Sunday 22 April 2018

கொங்கு பள்ளி RTI சட்டப்பிரிவு 7(1)

மனுதாரர் ;
நாஞ்சில் கோ.கிருஷ்ணன்
நிறுவனர்
சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு
363,காந்தி ரோடு
பெரியார் காலனி
திருப்பூர் -641 652

பெறுநர் :
பொது தகவல் அலுவலர் அவர்கள்
தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005
மாவட்ட செயல் துறை நடுவர்/மாவட்ட ஆட்சியர்  அலுவலகம்
திருப்பூர் மாவட்டம்.

அய்யா,
பொருள் :தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 சட்டப்பிரிவு 7(1) இன் கீழ் 48 மணி நேரத்திற்குள் சில தகவல்கள் வழங்க கோருவது சம்பந்தமாக ,

பார்வை : திருப்பூர் மாவட்ட செயல் துறை நடுவர் அவர்களுக்கு கொடுக்கப்பெற்ற புகார் மனு எண் :LAACO/CL/006/TPR/2017;நாள் :07.12.2017

புகார் மனு  ரசீது எண் ;2017/9005/32/006830/1207:07.12.2017

திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் மாநகராட்சி அனுமதி பெறாமலும் பள்ளிக்கல்வித் துறை மற்றும் மாணாக்கர் பாதுகாப்பு நலன் அரசாணைகளுக்கு எதிராக சட்ட விரோதமாக புதிதாக கட்டப்பட்டுள்ள கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளிகட்டிடத்தினை தடை செய்யக்கோரியும் பள்ளி நிர்வாகத்திற்கு துணை போகும் எதிர்மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும்  பார்வையில் குறிப்பிட்டுள்ள புகார் மனு மாவட்ட செயல் துறை நடுவராகிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது .

ஆனால் எனது புகார் மனு மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரிய வில்லை.

புகார் மனு அளித்த பிறகு சட்ட விரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கான அரசு பொது தேர்வுகள் நடத்தி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த புகார் மனு மாணவ மாணவிகளின் கல்வி ,உயிர் ,சுதந்திரம் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டதாகும்.

எனவே பார்வையில் காணும்  புகார் மனு மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் விபரங்களை  தகவல் அறியும் உரிமைச்சட்டம் -2005 சட்டப்பிரிவு 7(1) இன் கீழ் 48 மணி நேரத்திற்குள் தகவல் வழங்க கோருகிறேன் .

1. பார்வையில் காணும் புகார் மனு மீது இன்றைய தினம் வரையிலும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் விபரங்கள் தங்கள் அலுவலகத்தில் எந்தெந்த பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்தந்த பதிவேடுகளின் அனைத்து பக்கங்களின் ஒளி நகல்கள் வழங்கவும்.

2. எதிர் மனுதாரர்கள் மீது கொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிர் மனுதாரர்களிடம் இருந்து விளக்க கடிதம் ஏதேனும் பெற்றிருந்தால் அந்த கடித நகல்கள் வழங்கவும்.

3. எனது புகார் மனு நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்களை சட்டப்பிரிவு 4(1)d இன் படி தெரிவிக்கவும்.

4.தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிருவாக சீர்த்திருத்தத்துறையின் 21.09.2015 நாளிட்ட அரசாணை எண் ;99 இன் படி மேற்காண் மனுவிற்கு ஏதேனும்
பதில் கடிதம் வழங்க பட்டிருப்பின் அதன் ஒளி நகல் வழங்கவும்.

5. மேற்காண் பள்ளி தற்பொழுது மாநகராட்சி கட்டிட அனுமதி மற்றும் கட்டிட உறுதி தன்மை சான்றிதழ் பெற்றிருப்பின் அதன் ஒளி நகல் வழங்கவும்.

6. மேற்காண் சட்ட விரோதமாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தில் அரசு பொது தேர்வுகள் நடத்த ஆய்வு செய்து அனுமதி அளித்துள்ள அதிகாரிகள் பெயர் மற்றும் அனுமதி நகல் வழங்கவும்.

மேற்காண் விண்ணப்ப கட்டணமாக ரூபாய் பத்துக்கான. நீதிமன்ற வில்லை ஒட்டியுள்ளேன்.

மேலே நான் கோரிய தகவல்களில் ஏதேனும் தகவல்கள் தங்கள் அலுவலகத்தில் இல்லை எனில் அதற்கான சட்டப்பிரிவு 6(3) இன் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு அனைத்து தகவல்களையும் குறிப்பிட்ட தினங்களுக்குள் வழங்க கோருகிறேன்.

நாள் :23.04.2018.                    மனுதாரர்
திருப்பூர்

No comments:

Post a Comment