செல்லும் வழியிலேயே பல மரணங்கள்!

மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆட்சியாளர்கள்!

உள் நோயாளிகளை அலை கழிக்கும் மருத்துவமனை நிர்வாகம்!

நெஞ்சை பதற வைக்கும் நிகழ்வுகள்!

லஞ்சம் கேட்டு வாங்கும் ஒப்பந்த பணியாளர்கள்!

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் சுகாதார பணிகள் இணை இயக்குநர் (பொறுப்பு) திருமதி கோமதி தேவராஜன் அவர்களின் உடனடி கவனத்திற்கு!!

அரசு மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் நோயாளி அல்லது அவரின் உறவினர்களிடமிருந்து  லஞ்சம் கட்டாய படுத்தி கேட்டு வாங்குவது வெளிப்படையாக நடந்து வருகிறது.

மகப்பேறு மற்றும் அறுவை சிகிச்சை செய்யப்படும் நோயாளிகளிடம் இருந்து ஊழியர்கள் ஒரு குறிப்பிட்டுள்ள தொகையினை லஞ்சமாக கேட்டு வாங்குவது தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

கையூட்டு பெறுவது தண்டனைக்குரிய குற்றம் என்ற தகவல் பலகை பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படாமல்  பின்பக்கம் No Parking என எழுதப்பட்டு அந்த பலகை மருத்துவமனையின் உள் நுழைவு வாயில் அருகே வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அறிவிப்பு பலகையின் முன்னர் இருச்சக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் முகவரி தொடர்பு எண்களுடன் லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் என்ற தகவல் பலகை பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வில்லை!

2009 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்பொழுது பணி புரியும் மருத்துவர்கனின் பெயர் விபரங்கள் தகவல் பலகையில் பொறிக்கப்பட வில்லை!

பார்வையாளர்கள் நோயாளிகளுக்கு மதுபானம், பீடி சிகரெட், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு செல்வது குறித்து பல முறை  புகார் அளித்த காரணத்தினால் ஆண் பெண் பாதுகாவலர்கள் மூலம் பார்வையாளர்கள் அனைவரும் பரிசோதனை செய்த பிறகே மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் தற்பொழுது எந்த வித பரிசோதனைகளும் செய்யப்படுவதில்லை.

மருத்துவமனையின் நுழைவு வாயில் முன்பாக பேருந்து நிறுத்தம் இருப்பதினால் பேருந்துகளால் மிகுந்த
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இதனால்  அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் சென்று வர கால தாமதம் ஆகிறது.

உள் நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக எழுகிறது.

நோயாளிகள் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது சிகிச்சை அறிக்கை (Discharge Summery ) உரிய படிவத்தில் மருத்துவர் கையொப்பம் இட்டு வழங்குவதில்லை!

கேட்பவர்களுக்கு மட்டும் வெள்ளை காகிதத்தில் சிகிச்சை விபரங்களை குறிப்பிட்டு அரசு மருத்துவமனை முத்திரை இல்லாமல் வழங்கப்படுகிறது.

குற்றம் நடந்தது என்ன?

நண்பர் அருண் கில்பர்ட் என்பவருக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு கை கால்கள் செயல் இழந்து வாய் கோணலாகி 18.07.2018 அன்று இரவு 12 மணியளவில் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

பரிசோதனை செய்த மருத்துவர் மூளையில் ஸ்கேன் எடுத்து பார்த்த பிறகு தான் சிகிச்சை அளிக்க முடியும்  என கூறியுள்ளார்.

M M வார்டு பெட் எண் :15 இல் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

ஸ்டெச்சரில் வார்டுக்கு
கொண்டு வந்த பணியாளர் ₹ 50 ரூபாய் லஞ்சம் கொடு என அவரது மனைவியிடம் கேட்டுள்ளார் .₹ 20 ரூபாய் கொடுத்த போது வாங்க மறுத்து 
₹ 50 ரூபாய் கட்டாய படுத்தி கேட்டு வாங்கியுள்ளார்.

காலையில் 7.30 மணிக்கு ஸ்கேன் எடுப்பதற்கான துண்டு சீட்டினை கொடுத்துள்ளனர். ஆனால் காலை 10.30 மணிக்கு வீல் சேர் கொண்டு வந்த பணியாளர் ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்து சென்றுள்ளார்.

அந்த பணியாளர் ₹100 ரூபாய் லஞ்சம் கேட்டு வாங்கி உள்ளார்.

பல நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுத்து முடியும்  வரை வரிசையில் காக்க வைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் ஸ்கேன் பண்ணும் நேரம் முடிவடைந்து விட்டது என்றும். ஸ்கேன் மிஷின் பழுது ஏற்பட்டு உள்ளது! இனிமேல் நாளை காலை தான் ஸ்கேன் எடுக்க முடியும் என திருப்பி வார்டுக்கு  அனுப்பப்பட்டுள்ளார்.

மீண்டும் வார்டுக்கு வீல்  சேரில் வைத்து தள்ளி கொண்டு வந்த மற்றொரு பணியாளர் ₹50 ரூபாய் லஞ்சம் கேட்டு வாங்கியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்தோம் .

விசாரித்த போது ஸ்கேன் பண்ணாத காரணத்தினால் உரிய சிகிச்சைகள் செயப்பட வில்லை என செவிலியர்கள் தெரிவித்தனர்.

இதற்கு காரணம் யார்?

ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிக்கு ஸ்கேன் எடுக்க தவறியது யார்?

குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் தான் ஸ்கேன் எடுக்க வேண்டும் என கால நேர நிர்ணயம் செய்து உத்தரவிட்ட அதிகாரி யார்?

C T .ஸ்கேன் ₹ 500 ரூபாய் கட்டணம் வாங்கி கொண்டு தானே எடுக்கிறார்கள்!  இலவசம் இல்லையே?

நேரில் கண்ட காட்சி!!

அப்போது இன்னொரு நோயாளியை ஸ்டெச்சரில் கொண்டு வந்து பெட்டில் சேர்த்த பெண் ஒப்பந்த பணியாளர் ஒருவர் ₹ 100 ரூபாய் லஞ்சம் கேட்டு வாங்குவதினை நேரில் கண்ட. நாம் எதற்காக பணம் வாங்கினீர்கள் என கேட்டோம். உடனடியாக ₹100 ரூபாயினை திருப்பி கொடுத்து விட்டு வேகமாக சென்று விட்டார்.

பின் தொடர்ந்து சென்று கேட்ட போது லஞ்சம் வாங்க வில்லை!  அவர்கள் டீ வாங்க சொல்லி தான் பணம் கொடுத்தார்கள் என ஒரு அப்பட்டமான பொய்யை சொன்னார்.
(காணொளி இணைப்பில்)

ஒப்பந்த பணியாளர்கள் ஏழை எளிய நோயாளிகளிடம் லஞ்சம் கேட்டு வாங்குவது தொடர்ந்து நடை பெற்று கொண்டு தான் இருக்கிறது.

இந்த லஞ்ச ஊழியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது யார்?

புகார் செய்யலாம்  என அலுவலகம் சென்றோம்.

அங்கே நிர்வாக அலுவலர் அறைக்கதவு திறந்திருந்தது.
அவரை அங்கு காண வில்லை!

கண்காணிப்பாளர் அறை பூட்டப்பட்டிருந்தது.

R M O இல்லை!

பாதுகாவலரிடம் விசாரித்த போது நிர்வாக அலுவலர் நேற்றே சென்னை சென்று விட்டதாக கூறினார்.

கண்காணிப்பாளர் தான் இணை இயக்குநர் ஆக கூடுதல் பொறுப்பு வகிப்பதாகவும் தெரிவித்தார்.

R M O விடம் தொடர்பு கொண்டு பேசிய போது அலுவலகத்தில்  மதியம் 1.30  மணி வரையிலும் தான் அலுவலர்கள் இருப்பார்கள் என தெரிவித்தார் .

அப்படியானால் இவர்கள் அனைவரும் பகுதிநேர அரசூழியர்களா?

அரசு அலுவலக வேலை நேரம் காலை 9.45 மணி முதல் 5.45 மணி வரை என்றிருக்கும் போது அரசு மருத்துவமனை அலுவலகம் மதியம் 1.30 மணி வரை தான்  செயல் படும் என RMO கூறியது அதிர்ச்சி அளிக்கிறது.

C T ஸ்கேன் ஒரு வாரமாக விட்டு விட்டு பழுது ஏற்படுவதாகவும் அதனால் தான் ஸ்கேன் எடுத்திருக்க மாட்டார்கள் எனவும்  தெரிவித்தார்.அதனை சரி செய்யும் பொறுப்பு அதிகாரி யார்?

ஒப்பந்த பணியாளர்கள் லஞ்சம் வாங்குவது குறித்து  புகார் தெரிவித்த போது கோபம்  கொண்டதாக தெரிய வில்லை!

தனியார் ஒப்பந்த பணியாளர்கள் ஓடி போய்விடுவார்களாம்!
விசாரிப்பதாக கூறினார் .

ஏன் என்றால் அலுவலர்களுக்கு தெரியாமல் இது போன்ற எந்த ஒரு செயலும் நடை பெற முடியாது .

இது சம்பந்தமாக பல முறை புகார் அளித்துள்ளோம்.

ஒரு சில பணியாளர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

முன்னால் சுகாதாரபணிகள் இணை  இயக்குநர் அவர்களிடம்  புகார் அளித்த போது ஒப்பந்த பணியாளர்கள் ₹50 ₹100 என வாங்குவார்கள் என தெரிவித்தார்.

இது போன்ற கடமை தவறிய அரசூழியர்கள் இருக்கும் வரை லஞ்சத்தினை கட்டு படுத்த முடியாது.

104 க்கு அழைத்து நமது புகாரினை பதிவு செய்தோம்.

RMO விடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்கள்!

19.07.2018 அன்று காலை C T ஸ்கேன் எடுத்துள்ளார்கள்.

மதியம் 1.00 மணி அளவில் C T ஸ்கேன் ரிப்போர்ட் கொண்டு வந்து நோயாளியிடம்  கொடுத்துள்ளார்கள்.

104 இல் இருந்து அழைத்து ஸ்கேன் எடுத்து விட்டார்களா என்றார்கள். ஆம் என்றோம்.

ஆனால் அன்றைய தினம் மருத்துவர் ஸ்கேன் ரிப்போர்ட் குறித்து எந்த தகவலும் நோயாளிக்கு தெரிவிக்க வில்லை!

20.07.2018 அன்று காலை வந்த மருத்துவர் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்கள்.

என்ன ஒரு கொடுமை!

நோயாளிக்கு நோய் ஏற்பட்ட காரணத்தினை கண்டு பிடித்து சிகிச்சை அளிக்க மூன்று தினங்கள்!

அதற்குள் மரணம் ஏற்பட்டு விட்டால் ஏழை  எளிய மக்கள் என்ன செய்வார்கள்!

இது போன்று நோயாளிகளின் உயிரில் விளையாடவா அரசு பொது மருத்துவமனைகள்!!

ஊழியர்களுக்கு ஊதியங்கள்! பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பீடு!!

இந்நிலையில் பத்துக்கும் மேற்பட்ட ஆண் பெண் உள் நோயாளிகள் மூக்கில் டியூப் மாட்டப்பட்ட நிலையிலும் குளுக்கோஸ் மாட்டப்பட்ட. பாட்டிலினை கையில் பிடித்த படி நடந்து சென்று கொண்டிருந்ததினை பார்த்த நமக்கு அதிர்ச்சி அளித்தது.

எங்கு செல்கிறீர்கள் என கேட்ட போது ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு கட்டிடத்திற்கு  பெட் மாற்றி உள்ளதாக தெரிவித்தனர்.

நோயாளிகளை இவ்வாறு அலைகழிப்பது ஏற்புடையதா?

மருத்துவமனையின் பின்புறம் கழிவுகளுக்கு யாரோ வைத்த  தீ கொழுந்து விட்டு எரிந்து அதிலிருந்த கரும்புகை மருத்துவ மனையினை சுற்றிலும்  சூழ்ந்து காணப்பட்டது.

அரசு பொது மருத்துவமனையினை நாடி வருபவர்கள் ஏழை எளிய மக்கள் தான்!

சிகிச்சை பெற வருபவர்களுக்கு உரிய முறையில் காலம் தாழ்த்தாமல் சிகிச்சை அளிப்பது ஊழியர்களின் கடமை!

M M வார்டு 15 ஆம் எண் பெட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் கில்பர்ட் என்பவருக்கு  உரிய முறையில் சிகிச்சை அளிக்க கோருகிறோம்.

லஞ்சம் பெற்ற மூன்று ஒப்பந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்வதுடன் லஞ்சமாக பெற்ற பணம் ₹200 ரூபாயினை அவர்களிடம் இருந்து திரும்ப வழங்க கோருகிறோம்.

ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒப்பந்தம் செய்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தினை உடனடியாக  ரத்து செய்ய கோருகிறோம்.

கோரிக்கை!!

அனைத்து நோயாளிகளுக்கும் பாகுபாடில்லாமல் லஞ்சம் வாங்காமல் உரிய நேரத்தில் முறையான அனைத்து  சிகிச்சைகளும்  அளிக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை!!

கோவை அரசு மருத்துவமனைக்கு நிகராக உயிர் காக்கும் சிகிச்சைகள் அனைத்தும் இங்கேயே செய்வதற்கு உண்டான வசதிகள்  அனைத்தையும் அரசு நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட ஏழை எளிய  மக்களின் விலை மதிப்பற்ற உயிரினை பாதுகாக்க  வேண்டும்.!!

LAACO நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
செய்தியாளர்
ஊழல் ஒழிப்பு செய்தி மாத இதழ்
மாநில இணை செயலாளர்
இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு

உண்மை சம்பவங்கள் தொடரும் ......!!

Saturday 14 July 2018

பாலதண்டபாணி பொறுப்பில் இருந்து நீக்கம்!

அனுப்புநர்  :

நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட. விழிப்புணர்வு மற்றும்
ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி    
திருப்பூர்-641 652

பெறுநர் :
S. பாலதண்டபாணி
பழனி

அய்யா,
கடிதம் எண் : LAACO/DL/0002/2018;நாள்:15.07.2018

பொருள் : மாநில அமைப்பு செயலர் (உறுப்பினர் ) பொறுப்பில் இருந்து நீக்கம் செய்வது சம்பந்தமாக,

S.பால தண்டபாணியாகிய தாங்கள் தங்களுடைய முகநூல் பக்கத்தில் 13.07.2018 அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட இணை செயலர் பதவி பொறுப்பு ஏற்றுள்ளதாக அக்கட்சி வழங்கி உள்ள ஒரு கடிதத்தினை பதிவிட்டு உள்ளீர்கள்.

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

08.04.2018 அன்று திருச்சி மன்னார்புரம் V.P .ரெசிடென்ஸியில் நடந்த சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் புதிய  நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவில் கலந்து கொண்டு யாதொரு அரசியல் கட்சியிலும் எந்த ஒரு பொறுப்பும் வகிக்க வில்லை என உறுதி மொழி ஏற்று அமைப்பின் மாநில அமைப்பு செயலர் (உறுப்பினர்)  ஆக பதவி பொறுப்பேற்று கொண்டீர்கள்.

அமைப்பின் உறுதிமொழிக்கு எதிராக தாங்கள் அரசியல் கட்சியில் பொறுப்பு வகிப்பதினை எங்களுக்கு தெரிவிக்க வில்லை.

தாங்கள் அமைப்பின் கொள்கை முடிவுகளுக்கு எதிரான வகையில்  செயல் பட்ட காரணத்தினால் 15.07.2018 அன்று நடைப்பெற்ற  அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டத்தின் மூலம் தங்களை அப்பொறுப்பில் இருந்து நீக்கம் செய்வது  என முடிவு செய்யப்பட்டுள்ளது .

எனவே இனி மேற்கொண்டு அமைப்பின் பெயரினையோ பதவியின் பெயரினை குறிப்பிட்டு எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்பதினை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.

உறுப்பினராக தொடர எந்த ஆட்சேபனையும் இல்லை.

எனவே இக்கடிதம் கிடைக்கப்பெற்ற ஏழு தினங்களுக்குள் அடையாள அட்டையினையும் தங்கள் வசம் உள்ள அசல் உறுப்பினர் படிவம் 25 Nos திரும்ப வழங்கி உறுப்பினருக்கான அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கிறோம்.

இக்கடிதம் பதிவு அஞ்சல் ஒப்புகையுடன் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது .

நாள் :15.07.2018
இடம் :திருப்பூர்           

இங்கனம்,
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்

நகல் தகவலுக்காக சார்பு செய்யப்படுகிறது :

01. ரா.சங்கர் அவர்கள்
மாநில தலைவர்
அரியலூர்

02.M. விவேகானந்தன் அவர்கள்
பொது செயலாளர்
திருச்சி

03.காவல் ஆய்வாளர் அவர்கள்
காவல் நிலையம் ,பழனி

04.காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
திண்டுக்கல் மாவட்டம்